உள்ளடக்கத்துக்குச் செல்

அரசர் (சதுரங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரசன் (சதுரங்கம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரசன் (ஆங்கிலம்: King) அல்லது இராசா என்பது சதுரங்கத்தில் மிகவும் முக்கியமான காய் ஆகும்.[1] சதுரங்கத்தில் இரு போட்டியாளர்களிடமும் தலா ஒரு ராஜா வீதம் மொத்தம் இரண்டு ராஜாக்கள் காணப்படும்.[2] சதுரங்க விளையாட்டின் இலக்கே போட்டியாளரின் ராஜாவைத் தப்பிக்க எந்த வழியும் இன்றிச் சிக்க வைப்பதேயாகும்.[3] ஒரு போட்டியாளரின் ராஜாவைக் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது முற்றுகை எனப்படும்.[4] அப்போட்டியாளர் அடுத்த நகர்வில் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தலை நீக்கியே ஆக வேண்டும்.[5] அவ்வாறு நீக்க முடியா விட்டால், அந்நிலை இறுதி முற்றுகை எனப்படும்.[6] அத்தோடு, மற்றைய போட்டியாளருக்கு வெற்றியும் கிடைக்கும்.[7] ராஜா என்பது மிகவும் முக்கியமான காய் என்றாலும் பொதுவாக, விளையாட்டின் இறுதிப் பகுதி வரை பலவீனமான காய் ஆகும்.[8]

நகர்வு

[தொகு]
a b c d e f g h
8 e8 black king 8
7 7
6 6
5 5
4 4
3 3
2 2
1 e1 white king 1
a b c d e f g h
ராஜாக்களின் ஆரம்ப நிலை
a b c d e f g h
8 8
7 7
6 6
5 d5 white circle e5 white circle f5 white circle 5
4 d4 white circle e4 white king f4 white circle 4
3 d3 white circle e3 white circle f3 white circle 3
2 2
1 1
a b c d e f g h
எந்த வகையிலும் தடுக்கப்படாத ராஜாவால் செய்யக்கூடிய சாத்தியமான நகர்வுகள்
a b c d e f g h
8 f8 black rook 8
7 h7 black queen 7
6 g6 white knight 6
5 c5 cross d5 cross e5 cross 5
4 b4 white pawn c4 cross d4 black king e4 cross 4
3 c3 cross d3 cross e3 cross f3 white queen 3
2 a2 white bishop f2 white circle g2 white circle h2 cross 2
1 d1 white rook f1 white circle g1 white king h1 cross 1
a b c d e f g h
மூலைகளால் அல்லது ஏனைய காய்களால் தடுக்கப்பட்ட ராஜாவால் செய்யக்கூடிய சாத்தியமான நகர்வுகள் இங்கே காட்டப்பட்டுள்ளன. வெள்ளை மந்திரி அல்லது வெள்ளை ராணி அல்லது வெள்ளைச் சிப்பாயின் தாக்குகைக்கு உட்பட்டிருக்கும் பெட்டிகளுக்குக் கறுப்பு ராஜாவால் நகர முடியாது. அதே போல், கறுப்பு ராணியின் தாக்குகைக்கு உட்பட்டிருக்கும் பெட்டிகளுக்கு வெள்ளை ராஜாவாலும் செல்ல முடியாது. வெள்ளை Rd1# என்ற நகர்வை மேற்கொண்டு, கறுப்பு ராஜாவை இறுதி முற்றுகைக்கு ஆளாக்கியுள்ளது.
சதுரங்கக் காய்கள்
அரசன்
அரசி
கோட்டை
அமைச்சர்
குதிரை
காலாள்

போட்டியின் ஆரம்பத்தில் வெள்ளையின் ராஜா முதலாவது வரிசையில் ராணியின் வலப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். கறுப்பு ராஜா வெள்ளை ராஜாவுக்கு நேர் எதிரே எட்டாவது வரிசையில் வைக்கப்பட்டிருக்கும். சதுரங்கக் குறியீட்டின்படி, வெள்ளை ராஜா e1இலும் கறுப்பு ராஜா e8இலும் வைக்கப்பட்டிருக்கும்.

ஒரு ராஜா எந்தத் திசையிலும் (செங்குத்தாக அல்லது கிடையாக அல்லது குறுக்காக) ஒரு பெட்டி நகர முடியும். ஆனால், நகர்வதற்கு முயற்சிக்கும் பெட்டியில் தோழமையான காய் காணப்பட்டால் அல்லது அப்பெட்டிக்கு நகர்வதால் ராஜா முற்றுகைக்கு ஆளாக நேரிடும் என்றால் அப்பெட்டிக்கு நகர முடியாது. ஒருபோதும் இரண்டு ராஜாக்கள் அருகருகே உள்ள பெட்டிகளுக்குள் வர முடியாது. ராஜாவும் கோட்டையும் இணைந்து கோட்டை கட்டுதல் என்ற விசேட நகர்வையும் செய்ய முடியும்.

