அரச மலேசிய கடற்படை
அரச மலேசிய கடற்படை Royal Malaysian Navy | |
---|---|
Tentera Laut Diraja Malaysia تنترا لاءوت دراج مليسيا | |
Crest of the Royal Malaysian Navy | |
உருவாக்கம் | 27 ஏப்ரல் 1934 |
நாடு | மலேசியா |
வகை | கடற்படை |
பொறுப்பு | கடற்படை போர் |
அளவு |
|
பகுதி | மலேசிய பாதுகாப்பு படைகள் |
அரண்/தலைமையகம் | லூமுட் கடற்படை தளம், லூமுட், பேராக் |
சுருக்கப்பெயர்(கள்) | TLDM (Tentera Laut Diraja Malaysia) |
பாதுகாவலர் | மலேசிய மாமன்னர் |
குறிக்கோள்(கள்) | தியாகம் செய்ய தயார் (Sedia Berkorban) ("Ready to Sacrifice") |
ஆண்டு விழாக்கள் | ஏப்ரல் 27-ஆம் தேதி |
சண்டைகள் |
|
இணையதளம் | navy |
படைத்துறைச் சின்னங்கள் | |
சின்னம் | |
கொடி | |
தேசியக் கொடி | |
சிறு சின்னம் |
அரச மலேசிய கடற்படை அல்லது மலேசிய கடற்படை ஆங்கிலம்: Royal Malaysian Navy (RMN); மலாய்: Tentera Laut Diraja Malaysia (TLDM) என்பது மலேசிய பாதுகாப்பு படைகளில் உள்ள மூன்று படைப்பிரிவுகளில் ஒரு பிரிவாகும். மலேசிய நாட்டின் முக்கிய பாதுகாப்பு படைகளில் ஒன்றாகத் திகழும் இந்தப் படை, கடல்சார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது.
நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பது மற்றும் நாட்டின் பிற ஆயுதப் படைகளுடன் இணைந்து, போர் மற்றும் அமைதி காலங்களில் மலேசியாவின் எல்லைகளைப் பாதுகாத்து வருகிறது. அதே வேளையில், மலேசிய மக்கள்; மற்றும் மலேசியக் கடல்சார் நலன்களுக்கு எதிரான எந்தவோர் அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்பு நடந்தாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவது இந்தப் படையின் முதன்மை இலக்கமாகும்.
அரச மலேசிய கடற்படை மலேசிய தற்காப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. மலேசிய இராணுவத்தில், மலேசிய கடற்படையும்; மலேசிய வான்படையும் , ‘அரச’ என்ற பட்டத்துடன் செயல்படுகின்றன. அந்த வகையில், மலேசிய கடற்படை அதிகாரப்பூர்வமாக அரச மலேசிய கடற்படை என்று அழைக்கப்படுகிறது.
பொது
[தொகு]மலேசிய நாட்டின் 603,210 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட கடலோரப் பகுதிகள்; மற்றும் பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு மலேசிய கடற்படையிடம் வழங்கப்பட்டு உள்ளது.
மலாக்கா நீரிணை மற்றும் சிங்கப்பூர் நீரிணை போன்ற நாட்டின் முக்கிய கடல்வழித் தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் மலேசிய கடற்படை கொண்டுள்ளது. தற்போது இசுப்ராட்லி தீவுகள் (Spratly Islands) நாடுகளுக்கு இடையிலான உரிமைக் கோரல்கள் பகுதியாக உள்ளது. அதன் காரணமாக, அந்தத் தீவுப் பகுதிகளில் தேசிய நலன்களையும் மலேசிய கடற்படை கண்காணிக்கிறது.
வரலாறு
[தொகு]மலாக்கா நீரிணையின் தன்னார்வ அரசக் கடற்படை
[தொகு]மலாக்கா நீரிணையின் தன்னார்வ அரசக் கடற்படை (Straits Settlement Royal Naval Volunteer Reserve) என்பது தான் அரச மலேசிய கடற்படையின் தொடக்கப் புள்ளியாகும். 27 ஏப்ரல் 1934-இல், பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தால் தன்னார்வ அரசக் கடற்ப் படை சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டது.
