உள்ளடக்கத்துக்குச் செல்

மலாயா பொதுத் தேர்தல், 1955

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாயா பொதுத் தேர்தல், 1955

27 சூலை 1955 1959 →
பதிவு செய்த வாக்காளர்கள்1,240,058
வாக்களித்தோர்82.84%
 
தலைவர் துங்கு அப்துல் ரகுமான் ஓன் ஜாபார் அபாஸ் அலியாஸ்
கட்சி அம்னோ
இடங்கள்
51
தேசியக் கட்சி
இடங்கள்
0
பாஸ்
இடங்கள்
1
கூட்டணி கூட்டணி
தலைவரான
ஆண்டு
பிப்ரவரி 1954 1953
மொத்த வாக்குகள் 818,013 78,909 40,667
விழுக்காடு 81.68% 7.9% 4.1%

தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள்

முதல்வர்

துங்கு அப்துல் ரகுமான்
கூட்டணி


மலாயா பொதுத் தேர்தல், 1955 (மலாய்: Pilihan Raya Umum Tanah Melayu 1955; ஆங்கிலம்: 1955 Malayan General Election; சீனம்: 1955年马来亚大选); என்பது 1957-ஆம் ஆண்டு மலாயா விடுதலை பெறுவதற்கு முன்னர் நடந்த ஒரே மலேசியப் பொதுத் தேர்தல் ஆகும். இந்தத் தேர்தல் 27 சூலை 1955 புதன்கிழமை அன்று நடத்தப்பட்டது.

மலாயா கூட்டமைப்பின் கூட்டரசு சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. முன்பு கூட்டரசு மலாயாவின் சட்டமன்ற உறுப்பினர்கள், பிரித்தானிய மலாயாவின் உயர் ஆணையரால் நியமிக்கப்பட்டனர்.

பொது

[தொகு]

மலாயாவின் 52 கூட்டரசு தொகுதிகளின் ஒவ்வொரு தொகுதியிலும் ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்துடன் மலாயாவின் ஒன்பது மாநிலங்களில் உள்ள 136 மாநிலத் தொகுதிகளிலும் மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றன. மேலும் 10 அக்டோபர் 1954 முதல் நவம்பர் 12, 1955 வரையில்; மலாக்கா, பினாங்கு நீரிணை குடியேற்றங்களில் மாநில ஆட்சிமன்றத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குப் பதிவுகளும் நடைபெற்றன.

மலேசிய இசுலாமிய கட்சி (பாஸ்), இந்த 1955-ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே உருவாக்கப்பட்டது. முன்னதாக மலேசிய இசுலாமிய கட்சி ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு எனும் அம்னோ கட்சியின் ஒரு பகுதியாக இருந்தது.

தீபகற்ப மலாயாவில் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த மலாயா தீபகற்பத்தின் வடக்கு மாநிலங்களான கிளாந்தான், திராங்கானு மாநிலங்களை அடித்தளமாகக் கொண்டு மலேசிய இசுலாமிய கட்சி உருவாக்கப்பட்டது. மலேசிய இசுலாமிய கட்சி இசுலாத்தை முதன்மை நோக்கமாக அறிவித்து மலாய் மக்களின் ஆதரவைப் பெற்றது.[1]

புதிய அரசாங்கம்

[தொகு]

அம்னோ, மலேசிய சீனர் சங்கம், மற்றும் மலேசிய இந்திய காங்கிரசு ஆகியவற்றின் கூட்டணியான மலேசிய கூட்டணி கட்சிக்கு இந்தத் தேர்தலில் அமோகமான வெற்றி கிடைத்தது. முன்னாள் அம்னோ தலைவர் ஒன் ஜாபார் தலைமையிலான நெகாரா கட்சிக்கு இந்தத் தேர்தல் ஒரு மாபெரும் தோல்வியில் முடிந்தது. ஒன் ஜாபார் கட்சியினர் எந்த ஓர் இடத்திலும் வெற்றி பெறவில்லை.

இதன் பின்னர் மலேசிய கூட்டணி கட்சி புதிய அரசாங்கத்தை அமைக்கத் தொடங்கியது; அதன் தலைவர் துங்கு அப்துல் ரகுமான் முதலமைச்சரானார். 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெறும் வரையில் மலாயா நாட்டின் தலைவர் முதல்வர் என்றே அழைக்கப்பட்டார்.

