தொடுதிரை
தொடுதிரை (Touchscreen) என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி (electronic visual display) ஆகும். இச்சொல் பொதுவாகக் கருவிகளின் படங்காட்டிகளை (display) விரலால் தொடுவதையே குறிப்பன. தொடுதிரைகள், ஒயிலாணி (stylus pen) போன்ற பிற பட்டுவப் பொருட்களையும் (passive objects) உணரக் கூடியன. தொடுதிரைகள் கும்மாள பொருட்கள் (game consoles), முழுக் கணினிகள் (all-in-one computers), கைக் கணினிகள், மற்றும் நுண்ணறி பேசிகள் போன்ற கருவிகளில் பொதுவாகிவிட்டன.
தொடுதிரை இரண்டு முக்கிய நிறைவுகளைக் (main attributes) கொண்டுள்ளது. முதலில், இது சுட்டி அல்லது தொடுபலகையினால் சுட்டுமுள்ளை நேரற்று கட்டுப்படுத்துவதைப் போலல்லாமல், எது படங்காட்டப்படுகிறதோ அதனை நேராக அணுகுகிறது. அடுத்ததாக, இது மேலே குறிப்பிட்டப்படி அணுகுவதற்கு வேறெந்த இடையூடகக் கருவிகளும் தேவையில்லை (தற்போதைய தொடுதிரைகளில் உகப்புள்ள (கட்டாயமற்ற) ஒயிலாணியைத் தவிர). அத்தகைய படங்காட்டிகள் கணினிகளோடும், முனையங்களாக வலையிணக்கங்களோடும் கோர்க்கப்படுகின்றன. இவை தனி எண்முறை உதவுக் கருவிகள் தஎஉ (personal digital assistant PDA), செய்மதி இடஞ்சுட்டல் கருவிகள் (satellite navigation devices), நகர்ப் பேசிகள், நிகழ்படக் கும்மாளங்கள் போன்ற எண்முறை சாதனங்களை வடிவமைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
நுண்ணறி பேசிகள், கைக் கணினிகள் மற்றும் பல வகைத் தகவல் சாதனங்கள் ஆகியவற்றின் புகழ்ப்பெருக்கினால், புகல் மற்றும் பந்தமுடைய மின்னணுக்களில் பொதுத் தொடுதிரையின் கிராக்கி மற்றும் ஏற்பைத் துரவப்படுகிறது. தொடுதிரைக் படங்காட்டியின் மெதுவான மேனியாலும், வன்பொருட்கள் (சுட்டி மற்றும் குயவுப்பலகை) இல்லாமல் பயனருக்கும் அடைவுக்கும் (content) அளிக்கின்ற நேரடி இடையியக்கத்தினாலும் (interaction), சில தொடுதிரை உபரிக்களே தேவைப்படுகின்றன. தொடுதிரைகள் மருத்துவத் புலத்திலும், கனரக தொழிற்சாலைகளிலும், அத்துடன் படங்காட்டியின் அடைவு பயனருடன் உகந்த உள்ளுணர்வாகவோ, துரிதமாகவோ அல்லது துல்லிய இடையியக்கமாகவோ இசையாத விசைப்பலகை அல்லது சுட்டி அமைப்புகளுள்ள தானியங்கு அறை அல்லது அருங்காட்சியகக் படங்காட்டிகள் போன்ற கணினிக்கூடாரங்களிலும் புகழடைந்துள்ளது.
வரலாற்றுரீதியில், படங்காட்டி, சில்லு, அல்லது தாய்ப்பலகை உற்பத்தியாளர்கள் அல்லாமல், அகன்று அணி திரண்ட பிற்சந்தை கட்டகத் தொகுப்பாளர்களால் (system integrators) தொடுதிரை உணரி மற்றும் அதனுடனுள்ள கட்டுப்பாட்டினங்களான இடைப்பொருளையும் (firmware) கிடைக்கக்கூடியதாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய படங்காட்டி உற்பத்தியாளர்களும், சில்லு உற்பத்தியாளர்களும் தொடுதிரைகளை பெரிதாக விரும்பத்தக்க பயனர் இடைமுக பாகம் என ஒற்றுக்கொள்ளும் போக்கு உருவாகியுள்ளதையும், அவர்களின் அடிப்படை வடிவமைப்பினை தொடுதிரைகளுடன் இடைச்சேர்க்கவுள்ளதையும் உறுதிசெய்துள்ளனர்.
