உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதை தொகுப்பவர்கள் [[ஜனவரி 4]], [[2012]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 4, 2012|ஜனவரி 4, 2012]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.

ஒரு மாதம் முடிந்தவுடன் முடிந்த மாதத்திற்கான தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்


  • பஞ்சாப் மாநிலத்தில் கொலுசுக்கு ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள்.

  • பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் ஒளியியற்கண் மாயம் (படம்) எனப்படும்.
  • சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான கனிமீடு அளவில் புதன் கோளை விடப் பெரியது.
  • தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சிக்காலத்தில் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டப் பிறகு ஏழைக் குழந்தைகளின் பள்ளி வருகை நாட்கள் அதிகரித்தது.
  • சர்வதேசத் தர புத்தக எண்ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.
  • இந்து நம்பிக்கையின் படி அரைஞாண் அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.
  • உலகின் மிகச் சிறிய ஓந்தி மடகாசுக்கர் அரியோந்தி(படம்) என்பதுதான். இதன் நீளம் 29 மில்லிமீட்டர் மட்டுமே.
  • பச்சை அறிக்கை என்பது சட்டம் இயற்றும் முன் விவாதிப்பதற்காகவும், வெள்ளை அறிக்கை என்பது விவாதிக்கப்பட்ட முடிவான கொள்கை சட்டம் ஆவதற்கு முன்னும் வரும் அறிக்கைகளாகும்.
  • பண்பலை என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.
  • பொருளாதார அல்லது சமூகக் கொள்கைகளில் அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல் தாராளமயமாக்கல் எனப்படும்.
  • வடிவமைப்பாளர் குழந்தை என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.
மண் புரவி
மண் புரவி
  • கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட நாலந்தா பல்கலைக்கழகம் (படம்) உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று.
  • மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் ஸ்டீபன் சௌ நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.
  • கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், துக்கடா என அழைக்கப்படும்
  • ஊழிநாள் கடிகாரம் என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.
  • குலை குலையா முந்திரிக்கா விளையாட்டில் ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு பிறர் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார்.
  • கன்னியாகுமரியையும் காசியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 (படம்) இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை.
  • அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது காப்பியம் எனப்படும்.
  • அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் கீழ்த்தரமான போர் என அழைக்கப்படுகின்றன.
  • இயக்குபிடி என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.
  • நீத்தார் வழிபாடு என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.
  • பூம்பூம் மாடு (படம்) குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு.
  • கடுமையான வாசம் கொண்ட முள்நாறிப் பழம் (துரியன்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது
  • நிலநிரைக்கோடு என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.
  • பெத்தலகேம் குறவஞ்சி இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.
  • ஆட்டோ சங்கர் 1980 களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொலைக் குற்றவாளி.