உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்
Ketua Pembangkang
Leader of the Opposition (Malaysia)
தற்போது
அம்சா சைனுடின்
(Hamzah Zainudin)

10 டிசம்பர் 2022 முதல்
உறுப்பினர்மக்களவை நிகராளி
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
நியமிப்பவர்மலேசிய மக்களவை
பதவிக் காலம்5 ஆண்டுகள்; அல்லது அதற்கும் குறைவானது; ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது
முதலாவதாக பதவியேற்றவர்புர்கானுடின் அல் எல்மி
Burhanuddin al-Helmy
உருவாக்கம்1959; 65 ஆண்டுகளுக்கு முன்னர் (1959)

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் (மலாய்: Ketua Pembangkang; ஆங்கிலம்: Leader of the Opposition; சீனம்: 马来西亚国会反对党领袖) என்பவர் மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையான மலேசிய மக்களவையில் உள்ள எதிர்க்கட்சி அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவர் ஆவார். அதாவது ஆளும் கட்சி அல்லது ஆளும் கூட்டணிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒருமித்த தலைவரும் ஆவார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அரசாங்கத்தில் எந்தப் பொறுப்புகளையும் வகிக்காத ஒருவராகவும்; மலேசிய மக்களவையில் பெரிய ஓர் எதிர்க்கட்சி அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராகவும் பொறுப்பில் இருக்க வேண்டும். மலேசிய மக்களவை அமர்வில் இருக்கும்போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் மத்திய மக்களவை மேசையின் இடது புறத்திலும், பிரதமருக்கு எதிரேயும் அமர்ந்திருப்பார்.

பொது

[தொகு]

எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற விதிகளின்படி மக்களவையின் சிறுபான்மைக் கட்சிகளினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மக்களவை அமர்வில் இருக்கும் போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மரணம் அடைந்தால்; அல்லது பதிவித் துறப்பு செய்தால்; அல்லது அவரின் தலைமைப் பதவிக்குச் சவால் விடப்பட்டால்; ஒரு புதிய எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம்.

மலேசிய நாடாளுமன்றம், மலேசியாவின் அரசமைப்பு அவையாகும். இந்த நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. எதிர்க்கட்சியானது வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி

[தொகு]

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அரசாங்கத் திட்டங்களை விமர்சிப்பது; மாற்று வரவு செலவுத் திட்டங்கள் அல்லது மாற்றுச் சட்டங்களை முன்வைப்பது; முன்மொழியப்படும் அனைத்துச் சட்டங்கள் குறித்தும் விவாதிப்பது; மற்றும் நடப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி கவனம் செலுத்துகிறது.

எனவே எதிர்க்கட்சியானது 'காத்திருக்கும் அரசாங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சி முறைமை என்பது மக்களாட்சி அமைப்பின் முறையான ஒரு பகுதியாகும்.

நவம்பர் 2022 முதல், பெரிக்காத்தான் கூட்டணி, மலேசிய நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய எதிரணிக் கூட்டணியாக உள்ளது. இதற்கு முன்பு, எதிர்க்கட்சித் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் லிம் கிட் சியாங் ஆவார். இவர் 28 ஆண்டுகள் (1975-1999 மற்றும் 2004-2008 வரை) எதிர்க்கட்சிகளின் தலைவராகப் பணியாற்றினார்.

மலேசிய நாடாளுமன்றம்

[தொகு]

மலேசிய நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. மக்களவை மற்றும் மேலவை என ஈரவை முறைமையைக் கொண்டது. மலேசிய மாமன்னர் நாட்டின் தலைவர் எனும் வகையில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அங்கமாகக் கருதப்படுகிறார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாடாளுமன்றம் கூடுகிறது. மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், கோலாலம்பூர், பெர்தானா தாவரவியல் பூங்காவிற்கு அருகில் உள்ளது.

1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மலேசிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு RM 18 மில்லியன் செலவானது. 18 மாடிகள் கொண்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில், இரு அவைகளுக்கும் மூன்று மாடிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மற்ற மாடிகளில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.[1]

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல்

[தொகு]

மலேசிய அரசியல் கட்சிகள் / கூட்டணிகள்:
       மலேசிய கூட்டணி கட்சி        மலேசிய இசுலாமிய கட்சி        மலாயா தொழிலாளர் கட்சி        ஜனநாயக செயல் கட்சி        சரவாக் தேசியக் கட்சி        மக்கள் நீதிக் கட்சி        பாக்காத்தான் அரப்பான்        பாரிசான் நேசனல்        பெரிக்காத்தான் நேசனல்

