உள்ளடக்கத்துக்குச் செல்

பொக்காரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொக்காரா
पोखरा
மலை வாழிடம்
அடைபெயர்(கள்): பொக்கு
நாடுநேபாளம்
பெரும் பிரிவுமேற்கு
மண்டலம்கண்டகி
மாவட்டம்காஸ்கி மாவட்டம்
எழுத்தறிவு விகிதம்Increase 83% High
Incorporated1962
பரப்பளவு
 • மொத்தம்55.22 km2 (21.32 sq mi)
 • நீர்4.4 km2 (1.7 sq mi)
உயர் புள்ளி
1,740 m (5,710 ft)
தாழ் புள்ளி
827 m (2,713 ft)
மக்கள்தொகை
 (2011 (last census))
 • மொத்தம்2,55,465
 • அடர்த்தி4,798.8/km2 (12,429/sq mi)
 • இனக் குழுக்கள்
காஸ் அந்தணர் செட்டிரி தாக்கூரி தலித் குரூங் மகர் நேவார் தக்களி
 • சமயங்கள்
இந்து பௌத்தம் கிறித்தவம்
நேர வலயம்GMT +5:45
தொலைபேசி குறியிடு எண்
33700 (WRPD), 33702, 33704, 33706, 33708, 33713
இடக் குறியீடு061
இணையதளம்pokhara.gov.np

பொக்காரா (Pokhara) (நேபாள்|पोखरा), காத்மாண்டுவிற்கு அடுத்து, நேபாள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். விலைவாசி அதிகமாக உள்ள நகரங்களில் பொக்காராவும் ஒன்று.[1] பொக்காரா, காஸ்கி மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. தலைநகர் காத்மாண்டிலிருந்து மேற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காரா மாநகரம் அமைந்துள்ளது. பெரும்பாலான கூர்க்கா படை வீரர்களின் தாயகமாக பொக்காரா உள்ளது.

இமயமலைத் தொடரில் 827 முதல் 1740 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[2][3] பொக்காரா நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 8000 மீட்டர்களுக்கு மேல் உயரம் கொண்ட அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு என மூன்று கொடிமுடிகள் அமைந்துள்ளன.[4]

காத்மாண்டிலிருந்த்து முக்திநாத் யாத்திரை செல்பவர்கள் பொக்காரா வழியாகச் செல்ல வேண்டும்.

புவியியல்

[தொகு]
நேபாளத்தில் பொக்காராவின் அமைவிடம்

பொகாரா பள்ளத்தாக்கில் வடமேற்கில் பொக்காரா நகரம் அமைந்துள்ளது.[5] பொக்காரா, இமயமலைத் தொடரில் 827 மீட்டர் முதல் 1,7400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டிற்கு சராசரியாக 131 முதல் 222 அங்குலம் அல்லது 3350 முதல் 5600 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.[6] சேதி கண்டகி ஆறு பொக்காரா நகரத்தில் பாய்கிறது.[7] .[8][9] பொக்காராவிலிருந்து தெற்கே 4. 4 கிலோ மீட்டர் தொலைவில் பெவா ஏரி அமைந்துள்ளது.

பொக்காரா நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், 8000 மீட்டர்களுக்கு மேல் உயரம் கொண்ட அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு என மூன்று கொடிமுடிகள் அமைந்துள்ளன.<[10]

தட்ப வெப்பம்

[தொகு]

கோடைக் காலத்தில் அதிக பட்சம் 25 முதல் 33 பாகை செல்சியல் வெப்பமும், குளிர் காலத்தில் 2 முதல் 15 பாகை வெப்பமும் காணப்படுகிறது. ஆண்டிற்கு சராசரியாக 131 முதல் 222 இன்ச் அல்லது 3350 முதல் 5600 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், பொக்காரா (1981-2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 19.7
(67.5)
22.2
(72)
26.7
(80.1)
29.8
(85.6)
30.1
(86.2)
30.6
(87.1)
30.0
(86)
30.2
(86.4)
29.3
(84.7)
27.5
(81.5)
24.1
(75.4)
20.7
(69.3)
26.7
(80.1)
தினசரி சராசரி °C (°F) 13.4
(56.1)
15.7
(60.3)
19.8
(67.6)
22.8
(73)
24.3
(75.7)
25.8
(78.4)
26.0
(78.8)
26.1
(79)
25.1
(77.2)
22.1
(71.8)
18.0
(64.4)
14.4
(57.9)
21.1
(70)
தாழ் சராசரி °C (°F) 7.1
(44.8)
9.2
(48.6)
12.8
(55)
15.7
(60.3)
18.4
(65.1)
20.9
(69.6)
22.0
(71.6)
22.0
(71.6)
20.8
(69.4)
16.7
(62.1)
11.9
(53.4)
8
(46)
15.5
(59.9)
பொழிவு mm (inches) 23
(0.91)
35
(1.38)
60
(2.36)
128
(5.04)
359
(14.13)
669
(26.34)
940
(37.01)
866
(34.09)
641
(25.24)
140
(5.51)
18
(0.71)
22
(0.87)
3,901
(153.58)
ஆதாரம்: Sistema de Clasificación Bioclimática Mundial[11]

