ரேலா
Malaysia Volunteers Corps Department Jabatan Sukarelawan Malaysia ரேலா / RELA | |
புத்ராஜெயாவில் ரேலா தலைமையகம் | |
குடிப்படை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | மார்ச்சு 25, 1948 |
முன்னிருந்த அமைப்புகள் |
|
கலைப்பு | 1 சூலை1959 (மீண்டும் 1969) |
வகை | அரசு |
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | மத்திய அரசு நிர்வாக மையம் 62546 புத்ராஜெயா மலேசியா |
குறிக்கோள் | உண்மையாக சேவை செய்தல் (To serve faithfully) (Setia Berbakti) |
பணியாட்கள் | 3,060,807 (2024)[1] |
அமைச்சர் | |
குடிப்படை தலைமைகள் |
|
வலைத்தளம் | www |
மலேசிய தன்னார்வ படைத் துறை அல்லது ரேலா; (மலாய்: Jabatan Sukarelawan Malaysia (RELA); ஆங்கிலம்: Malaysia Volunteers Corps Department) என்பது மலேசிய உள்துறை அமைச்சின் கீழ் உள்ள மலேசிய துணை இராணுவப் படைத்துறை ஆகும்.[2]
இந்தப் படைத்துறை, மலேசிய நாட்டிற்குள் வரும் எதிரிகளைக் எதிர்கொள்ளும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் தன்னார்வலர் பாதுகாப்புப் படையைக் கொண்ட ஓர் அமைப்பு.
வரலாறு
[தொகு]சூலை 3, 1972-இல், அவசரகால சட்டம் 1964 (Emergency Act 1964); தேவையான ஒழுங்குமுறைகள் சட்டம் 1966 (Necessary Powers Act 1966) ஆகிய சட்டங்களின் கீழ்; மலேசிய தன்னார்வ படைத் துறை (Association of People's Volunteers) நிறுவப்பட்டது. மலேசிய தன்னார்வ படைத் துறையின் அடித்தளம் 1948-ஆம் ஆண்டு கிராமக் கட்டுப்பாட்டு அமைப்பு (Village Control Organization or Home Guard) அல்லது வீட்டுக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு முந்தையது.
மலாயா கூட்டமைப்பு அமைவிற்குப் பின்னர் மலாயா அவசரகால நிலை ஏற்பட்டது. அப்போது ஊர்க்காவல் படை (Home Guard) உருவாக்கப்பட்டது. மலேசிய தன்னார்வ படைத் துறை; மலாயா ஊர்க்காவல் படை விதிமுறைகள் 1950 மற்றும் 1951-இன் (Home Guard Regulations 1950 & 1951) அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
மலாயா அவசரகால நிலை
[தொகு]இதற்கிடையில், மலாயா அவசரகால நிலையின் தொடக்கத்தில் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்குதல்கள் அதிகமாக பரவியதால், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஊர்க்காவல் படையில் சேரந்தனர். மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுறுத்தல்கள் குறைந்ததைத் தொடர்ந்து 1 சூலை 1959 அன்று ஊர்க்காவல் படை கலைக்கப்பட்டது.
1964 செப்டம்பரில் இந்தோனேசியா-மலேசியா மோதல் ஏற்பட்டபோது, அரசாங்கம் ஓர் அமைதிக் காப்பு படையை (Vigilante Corps) நிறுவியது. அதன் பின்னர் நாட்டில் அமைதி நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 25 பிப்ரவரி 1967 அன்று, அமைதிக் காப்பு படையை கலைக்க மலேசிய அமைச்சரவை முடிவு செய்தது.
மேலும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Kent, Jonathan (3 January 2007). "Incidents may mar Malaysia's tourism bid". BBC News. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6228125.stm.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.rela.gov.my/?page_id=1824
- ↑ "My RELA". My Rela. 2017-11-13. Archived from the original on 2018-01-17. பார்க்கப்பட்ட நாள் 2017-11-13.