உள்ளடக்கத்துக்குச் செல்

வாலி (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிஞர் வாலி
பிறப்புடி. எஸ். ரங்கராஜன்
(1931-10-29)அக்டோபர் 29, 1931
திருவரங்கம், திருச்சி, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இறப்புசூலை 18, 2013(2013-07-18) (அகவை 81)
சென்னை
பணிகவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர்
பெற்றோர்சீனிவாச அய்யங்கார், பொன்னம்மாள்
வாழ்க்கைத்
துணை
ரமண திலகம்
(தி. 1954; இற. 2009)
பிள்ளைகள்1 (மகன்) பாலாஜி

கவிஞர் வாலி (Vaali) (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன்; 29 அக்டோபர் 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.

ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி, திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களுள், சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும், வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பிறப்பும் வளர்ப்பும்

[தொகு]

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட[1] 'வாலி' திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்து, திருவரங்கத்தில் வளர்ந்தார். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, 'வாலி' என்ற பெயரைச் சூட்டினான்.[2] தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி' என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால், வானொலிக்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு, வாலிக்குக் கிடைத்தது.[3][4]

திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில், பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.[5][6]

வாலி பெயர்க்காரணம்

[தொகு]

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு, ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம், அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.[7][8]

எழுதிய நூல்கள்

[தொகு]

சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.[1] அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: 'அம்மா', 'பொய்க்கால் குதிரைகள்', 'நிஜ கோவிந்தம்', 'பாண்டவர் பூமி', 'கிருஷ்ண விஜயம்' மற்றும் 'அவதார புருஷன்'. வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சூர்யா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.[9]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

1967இல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய "நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்.."என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள்.

சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில், கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறைகளில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள்.[10]

'தளபதி' என்ற பெயருக்கும், வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் 'வெற்றி' என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!.

விருதுகள்

[தொகு]
  • பத்மஸ்ரீ விருது-2007
  • 1973-ல் 'இந்திய நாடு என் வீடு'.. என்ற 'பாரத விலாஸ்' திரைப்படத்தின் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.

வாலி ஐந்துமுறை (கீழே காணப்படும் திரைப்படங்களின்) சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்[11].

தமிழக அரசின் பிற விருதுகள்

[தொகு]
  1. 2000 - மகாகவி பாரதியார் விருது[12]

மறைவு

[தொகு]

வாலி மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, 2013 சூன் 7 அன்று, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, அவர் 2013 சூலை 18 அன்று மாலை 5 மணியளவில் காலமானார்.[13][14]

குறிப்பிடத்தக்க பாடல்களில் சில

[தொகு]
பாடல் படம் ஆண்டு
" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... " ஆயிரத்தில் ஒருவன் 1968
" மல்லிகை என் மன்னன் மயங்கும்... " தீர்க்க சுமங்கலி 1974
" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... " இரு மலர்கள் 1967
நான் ஆணையிட்டால் எங்க வீட்டுப் பிள்ளை (1965)
காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம் (1965)
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- சந்திரோதயம் (1966)
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - எதிர்நீச்சல் (1968)
இறைவா உன் மாளிகையில்- ஒளிவிளக்கு (1968)
அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன் (1968)
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- இருகோடுகள் (1969)
ஆண்டுக்கு ஆண்டு சுபதினம் (1969)
மதுரையில் பறந்த மீன்கொடியை- பூவா தலையா (1969)

எழுதிய திரைப்பாடல்கள்

[தொகு]

கீழே காண்பது வாலி எழுதிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இது முழுமையான பட்டியல் அல்ல.