வரலாறு
[தொகு]1965 இல் இஏ சான்சன் என்பவர் வெளியிட்ட குறுங்கட்டுரை ஒன்றில் கொண்ம தொடு திரைகள் பற்றிய படைப்பை விவரித்துள்ளார்.[5] அதன் பிறகு முழுமையாகப் புகைப்படங்கள், வரைப்படங்களுடன் 1967 இல் வெளியிடப்பட்ட கட்டுரையில் விவரித்துள்ளார்.[6] 1968 இல் வெளியிடபட்டுள்ள ஒரு கட்டுரையில் வான்வெளி துரப்பு கட்டுப்பாட்டிற்கு பொருந்தக்கூடிய தொடு நுட்ப விரிவுரையை விவரிக்கப்பட்டுள்ளது.[7] செர்ன்னில் உள்ள பொறியாளர் பென் ச்டம்பி என்பவர் ப்ரான்க் பெக்-இன் உதவியுடன் 1970-இன் முற்பகுதியில் தெளிந்த தொடு திரையை மேம்படுத்தி, செர்ன்னால் உற்பத்தியாக்கி 1973-இல் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.[8] ஞ்சி சாமுவேல் என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஒரு தடுப்பு தொடு திரையை மேம்படுத்தி, அதன் முதற்பதிப்பு 1982-இல் உற்பத்தியாக்கப்பட்டுள்ளது.[9]
1979–1985 க்கிடையில், பயனர் மாதிரியை ஒதிக்கி, கையாளவும் தரவைச் சேர்க்கவும் அத்துடன் அதன் இயங்குதளத்துக்குள் மெல்லாணியால் திரையைத் தொட்டு வெவ்வேறு பட்டியை அணுக்கமடையவும் செய்யகூடியவகையில் பார்லைட் சிஎம்ஐ Fairlight CMI (and Fairlight CMI IIx) மெல்லாணி நுட்பத்தைப் பயன்கொண்ட உயர்முனை இசையியல் மாதிரியாக்கல் மற்றும் மறுசேர்க்கை பணினிலையமாகத் திகழ்ந்ததாகும். அதற்கு பின் வெளியான Fairlight series IIT மாதிரிகள் மெல்லாணிக்கு பதிலாக வரைகலை பட்டிகைகளைப் பயன்படுத்தின. 1983 இருந்த HP-150, உலகில் ஆரம்பக்கட்ட வணிகமாக்கிய தொடுதிரைக் கணினிகளில் ஒன்றாகும். PLATO IV அமைப்பைப் போன்று, திரையில் உள்ள எந்த ஒளிப்புகாப் பொருட்களையும் அறியக்கூடிய 9" சோனி எதிர்மின் கதிர்க் குழாயின் உளிச்சாயும் ஓரத்தில் அகச்சிவப்புக் கதிர் அலை அனுப்பிகளையும், அலை வாங்கிகளையும் பொருத்தப்பட்டதாக இந்தத் தொடு நுட்பங்கள் பயன்படுத்துகின்றன.
1986 இல், 16-நுண்மி (16-பிட்) அடாரி 520எஸ்டி வண்ணக் கணினியில் முதல் வரைகலை பார்வையிலான விற்பனை மென்பொருளைச் செய்துகாட்டப்பட்டது. இதன் சிறப்புக்கூறுகளாக நிரல்பலகை-இயக்கும் இடைமுகமாய் ஒரு வண்ணத் தொடுதிரை உள்ளது.[10] அடாரிக் கணினி செயற்காட்டல் இடம், 1986இல் லாஸ் வீகாஸ், நிவாதா, ஃபால் காம்டெக்ஸில் வியூடச் [11] பார்வையிலான விற்பனை மென்பொருளை முதலில் பார்வையாளரிடம் காண்பித்தவர் வளர்ப்பாளர் ஜெனி மோசர் மற்றும் அதுவே நிரல்பலகை-இயக்கும் வரைகலை வண்ணத் தொடுதிரை இடைமுகம் கொண்ட வணிக பிஒஎஸ் அமைப்பாகும்.
