கொள்ளு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
- Macrotyloma uniflorum (தாவரவியல் பெயர்) and
- Dolichos Biflorus (தாவரவியல் பெயர்)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) horse gram
- மலையாளம் - മുതിര
- தெலுங்கு - ఉలవలు ஒலி: உலவலு
தாவரத்தோற்றம்
[தொகு]- நீள்வட்டமாக மூன்றாகப் பிளந்த இலைகளையும், பசுமஞ்சள் நிறமான பூங்கொத்தினையும், நீண்டு வளைந்த காய்களையும், தட்டையான விதைகளையும் உடைய சிறு ஏறுகொடி. செடி முழுவதும் மருத்துவப் பயனுடையது.
பயன்பாடு
- உணவாக....
- கொள்ளு என்பது பயறு வகைகளில் ஒன்றாகும்.
- பண்டைய காலத்தில் இதைக் குதிரைக்கு உணவாகப் பயன்படுத்தி வந்தனர்...இந்தியாவின் தென் மாநிலங்களிலும் மற்றும் வட இந்தியாவில் பரவலாகவும் அந்தந்த மாநிலச் சமையலில் ஓர் அங்கமாக பலவித உணவுப்பொருட்களைத் தயாரித்து உண்கிறார்கள்...உணவாக மட்டுமின்றி சித்த மருத்துவத்திலும் பயனாகிறது.
- மருந்தாக....
- இதை வேகவைத்து வடித்து எடுத்த நீரில் புளி, காரம், உப்பு சேர்த்து இரசமாகப் பயன்படுத்தினால் உடலிலுள்ள நீரை வற்றச்செய்து குண்டிக்காய், நீர்த்தாரையில் உண்டாகும் கற்களைக் கரைத்துச் சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்...
- இதே இரசம் பெண்களுக்குண்டான உதிரக்கட்டை உடைத்துவிடும்...
- உடம்பு சீதளத்தால் குளிர்ந்துவிட்டால் வறுத்த கொள்ளு, மஞ்சள், உண்ணும் கற்பூரம் இவைகளைச் சமனெடையாக அரைத்துத் தூளாக்கி உடம்பில் பூசித்தேய்க்க விரைவில் உடல் சூடாகும்..
- ஆனால் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது...உடம்பு சூடேறி பல உபத்திரவங்களை உண்டுசெய்யும்...எனவே எதிர்பார்த்த பலன் கிடைத்தவுடன்
உபயோகத்தை நிறுத்திவிடல் நன்று...