மெதிலீன் தொகுதி
கரிம வேதியியலில், மெத்திலீன் தொகுதி (Methylene group) என்பது ஒரு கார்பன் அணுவுடன் பிணைக்கப்பட்ட இரண்டு ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டுள்ள ஒரு மூலக்கூறின் எந்தவொரு பகுதியாகும். இது மூலக்கூறின் எஞ்சிய பகுதியுடன் இரண்டு ஒற்றை பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது.[1] [2] இத்தொகுதியானது CH 2 < என குறிப்பிடப்படலாம். இங்கு ' < ' என்பது இரண்டு பிணைப்புகளைக் குறிக்கிறது. இது வேறு விதமாக −CH 2 - எனவும் குறிப்பிடப்படுகிறது.
கார்பன் அணுவானது மீதமுள்ள மூலக்கூறுடன் இரட்டைப் பிணைப்பினால் பிணைக்கப்பட்டிருக்கும். இது வழக்கத்திற்கு மாறானதாக இருக்கிறது. இது CH 2 = மெத்திலிடின் குழு என அழைக்கப்படுகிறது.[3] [4] முன்னதாக இரண்டு மாற்றியங்களுக்குமே மெதிலீன் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. "மெதிலீன் பாலம்" என்ற பெயர் ஒற்றை-பிணைக்கப்பட்ட ஐசோமருக்குப் பயன்படுத்தப்படலாம், இது மெதிலிடீனை அழுத்தமாக விலக்குகிறது. இந்த வேறுபாடானது மிக முக்கியமானது, ஏனெனில் இரட்டைப் பிணைப்பு இரண்டு ஒற்றைப் பிணைப்புகளிலிருந்து வேதியியல் ரீதியாக வேறுபட்டது.
மெத்திலீன் குழுவை CH 2 தனி உறுப்பிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும். இது மெத்திலிடின் அல்லது கார்பீன் எனப்படும் ஒரு மூலக்கூறு ஆகும். [5] [6] [7] இது முன்பு மெத்திலீன் என்றும் அழைக்கப்பட்டது.
செயலுறுத்தப்பட்ட மெத்திலீன்
[தொகு]1,3-டைகார்போனைல் சேர்மத்தில் உள்ள மத்திய கார்பன் ஒரு செயலுறுத்தப்பட்ட மெத்திலீன் குழுவாக அறியப்படுகிறது. ஏனெனில், கட்டமைப்பின் காரணமாக, கார்பன் குறிப்பாக அமிலத்தன்மை உடையதாகவும் ஒரு மெத்திலீன் குழுவை உருவாக்குவதற்கு எளிதில் புரோட்டான் நீக்கம் செய்ய ஏதுவவாக உள்ளதாலும் இருக்கலாம். [8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "methylene (preferred IUPAC name" (PDF).
- ↑ "methylene".
- ↑ "methylidene (preferred IUPAC name" (PDF).
- ↑ "methylidene".
- ↑ "methylidene (preferred IUPAC name" (PDF).
- ↑ "carbene (retained name)" (PDF).
- ↑ "carbene".
- ↑ "Active Methylenes".