வரலாறு

[தொகு]
பெவா ஏரி, ஆண்டு 1982

மத்தியகாலத்தில், சீனாவிற்கும் இந்தியாவிற்கு இடையே வணிகத்திற்கு பொக்காரா நகரம் முக்கிய வழியாக விளங்கியது. 17ஆம் நூற்றாண்டில், ஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தில், கஸ்கி குறுநில மன்னராட்சியில் ஒரு பகுதியாக பொக்காரே இருந்தது.[12]

வழிபாட்டுத் தலங்கள்

[தொகு]
பொக்காரா சாந்தி தூபி
இராதாகிருஷ்ணர் கோயில்
உலக அமைதிக்கான பௌத்த மடாலயம், பொக்காரா

பொக்காராவில் இந்து கோயில்களும் மற்றும் பௌத்த மடாலயங்களும் அருஅருகே காணப்படுகிறது.[13][14] சில முக்கிய கோயில்கள்;

  • பொக்காரா சாந்தி தூபி
  • வராகி கோயில், பெவா ஏரி
  • விந்தியவாசினி கோயில்
  • உலக அமைதிக்கான மடாலயம்
  • இராதாகிருஷ்ணன் கோயில்

சுற்றுலா & பொருளாதாரம்

[தொகு]
புரானாவ் கடை வீதி
பெவா ஏரியின் மேல் பாராகிளைடர் பயிற்சி

திபெத்தை 1950இல் சீனா ஆக்கிரமிப்பு செய்த பிறகு மற்றும் 1962இல் நடந்த இந்திய-சீனப் போருக்கு பிறகு, சீனாவிலிருந்து பொக்காரா வழியாக இந்தியாவிற்கான வணிகம் முழுவதும் குறைந்து விட்டது. தற்போது நேபாளத்தின் மிகப்பெரும் பன்னாட்டுச் சுற்றுலாத் தலமாக பொக்காரா விளங்குகிறது.[15] மலையேற்றச் சுற்றுலாவும், மருத்துவச் சேவையும் பொக்காராவின் பொருளாதாரதிற்கான மூலமாக உள்ளது.[16] பொக்காரா நகரத்தில் 305 தங்கும் விடுதிகளில், இரண்டு ஐந்து நட்சத்திர விடுதிகளும், ஐந்து மூன்று நட்சத்திர விடுதிகளும், 15 இரண்டு நட்சத்திர விடுதிகளும் உள்ளன.[17] மத்திய காலத்தில் கட்டப்பட்ட வராகி கோயில், விந்தியவாசினி கோயில், சிதாதேவி கோயில் முதலிய இந்து வழிபாட்டுத் தலங்கள், இந்திய ஆன்மிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

சுற்றுலா பயணிகள் வருகை

[தொகு]
ஆண்டு பன்னாட்டு சுற்றுலா பயணிகள்
பொக்காராவிற்கு வருகை[18]
%
ஆண்டு வெளிநாட்டு
பயணிகள்
% மாற்றங்கள்
முந்தைய ஆண்டு
1995 363,395 -
1996 393,613 8.3
1997 421,857 7.2
1998 463,684 9.9
1999 491,504 6.0
2000 463,646 -5.7
2001 77,853 -84
2002 68,056 -23.7
2003 85,529 22.7
2004 87,693 13.9
2005 74,012
2006 94,799
2007 165,177 74
2008 186,643
2009 203,527[19] 5
2010 230,799[20] 13.39
2011 736,215[21] 21.4
2012 803,092[18] 9.1
2013 798,000[22] -0.7

உணவகங்கள் & தங்குமிடங்கள்

[தொகு]

பொக்காராவில் 250க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் கொண்டுள்ளது.[23] பொக்காராவில் இரண்டு ஐந்து நட்சத்திர விடுதிகள் உள்ளது.

