லம்ஜுங் மாவட்டம்
லம்ஜுங் மாவட்டம் (Lamjung District) (நேபாளி: लमजुङ जिल्ला ⓘ), தெற்காசியாவில் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 4-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டத் நிர்வாகத் தலைமையிட நகரமான பேசிசஹர் ஒரு நகராட்சி மன்றமும் ஆகும்.
கண்டகி மண்டலத்தில் அமைந்த லம்ஜுங் மாவட்டம் 1,692 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,67,724 ஆகும். [1]நிலவியலின் படி, இம்மாவட்டம் நேபாளத்தின் நடுவில் அமைந்துள்ளது. குரூங் இன மலைவாழ் மக்கள் அதிகம் வாழ்கின்றனர். நேபாள மொழி, குரூங் மொழி மற்றும் மகர் மொழிகள் இங்கு பேசப்படுகிறது. இம்மாவட்டத்தில் அன்னபூர்னா கொடுமுடி அமைந்துள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]-
மர்சியந்தி ஆறு
-
ஹிலேடேக்சர் கிராமம்
-
விளையாடும் குரூங் இன குழந்தை
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
[தொகு]லம்ஜுங் மாவட்டம் இமயமலையில், கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் முதல் 6,400 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி பகுதிகள், டிரான்ஸ்-இமயமலை என ஏழு காலநிலைகளில் காணப்படுகிறது. [2]
உள்ளாட்சி நிர்வாகம்
[தொகு]லம்ஜுங் மாவட்டத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தை ஐம்பத்தி எட்டு கிராம வளர்ச்சி மன்றங்களும், பேசிசஹர் மற்றும் சுந்தர் பஜார் என இராண்டு நகராட்சிகளும் மேற்கொள்கிறது.
2015 நிலநடுக்கம்
[தொகு]25 ஏப்ரல் 2015 அன்று ஏற்பட்ட நேபாள நிலநடுக்கம் இம்மாவட்டத்தின் அருகில் மையம் கொண்டிருந்தது.[3] இதனால் காட்மாண்டு நகரம் பெரும் பொருட் சேதமும், உயிர்ச் சேதம் கண்டது.[4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418041642/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
- ↑
The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
{{citation}}
: horizontal tab character in|series=
at position 89 (help) - ↑ "Map of the earthquake M7.9 - 29km ESE of Lamjung, Nepal". Global Earthquake Epicenters with Maps. Geographic.org. பார்க்கப்பட்ட நாள் 25 April 2015.
- ↑ "Strong Earthquake Strikes Nepal Near Its Capital, Katmandu". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 25 April 2015.
- லம்ஜுங் மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2017-01-13 at the வந்தவழி இயந்திரம்