ஆண்டு திரைப்படம் பாடல்(கள்) பிற குறிப்புகள்
2014 காவியத் தலைவன் "அல்லி அர்ச்சுனா" கடைசி திரைப்படம்
திருடன் போலீஸ் "மூடு பனிக்குள்"
யான் "ஏ லம்பா லம்பா"
ராமானுஜன் "நாராயணா"
நான் தான் பாலா "திரு வாய்"
கோச்சடையான் "மெதுவாகத்தான்"
பண்ணையாரும் பத்மினியும் "எனக்காக பிறந்தாயோ"
"பேசுறேன் பேசுறேன்"
"உனக்காக பிறந்தேனோ"
2013 என்றென்றும் புன்னகை "கடல் நான்தான்"
பிரியாணி "நானா நானா"
"மிஸ்சிப்பி"
மரியான் "சொனாபரியா"
"நேற்று அவள்"
தில்லு முல்லு 2014 "கை பேசி"
எதிர்நீச்சல் "எதிர்நீச்சல்"
"வெளிச்சப் பூவே"
உதயம் தே நெ 4 " இன்றோடு தடைகள்"
அலெக்ஸ் பாண்டியன் "ஒன்னாம் கிளாஸ்"
கண்ணா லட்டு தின்ன ஆசையா "ஏ உன்னைத்தான்"
"பர்த் டே"
"டூயட் சாங்"
2012 போடா போடி "அப்பன் மவனே வாடா"
மிரட்டல்
தடையறத் தாக்க
ஆதலால் காதல் செய்வீர் "தப்புத் தண்டா"
2011 ஒஸ்தி "கலாசலா"
"ஒஸ்தி மாமே"
மங்காத்தா "மச்சி ஓப்பன் தி பாட்டில்"
"நண்பனே"
வெடி "காதலிக்க பெண் ஒருத்தி", "இச்சு இச்சு இச்சுக்கொடு"
சட்டப்படி குற்றம்
ஆடு புலி
உயர்திரு 420
அய்யன் "விடுதலைக் குயில் நான்"
மாவீரன் "பொன்னான கோழிப் பொண்ணு"
"வண்டினத்தைச் சும்மா சும்மா"
"ஆசை ஆசை"
கண்டேன் "யாவருக்கும் தலைவன்"
எங்கேயும் காதல் "தீ இல்லை"
"நங்கை நீதானே செங்கை"
பொன்னர் சங்கர்
2010 பாணா காத்தாடி "தாக்குதே கண் தாக்குதே"
நினைவில் நின்றவள் அனைத்து பாடல்களும்
சுறா "வெற்றிக்கொடி ஏத்து"
தீராத விளையாட்டுப் பிள்ளை "தீராத விளையாட்டுப் பிள்ளை"
அகராதி
வாலிபன் சுற்றும் உலகம்
லீலை
தொட்டுப்பார்
கோவா "ஊரு நல்ல ஊரு"
"அடிடா நையாண்டிய"
"கோவா"
"இடை விழி"
குரு சிஷ்யன் (2010)

திரைப்படப் பட்டியல்

[தொகு]

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

1950களில்

[தொகு]
  1. 1958- அழகர்மலை கள்வன் (முதல் திரைப்படம்)
ஆண்டு முதல் திரைப்படம் பாடல் பாடியவர் இசையமைப்பாளர் குறிப்புகள்
1958 அழகர்மலை கள்வன் நிலவும் தாரையும் நீயம்மா-இந்த உலகம் ஒருநாள் உனதம்மா பி சுசிலா கோபாலம் முதல் பாடல்

1960-1969

[தொகு]
  1. 1961- "சந்திரகாந்த்"
  2. 1961- "நல்லவன் வாழ்வான்"
  3. 1963- "இதயத்தில் நீ"
  4. 1963- "கற்பகம்"
  5. 1963- "எதையும் தாங்கும் இதயம்"
  6. 1964- "தாயின் மடியில்"
  7. 1964- "தெய்வத்தாய்"
  8. 1964- "படகோட்டி"
  9. 1965- "பஞ்சவர்ணக்கிளி"
  10. 1965- "வெண்ணிற ஆடை"
  11. 1965- "பணம் படைத்தவன்"
  12. 1965- "தாழம்பூ"
  13. 1965- "அன்புக்கரங்கள்"
  14. 1965- "கலங்கரை விளக்கம்"
  15. 1965- "ஆயிரத்தில் ஒருவன்"
  16. 1965- "ஆசை முகம்"
  17. 1965- "நீ"
  18. 1965- "எங்க வீட்டுப் பிள்ளை"
  19. 1965- "காக்கும் கரங்கள்"
  20. 1965- "குழந்தையும் தெய்வமும்"
  21. 1966- "சின்னஞ்சிறு உலகம்"
  22. 1966- "மோட்டார் சுந்தரம் பிள்ளை"
  23. 1966- "நாடோடி"
  24. 1966- "அன்பே வா"
  25. 1966- "சந்திரோதயம்"
  26. 1966- "மேஜர் சந்திரகாந்த்"
  27. 1966- "தாலி பாக்கியம்"
  28. 1966- "நான் ஆணையிட்டால்"
  29. 1966- "பெற்றால்தான் பிள்ளையா"
  30. 1967- "பேசும் தெய்வம்"
  31. 1967- "அவள்"
  32. 1967- "செல்வமகள்"
  33. 1967- "அதே கண்கள்"
  34. 1967- "அரச கட்டளை"
  35. 1967- "காவல்காரன்"
  36. 1967- "நெஞ்சிருக்கும் வரை"
  37. 1967- "இரு மலர்கள்"
  38. 1968- "உயர்ந்த மனிதன்"
  39. 1968- "ஒளி விளக்கு"
  40. 1968- "எதிர்நீச்சல்"
  41. 1968- "ஜீவனாம்சம்"
  42. 1968- "கல்லும் கனியாகும்"
  43. 1968- "கண்ணன் என் காதலன்"
  44. 1968- "கலாட்டா கல்யாணம்"
  45. 1968- "குடியிருந்த கோயில்"
  46. 1969- "நம் நாடு (1969 திரைப்படம்)"
  47. 1969- "மன்னிப்பு"
  48. 1969- "நில் கவனி காதலி"
  49. 1969- "சுபதினம்"
  50. 1969- "இரு கோடுகள்"
  51. 1969- "அடிமைப்பெண்"
  52. 1969- "கன்னிப் பெண்"
  53. 1969- "பூவா தலையா"