1990களின் முன்பு கேம் கியர்க்கான சேகாவின் வெற்றியாகக் கருதப்படும் தொடுதிரை கட்டுப்பாடுடனான கையடக்க கும்மாள பொருளை உருவாக்கப்பட்டது, ஆனாலும் அதன் தொடுதிரை நுட்பங்களுடைய அதிக விலையின் காரணமாக அதனை வெளியிடவேயில்லை. 2004 இல் நின்டென்டோ டிஎஸ் வெளியாகும் வரை தொடுதிரைகள் நிகழ்படக் கும்மாளங்களில் பெரிதாகப் பயன்பட்டுத்தபடவில்லை.[12] சில வருடங்களுக்கு முன்பு வரை, பெரும்பாலான நுகர்வோர்கள் ஒரு தடவை ஒரு முறை தொடும் படியான தொடுதிரை அனுபவத்தை மட்டுமே பெற்றிருந்தார்கள். இது தற்போதைய தாராளமயமாக்கப்பட்ட பல்முனைத் தொடு தொழில்நுட்பத்தினால் மாற்றமடைந்துவிட்டது.
தொழில்நுட்பங்கள்
[தொகு]பல்வேறு வகையான தொடுதலை உணரும் முறைகளில் பலவகை தொடுதிரை தொழில்நுட்பங்கள் உள்ளன.
மின்தடை தொடுதிரை
[தொகு]மின்தடை தொடுதிரைப் பலகம் பல அடுக்குகளைக் கொண்டுள்ளது, அதில் மிக முக்கியமானது மெல்லிய இடைவெளியுடன் அமைந்த இரண்டு மெல்லிய, ஒளிபுகக்கூடிய மின்சாரத் தடை அடுக்குகள் ஆகும். மேல் திரையின் (பயனரால் தொடப்படுகிற திரையின்) உட்பரப்பில் சில திரவபூச்சு செய்யப்படும். அதற்கு தாழ்வாக அதன் தளப்பொருளின் மேல் அதேப் போன்று மற்றொரு மின்சாரத் தடை அடுக்கு. அதன் ஓரத்தில் ஒரு மின்கடத்து அடுக்கும், மற்றொன்று அதன் மேலும் கீழுமாய். ஒரு மின்னழுத்தம் ஒன்றின் மீது கொடுக்க, மற்றொன்றினால் உணரப்படுகிறது. விரல்நுனி அல்லது ஒயிலாணி அதன் மேற்பரப்பை அழுத்தும் பொழுது அது இரு அடுக்கும் அந்த நேரத்தில் சேர்க்கப்படுகிறது. அந்தப் பலகம் அப்பொழுது ஒரு இணை மின்னழுத்த வகுப்பியின் பண்பைப் பெறுகிறது. உடனடியாகப் பிரியப்படுகின்ற இரு அடுக்குகளினால், அது அழுத்தப்பட்ட இடத்தை அறிகிறது.
