உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணராஜநகரா

ஆள்கூறுகள்: 12°28′N 76°23′E / 12.46°N 76.39°E / 12.46; 76.39
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணராஜநகரம்
நகரம்
சாலிக்கிராம தாலுக்கா உருவாவதற்கு முன்னர் கிருஷ்ணராஜநகர தாலுகாவின் எல்லைகள்
சாலிக்கிராம தாலுக்கா உருவாவதற்கு முன்னர் கிருஷ்ணராஜநகர தாலுகாவின் எல்லைகள்
ஆள்கூறுகள்: 12°28′N 76°23′E / 12.46°N 76.39°E / 12.46; 76.39
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்மைசூர்
வருவாய் வட்டம்கிருஷ்ணராஜநகரம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்35,805
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
571 602
தொலைபேசி குறியீடு08223
வாகனப் பதிவுKA-45 and KA-09, KA-55
இணையதளம்www.krnagaratown.gov.in

கிருஷ்ணராஜநகரம் (Krishnarajanagara) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் மாவட்டத்தின் கிருஷ்ணராஜநகர தாலுக்காவின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். நீர் ஆதாரம் மிக்க கிருஷ்ணராஜநகரம் நெல் வயல்களுக்கும், கரும்புத் தோட்டங்களுக்கும் புகழ்பெற்றது. கிருஷ்ணராஜநகரம், மைசூர் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கிருட்டிணராச சாகர் அணை கட்டப்பட்டதால் கிருஷ்ணராஜநகர வட்டத்தின் பல பகுதிகள் அணை நீரில் மூழ்கின.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 23 வார்டுகக்ளும், 8,643 குடியிருப்புகளும் கொண்ட கிருஷ்ணராஜநகரம் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 35,805 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 17,900 மற்றும் பெண்கள் 17,905 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 1000 வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 3542 ஆகும். சராசரி எழுத்தறிவு 86.74% ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடிகள் முறையே மற்றும் ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.65%, இசுலாமியர்கள் 16.44% மற்றும் பிற சமயத்தினர் 0.91% ஆக உள்ளனர்.[1]

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]