2009 இல் தமிழ்நாடு
2009 ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையானது மேலை நாடுகளை காட்டிலும் சற்று பின் தங்கியே இருந்தது . ஆயினும் கைபேசி பயன்பாடுகள் , தொலை தொடர்புகள் போன்றவை தமிழ் நாடு முழுவது நன்கு பரவியிருந்தது . இந்த ஆண்டில் நிறைய தமிழர்கள் வேலைகள் இல்லாமல் தவித்தனர் . அதனுடன் மென்பொருள் துறையில் பணியாற்றும் தமிழர்கள் பொருளாதார சரிவின் காரணமாக வேலையில இருந்து பலரும் நீக்கப் பட்டனர் .
இதே ஆண்டில் இலங்கையில் ஈழத்தமிழர்களை மீட்பதற்காக போராடிய விடுதலை புலிகள் என்னும் இயக்கத்தை இலங்கை ராணுவ படையினர் வீழ்த்தினார்கள் .
இந்த ஆண்டில் தமிழக முதல் அமைச்சராக இருந்தவர் திரு. மு.கருணாநிதி அவர்கள் ஆவார் .
வறுமை
[தொகு]2009 ஆண்டிலும் தமிழகத்தில் வறுமைகள் ஒழியவில்லை .
போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்கள்
[தொகு]கவிஞர்கள்
[தொகு]எழுத்தாளர்கள்
[தொகு]மேலும் பார்க்க [1]
அரசியல்
[தொகு]2002 ஆம் ஆண்டு நேர்வே அரசின் அணுசரையுடன் விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை அரசுக்கும் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டது. அப்போது ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 2008 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சித் தலைமையில் அமைந்த இலங்கை அரசு அந்த உடன்படிக்கையில் இருந்து உத்யோகபூர்வமாக விலகிக் கொண்டது. இதைத் தொடர்ந்டு உக்கிரமடைந்த் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 19, 2009 கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து 300 000 வரையான தமிழ் மக்கள் வன்னி தடுப்பு முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.
விளையாட்டு
[தொகு]தமிழரின் இரசனைகள்
[தொகு]நன்கு எடுக்கப்படாத திரைப்படங்களும் , அதிக உண்மையில்லாத படங்களும் பெரும்பாலும் தோல்வியை தழுவியது .
சின்னத்திரைகளில் நகைச்சுவைத் நிகழ்ச்சிகள் அறிமுகமாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. கலக்கப் போவது யாரு, அசத்தப்போவது யாரு ஆகியவை பல தமிழ் நின்றடிக்கும் நகைச்சுவையாளர்களை அறிமுகப்படுத்தின. இது 2009 ஆம் ஆண்டின் முன்பும் பின்பும் தமிழர்களின் நகைச்சுவை ரசிப்புத் தன்மையை வெளிக்காட்டுகின்றது .
மொக்கை என்னும் நகைச்சுவை மிகவும் தமிழர்களை கவரப்பட்டது .
மானாட மயிலாட , தமிழ் பேச்சு , நீயா ? நானா ? , காபி வித் அனு போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமானவை .
தமிழரின் சாதனை
[தொகு]அமெரிக்க விருதான ஆஸ்கார் விருது இரண்டினை தமிழக இசை அமைப்பாளரான பத்மஸ்ரீ ஏ. ஆர். ரகுமான் அவர்கள் வென்று வந்தார் .
2009 வேதியியலுக்கான நோபல் பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பெற்றார்.
தொழில்நுட்பம்
[தொகு]2009 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தொழில்நுட்பம் ஓரளவிற்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும் , மேற்கத்திய நாடுகளை காட்டிலும் பல நுட்பங்களிலும் , புதிய கண்டுபிடிப்புகளும் காணப்படவில்லை . கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்தும் இயந்திரங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் சுலபமாக கிடைக்க படவில்லை . எல்லா கட்டுமானப்பணிகளும் மந்தமாகவே இருந்தது . மென்பொருள் , கணினி , கைபேசிகள் போன்றவற்றில் புதியவை வெளியிடப்பட்டால் விலைகுறைவாக அல்லது இலவசமாக இருப்பின் அதிகம் விற்பனைகள் ஆகின்றன . இந்த மென்பொருள் மற்றும் புகைப்பட துறையினால் தமிழர்களின் இல்லற வாழ்க்கை சில இன்னல்களை சந்திக்கின்றன .
கணினிகள்
[தொகு]கைபேசிகள்
[தொகு]மாதம் ஒரு புதிய வடிவம் மற்றும் புதிய வசதிகளில் கைபேசிகள் வெளியிடப்பட்டது . இந்த ஆண்டில் மிகப் பிரபலமானது ஐபோன் .
மின்சார உற்பத்தி
[தொகு]2009 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டது . அப்பொழுது தமிழ் நாடு முழுவதும் மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது .
புதிய தொழில்நுட்பத் துறைகள்
[தொகு]மொழி வளர்ச்சி
[தொகு]பணவீக்கம்
[தொகு]பற்றாக்குறைகள் மற்றும் அடிப்படைத்தேவைகள்
[தொகு]பொருளாதாரச் சரிவு
[தொகு]2009 ஆம் ஆண்டு உள்ளகமெங்கும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பல இன்னல்களை தமிழகத்திற்கு தந்தது . இதனால் பல தமிழர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர் .
கட்டிடக்கலை
[தொகு]2009 ஆம் ஆண்டு தமிழரின் கட்டிடக்கலை பண்டைய பல்லவ , சோழ மன்னர்கள் காலத்தில் உள்ள கட்டடக்கலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது . அளவுகள் முதல் கலவைகள் வரை அனைத்தும் மாறுபட்டிருந்தது . இருப்பினும் ஒரு சில கோல்கள் மட்டும் பண்டைய காலத்தை பின்பற்றியதாக இருக்கிறது .
விவசாயம்
[தொகு]இந்த ஆண்டு செம்மை நெல் சாகுபடி என்னும் புதிய முறையை தமிழக விவசாயிகள் பயன்படுத்த தொடங்கினர் .
கல்வி முறை
[தொகு]2008 ஆண்டு தமிழ்நாட்டின் 100% மாணவர்கள் ஆரம்ப கல்வி பெறும் வசதி பெற்றனர், இருப்பினும் படிப்பறிவு ~74 மட்டுமே இருந்தது.
மழைப் பொழிவும் நீர் வரத்தும்
[தொகு]இந்த காலங்களில் கசிமான மழைபொழிவு இருந்த போதிலும் , ஆண்டின் கடைசியில் பெய்த மழையால் பெரிதும் பாதிப்புகள் ஏற்பட்டன . தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவான 990.1 மி.மீ. விட 2 விழுக்காடு அதிகமாக அதாவது 1010.4 மி.மீ மழை பெய்துள்ளது . [1]