அந்தத் தன்னார்வ அரசக் கடற்படை சிங்கப்பூர் போரில், ஐக்கிய இராச்சியத்தின் அரச கடற்படைக்கு உதவியாக இருக்கவும்; மற்றும் சிங்கப்பூர், தீபகற்ப மலேசியாவின் பாதுகாப்பிற்காகவும் உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கத்திற்குப் பின்னால் ஆசியாவில் அப்போது நடைபெற்று வந்த அரசியல் நிகழ்வுகளும் ஒரு காரணமாக இருந்தன. குறிப்பாக சப்பான் நாட்டின் எழுச்சியை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
எச்எம்எஸ் லெபர்னம்
[தொகு]1938-இல், மலாக்கா நீரிணையின் தன்னார்வ அரசக் கடற்படை பினாங்கில் மேலும் ஒரு கிளையுடன் விரிவுபடுத்தப்பட்டது. 18 சனவரி 1935-இல், பிரித்தானிய கடற்படை சிங்கப்பூருக்கு ஒரு கப்பலைப் பரிசளிப்பு செய்தது. அந்தக் கப்பலின் பெயர் எச்எம்எஸ் லெபர்னம் (HMS Laburnum).
மலாக்கா நீரிணையின் தன்னார்வ அரசக் கடற்படையின் தலைமையகத்திற்குச் சேவை செய்வதற்காக அந்தக் கப்பல் அனுப்பப்பட்டது. அந்தக் கப்பல் சிங்கப்பூர் தெலுக் ஆயர் படுகையில் இருந்து செயல்பட்டு வந்தது. இருப்பினும், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், பிப்ரவரி 1942-இல், எச்எம்எஸ் லெபர்னம் கப்பல், சப்பானியப் படைகளின் போர் விமானங்களின் குண்டுவீச்சிற்கு இலக்காகி மூழ்கடிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர்
[தொகு]1941-இல் ஆசியாவில் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது, மலாயா கடற்படை 1,450 வீரர்களைக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் முழுவதும், மலாயா கடற்படை இந்திய மற்றும் பசிபிக் மண்டலங்களில், நேச நாட்டுப் படைகளுடன் இணைந்து பணியாற்றியது.
1945 இல் சப்பானிய சரணடைதலுடன் போர் முடிவடைந்தபோது, மலாயா கடற்படை 600 பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். அதனால் 1947-ஆம் ஆண்டில் மலாயா கடற்படை கலைக்கப்பட்டது. 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி மலாயாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது.
மலாயா அவசரகாலம்
[தொகு]பிரித்தானிய மலாயாவில்; மலாயா தேசிய விடுதலை படையினருக்கும் பொதுநலவாயப் படையினருக்கும் இடையே நடைபெற்ற ஒரு போரை மலாயா அவசரக் காலப் போர் என்று அழைக்கிறார்கள்.[3] அத்துடன், மலாயா காலனித்துவ பிரித்தானியர்கள், மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் மீது தொடுத்த போர்க் காலத்தை மலாயா அவசரகாலம் என்று அழைக்கிறார்கள்.[4]
மலாயா அவசரகாலம் அறிவிக்கப்பட்டதும். மலாயா கடற்படை மீண்டும் செயல்படுத்தப்பட்டது. மலாயா கடற்படை தொடர்பான சட்டவிதிமுறைகள் 4 மார்ச் 1949-இல் காலனித்துவ சிங்கப்பூர் அரசிதழில் வெளியிடப்பட்டது. மேலும் அந்தப் படை சிங்கப்பூர் உட்லேண்ட்ஸில், முன்பு ஐக்கிய இராச்சியத்தின் அரச விமானப்படை இருந்த இடத்தில் குடியமர்த்தப்பட்டது.
அரச மலாயா கடற்படை
[தொகு]1949-ஆம் ஆண்டில் தீபகற்ப மலேசியாவின் கடலோரப் பகுதியில் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவாளர்கள், கடல் வழியாகப் பொருட்களைப் பெறுவதை நிறுத்துவதே முதன்மை நோக்கமாகும்.
