மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு
Ministry of Investment, Trade and Industry Kementerian Pelaburan Perdagangan dan Industri Malaysia (MITI) | |
மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் | |
அமைச்சு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 27 அக்டோபர் 1990 |
முன்னிருந்த அமைச்சு |
|
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | Menara MITI, No. 7, Jalan Sultan Haji Ahmad Shah, 50480 கோலாலம்பூர்[1] 03°10′28″N 101°40′08″E / 3.17444°N 101.66889°E |
பணியாட்கள் | 993 (2023) |
ஆண்டு நிதி | MYR 1,585,546,500 (2022 - 2023)[2] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைச்சு தலைமை |
|
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு |
மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு (மலாய்: Kementerian Pelaburan, Perdagangan dan Industri Malaysia; ஆங்கிலம்: Ministry of Investment, Trade and Industry Malaysia) (MITI) என்பது மலேசியாவின் பன்னாட்டு வணிகம் (International Trade) மற்றும் மலேசியாவின் தொழில் துறைகளை (Industry) நிர்வகிக்கும் அமைச்சு ஆகும்.[4]
இந்த அமைச்சின் தலைமையகம் கோலாலம்பூர் சுல்தான் அஜி அகமத் சா சாலையில் (Jalan Sultan Haji Ahmad Shah) உள்ள மெனாரா கோபுர வளாகத்தில் (Menara MITI) அமைந்துள்ளது. புத்ராஜெயாவிற்கு இடமாற்றம் செய்யாத மூன்று அமைச்சுகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த அமைச்சைத் தவிர மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சு; மலேசிய பொதுப் பணி அமைச்சு ஆகிய இரு அமைச்சுகளும் இன்னும் புத்ராஜெயாவிற்கு இடம் மாறிச் செல்லவில்லை; கோலாலம்பூர் மாநகரிலேயே தலைமையகங்களைக் கொண்டுள்ளன.
பொது
[தொகு]1956 ஏப்ரல் மாதம் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு நிறுவப்பட்டது. அப்போது அதன் அரசாங்க அலுவலகம் கோலாலம்பூர் ராஜா சாலையில் இருந்தது. பிப்ரவரி 1972-இல் அந்த அமைச்சு; வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு என மறுபெயரிடப்பட்டது. 27 அக்டோபர் 1990-இல், அதே அமைச்சு இரண்டு அமைச்சுகளாகப் பிரிக்கப்பட்டது:
- பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு
- Ministry of International Trade and Industry (MITI)
- உள்நாட்டு வணிகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு
- Ministry of Domestic Trade and Consumer Affairs (KPDN)
பொறுப்பு துறைகள்
[தொகு]- பன்னாட்டு வணிகம் (International Trade)
- தொழில் துறை (Industry)
- முதலீடு (Investment)
- உற்பத்தித்திறன் (Productivity)
- சிறு மற்றும் நடுத்தர தொழில் (Small and Medium Enterprise)
- வளர்ச்சி நிதி நிறுவனம் (Development Finance Institution)
- அலால் முறை (Halal Industry)
- வாகன சேவை (Automotive)
- உருக்கு தொழில் துறை (Steel Industry)
- உத்திசார் வணிகம் (Strategic Trade)
அமைப்பு
[தொகு]- முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மூத்த அமைச்சர்
- முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர்
- பொது செயலாளர்
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- உத்திசார் திட்டமிடல் பிரிவு (Strategic Planning Division)
- உத்திசார் வணிக செயலகப் பிரிவு (Strategic Trade Secretariat Division
- சட்டப் பிரிவு (Legal Advisor Office)
- மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
- உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
- உத்திசார் தொடர்பு பிரிவு (Strategic Communication Unit)
- சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
- ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
- துணைப் பொதுச் செயலாளர் (வணிகம்)
- பலதரப்பு வணிகக் கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை பிரிவு (Multilateral Trade Policy and Negotiation Division)