1970-1974

[தொகு]
  1. 1970- "மாணவன்"
  2. 1970- "தலைவன்"
  3. 1970- "என் அண்ணன்"
  4. 1970- "தேடிவந்த மாப்பிள்ளை"
  5. 1970- "மாட்டுக்கார வேலன்"
  6. 1970- "எங்கள் தங்கம்"
  7. 1971- "நூற்றுக்கு நூறு"
  8. 1971- "தேனும் பாலும்"
  9. 1971- "குமரிக்கோட்டம்"
  10. 1971- "ஒரு தாய் மக்கள்"
  11. 1971- "ரிக்சாக்காரன்"
  12. 1971- "நீரும் நெருப்பும்"
  13. 1971- "முகமது பின் துக்ளக்"
  14. 1971- "பாபு"
  15. 1972- "ராமன் தேடிய சீதை"
  16. 1972- "வெள்ளிவிழா"
  17. 1972- "இதய வீணை"
  18. 1972- "நான் ஏன் பிறந்தேன்"
  19. 1972- "அன்னமிட்ட கை"
  20. 1972- "பிள்ளையோ பிள்ளை"
  21. 1973- "சொல்லத்தான் நினைக்கிறேன்"
  22. 1973- "சூரியகாந்தி"
  23. 1973- "உலகம் சுற்றும் வாலிபன்"
  24. 1973- "அரங்கேற்றம்"
  25. 1973- "பாரத விலாஸ்"
  26. 1974- "தீர்க்க சுமங்கலி"
  27. 1974- "சிரித்து வாழ வேண்டும்"
  28. 1974- "உரிமைக்குரல்"
  29. 1974- "நேற்று இன்று நாளை"
  30. 1974- "சிவகாமியின் செல்வன்"
  31. 1974- "அத்தையா மாமியா"
  32. 1974- கலியுகக் கண்ணன்

1975-1979

[தொகு]
  1. 1975- "புதுவெள்ளம்"
  2. 1975- "அவளும் பெண்தானே"
  3. 1975- "பட்டிக்காட்டு ராஜா"
  4. 1975- "அன்பே ஆருயிரே"
  5. 1975- "அபூர்வ ராகங்கள்"
  6. 1975- "இதயக்கனி"
  7. 1975- "டாக்டர் சிவா"
  8. 1975- "நினைத்ததை முடிப்பவன்"
  9. 1975- "தேன்சிந்துதே வானம்"
  10. 1976- "ஒரு கொடியில் இரு மலர்கள்"
  11. 1976- "ஊருக்கு உழைப்பவன்"
  12. 1976- "நீதிக்கு தலைவணங்கு"
  13. 1976- "நாளை நமதே"
  14. 1976- "பத்ரகாளி"
  15. 1977- "பெண் ஜென்மம்
  16. 1977- "இன்றுபோல் என்றும் வாழ்க"
  17. 1977- "நவரத்தினம்"
  18. 1977- "மீனவ நண்பன்"
  19. 1977- "ஆறு புஷ்பங்கள்"
  20. 1978- "மாங்குடி மைனர்"
  21. 1978- "வணக்கத்திற்குரிய காதலியே"
  22. 1978- "பைலட் பிரேம்நாத்"
  23. 1978- "சிகப்பு ரோஜாக்கள்"
  24. 1978- "அச்சாணி"
  25. 1978- "அவள் ஒரு அதிசயம்"
  26. 1978- "ஜஸ்டிஸ் கோபிநாத்"
  27. 1978- "சதுரங்கம்"
  28. 1978- "இளமை ஊஞ்சலாடுகிறது"
  29. 1978- "உறவுகள் என்றும் வாழ்க"
  30. 1978- "சிட்டுக்குருவி"
  31. 1978- மச்சானை பாத்தீங்களா
  32. 1978- "வண்டிக்காரன் மகன்"
  33. 1978- "அன்னபூரணி"
  34. 1979- "லட்சுமி
  35. 1979- "அன்னை ஓர் ஆலயம்"
  36. 1979- "நான் வாழவைப்பேன்"
  37. 1979- "அன்பே சங்கீதா"
  38. 1979- "தர்மயுத்தம்"
  39. 1979- "கடவுள் அமைத்த மேடை"
  40. 1979- "அலாவுதீனும் அற்புத விளக்கும்"
  41. 1979- "நீயா"
  42. 1979- "பட்டாகத்தி பைரவன்"
  43. 1979- "இவர்கள் வித்தியாசமானவர்கள்"
  44. 1979- "அழகே உன்னை ஆராதிக்கிறேன்"