மாசுக்களுடனும், திரவங்களுடனும் அதிக மின்தடையை கொண்டிருப்பதால், மின்தடை தொடுதிரை உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிலகங்கள் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. மின்தடை தொடு நுட்பங்களின் முகனையான பயன் என்னவென்றால் அதன் குறைவான விலையே ஆகும். பயன் குறைவுகள் கீழ் அழுத்த வேண்டிய தேவை மற்றும் கூரான பொருட்களினால் பாதிப்படையும் ஆபத்து ஆகியவை அடக்கம். திரையின் மேற்பரப்பில் வைக்கப்பட்ட மிகையான அடுக்கில் கூடுதல் எதிரொளிப்புகள் கொண்டிருப்பதால், குறைவான தெளிவுநிலையிலும் மின்தடை தொடுதிரைகள் அவதியுறுகிறது.[13]
மேற்பரப்பு ஒலியிய அலை தொடுதிரை
[தொகு]மேற்பரப்பு ஒலியிய அலை தொடுதிரைகளில், அதனுடைய பலகத்தின் மீது கேளா ஒலியலைகள் (ultrasonic waves) பாய்ந்து செல்வதாக அமைகிறது. அந்தப் பலகத்தை தொடும்பொழுது, அந்த அலைகளின் ஒரு பகுதியானது கண்டரியப்படுகிறது. இந்தக் கேளாவொலி அலைகளின் மாற்றம் தொட்ட நிகழ்வின் இடத்தைப் பதிவு செய்கிறது, மேலும் அந்தத் தகவல்களைக் கட்டுபாட்டகத்திற்கு செயலாக்க கொண்டு செல்கிறது. மேற்பரப்பு அலை தொடுதிரை பலகத்திற்கு வெளி உறுப்புகளினால் ஊறுவிளையக்கூடும். மேற்பரப்பில் உள்ள மாசுகள் கூடத் தொடுதிரையின் செயல்பாட்டில் குறுக்கிடக்கூடும்.[14]
கொண்மம்
[தொகு]கொண்ம தொடுதிரையில் இன்டியம் டின் ஆக்சையிடு போன்ற மெல்லிய கடத்துப் பொருளினை தடவப்பட்ட ஆடி போன்ற மின்கடத்தாப் பொருட்கள் அடங்கியிருக்கும்.[15][16] மனிதர்களின் உடலும் மின்கடத்தக் கூடியதாகையால், திரையின் மேற்பரப்பை தொடுதல் என்பது கொண்ம மாற்றத்தை அளக்கக்கூடியதாகத் திரையின் நிலைமின் புலத்தை உருக்குலைக்கும். தொடும் இடத்தை அறிய பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தப்படுகிறது. அந்தத் தகவலைப் பிறகு கட்டுப்பாட்டகத்திற்கு செயலாக்கம் செய்ய அனுப்பப்படுகிறது.
மின்தடைய தொடுதிரையை போலல்லாமல், கொண்ம தொடுதிரையை பெரும்பாலான மின்கடத்தாப் பொருட்களில் பயன்படுத்தல் இயலாது. இந்தக் குறைபாடுகளினால் தொடு கைக்கணினிகள் மற்றும் குளிர்காலத்தில் கொண்ம சுட்டிப்பேசிகள் போன்ற நுகர்வோர் மின்னணுனிக்களின் பயன்பாட்டில் பாதிக்கிறது. சிறப்பு கொண்ம ஒயிலாணி அல்லது பயனரின் விரல்நுனியை சந்திக்கவும், கடத்து புரி திரையில் பாயவும் கூடிய சிறப்பு பயன்பாட்டு கையுறை ஆகியவைகளால் இதனை நிவர்த்தி செய்ய இயலும்.
கைபேசிக்கான தொடுதிரைகள், சாம்சங்கின் சூப்பர் அமோலெடு (Samsung's Super AMOLED) இல் உள்ளது போன்று ஒரு அடுக்கை தவிர்ப்பதாகக் கொண்மங்களை படங்காட்டிக்குள்ளேயே கட்டமைத்தல் போன்ற உள்-சில்லு நுட்பத்தைப் பயன்படுத்துவதாகையால் பெரிய கொண்ம படங்காட்டி உற்பத்தியாளர்கள் தற்போது தொடர்ந்து மெலிதாகவும், மிகத் துல்லியமான தொடுதிரைகளையும் வளர்த்து வருகின்றனர். இவ்வகையான தொடுதிரைகள், படங்காட்டும் அடைவுடன் மிக நேர் தொடர்பு கொள்ளுமாறும், தத்தலும் அசைவுகளும் கூட மிகத் துலக்கமாக இருக்குமாறும் பயனரின் விரல்நுனிக்கும், பயனர் திரையில் எதைத் தொடுகிறார் என்பதற்கும் உள்ள காட்டல் தொலைவை (மில்லிமீட்டர்களுக்குள்) குறைக்கிறது.
