அமில நீரிலி
அமில நீரிலி என்பது ஒரே ஒட்சிசன் அணுவுக்கு இணைக்கப்பட்ட இரு ஏசைல் கூட்டங்களைக் கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும்.[1] பொதுவாக, ஏசைல் கூட்டங்கள் ஒரே காபொட்சிலிக் அமிலத்திலிருந்தே பெறப்படும். இதன் பொதுச் சூத்திரம் (RC(O))2O ஆகும். இவ்வாறான சமச்சீரான அமில நீரிலிகளின் பெயரீடு, உரிய காபொட்சிலிக் அமிலப் பெயரின் acid எனும் சொல்லை anhydride எனும் சொல்லினால் பிரதியிடுவதன் மூலம் குறிப்பிடப்படும்.[2] உதாரணமாக, (CH3CO)2O என்பது acetic anhydride (அசெற்றிக் நீரிலி) எனப் பெயரிடப்படும். சமச்சீரற்ற அமில நீரிலிகளும் அறியப்பட்டுள்ளன. உதாரணமாக acetic formic anhydride (அசெற்றிக் ஃபோமிக் நீரிலி)யைக் குறிப்பிடலாம்.
முக்கிய அமில நீரிலிகள்
[தொகு]அசெற்றிக் நீரிலி என்பது முக்கியமான கைத்தொழில் ரசாயனப் பொருளாகும். இது அசற்றேற்று எஸ்டர் (உ-ம்:செலுலோசு அசற்றேற்று) தயாரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "acid anhydrides". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ வார்ப்புரு:BlueBookRef