1980-1984

[தொகு]
  1. 1980- "கண்ணில் தெரியும் கதைகள்"
  2. 1980- "நிழல்கள்"
  3. 1980- "ஒத்தையடி பாதையிலே"
  4. 1980- "நட்சத்திரம்"
  5. 1981- "மௌன கீதங்கள்"
  6. 1981- "குடும்பம் ஒரு கதம்பம்"
  7. 1981- "ஆணிவேர்"
  8. 1981- "அக்னி சாட்சி"
  9. 1981- "மணல்கயிறு"
  10. 1982- "சிம்லா ஸ்பெஷல்"
  11. 1982- "மூன்று முகம்"
  12. 1982- "தூறல் நின்னு போச்சு"
  13. 1982- "தனிக்காட்டு ராஜா"
  14. 1982- "வாழ்வே மாயம்"
  15. 1982- "பட்டணத்து ராஜாக்கள்"
  16. 1982- "வா கண்ணா வா"
  17. 1982- "தாய் மூகாம்பிகை"
  18. 1982- "சகலகலா வல்லவன்"
  19. 1982- "துணை"
  20. 1982- "கண்ணே ராதா"
  21. 1982- "பரிட்சைக்கு நேரமாச்சு"
  22. 1982- "நெஞ்சங்கள்"
  23. 1982- "எங்கேயோ கேட்ட குரல்"
  24. 1982- "கோபுரங்கள் சாய்வதில்லை"
  25. 1982- "ரங்கா"
  26. 1982- "தீர்ப்பு"
  27. 1982- "வடமாலை"
  28. 1983- "அந்த சில நாட்கள்"
  29. 1983- "வெள்ளை ரோஜா"
  30. 1983- "அடுத்த வாரிசு"
  31. 1983- "சிவப்பு சூரியன்"
  32. 1983- "தங்கமகன்"
  33. 1983- "சந்திப்பு"
  34. 1983- "சூரக்கோட்டை சிங்கக்குட்டி"
  35. 1983- "நீதிபதி"
  36. 1983- "சரணாலயம்"
  37. 1983- "சாட்டை இல்லாத பம்பரம்"
  38. 1983- "கோழி கூவுது"
  39. 1983- "பாயும் புலி"
  40. 1983- "தாய்வீடு"
  41. 1983- "சுமங்கலி"
  42. 1983- "தூங்காதே தம்பி தூங்காதே"
  43. 1983- "மிருதங்க சக்கரவர்த்தி"
  44. 1983- "சட்டம்"
  45. 1984- "அன்பே ஓடிவா"
  46. 1984- "வம்ச விளக்கு"
  47. 1984- "மதுரை சூரன்"
  48. 1984- "தாவணிக் கனவுகள்"
  49. 1984- "தீர்ப்பு என் கையில்"
  50. 1984- "கை கொடுக்கும் கை"
  51. 1984- "வெள்ளை புறா ஒன்று"
  52. 1984- "வீட்டுக்கு ஒரு கண்ணகி"
  53. 1984- "சத்தியம் நீயே"
  54. 1984- "வைதேகி காத்திருந்தாள்"
  55. 1984- "ஓசை"
  56. 1984- "இருமேதைகள்"
  57. 1984- "விதி"
  58. 1984- "சிம்ம சொப்பனம்"
  59. 1984- "மெட்ராஸ் வாத்தியார்"
  60. 1984- "அன்புள்ள ரஜினிகாந்த்"
  61. 1984- "குழந்தை யேசு"
  62. 1984- "நல்லவனுக்கு நல்லவன்"
  63. 1984- "நல்ல நாள்"
  64. 1984- "நாளை உனது நாள்"
  65. 1984- "இது எங்க பூமி"
  66. 1984- "குடும்பம்"

