உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியாவின் பதினைந்தாவது மக்களவை, 2022–2026

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியாவின் பதினைந்தாவது மக்களவை
15th Malaysian Parliament
Parlimen Malaysia ke-15
(2023–2026)
14-ஆவது 16-ஆவது
மேலோட்டம்
சட்டப் பேரவைமலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலேசியா
கூடும் இடம்மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
தவணை19 டிசம்பர் 2022 – தற்போது
தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022
அரசுஅன்வார் இப்ராகிம் அமைச்சரவை
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
Dewan Rakyat as of 19 November 2022
உறுப்பினர்கள்222
மலேசிய மக்களவைத் தலைவர்ஜொகாரி அப்துல்
துணை மக்களைவைத் தலைவர்ரம்லி முகமட் நோர்
அலிசு லாவ் கியோங் இயேங்
செயலாளர்நிசாம் மைதீன் பச்சா மைதீன்
பிரதமர்அன்வர் இப்ராகீம்
எதிரணி தலைவர்அம்சா சைனுடின்
Party controlபாக்காத்தான்
இறையாண்மை
மலேசியப் பேரரசர்பகாங் சுல்தான் அப்துல்லா
(2022–2024)
இப்ராகிம் இசுகந்தர்
(2024 பிப்ரவரி தொடக்கம்)
அமர்வுகள்
1st19 டிசம்பர் 2022 – 20 டிசம்பர் 2022
2nd13 பிப்ரவரி 2023 – 30 நவம்பர் 2023
3rd26 பிப்ரவரி 2024 – 5 டிசம்பர் 2024

மலேசியாவின் பதினைந்தாவது மக்களவை, 2022–2026 (மலாய்: Parlimen Malaysia ke-15; ஆங்கிலம்: 15-th Parliament of Malaysia என்பது மலேசியக் கூட்டமைப்பின் பதினைந்தாவது மக்களவை ஆகும். இந்த 15-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 28 ஏப்ரல் 19 டிசம்பர் 2022-இல் நடைபெற்றது.[1][2]

2022-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (2022 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பதினைந்தாவது மக்களவை கூடியது. மக்களவை தலைவராக ஜொகாரி அப்துல் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர்களாக ரம்லி முகமட் நோர்; அலிசு லாவ் கியோங் இயேங் பொறுப்பு வகித்தனர்.

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகீம் அவர்களின் தலைமையிலான பாக்காத்தான் கூட்டணி; 147 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 69 இடங்களைப் பெற்றனர்.

பொது

[தொகு]

அரசியல் நெருக்கடிகள்

[தொகு]

2020-ஆம் ஆண்டுக்கும்; 2022-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில், மலேசியாவில் பற்பல அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டன. அவற்றின் காரணமாக, தேசிய அளவில் முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடைபெறலாம் எனும் ஓர் ஆருடம் நீடித்து வந்தது.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி விட்டுக் கட்சி தாவியதாலும்; தாங்கள் சார்ந்த கட்சிகளின் கூட்டணிகளை மாற்றிக் கொண்டதாலும்; 2020-ஆம் ஆண்டுக்கும்; 2022-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில், மலேசிய அரசியலில் ஓர் உறுதித் தன்மை இல்லாமல் இருந்தது. அதே வேளையில் கோவிட்-19 தொற்று நோய் நெருக்கடிகளும் இடர்பாடுகளும் இணைந்து கொண்டன.

2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்

[தொகு]

2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இரு பிரதமர்கள் பதவி ஏற்றனர். இரு கூட்டணி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும் இரண்டு அரசாங்கங்களும் எதிர்பாராத சரிவு நிலைகளைக் கண்டன; அந்த இரண்டு அரசாங்கங்களின் பிரதமர்களும் தங்களின் பதவிகளைத் துறக்க வேண்டிய இக்கட்டான நிலைமையும் ஏற்பட்டது.

மலேசியாவின் 14-ஆவது மக்களவைத் தொடர் 2023 சூலை 16-ஆம் தேதி காலாவதியாக இருந்தது. இருப்பினும், அப்போதைய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் வேண்டுகோளின்படி, மலேசிய மாமன்னர், சுல்தான் அப்துல்லா அவர்கள், 2022 அக்டோபர் 10-ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அதன் பின்னர் 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது.[3]

15-ஆவது பொதுத் தேர்தல் முடிவுகள்

[தொகு]
அரசாங்கம்(147) ஆதரவு (6) எதிரணி (69)
PH
பாக்காத்தான்
BN
பாரிசான்
GPS
ஜிபிஎஸ்
GRS
ஜிஆர்எஸ்
WARISAN
வாரிசான்
KDM
கேடிஎம்
PBM
பிபிஎம்
IND
சுயேச்சை
PN
பிஎன்
PN
பிஎன்
MUDA
மூடா
81 30 23 6 3 1 1 2 6 68 1
40 31 8 2 26 2 1 1 14 5 2 2 4 1 1 6 43 25
DAP PKR AMANAH UPKO UMNO MCA MIC PBRS PBB PRS PDP SUPP GRS PBS STAR WARISAN KDM PBM IND BERSATU PAS BERSATU MUDA

15-ஆவது மக்களவையில் ஏற்பட்ட மாற்றங்கள்

[தொகு]

நவம்பர் 2022 - சனவரி 2024

[தொகு]
தேதி PH BN GPS GRS WARISAN KDM PBM MUDA IND PN - அரசாங்கம்
(அன்வார் இப்ராகிம் அமைச்சரவை) [3][4]
19 நவம்பர் 2022 81 30 23 6 3 1 1 1 2 73 1 148
7 டிசம்பர் 2022 Increase
74

0
27 சூன் 2023
73
Increase
1
23 சூலை 2023
80
73 Increase
2
147
12 ஆகஸ்டு2023 80 Increase
74

1
9 செப்டம்பர் 2023 Increase
81
74
0
148
10 செப்டம்பர் 2023 81 1
0 147
26 செப்டம்பர் 2023 1
73
Increase
1
12 அக்டோபர் 2023 Increase
1

72
1 148
30 அக்டோபர் 2023 Increase
2

71
149
7 நவம்பர் 2023 Increase
3

70
150
8 நவம்பர் 2023 Increase
4

69
151
28 நவம்பர் 2023 Increase
5

68
152
2 டிசம்பர் 2023 5 Increase
69

0
24 சனவரி 2024 Increase
6

68
0 153

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Representatives Archive List of Members PARLIMEN 15". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
  2. "GE15: Penang, Selangor and Negri not dissolving state assemblies this year, says Anwar". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 October 2022.
  3. 3.0 3.1 Reuters (2022-10-10). "Malaysia PM dissolves parliament" (in en). Reuters. https://www.reuters.com/world/asia-pacific/malaysia-pm-dissolves-parliament-2022-10-10/. 
  4. "Will young voters in Malaysia revive the career of a 97-year-old politician?" (in en). NPR.org. https://www.npr.org/2022/11/17/1137334860/will-young-voters-in-malaysia-revive-the-career-of-a-97-year-old-politician. 

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.