கோட்டை கட்டுதல்

[தொகு]

கோட்டையுடன் இணைந்து ராஜா கோட்டை கட்டுதல் என்ற விசேட நகர்வைச் செய்ய முடியும். இந்த நகர்வில் ராஜா இரண்டு கோட்டைகளுள் ஏதேனும் ஒன்றை நோக்கி இரண்டு பெட்டிகள் செல்ல, கோட்டை ராஜா கடந்து வந்த பெட்டிக்குச் செல்லும். கோட்டை கட்டுதல் செய்யும் வரை ராஜாவோ கோட்டையோ நகர்த்தப்படாமலும் அவற்றுக்கிடையே உள்ள பெட்டிகளுள் எந்தவொரு காயும் இல்லாமலும் ராஜா முற்றுகையில் இல்லாமலும் ராஜா கடந்து செல்லும் பெட்டியோ அல்லது சென்று அடையும் பெட்டியோ எதிரியின் தாக்குகைக்கு உட்படாமலும் இருந்தால் மாத்திரமே கோட்டை கட்டுதல் செய்ய முடியும்.

நிலைகள்

[தொகு]

முற்றுகையும் இறுதி முற்றுகையும்

[தொகு]

ஒரு போட்டியாளரின் ராஜா தாக்குதலின் கீழ் இருந்தால் அது முற்றுகை எனப்படும். அப்போது, மற்றைய போட்டியாளர் முற்றுகையைத் தவிர்க்க வேண்டும். அதற்கு மூன்று வழிகள் உள்ளன. அவையாவன:-

  • ராஜாவை அருகிலுள்ள அச்சுறுத்தலுக்குட்படாத பெட்டிக்கு நகர்த்துதல்
  • தாக்கும் காய்க்கும் ராஜாவுக்கும் இடையில் இன்னொரு காயை நகர்த்தித் தாக்குதற் கோட்டை உடைத்தல் (தாக்கும் காய் குதிரையாக இருந்தால் அல்லது இரட்டை முற்றுகை மேற்கொள்ளப்பட்டால் சாத்தியமில்லை.)
  • தாக்கும் காயைக் கைப்பற்றுதல் (தாக்கும் காயை ராஜா கைப்பற்றாவிடின், இரட்டை முற்றுகையில் சாத்தியமில்லை.)

இவற்றுள் ஏதேனும் ஒன்றையாவது செய்ய முடியாவிடின், ராஜா இறுதி முற்றுகைக்கு ஆளாகி, போட்டியாளர் தோல்வி அடைவார்.

சாத்தியமான நகர்வற்ற நிலை

[தொகு]

போட்டியாளரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகர்வு ஒன்றைச் செய்ய முடியாமலும் ராஜா முற்றுகையில் இல்லாமலும் இருந்தால் அந்நிலை சாத்தியமான நகர்வற்ற நிலை எனப்படும். சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால் போட்டி சமநிலையில் முடியும். வெல்வதற்கு மிகவும் சிறிய வாய்ப்புக் கொண்ட அல்லது வாய்ப்பு இல்லாத போட்டியாளர் ஒருவர் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தப் பெரும்பாலும் முயல்வார். இதன் மூலம் அவர் தோல்வியைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

ஒருங்குறி

[தொகு]

ஒருங்குறியில் ராஜாவுக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.

  • U+2654-வெள்ளை ராஜா
  • U+265A-கறுப்பு ராஜா

மேற்கோள்கள்

[தொகு]
  1. சதுரங்கக் காய் அடுக்கதிகாரம் (ஆங்கில மொழியில்)
  2. சதுரங்கக் காய்களின் பட்டியல் (ஆங்கில மொழியில்)
  3. ["சதுரங்கம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-04-12. பார்க்கப்பட்ட நாள் 2012-02-25. சதுரங்கம் (ஆங்கில மொழியில்)]
  4. "முற்றுகை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-02. பார்க்கப்பட்ட நாள் 2012-02-25.
  5. சதுரங்கத்தின் விதிகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்: முற்றுகை, இறுதி முற்றுகை மற்றும் சாத்தியமான நகர்வற்ற நிலை (ஆங்கில மொழியில்)
  6. இறுதி முற்றுகை (ஆங்கில மொழியில்)
  7. ["சதுரங்கத்தில் இறுதி முற்றுகை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2010-03-24. பார்க்கப்பட்ட நாள் 2012-02-25. சதுரங்கத்தில் இறுதி முற்றுகை (ஆங்கில மொழியில்)]
  8. சதுரங்கம் விளையாடுவதற்கு ஒரு கணினியைத் திட்டமிடுதல் (ஆங்கில மொழியில்)