மேற்பரப்பு கொண்மம்
[தொகு]இந்த அடிப்படை தொழில்நுட்பத்தில், மின்கடத்தானின் ஒரே ஒரு புறத்தினில் மட்டுமே கடத்தான் அடுக்கு பூசப்பட்டுள்ளது. ஒரு சிறிய மின்னழுத்தத்தை அந்த அடுக்கின் மீது செலுத்தும் பொழுது ஒரு சீரான நிலைமின்னியல் புலம் உருவாகிறது. மனித விரலைப்போன்றதொரு மின்கடத்தான் அதன் பூசப்படாத பரப்பைத் தொடும் பொழுது, இயக்கமாக ஒரு கொண்மம் உருவாகிறது. பலகத்தில் உள்ள நாளாபுறத்திலும் அளக்கப்பட்ட கொண்ம வேறுபாட்டினால் மறைநிலையாக உணரியின் கட்டுபாட்டகம் தொடப்பட்ட இடத்தை அறிகிறது. இதில் நகரும் பாகங்கள் இல்லாததால், இது மிதமாக நீடிக்கக்கூடியது ஆனால் ஒட்டிய கொண்ம இணைப்பினால் குறிகைகளை தவறாக்கக்கூடியதும், உற்பத்தியின் போது ஒப்பாய்வு தேவையென்பதாலும் இது குறைவான பகுதிறன் கொண்டவை ஆகும். ஆகையால் இதனை தொழிற்சாலை மற்றும் கணினிக்கூடாரங்கள் போன்ற சில எளிய பயன்பாடுகளில் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
துருத்தக் கொண்மம்
[தொகு]துருத்தக் கொண்ம தொடு தொழில்நுட்பம் என்பது ஒரு வேறுபாடுள்ள கொண்ம தொடு தொழில்நுட்பமாகும். அனைத்து துருத்தக் கொண்ம தொடுதிரைகளிலும் கண்ணாடி அட்டைகளின் மீது அடுக்குகளாகப் பல கடத்துப்பொருளின் அணிகளால் உருவாக்கப்படுகிறது. மின்முனை வலையமைப்பை ஒரு தனி கடத்து அடுக்கினாலோ அல்லது இரண்டு வெவ்வேறு செங்குத்தான கடத்து அடுக்கினாலோ அமைக்கப்படுகிறது. இந்த வலையமைப்பிற்கு மின்னழுத்தம் கொடுக்கும் பொழுது, அந்த வலையமைப்பு அளக்கக்கூடிய ஒரு சீரான நிலைமின்னியல் புலத்தினை ஏற்படுத்துகிறது. விரலைப் போன்ற ஒரு கடத்துக்கூடிய பொருள் இந்தத் துருத்தக் கொண்ம தொடுதிரையை தொடும்பொழுது அது அந்த நிலைமின்னியல் புலத்தை அந்தப் புள்ளியில் பாதிக்கிறது. இதனை கொண்ம வேறுபாடாக அளக்கப்படுகிறது. இரண்டு பாதையின் இடைவெளியை ஒரு விரல் இணைத்தால், மின்னூட்டு புலம் மேலும் குறுக்கிட்டு கட்டுப்பாட்டகத்தால் அறியப்படுகிறது. அந்த வலையமைப்பின் வெவ்வேறு புள்ளியிலும் கொண்ம வேறுபாடினை அளக்கப்படும். ஆகையாலேயே, இந்தக் கட்டகம் மிக துல்லியமாகத் தொடுதலை அறியமுடிகிறது.[17] இதன் மேல் தட்டு கண்ணாடியால் உள்ளபடியால், விலையுயர்ந்த மின்தடைய தொடுதிரையை காட்டிலும் இதுவே மிக உறுதியான தீர்வாகும். வழக்கமான கொண்ம தொடுதிரைகளுடன், ஒயிலாணி மற்றும் உறை விரல்கள் ஆகியவற்றை உணரக்கக்கூடிய துருத்தக் கொண்ம தொடுனுட்பமும் இடம்பெறுகின்றன. ஆனால், நீர்நயப்பு, அதிக ஈரப்பதம் மற்றும் சேரப்பட்ட தூசிகள் போன்றவற்றினால் இந்தத் துருத்தக் கொண்ம தொடுதிரை பாதிக்கப்படுகிறது. இரண்டு வகையான துருத்தக் கொண்ம தொடு தொழில்நுட்பம் இருக்கின்றன. அவை பரிமாற்றக் கொண்மம், தனிக் கொண்மம் என்பனவாகும்.
