விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 18, 2012
Appearance
(விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 18, 2012 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- பூம்பூம் மாடு (படம்) குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு.
- கடுமையான வாசம் கொண்ட முள்நாறிப் பழம் (துரியன்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது
- நிலநிரைக்கோடு என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.
- பெத்தலகேம் குறவஞ்சி இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.
- ஆட்டோ சங்கர் 1980 களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொலைக் குற்றவாளி.