1985-1989

[தொகு]
  1. 1985- "ஆண்பாவம்"
  2. 1985- "தென்றலே என்னைத் தொடு"
  3. 1985- "ஸ்ரீ ராகவேந்திரா"
  4. 1985- "ஒரு நல்லவன் ஒரு வல்லவன்"
  5. 1985- "குங்குமச்சிமிழ்"
  6. 1985- "கீதாஞ்சலி"
  7. 1985- "மங்கம்மா சபதம்"
  8. 1985- "ஜப்பானில் கல்யாண ராமன்"
  9. 1985- "படிக்காதவன்"
  10. 1985- "பாடும் வானம்பாடி"
  11. 1985- "பொருத்தம்"
  12. 1985- "கன்னிராசி"
  13. 1985- "நீதியின் நிழல்"
  14. 1985- "ராஜரிஷி"
  15. 1985- "கெட்டிமேளம்"
  16. 1985- "நான் சிகப்பு மனிதன்"
  17. 1985- "பந்தம்"
  18. 1985- "வேஷம்"
  19. 1985- "படிக்காத பண்ணையார்"
  20. 1985- "நல்ல தம்பி"
  21. 1985- "உயர்ந்த உள்ளம்"
  22. 1985- "உதயகீதம்"
  23. 1985- "இதய கோவில்"
  24. 1985- "நாம் இருவர்"
  25. 1985- "காக்கிசட்டை"
  26. 1985- "கருப்பு சட்டைக்காரன்
  27. 1985- "ஆஷா
  28. 1985- "கரையை தொடாத அலைகள்"
  29. 1985- "சாவி"
  30. 1985- "சுகமான ராகங்கள்"
  31. 1986- "மீண்டும் பல்லவி"
  32. 1986- "கண்மணியே பேசு"
  33. 1986- "கரிமேடு கருவாயன்"
  34. 1986- "நான் அடிமை இல்லை"
  35. 1986- "எனக்கு நானே நீதிபதி"
  36. 1986- "விடுதலை"
  37. 1986- "அன்னை என் தெய்வம்"
  38. 1986- "ஒரு இனிய உதயம்"
  39. 1986- "சாதனை"
  40. 1986- "மௌன ராகம்"
  41. 1986- "மௌனம் கலைகிறது"
  42. 1986- "ஆனந்தக்கண்ணீர்"
  43. 1986- "நம்பினார் கெடுவதில்லை"
  44. 1986- "வசந்த ராகம்"
  45. 1986- "தர்ம தேவதை"
  46. 1986- "தர்மபத்தினி"
  47. 1986- "லட்சுமி வந்தாச்சு"
  48. 1986- "உயிரே உனக்காக"
  49. 1986- "சம்சாரம் அது மின்சாரம்"
  50. 1986- "மருமகள்"
  51. 1986- "மெல்லத் திறந்தது கதவு"
  52. 1986- "நானும் ஒரு தொழிலாளி"
  53. 1986- "டிசம்பர் பூக்கள்"
  54. 1986- "மனக்கணக்கு
  55. 1987- "முப்பெரும் தேவியர்"
  56. 1987- "எங்க சின்ன ராசா"
  57. 1987- "பாடு நிலாவே"
  58. 1987- "பூமழை பொழியுது"
  59. 1987- "குடும்பம் ஒரு கோவில்"
  60. 1987- "ஊர்க்காவலன்"
  61. 1987- நல்ல பாம்பு
  62. 1987- "காவலன் அவன் கோவலன்"
  63. 1987- "சிறைப்பறவை"
  64. 1987- "அஞ்சாத சிங்கம்"
  65. 1987- "வீர பாண்டியன்"
  66. 1987- "இனிய உறவு பூத்தது"
  67. 1988- "பூவுக்குள் பூகம்பம்"
  68. 1988- "பெண்மணி அவள் கண்மணி"
  69. 1988- "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு"
  70. 1988- "அண்ணாநகர் முதல் தெரு"
  71. 1988- "குரு சிஷ்யன்"
  72. 1988- "பொறுத்தது போதும்"
  73. 1988- "இது நம்ம ஆளு"
  74. 1988- "சத்யா"
  75. 1988- "கலியுகம்"
  76. 1988- "சொல்ல துடிக்குது மனசு"
  77. 1988- "தர்மத்தின் தலைவன்"
  78. 1988- "என் தமிழ் என் மக்கள்"
  79. 1988- "தம்பி தங்கக் கம்பி"
  80. 1988- "மணமகளே வா"
  81. 1988- "சகாதேவன் மகாதேவன்"
  82. 1988- "அக்னி நட்சத்திரம்"
  83. 1988- "தாய்ப்பாசம்"
  84. 1989- "புதுப்புது அர்த்தங்கள்"
  85. 1989- "ஆராரோ ஆரிரரோ"
  86. 1989- "ராஜநடை"
  87. 1989- "ராஜாதி ராஜா"
  88. 1989- "என்ன பெத்த ராசா"
  89. 1989- "தர்மம் வெல்லும்"
  90. 1989- "வருஷம் 16"
  91. 1989- "அபூர்வ சகோதரர்கள்"
  92. 1989- "சிவா"
  93. 1989- "வெற்றி விழா"
  94. 1989- "பொன்மன செல்வன்"
  95. 1989- "சோலை குயில்"
  96. 1989- "ஒரே ஒரு கிராமத்திலே"
  97. 1989- "வாத்தியார் வீட்டுப் பிள்ளை"
  98. 1989- "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்"