பரிமாற்றக் கொண்மம்
[தொகு]இது, மின்கடத்தக்கூடிய பொருட்கள் மிக அருகில் இருந்தால் பெரும்பாலானவை மின்னூட்டத்தை பிடித்துக்கொள்ளும் என்ற கருத்தின் அடிப்படையிலான பொது துருத்தக் கொண்ம நடைமுறையாகும். பரிமாற்றக் கொண்ம உணரிகளில், ஒவ்வொரு இணைதுணைகள் சந்திக்கும் புள்ளியிலும் ஒரு கொண்மம் இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு 16க்கு 14 அணியில் 224 சாராத கொண்மங்கள் இருக்கும். ஒரு மின்னழுத்தத்தை அந்த இணைகள் அல்லது துணைகளுக்கு அனுப்பப்படுகிறது. உணரி பரப்பின் அருகில் ஒரு விரலோ அல்லது கடத்தக்கூடிய ஒயிலாணியோ பரிமாற்றக் கொண்மத்தைக் குறைக்கும்படி உள்ளிட நிலைமின்னியல் புலத்தை மாற்றுகிறது. ஒவ்வொரு வலையமைப்பின் புள்ளியிலும் உள்ள கொண்ம மதிப்பை அளந்து துல்லியமாகத் தொடப்பட்ட இடத்தினை கண்டறியப்படுகிறது. பரிமாற்ற கொண்ம தொடுதிரைகள் பன்தொடு செயல்பாடுகளையும் ஏற்கிறது.
தனிக் கொண்மம்
[தொகு]தனிக் கொண்ம உணரிகள் பரிமாற்ற கொண்ம உணரிகள் போலவே வலையமைப்பைக் கொண்டிருக்குமானால் இங்கு இணைதுணை வரிசைகள் தனித்தனியாகவே செயல்படுகின்றன. தனிக் கொண்மங்களுடன், விரலின் கொண்மச் சுமை மின்சாரமானியினால் இணைவரிசை மின்முனை அல்லது துணைவரிசை மின்முனைககளில் அளக்கப்படுகிறது. இது பரிமாற்ற கொண்மங்களை விடத் திடமான குறிகைகளைக் கொடுக்கின்றன, ஆனாலும் இதனால் ஒரு விரலுக்கு மேல் பயன்படுத்தினால் அதனால் துல்லியமாக அறியயியலாது.
அகச்சிவப்பு வலையமைப்பு
[தொகு]அகச்சிவப்பு தொடுதிரையானது திரையின் ஓரங்களில் ஒளியீரிக் கதிர்களில் ஏற்படும் குறுக்கீடுகளைக் கண்டுணர X-Y அச்சிவப்பு ஒளி உமிழ்வு இருமுனையம் (LED) மற்றும் ஒளியன் கண்டுணர்வி இணை அணிகளைப் பயன்படுத்துகிறது. இந்த ஒளியீரிக் கதிர்கள் குத்துநிலை மற்றும் கிடைநிலை பட்டைகளில் ஒன்றுக்கு ஒன்றாகக் குறுக்கே இருக்கும். இதுவே உணரிகள் தொடும் இடத்தை சரியாகக் கண்டறிய உதவுகிறது. இதன் சிறப்பான நன்மை என்னவென்றால் இது கிட்டத்தட்ட விரல், ஒயிலாணி, அல்லது கையுறை போன்ற எந்த உள்ளீடையும் ஏற்கிறது. தொடுதிரையை கிளர்வூட்ட எந்த ஒரு மின்கடத்தியும் தேவைப்படாத விற்பனைப்புள்ளி மற்றும் வெளிப்புற பயன்பாடுகளிலேயே இது பெரும்பாலும் பயன்படுத்தப்படும். கொண்ம தொடுதிரைகள் போலல்லாமல், அச்சிவப்பு தொடுதிரைகள் மொத்த கட்டகத்திற்கும் உழைதிறம் மற்றும் ஒளியியல் தெளிவு ஆகியவற்றை அதிகரிக்கும் கண்ணாடியின் மீது உருப்படிவம் ஏதும் தேவையில்லை. அச்சிவப்பு தொடுதிரைகள் அச்சிவப்புகளால் குறுக்கிடக்கூடிய தூசிகளிடம் கூருணர்வுடையதாகும். வளை மேற்பரப்பில் இணைமாறு தோற்றப்பிழையினால் அவதிப்படக்கூடியது. மேலும் விரல்கள் திரையின் மீது பரவும் பொழுது, பொத்தான்கள் விபத்தாக அழுத்தப்படும்.