# தோற்றம் எதிரணித் தலைவர்
(பிறப்பு-இறப்பு)
அரசியல் கட்சி பதவி காலம் சான்றுகள்
பதவியேற்பு பதவி விலகல்
1 புர்கானுடின் அல் எல்மி
(Burhanuddin al-Helmy)
(1911–1969)
பெசுட் மக்களவைத் தொகுதி
மலேசிய இசுலாமிய கட்சி 1959 1964
2 டான் சி கூன்
(Tan Chee Khoon)
(1919–1996)
பத்து மக்களவைத் தொகுதி
மலாயா மக்கள் சோசலிச முன்னணி
(மலாயா தொழிலாளர் கட்சி)
18 மே 1964 10 சனவரி 1966
மலாயா தொழிலாளர் கட்சி 10 சனவரி 1966 28 மே 1968
கெராக்கான் 28 மே 1968 20 மார்ச் 1969
- நாடாளுமன்றம் ஒத்திவைப்பு 1969 1971
3 அசுரி மூடா
(Mohamed Asri Muda)
(1923–1992)
பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி
மலேசிய இசுலாமிய கட்சி 1971 1973
4 லிம் கிட் சியாங்
(Lim Kit Siang)
(பிறப்பு: 1941)
பண்டார் மலாக்கா மக்களவைத் தொகுதி
ஜனநாயக செயல் கட்சி 30 சனவரி 1973 31 சூலை 1974 [2]
5 ஜேம்ஸ் வோங் கிம் மின்
(James Wong Kim Min)
(1922–2011)
மிரி மக்களவைத் தொகுதி
சரவாக் தேசியக் கட்சி 24 ஆகஸ்டு 1974 30 அக்டோபர் 1974
6 எட்மண்ட் லாங்கு அனாக் சாகா
(Edmund Langgu Anak Saga)
(பிறப்பு: 1936)
சரதோக் மக்களவைத் தொகுதி
4 நவம்பர் 1974 4 நவம்பர் 1975 [3]
7 லிம் கிட் சியாங்
(Lim Kit Siang)
(பிறப்பு: 1941)
கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி
(1975-1978)
பெட்டாலிங் மக்களவைத் தொகுதி
(1978–1982)
கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி
(1982-1986)
தஞ்சோங் மக்களவைத் தொகுதி
(1986–1999)
ஜனநாயக செயல் கட்சி 4 நவம்பர் 1975 12 சூன் 1978 [4]
31 சூலை 1978 29 மார்ச் 1982 [5]
10 சூலை 1982 19 சூலை 1986 [6]
8 அக்டோபர் 1986 4 அக்டோபர் 1990 [7]
10 டிசம்பர் 1990 6 ஏப்ரல் 1995 [8]
15 சூன் 1995 10 நவம்பர் 1999 [9]
8 பாட்சில் நூர்
(Fadzil Noor)
(1937–2002)
பெண்டாங் மக்களவைத் தொகுதி
மலேசிய இசுலாமிய கட்சி 20 டிசம்பர் 1999 23 சூன் 2002 [10]
9 அடி அவாங்
(Abdul Hadi Awang)
(பிறப்பு: 1947)
மாராங் மக்களவைத் தொகுதி
9 செப்டம்பர் 2002 4 மார்ச் 2004 [11]
10 லிம் கிட் சியாங்
(Lim Kit Siang)
(பிறப்பு: 1941)
ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி
ஜனநாயக செயல் கட்சி 10 மார்ச் 2004 13 பிப்ரவரி 2008 [12]
11 வான் அசிசா வான் இசுமாயில்
(Wan Azizah Wan Ismail)
(பிறப்பு: 1952)
பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி
மக்கள் நீதிக் கட்சி
(பி.கே.ஆர்)
30 ஏப்ரல் 2008 28 ஆகஸ்டு 2008 [13][14]
12 அன்வர் இப்ராகீம்
(Anwar Ibrahim)
(பிறப்பு: 1947)
பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி
28 ஆகஸ்டு 2008 3 ஏப்ரல் 2013 [15]
26 சூன்2013 16 மார்ச் 2015 [16][17]
13 வான் அசிசா வான் இசுமாயில்
(Wan Azizah Wan Ismail)
(பிறப்பு: 1952)
பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி
18 மே 2015 7 ஏப்ரல் 2018 [18]
14 அகமத் சாகித் அமிடி
(Ahmad Zahid Hamidi)
(பிறப்பு: 1953)
பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி
பாரிசான் நேசனல்
(அம்னோ)
18 சூலை 2018 12 மார்ச் 2019 [19]
15 இசுமாயில் சப்ரி யாகோப்
(Ismail Sabri Yaakob)
(பிறப்பு: 1960)
பெரா மக்களவைத் தொகுதி
12 மார்ச் 2019 24 பிப்ரவரி 2020 [20]
16 அன்வர் இப்ராகீம்
(Anwar Ibrahim)
(பிறப்பு: 1947)
போர்டிக்சன் மக்களவைத் தொகுதி
பாக்காத்தான் அரப்பான்
(பி.கே.ஆர்)
18 மே 2020 24 நவம்பர் 2022 [21]
17 அம்சா சைனுடின்
(Hamzah Zainudin)
(பிறப்பு: 1957)
லாருட் மக்களவைத் தொகுதி
பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
10 டிசம்பர் 2022 பதவியில் உள்ளார் [22]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Straits Times: The big step forward, 2 November 1963, page 1; accessed 23 February 2014
  2. Hansard - 30 January 1973
  3. Hansard - 4 November 1974
  4. Hansard - 5 November 1975
  5. Hansard - 10 October 1978
  6. Hansard - 12 October 1982
  7. Hansard - 8 October 1986
  8. Hansard - 10 December 1990
  9. Hansard - 15 June 1995
  10. Hansard - 20 December 1999
  11. Hansard - 9 September 2002
  12. Hansard - 19 May 2004
  13. Hansard - 30 April 2008
  14. "PKR president poised to make history as first woman Opposition Leader". The Star. 20 March 2008 இம் மூலத்தில் இருந்து 21 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110521101825/http://thestar.com.my/news/story.asp?file=%2F2008%2F3%2F20%2Fnation%2F20702955&sec=nation. 
  15. Hansard - 28 August 2008
  16. Hansard - 26 June 2013
  17. "Anwar disqualified as MP since Mar 16, says speaker". The Malaysian Times. 1 April 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2015.
  18. Hansard - 18 May 2015
  19. Hansard - 18 July 2018
  20. Hansard - 12 March 2019
  21. Hansard - 13 July 2020
  22. Hansard - 19 December 2022

வெளி இணைப்புகள்

[தொகு]