1990-1994

[தொகு]
  1. 1990- "கேளடி கண்மணி"
  2. 1990- "புது வசந்தம்"
  3. 1990- "துர்கா"
  4. 1990- "ஆரத்தி எடுங்கடி"
  5. 1990- "தாலாட்டுப் பாடவா"
  6. 1990- "அதிசயப் பிறவி"
  7. 1990- "மைக்கேல் மதன காமராஜன்"
  8. 1990- "புரியாத புதிர்"
  9. 1990- "வாழ்க்கைச் சக்கரம்"
  10. 1990- "புதுப்பாட்டு"
  11. 1990- "நடிகன்"
  12. 1990- "வேலை கிடைச்சுடுச்சு"
  13. 1990- "உன்னைச் சொல்லி குற்றமில்லை"
  14. 1990- "சிறையில் பூத்த சின்ன மலர்"
  15. 1990- "மை டியர் மார்த்தாண்டன்"
  16. 1990-" மனைவி ஒரு மாணிக்கம்
  17. 1990- "எதிர்காற்று"
  18. 1990- "அஞ்சலி"
  19. 1990- "ராஜா கைய வெச்சா"
  20. 1990- "சந்தன காற்று"
  21. 1990- "கிழக்கு வாசல்"
  22. 1990- "சத்ரியன்"
  23. 1990- "அரங்கேற்ற வேளை"
  24. 1990- "தைமாசம் பூவாசம்"
  25. 1991- "வாசலில் ஒரு வெண்ணிலா"
  26. 1991- "ஞான பறவை"
  27. 1991- "தைப்பூசம்"
  28. 1991- "ருத்ரா"
  29. 1991- "பிரம்மா"
  30. 1991- "ஈரமான ரோஜாவே"
  31. 1991- "இதயம்"
  32. 1991- "ஆயுள் கைதி"
  33. 1991- "சின்ன தம்பி"
  34. 1991- "கோபுர வாசலிலே"
  35. 1991- "நீ பாதி நான் பாதி"
  36. 1991- "தாலாட்டு கேக்குதம்மா"
  37. 1991- "கிழக்குக்கரை"
  38. 1991- "மரிக்கொழுந்து"
  39. 1991- "மாநகரக்காவல்"
  40. 1991- "தையல்காரன்"
  41. 1991- "தளபதி"
  42. 1991- "குணா"
  43. 1991- "வசந்தகால பறவை"
  44. 1992- "திருமதி பழனிச்சாமி"
  45. 1992- "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்"
  46. 1992- "அம்மா வந்தாச்சு"
  47. 1992- "வில்லுப்பாட்டுக்காரன்"
  48. 1992- "செம்பருத்தி"
  49. 1992- "பாண்டியன்"
  50. 1992- "தேவர் வீட்டுப் பொண்ணு"
  51. 1992- "மீரா"
  52. 1992- "மன்னன்"
  53. 1992- "உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்"
  54. 1992- "செந்தமிழ் பாட்டு"
  55. 1992- "தெய்வ வாக்கு"
  56. 1992- "சின்னமருமகள்"
  57. 1992- "நாடோடிப் பாட்டுக்காரன்"
  58. 1992- "ஊர்பஞ்சாயத்து"
  59. 1992- "சிங்கார வேலன்"
  60. 1992- "சூரியன்"
  61. 1992- "நாங்கள்"
  62. 1992- "தேவர் மகன்"
  63. 1992- "தாலிகட்டிய ராசா"
  64. 1992- "வண்ண வண்ண பூக்கள்"
  65. 1993- "ஐ லவ் இந்தியா"
  66. 1993- "சின்ன ஜமீன்"
  67. 1993- "வள்ளி"
  68. 1993- "வால்டர் வெற்றிவேல்"
  69. 1993- "உள்ளே வெளியே"
  70. 1993- "மணிசித்திரத்தழு" (மலையாளம்)
  71. 1993- "தர்மசீலன்"
  72. 1993- "சின்னக்கண்ணம்மா"
  73. 1993- "உழைப்பாளி"
  74. 1993- "உழவன்"
  75. 1993- "எஜமான்"
  76. 1993- "சின்ன மாப்ளே"
  77. 1993- "மகராசன்"
  78. 1993- "கலைஞன்"
  79. 1993- "காத்திருக்க நேரமில்லை"
  80. 1993- "கற்பகம் வந்தாச்சு"
  81. 1993- "ஜென்டுல்மேன்"
  82. 1993- "செந்தூரப் பாண்டி"
  83. 1994- "சீமான்"
  84. 1994- "இந்து"
  85. 1994- "என் ஆசை மச்சான்"
  86. 1994- "வீட்ல விசேஷங்க"
  87. 1994- "வாட்ச்மேன் வடிவேலு"
  88. 1994- "ரசிகன்"
  89. 1994- "மோகமுள்"
  90. 1994- "காதலன்"
  91. 1994- "செந்தமிழ் செல்வன்"
  92. 1994- "ராசாமகன்"
  93. 1994- "கண்மணி"
  94. 1994- "மகாநதி"
  95. 1994- "வீரா"
  96. 1994- "நம்ம அண்ணாச்சி"
  97. 1994- "பிரியங்கா"
  98. 1994- "மிஸ்டர் ரோமியோ"
  99. 1994- "அமைதிப்படை
  100. 1994- "உங்கள் அன்பு தங்கச்சி"