- பிராந்திய மற்றும் பன்னாட்டு உறவுகள் பிரிவு (Regional and International Relations Division)
- இருதரப்பு பொருளாதாரம் மற்றும் வணிக உறவுகள் பிரிவு (Bilateral Economic and Trade Relations Division)
- ஆசியான் பொருளாதார ஒருங்கிணைப்பு பிரிவு (ASEAN Economic Integration Division)
- துணை பொதுச் செயலாளர் (தொழில்துறை)
- துறைசார் கொள்கை பிரிவு (Sectoral Policy Division)
- பூமிபுத்ரா தொழில்முனைவு மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவு (Bumiputera Entrepreneurship and Small and Medium Enterprise Division)
- வணிகம் மற்றும் தொழில்துறை ஆதரவுப் பிரிவு (Trade and Industry Support Division)
- முதலீட்டுக் கொள்கை மற்றும் வணிக வசதிப் பிரிவு (Investment Policy and Trade Facilitation Division)
- சேவைகள் துறை மேம்பாட்டுப் பிரிவு (Services Sector Development Division)
- வணிகம் மற்றும் தொழில்துறை தொடர்பான வளர்ந்து வரும் சிக்கல்கள் பிரிவு (Trade and Industry Related Emerging Issues Division)
- துணைப் பொதுச் செயலாளர் (உத்திசார் மற்றும் கண்காணிப்பு)
- உத்திசார் பேச்சுவார்த்தை பிரிவு (Strategic Negotiations Division)
- தேசிய முக்கிய பொருளாதாரப் பகுதிகள், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவு (National Key Economic Areas, Monitoring and Evaluation Division)
- அனுகெரா கெசெமர்லங்கான் தொழில்துறைப் பிரிவு (Anugerah Kecemerlangan Industri)
- தகவல் மேலாண்மைப் பிரிவு (Information Management Division)
- உள்நாட்டு அலுவலகம் (MITI Domestics Office)
- வெளிநாட்டு அலுவலகம் (MITI Overseas Office)
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- பொது செயலாளர்
- முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர்
கூட்டரசு துறைகள்
[தொகு]- மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம்
- (Malaysian Investment Development Authority) (MIDA)
- (Lembaga Pembangunan Pelaburan Malaysia)
- Malaysian Investment Development Authority
- மலேசிய வெளிநாட்டு வணிக மேம்பாட்டுக் கழகம்
- (Malaysia External Trade Development Corporation) (MATRADE)
- (Perbadanan Pembangunan Perdagangan Luar Malaysia)
- Malaysia External Trade Development Corporation
- மலேசியா உற்பத்தித்திறன் கழகம்
- (Malaysia Productivity Corporation) (MPC)
- (Perbadanan Produktiviti Malaysia)
- Malaysia Productivity Corporation
- வணிக எளிது சிறப்பு பணிக்குழு
- (Pasukan Petugas Khas Pemudahcara Perniagaan) (PEMUDAH)
- மலேசிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனக் கழகம்
- (SME Corporation Malaysia) (SME Corp)
- (Perbadanan Perusahaan Kecil dan Sederhana Malaysia)
- SME Corporation Malaysia
- சிறு மற்றும் நடுத்தர நிறுவன வங்கி
- (Small And Medium Enterprise Bank) (SME Bank)
- (Bank Perusahaan Kecil dan Sederhana)
- Small And Medium Enterprise Bank
- மலேசிய தொழில்துறை மேம்பாட்டு நிதி
- (Malaysian Industrial Development Finance) (MIDF)
- (Pembangunan Industri Kewangan Malaysia)
- Malaysian Industrial Development Finance
- மலேசிய வாகனத்துறைக் கழகம்
- (Malaysia Automotive Institute) (MAI)
- (Institut Automotif Malaysia)
- மலேசியா உருக்குத் துறைக் கழகம்
- (Malaysia Steel Institute) (MSI)
- (Institut Keluli Malaysia)
அமைச்சு சார்ந்த சட்டங்கள்
[தொகு]மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கின்றது.[5]
- தொழில்துறை ஒருங்கிணைப்புச் சட்டம் 1975
- Industrial Co-ordination Act 1975 [Act 156]
- முதலீடுகள் மேம்படுத்துதல் சட்டம் 1986
- Promotion of Investments Act 1986 [Act 327]
- மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (இணைப்பு) சட்டம் 1965