மலையேற்றப் பயிற்சிக் களங்கள்

[தொகு]

நேபாள நாட்டில் பொக்காரா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு மலையேற்ற பயிற்சி நிலையங்கள் உள்ளது. இந்நிலையத்தின் மூலம் அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு மலைகளில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது.

போக்குவரத்து வசதிகள்

[தொகு]

நகரப் போக்குவரத்து வசதிகள்

[தொகு]

நகரம், நகர்புறங்களில் மற்றும் அருகில் அமைந்த கிராமப்புறங்களில் அரசு பேருந்துகளும், சிற்றுந்து வசதிகள் உள்ளது.

மற்ற நகரங்களிடையே

[தொகு]

நேபாளத்தின் மற்ற காத்மாண்டூ உட்பட பல நகரங்களை இணைக்க பொக்காரவிலிருந்து, பேருந்து மற்றும் விமான சேவைகள் உள்ளது. பொக்காராவில் புதிய பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.[24]

ஆறுகளும் ஏரிகளும்

[தொகு]
வராகித் தீவுக் கோயில், பெவா ஏரி, பொக்காரா
சேதி ஆற்றில் காணப்படும் மலையிடுக்கு

பொக்காரா நீர் வளம் கொண்டது. முக்கிய நீர் நிலைகள்;[25][26]