அகச்சிவப்பு அக்குரிலீக்கு வீழ்ப்பு
[தொகு]ஒரு ஒளிகசிவு அக்குரிலீக்கு அட்டையைப் பின்புற வீழ்ப்பு திரையாகப் பயன்படுத்தி படங்காட்டப்படுகிறது. அக்குரிலீக்கு அட்டையின் ஓரங்கள் அகச்சிவப்பு ஒளியீரிகளால் (ஒளி உமிழ்வு இருமுனையம்) ஒளிப்பெருக்கப்படுகிறது. மேலும் அகச்சிவப்பு ஒளிப்படக்கருவிகள் அட்டையின் பின்புறத்தை குவியமாக்குகிறது. அட்டையில் வைக்கப்படுகிற பொருட்களை ஒளிப்படக்கருவி கண்டறிகிறது. பயனர் அந்த அட்டையைத் தொடும் பொழுது அகச்சிவைப்பு ஒளியின் கசிவு ஏற்படுகிறது. இதனால் அந்தப்புள்ளியில் உள்ள மீப்பெரு அழுத்தம் உச்சத்தை அடைவதினால் பயனிர் தொட்ட இடத்தினை அறியமுடிகிறது. மைக்குரோசாப்டு நிறுவனத்தின் PixelSense இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
ஒளிய படிமவியல்
[தொகு]ஒன்று அல்லது இரண்டு படிம உணரிகளைத் திரையின் மூலையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒளித் தொடுதிரைகளே சார்புடைய நவீன தொடுதிரை தொழில்நுட்பமாகும். தொடுதிரையின் மறுபகுதியில் படக்கருவியின் பார்வை புலத்தில் அகச்சிவப்பு பின் விளக்குகள் வைக்கப்பட்டிருக்கும். தொடுதல் நிழலினை ஏற்படுத்துவதால் படக்கருவி எளிதாகத் தொட்ட இடத்தினை அறிந்து கொள்கிறது. அது தொட்ட இடத்தின் பெருக்கத்தையும் அறிகிறது. அதன் மீமேலாக்கமை, விரிவுமை, தாங்குமை போன்றவற்றினால் இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்து பிரபலம் அடைந்து வருகிறது.
பிரிவு குறிகை தொழில்நுட்பம்
[தொகு]தொடுதலினால் ஒரு கண்ணாடியில் ஏற்படும் அழுத்தமின் விளைவைக் கண்டறியும் உணரிகளை இந்தக் கட்டகம் பயன்படுத்துவதாய் 2002 ஆம் ஆண்டு 3எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கடின முறைமைகள் இந்த தகவலைப் பின்னப்பட்டு, பிறகு தொடுகின்ற இடத்தை அறியமுற்பட்டது. இந்தத் தொழில்நுட்பானது தூசிகள், மற்றும் பிற பொருட்களினால் எந்தப் பாதிப்பும் அடையா வண்ணம் அமைந்துள்ளது. வேறு எந்த இடையூடகமும் தேவையில்லாததாகையால், இது மேலும் நல்ல ஒளித் தெளிவை தருகிறது. இது இயந்திர அதிர்வுகளால் தொடுகின்ற இடத்தை அறிவதினால், விரல் மற்றும் ஒயிலாணி போன்ற எந்த ஒரு பொருளும் இதனை உருவாக்க இயல்கின்றது. இதிலுள்ள குறைபாடு என்னவென்றால், ஒரு முறை தொட்டவுடன் இந்தக் கட்டகம் அதற்கு மேல் இயக்கமற்ற அந்த விரலை அறியமுடிவதில்லை.