1995-1999

[தொகு]
  1. 1995- "ராசய்யா"
  2. 1995- "நான் பெத்த மகனே
  3. 1995- "கட்டுமரக்காரன்"
  4. 1995- "சின்ன வாத்தியார்"
  5. 1995- "தொட்டாசிணுங்கி"
  6. 1995- "தேவா"
  7. 1995- "பாட்டு பாடவா"
  8. 1995- "பெரிய குடும்பம்"
  9. 1995- "முத்துக்காளை"
  10. 1995- "ஆணழகன்"
  11. 1995- "ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி"
  12. 1995- "ஆசை"
  13. 1995- "மிஸ்டர். மெட்ராஸ்"
  14. 1995- "ராஜாவின் பார்வையிலே"
  15. 1995- "ரகசிய போலீஸ் (1995)"
  16. 1995- "திருமூர்த்தி"
  17. 1995- "ஆயுத பூஜை"
  18. 1996- "இந்தியன்"
  19. 1996- "அவதார புருஷன்"
  20. 1996- "அவ்வை சண்முகி
  21. 1996- "வான்மதி"
  22. 1996- "நேதாஜி"
  23. 1996- "காதல் தேசம்"
  24. 1996- "பூவே உனக்காக"
  25. 1996- "பூவரசன்"
  26. 1996- "இரட்டை ரோஜா"
  27. 1996- "கல்லூரி வாசல்"
  28. 1996- "டாடா பிர்லா"
  29. 1996- "கோயமுத்தூர் மாப்ளே"
  30. 1997- "தம்பிதுரை"
  31. 1997- "வாய்மையே வெல்லும்"
  32. 1997- "பாரதி கண்ணம்மா"
  33. 1997- "பெரிய மனுஷன்"
  34. 1997- "பொங்கலோ பொங்கல்"
  35. 1997- "பாசமுள்ள பாண்டியரே"
  36. 1997- "மன்னவா"
  37. 1997-"ரட்சகன்
  38. 1998- "கலர் கனவுகள்
  39. 1998- "காதலா காதலா"
  40. 1998- "மறுமலர்ச்சி"
  41. 1998- "நினைத்தேன் வந்தாய்"
  42. 1999- "காதலர் தினம்"
  43. 1999- "மன்னவரு சின்னவரு"
  44. 1999- "மனம் விரும்புதே உன்னை"
  45. 1999- "விரலுக்கேத்த வீக்கம்"
  46. 1999- "பூ வாசம்"

2000-2004

[தொகு]

2005-2009

[தொகு]
  1. 2005- "மண்ணின் மைந்தன்"
  2. 2005- "கஜினி"
  3. 2005- "சந்திரமுகி"
  4. 2005- "மும்பை எக்ஸ்பிரஸ்"
  5. 2005- "ஒரு நாள் ஒரு கனவு"
  6. 2005- "அன்பே ஆருயிரே"
  7. 2005- "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி"
  8. 2006- "கள்வனின் காதலி"
  9. 2006- "சில்லுனு ஒரு காதல்"
  10. 2006- "தலைமகன்"
  11. 2006- "வல்லவன்"
  12. 2007- "இனிமே நாங்கதான்"
  13. 2007- "சிவாஜி"
  14. 2007- "சென்னை 600028"
  15. 2007- "ஆழ்வார்"
  16. 2007- "என் உயிரினும் மேலான"
  17. 2007- "பில்லா"
  18. 2007- "தொட்டால் பூ மலரும்"
  19. 2007- "உன்னாலே உன்னாலே"
  20. 2007- "அழகிய தமிழ் மகன்"
  21. 2008- "சரோஜா"
  22. 2008- "ஜெயம் கொண்டான்"
  23. 2008- "பீமா"
  24. 2008- "தசாவதாரம்"
  25. 2008- "சரோஜா" (தெலுங்கு)
  26. 2008- "சக்கரக்கட்டி"
  27. 2008- "தனம்"
  28. 2008- "குசேலன்"
  29. 2008- "பொம்மலாட்டம்"
  30. 2008- "சிங்ககுட்டி"
  31. 2008- "சிலம்பாட்டம்"
  32. 2008- "உளியின் ஓசை"
  33. 2009- "பஞ்சாமிர்தம்"
  34. 2009- "அருந்ததி"
  35. 2009- "மலை மலை"
  36. 2009- "நாடோடிகள்"
  37. 2009- "மத்திய சென்னை"
  38. 2009- "நான் கடவுள்"
  39. 2009- "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்"
  40. 2009- "ஆதவன்"
  41. 2009- "வால்மீகி"
  42. 2009- "ஜகன் மோகினி"
  43. 2009- பழசிராஜா