- Malaysian Investment Development Authority (Incorporation) Act 1965 [Act 397]
- மலேசியா உற்பத்தித்திறன் கழகம் (இணைப்பு) சட்டம் 1966
- Malaysia Productivity Corporation (Incorporation) Act 1966 [Act 408]
- மலேசிய வெளி வணிக மேம்பாட்டுக் கழகச் சட்டம் 1992
- Malaysia External Trade Development Corporation Act 1992 [Act 490]
- Malaysia External Trade Development Corporation பரணிடப்பட்டது 2022-03-08 at the வந்தவழி இயந்திரம்
- ஈடுசெய்வரி மற்றும் வரி தவிர்ப்புச் சட்டம் 1993
- Countervailing and Anti-Dumping Duties Act 1993 [Act 504]
- சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகச் சட்டம் 1995
- Small and Medium Industries Development Corporation Act 1995 [Act 539]
- பாதுகாப்புச் சட்டம் 2006
- Safeguards Act 2006 [Act 657]
- உத்திசார் வணிகச் சட்டம் 2010
- Strategic Trade Act 2010 [Act 708]
கொள்கை முன்னுரிமைகள்
[தொகு]- தேசிய வாகனத்துறை கொள்கை
- National Automotive Policy
- National Automotive Policy
- இரும்பு மற்றும் உருக்குத் தொழில் கொள்கை
- Iron and Steel Industry Policy
- Iron and Steel Industry Policy
சட்டக் கட்டமைப்பு
[தொகு]வணிகம் மற்றும் தொழில்துறை தொடர்பான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு மலேசிய அரசியலமைப்பு அனுமதி அளிக்கிறது:
- பொருட்களின் உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம்; விலைக் கட்டுப்பாடு மற்றும் உணவு கட்டுப்பாடு; உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் கலப்படம்;
- நாட்டிலிருந்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதி;
- வெளிநாட்டு நிறுவனங்களின் மீது கட்டுப்பாடு; நாட்டின் உற்பத்தி அல்லது ஏற்றுமதி மீதான வரவுகள்;
- கட்டாய காப்பீடு அல்லது காப்பீடு;
- காப்புரிமைகள்; வடிவமைப்புகள், கண்டுபிடிப்புகள்; வணிக முத்திரைகள் மற்றும் காப்புரிமைகள்;
- எடைகள் மற்றும் அளவீடுகளின் தரநிலைகளை உறுதிப்படுத்துதல்;
- நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துதல்;
- ஏலங்கள் மற்றும் ஏலதாரர்கள்;
- தொழில்கள்; தொழில்துறை நிறுவனங்களின் கட்டுப்பாடு;
- கனிம வளங்களை மேம்படுத்துதல்; சுரங்கங்கள், கனிமங்கள் மற்றும் கனிம தாதுக்கள்; எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வயல்கள்; தாதுக்கள் மற்றும் தாதுக்களின் கொள்முதல், விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி;
- பெட்ரோலிய பொருட்கள்; சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் வயல்களில் பணிபுரிய்ம் தொழிலாளர் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடு;
- தொழிற்சாலைகள்; கொதிகலன்கள் மற்றும் இயந்திரங்கள்; ஆபத்தான வர்த்தகங்கள்;
- ஆபத்தான மற்றும் எரியக்கூடிய பொருட்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Miti moving to new HQ.The Star (Malaysia) 17 November 2015. Retrieved 17 November 2015.
- ↑ "Ministry of International Trade and Industry (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
- ↑ Yee, Elizabeth (19 December 2022). "Liew Chin Tong, the newly-minted Deputy Minister of Trade and Industry, hopes that he could help the ministry to bring Malaysia's economy to a better level". பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
- ↑ "The Ministry's history started since the 1950's and it plays an important role in developing the Malaysian economic landscape - from an agri-based nation in the 60's to a nation driven by digitalisation, high-technology and sustainability now". Lusha. பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
- ↑ http://www.miti.gov.my/index.php/pages/view/2681?mid=327 Principal Acts