திரைக்காப்பிகள்
[தொகு]சில தொடுதிரைகள் முகனையகச் சுட்டிப்பேசியில், தினந்தோறும் பயன்படுத்தும் பொழுது தொடுதிரைகள் கீறல் விழாமல் இருக்க ஒளிபுகு நெகிழி காப்பிகளால் ஒட்டப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The first capacitative touch screens at CERN, CERN Courrier, 31 March 2010, பார்க்கப்பட்ட நாள் 2010-05-25
- ↑ Bent STUMPE (16 March 1977), A new principle for x-y touch system (PDF), CERN, பார்க்கப்பட்ட நாள் 2010-05-25
- ↑ Bent STUMPE (6 February 1978), Experiments to find a manufacturing process for an x-y touch screen (PDF), CERN, பார்க்கப்பட்ட நாள் 2010-05-25
- ↑ Frank BECK & Bent STUMPE (24 May 1973), Two devices for operator interaction in the central control of the new CERN accelerator (PDF), CERN, பார்க்கப்பட்ட நாள் 2010-05-25[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Johnson E.A. Touch Display - A novel input/output device for computers|Journal Electronics Letters 1965 volume 1 issue 8 pages 219–220
- ↑ Johnson, E.A. (1967). "Touch Displays: A Programmed Man-Machine Interface". Ergonomics 10 (2): 271–277.
- ↑ Orr, N.W.; Hopkins, V.D. (1968). "The Role of Touch Display in Air Traffic Control.". The Controller 7: 7–9.
- ↑ CERN Bulletin Issue 12/2010 & 13/2010, "Another of CERN's many inventions!"
- ↑ oakridger.com, "G. Samuel Hurst -- the 'Tom Edison' of ORNL", December 14 2010[தொடர்பிழந்த இணைப்பு].
- ↑ The ViewTouch restaurant system by Giselle Bisson
- ↑ http://www.viewtouch.com
- ↑ Travis Fahs (April 21, 2009). "IGN Presents the History of SEGA". IGN. p. 7. Retrieved 2011-04-27.
- ↑ http://www.makeuseof.com/tag/differences-capacitive-resistive-touchscreens-si/
- ↑ Patschon, Mark (1988-03-15). Acoustic touch technology adds a new input dimension. Computer Design. பக். 89–93. http://rwservices.no-ip.info:81/pens/biblio88.html#Platshon88
- ↑ Kable, Robert G. (1986-07-15). United States Patent 4,600,807. http://rwservices.no-ip.info:81/pens/biblio86.html#Kable86
- ↑ Kable, Robert G. (1986-07-15). Electrographic Apparatus. United States Patent 4,600,807 (full image). http://www.freepatentsonline.com/4600807.pdf
- ↑ Knowledge base: Multi-touch hardware பரணிடப்பட்டது 2012-02-03 at the வந்தவழி இயந்திரம்
வெளியிணைப்புகள்
[தொகு]- Howstuffworks - How do touchscreen monitors know where you're touching?
- MERL பரணிடப்பட்டது 2010-04-14 at the வந்தவழி இயந்திரம் - Mitsubishi Electric Research Lab (MERL)'s research on interaction with touch tables.
- Jefferson Y. Han et al. Multi-Touch Interaction Research. Multi-Input Touchscreen using Frustrated Total Internal Reflection.
- Dot-to-Dot Programming : Building Microcontrollers
- Knowledge base: Multi-touch hardware பரணிடப்பட்டது 2012-02-03 at the வந்தவழி இயந்திரம்