அதன் பின்னர் மலாயா கடற்படை பற்பல மாற்றங்களைக் கண்டது. மலாயா அவசரகாலத்தின் போது, மலாயா கடற்படையின் சிறப்பான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், இரண்டாம் எலிசபெத் அரசி "அரச மலாயா கடற்படை" என்ற பட்டத்தை, ஆகஸ்டு 1952-இல், வழங்கினார்.
கடற்படை தளங்கள்
[தொகு]மலேசிய கடற்படையின் தலைமையகம், பேராக், லூமுட், கடற்படை தளத்தில் உள்ளது. லூமுட் கடற்படை தளம் அல்லது KD மலாயா என்று அழைக்கப்படுகிறது. லூமுட் கடற்படை தளமே மலேசிய கடற்படையின் முதன்மைத் தளமாகும். மலேசிய கடற்படையின் இதர தளங்கள்:
தீபகற்ப மலேசியா
[தொகு]- தஞ்சோங் கேலாங், குவாந்தான், பகாங் - (தலைமையகம், கடற்படை மண்டலம் I)
- தஞ்சோங் கெராக், லங்காவி, கெடா (தலைமையகம், கடற்படை மண்டலம் III) (KD Badlishah)
- தஞ்சோங் பெங்கேலி, ஜொகூர் (ஆட்சேர்ப்பு பயிற்சி மையம்) (PULAREK) (KD Sultan Ismail)
- தேசிய நீர்வரைவியல் மையம், இண்டா தீவு, சிலாங்கூர் (KD Sultan Abdul Aziz Shah)
- சுங்கை லுஞ்சு,ஜொகூர் பாரு, ஜொகூர் (KD Sri Medini)
கிழக்கு மலேசியா
[தொகு]- செபங்கார், கோத்தா கினபாலு, சபா - (கிழக்கு கடற்படை தலைமையகம்; நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தளம்)
- லபுவான், கூட்டாட்சிப் பகுதி
- சண்டக்கான், சபா - (தலைமையகம், கடற்படை மண்டலம் II)
- செம்பூர்ணா, சபா
- கூச்சிங், சரவாக்
- பிந்துலு, சரவாக் (கட்டுமானம் உறுதி செய்யப்பட்டது)
- துன் சரிபா ரோட்சியா கடல் தளம், செம்பூர்ணா, சபா - (நிரந்தர கடல் தளமாக மாற்றியமைக்கப்பட்டது)
இந்தியப் பெருங்கடலுக்குள் கடற்படைக்கு கதிரலைக் கும்பா அணுகலை வழங்குவதற்காக கெடா, லங்காவி தீவில் மற்றொரு தளமும் கட்டப்பட்டு வருகிறது. பசிபிக் பெருங்கடலுக்கான தயார்நிலை அணுகல் லபுவான் மற்றும் செம்பூர்ணா, தளங்கள் வழியாக கிடைக்கிறது.
கடற்பகுதி நிலையங்கள்
[தொகு]- 1983 லீமா நிலையம், இசுப்ராட்லி தீவுகள், (Swallow Reef); (Spratly Islands)
- 1986 உனிபார்ம் நிலையம், இசுப்ராட்லி தீவுகள், (Ardasier Reef); (Spratly Islands)
- 1986 மைக் நிலையம், இசுப்ராட்லி தீவுகள், (Mariveles Reef); (Spratly Islands)
- 1999 சியாரா நிலையம், இசுப்ராட்லி தீவுகள், (Erica Reef); (Spratly Islands)
- 1999 பாப்பா நிலையம், இசுப்ராட்லி தீவுகள், (Investigator Shoal); (Spratly Islands)
தரவரிசை அமைப்பு
[தொகு]நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தளம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ International Institute for Strategic Studies (15 February 2023). The Military Balance 2023. London: Taylor & Francis. p. 271. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1000910709.
- ↑ "Malaysian Armed Forces". Global Security. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
- ↑ Siver, Christi L. "The other forgotten war: understanding atrocities during the Malayan Emergency." In APSA 2009 Toronto Meeting Paper. 2009., p.36
- ↑ My Side of History by Chin Peng (Media Masters; Singapore, 2003)
மேலும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- James Goldrick, Jack McCaffrie, Navies of South-East Asia: A Comparative Study (London: Routledge, 2012 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415809429)
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Royal Malaysian Navy தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.