ஆ.ஆ.நி தமிழ் மருத்துவ சுவடித் தொகுப்பு
Appearance
ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் தமிழ் மருத்துவ சுவடித் தொகுப்பு என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் முன்னெடுத்த உலகின் நினைவகம் திட்டத்திற்கு (Memory of the World Programme) இந்தியா சார்பாக 1997 ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சுவடிகள் ஆகும். இந்தியாவில் இருந்து இந்தத் திட்டத்துக்கு இதுவே முதலாவதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகுதி. இதில் தமிழ் மருத்துவம் பற்றிய பல குறிப்புகள் உண்டு.[1]