இந்தத் தேர்தலில் முப்பது மலேசிய கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 10,000 வாக்குகளுக்கும் மேல் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றனர். அவர்களில் ஒன்பது பேர் 20,000 வாக்குகளுக்கும் மேல் பெரும்பான்மையைப் பெற்றனர். எதிரணிகளைச் சேர்நந் நாற்பத்து மூன்று பேர் தங்கள் வைப்புத் தொகையை இழந்தனர்.

தேர்தல்கள்

[தொகு]

கூட்டரசு மலாயா சட்டமன்றம்

[தொகு]
  • வேட்பு மனு நாள்: 15 சூன் 1955
  • தேர்தல் நாள்: 27 சூலை 1955

மாநிலத் தேர்தல்

[தொகு]
மாநிலம் வேட்பு மனு நாள் தேர்தல் நாள்
ஜொகூர் 1 செப்டம்பர் 1954 10 அக்டோபர் 1954
திராங்கானு 29 அக்டோபர் 1954
சிலாங்கூர் 11 ஆகஸ்டு 1955 27 செப்டம்பர் 1955
கெடா 14 ஆகஸ்டு 1955 இல்லை
கிளாந்தான் 15 ஆகஸ்டு 1955 19 செப்டம்பர்1955
பெர்லிஸ் 17 ஆகஸ்டு 1955 24 செப்டம்பர் 1955
பகாங் 25 ஆகஸ்டு 1955 26 செப்டம்பர் 1955
நெகிரி செம்பிலான் 8 செப்டம்பர் 1955 12 அக்டோபர் 1955
பேராக் 1 அக்டோபர் 1955 12 நவம்பர் 1955

நீரிணை குடியேற்றங்கள்

[தொகு]
குடியேற்றம் வேட்பு மனு நாள் தேர்தல் நாள்
பினாங்கு 13 சனவரி 1955 19 பிப்ரவரி 1955
மலாக்கா 4 ஆகஸ்டு 1955 இல்லை

முடிவுகள்

[தொகு]

மலாயா கூட்டணி மொத்த வாக்குகளில் 80% பெற்றது; மற்றும் போட்டியிட்ட 52 இடங்களில் 51 இடங்களில் வெற்றி பெற்றது. மலேசிய இசுலாமிய கட்சி பேராக் மாநிலத்தின் கிரியான் தொகுதியில் மட்டும் ஒரே இடத்தை வென்றது.

மலேசிய இசுலாமிய கட்சியின் ஒரே வெற்றி வேட்பாளரான அஜி அகமத் துவான் உசைன், ஓர் இசுலாமிய அறிஞர் ஆகும்; பின்னர் இவர் "திருவாளர் எதிர்க்கட்சி" எனும் செல்லப் பெயரைப் பெற்றார். 1955-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலில் 82.8% மொத்த வாக்குகள் பதிவாகின.

கட்சிகள் வாக்குகள் இடங்கள்
வாக்குகள் % இடங்கள் %
மலாயா கூட்டணி ALLIANCE 818,013 81.68 51 98.08
அம்னோ UMNO 589,933 58.90 34 65.38
மலேசிய சீனர் சங்கம் MCA 201,212 20.09 15 28.85
மலேசிய இந்திய காங்கிரசு MIC 26.868 2.68 2 3.85
தேசிய கட்சி Negara 78,909 7.88 0 0.00
மலேசிய இசுலாமிய கட்சி PMIP 40,667 4.06 1 1.92
பேராக் தேசிய சங்கம் NAP 20,996 2.10 0 0.00
பேராக் மலாய் லீக் PML 5,433 0.54 0 0.00
மலாயா தொழிலாளர் கட்சி Lab 4,786 0.48 0 0.00
மக்கள் முற்போக்கு கட்சி PPP 1,081 0.11 0 0.00
சுயேச்சை IND 31,642 3.16 0 0.00
செல்லுபடி வாக்குகள் 1,001,527
செல்லாத வாக்குகள் 25,684
மொத்தம் 1,027,211 82.8% 52 100.00
வாக்கு தவிர்த்தவர்கள் 253,644
பதிவு பெற்ற வாக்காளர்கள் 1,280,855

[2][1][2][3] }}

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gill, Ranjit (1990). Of Political Bondage. Sterling Corporate Services. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-00-2136-4.
  2. Carnell, Francis G. (December 1955). "The Malayan Elections". Pacific Affairs (University of British Columbia) 28 (4): 315–330. doi:10.2307/3035316. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-851X. https://archive.org/details/sim_pacific-affairs_1955-12_28_4/page/315.