ஏரிகள்

[தொகு]
இமயமலை வல்லூறு, பொக்காரா
  • பெவா ஏரி
  • பெக்னாஸ் ஏரி
  • ரூபா ஏரி

ஆறுகள்

[தொகு]
  • சேதி கண்டகி ஆறு

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cost of Living Index in Nepal - Statistics & Graphs of Nepalese Citizen's Economic Powe
  2. United Nations Field Coordination Office (UNFCO) (7 June 2011). "An Overview of the Western Development Region of Nepal" (PDF). Bharatpur, Nepal: United Nations: Nepal Information Platform. pp. 1–9. Archived from the original (PDF) on 2016-11-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.
  3. Pradhan, Pushkar Kumar (1982). "A Study of Traffic Flow on Siddartha and Prithvi Highway". The Himalayan Review 14: 38–51 இம் மூலத்தில் இருந்து 2015-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150331031227/http://nepjol.info/index.php/HR/article/download/4507/3755. 
  4. Earthquake Risk Reduction and Recovery Preparedness Programme for Nepal: UNDP/ERRRP – Project Nep/07/010 (July 2009). "Report on Impact of Settlement Pattern, Land Use Practice and Options in High Risk Areas: Pokhara Sub‐Metropolitan City" (PDF). Kathmandu: UNDP, Nepal. p. 10. Archived from the original (PDF) on 2016-04-14. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  5. Gurung, Harka B. (2001). Pokhara Valley: A Geographical Survey. Kathmandu, Nepal: Nepal Geographical Society.
  6. Bezruchka, Stephen; Lyons, Alonzo (2011). Trekking Nepal: A Traveler's Guide (8th ed.). Seattle, Washington, USA: The Mountaineers Books. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89886-613-1.
  7. Tripathi, M. P.; Singh, S. B. (1996). "Histogenesis and Functional Characteristics of Pokhara, Nepal". New Perspectives in Urban Geography. New Delhi, India: M D Publications Pvt. Ltd. pp. 51–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7533-014-7.
  8. Fort, Monique (2010). "The Pokhara Valley: A Product of a Natural Catastrophe". In Piotr Migoń (ed.). Geomorphological Landscapes of the World. London: Springer. pp. 265–274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-481-3054-2.
  9. Paudel, Lalu Prasad; Arita, Kazunori (April 2000). "Tectonic and polymetamorphic history of the Lesser Himalaya in central Nepal". Journal of Asian Earth Sciences 18 (5): 561–584. doi:10.1016/S1367-9120(99)00069-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1367-9120. http://www.sciencedirect.com/science/article/pii/S1367912099000693. 
  10. Herzog, Maurice (1952). Annapurna: The First Conquest of an 8,000-Meter Peak (Kindle Edition in 2011 ed.). New York, NY, USA: E. P. Dutton & Co. Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4532-2073-3.
  11. NEPAL-POKHARA AIRPORT பரணிடப்பட்டது 2013-05-11 at the வந்தவழி இயந்திரம். Centro de Investigaciones Fitosociológicas. Retrieved 26 September 2014.
  12. Rai, Bandana (2009). "The Gorkha Kingdom". Gorkhas: The Warrior Race. Delhi, India: Kalpaz Publications. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-776-8.
  13. Boke, Charis (2008). "Faithful Leisure, Faithful Work: Religious Practice as an Act of Consumption in Nepal". Himalayan Research Papers Archive: 1–21. 
  14. Adhikari, Jagannath (2004). "A socio-ecological analysis of 'the loss of public properties in an urban environivient: a case study of Pokhara, Nepal". Contributions to Nepalese Studies 31 (1): 85–114. http://lib.icimod.org/record/11534/files/6697.pdf. 
  15. Nepal, S. K.; Kohler, T.; Banzhaf, B. R. (2002). Great Himalaya: tourism and the dynamics of change in Nepal. Zurich, Switzerland: Swiss Foundation for Alpine Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-85515-106-7.
  16. Zurick, David N. (1992). "Adventure Travel and Sustainable Tourism in the Peripheral Economy of Nepal". Annals of the Association of American Geographers 82 (4): 608–628. doi:10.1111/j.1467-8306.1992.tb01720.x. http://dx.doi.org/10.1111/j.1467-8306.1992.tb01720.x. 
  17. Adhikari, Bimal (2011). "Tourism Strategy of Nepalese Government And Tourist’s Purpose of Visit in Nepal". Aichi Shukutoku Knowledge Archive 7: 79–94. பன்னாட்டுத் தர தொடர் எண்:1881-0373. http://hdl.handle.net/10638/4985. 
  18. 18.0 18.1 Ghimire, Bal Krishna (Chief Editor) (2013). "Nepal Tourism Statistics 2012" (PDF). www.tourism.gov.np/. Kathmandu: Ministry of Culture, Tourism & Civil Aviation. Govt. of Nepal. Archived from the original (PDF) on 2013-09-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05. {{cite web}}: |first1= has generic name (help)
  19. Sharma, Lal Prasad (30 October 2010). "Tourist arrivals in Pokhara swell 20pc". The Kathmandu Post இம் மூலத்தில் இருந்து 7 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141207201546/http://www.ekantipur.com/the-kathmandu-post/2010/10/29/money/tourist-arrivals-in-pokhara-swell-20pc/214314/. 
  20. Pokhrel, Santosh (8 March 2011). "Tourist arrivals to Pokhara up". Republica இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140808050054/http://archives.myrepublica.com/portal/index.php?action=news_details&news_id=28994. 
  21. eTN (2 January 2012). "Nepal tourism misses 1 million arrivals target". eTN Global Travel Industry News இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924003244/http://www.eturbonews.com/27171/nepal-tourism-misses-1-million-arrivals-target. 
  22. TravelBizNews (8 March 2014). "798,000 tourists visited Nepal in 2013,arrivals down by 0.7 %". TravelBizNews Online இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141108025549/http://www.travelbiznews.com/news/item/2189-798-thousand-tourists-visited-nepal-in-2013. 
  23. Sedai, Ram Chandra (2011). "Tourist Accommodation Facilities in the major Tourist Areas of Nepal". Nepal Tourism and Development Review 1 (1): 102–123. doi:10.3126/ntdr.v1i1.7374. http://www.nepjol.info/index.php/NTDR/article/view/7374. 
  24. Himalayan News Service (15 October 2011). "Pokhara to have international airport". The Himalayan Times (Kathmandu) இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141103173920/http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Pokhara+to+have++international+airport&NewsID=305805. 
  25. Thapa, Gopal B.; Weber, Karl E. (June 1992). "Deforestation in the Upper Pokhara Valley, Nepal". Singapore Journal of Tropical Geography 12 (1): 52–67. doi:10.1111/j.1467-9493.1991.tb00028.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1467-9493.1991.tb00028.x/abstract. 
  26. Bisht, Ramesh Chandra (2008). International Encyclopaedia of Himalayas (Vol. 4, Nepal Himalayas ed.). Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8324-269-3.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pokhara
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பொக்காரா&oldid=4054663" இலிருந்து மீள்விக்கப்பட்டது