2010-2014

[தொகு]
  1. 2010- "ஜிக்கு புக்கு"
  2. 2010- "பெண் சிங்கம்"
  3. 2010- "மாஞ்சா வேலு"
  4. 2010- "நந்தா நந்திதா"
  5. 2010- "காதலுக்கு மரணமில்லை"
  6. 2010- "விருதகிரி"
  7. 2010- "குரு சிஷ்யன்"
  8. 2010- "கோவா"
  9. 2010- "தொட்டுப்பார்"
  10. 2010- "வாலிபன் சுற்றும் உலகம்"
  11. 2010- "தில்லாலங்கடி"
  12. 2010- "லீலை"
  13. 2010- "தீராத விளையாட்டு பிள்ளை"
  14. 2010- "அகராதி"
  15. 2010- "சுறா"
  16. 2010- "நினைவில் நின்றவள்"
  17. 2010- "பாணா காத்தாடி"
  18. 2011- "பொன்னர் சங்கர்"
  19. 2011- "எங்கேயும் காதல்"
  20. 2011- "கண்டேன்"
  21. 2011- "மாவீரன்"
  22. 2011- "உயர்திரு 420"
  23. 2011- "ஒஸ்தி"
  24. 2011- "வெடி"
  25. 2011- "மங்காத்தா"
  26. 2011- "சட்டப்படி குற்றம்"
  27. 2011- "ஆடுபுலி"
  28. 2011- "அய்யன்"
  29. 2012- "ஆதலால் காதல் செய்வீர்"
  30. 2012- "தடையறத் தாக்க"
  31. 2012- "மிரட்டல்"
  32. 2012- "போடா போடி"
  33. 2013- "தில்லு முல்லு"
  34. 2013- "எதிர்நீச்சல்"
  35. 2013- "என்றென்றும் புன்னகை"
  36. 2013- "அலெக்ஸ் பாண்டியன்"
  37. 2013- "பிரியாணி"
  38. 2013- "கண்ணா லட்டு தின்ன ஆசையா"
  39. 2013- "உதயம் என்.எச்4"
  40. 2013- "மரியான்"
  41. 2014- "யான்"
  42. 2014- "திருடன் போலீஸ்"
  43. 2014- "கோச்சடையான்"
  44. 2014- "ராமானுஜன்"
  45. 2014- "பண்ணையாரும் பத்மினியும்"
  46. 2014- "நான் தான் பாலா"
  47. 2014- "காவியத்தலைவன்" (கடைசித் திரைப்படம்)

திரைக்கதை வசனம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Elevan Padma awards announced for Tamil Nadu". தி இந்து. 28 January 2007 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070629033131/http://www.hindu.com/2007/01/28/stories/2007012804620600.htm. பார்த்த நாள்: 14 June 2012. 
  2. சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். p. 390.
  3. "கவிஞர் வாலி வாழ்க்கைக் குறிப்பு". http://m.maalaimalar.com/ArticleDetail.aspx?id=114&Main=0&ArticleId=a1f20cc6-f808-4a3b-99b3-2304da037089. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. வாலி சுவையான சிறுகுறிப்புகள். http://www.lakshmansruthi.com/cineprofiles/vaali.asp. பார்த்த நாள்: 2016-01-26. 
  5. "சக்கரகட்டி : வாலிப கவிஞர் வாலி - யின் சிறப்பு செய்திகள்". http://chakkarakatti.blogspot.in/2013/09/blog-post_2.html?m=1. 
  6. எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், ரஜினி பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…!. http://www.envazhi.com/envazhis-tribute-to-legendary-poet-vaali/. பார்த்த நாள்: 2016-01-26. 
  7. "Ramnad2Day: திரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  8. "கவிஞர் வாலி".
  9. "வாலிப கவிஞர் வாலி '80' விழா - சிறப்பு தொகுப்பு". Archived from the original on 2016-05-19. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.
  10. http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/70811-vaali-birthday-special-article.html[தொடர்பிழந்த இணைப்பு] தளபதியும் வாலியும்! - கவிஞர் வாலி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
  11. Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Fim History and Its Achievements). Sivagami Publications. p. 738.
  12. "விருது பெற்றோர் பட்டியல் – தமிழ் வளர்ச்சித் துறை" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
  13. மருத்துவமனையில் கவிஞர் வாலி காலமானார்
  14. சத்தான தமிழில் முக்காலும் முத்தான கவிதை பாடிய கவிஞர் வாலி. http://www.eelamview.com/2013/07/21/vaali-2/. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலி_(கவிஞர்)&oldid=4171469" இலிருந்து மீள்விக்கப்பட்டது