உள்ளடக்கத்துக்குச் செல்

ரணில் விக்கிரமசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரணில் விக்கிரமசிங்க
Ranil Wickremesinghe
රනිල් වික්‍රමසිංහ
இலங்கையின் 9-வது சனாதிபதி
பதவியில்
21 சூலை 2022 – 23 செப்டம்பர் 2024
பதில்: 15 சூலை 2022 – 20 சூலை 2022
பிரதமர்தினேஷ் குணவர்தன
முன்னையவர்கோட்டாபய ராஜபக்ச
பின்னவர்அனுர குமார திசாநாயக்க
இலங்கைப் பிரதமர்
பதவியில்
12 மே 2022 – 21 சூலை 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
முன்னையவர்மகிந்த ராசபக்ச
பின்னவர்தினேஷ் குணவர்தன
பதவியில்
9 சனவரி 2015 – 21 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
கோட்டாபய ராஜபக்ச
முன்னையவர்தி. மு. ஜயரத்ன
பின்னவர்மகிந்த ராசபக்ச
பதவியில்
9 திசம்பர் 2001 – 6 ஏப்ரல் 2004
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னையவர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
பின்னவர்மகிந்த ராசபக்ச
பதவியில்
7 மே 1993 – 18 ஆகத்து 1994
குடியரசுத் தலைவர்டி. பி. விஜயதுங்கா
முன்னையவர்டி. பி. விஜயதுங்கா
பின்னவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
10-வது எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
22 ஏப்ரல் 2004 – 9 சனவரி 2015
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
மகிந்த ராசபக்ச
பிரதமர்மகிந்த ராசபக்ச
இரத்தினசிறி விக்கிரமநாயக்க
தி. மு. ஜயரத்ன
முன்னையவர்மகிந்த ராசபக்ச
பின்னவர்நிமல் சிரிபால டி சில்வா
பதவியில்
28 அக்டோபர் 1994 – 10 அக்டோபர் 2001
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர்சிறிமாவோ பண்டாரநாயக்கா
இரத்தினசிறி விக்கிரமநாயக்க
முன்னையவர்காமினி திசாநாயக்கா
பின்னவர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
அமைச்சுப் பதவிகள்
தேசியக் கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சர்
பதவியில்
20 திசம்பர் 2018 – 21 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்இவரே
முன்னையவர்மைத்திரிபால சிறிசேன
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018[N 1]
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்இவரே
பின்னவர்இவரே
சட்டம், ஒழுங்கு அமைச்சர்
பதவியில்
25 பெப்ரவரி 2018 – 8 மார்ச் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்இவரே
முன்னையவர்சேகால இரத்திநாயக்க
பின்னவர்எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார
கொள்கைத் திட்டமிடல், குழந்தைகள், இளைஞர், கலாச்சார அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
12 சனவரி 2015 – 17 ஆகத்து 2015
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்இவரே
முன்னையவர்பசில் ராஜபக்ச
பதவியில்
12 திசம்பர் 2001 – 6 ஏப்ரல் 2004[N 2]
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர்இவரே
தொழிற்றுறை, அறிவியல், தொழிநுட்பத் துறை அமைச்சர்
பதவியில்
18 பெப்ரவரி 1989 – 1 மே 1993
குடியரசுத் தலைவர்ரணசிங்க பிரேமதாசா
பிரதமர்டிங்கிரி பண்டா விஜயதுங்கா
முன்னையவர்சிறில் மத்தியூ
பின்னவர்சி. வி. குணரத்தின
தலைமைப் பதவிகள்
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 நவம்பர் 1994
Deputyகரு ஜயசூரிய
சஜித் பிரேமதாச
ருவான் விஜேவர்தன
முன்னையவர்டிங்கிரி பண்டா விஜயதுங்கா
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
23 சூன் 2021 – 21 சூலை 2022
பின்னவர்வஜிர அபேவர்தன
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1994–2020
பெரும்பான்மை500,566
(17 ஆகத்து 2015 தேர்தல்)
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
9 மார்ச் 1989 – 19 ஆகத்து 1994
பெரும்பான்மை86,477
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ரணில் விக்கிரமசிங்க

24 மார்ச்சு 1949 (1949-03-24) (அகவை 75)
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
துணைவர்
மைத்திரி விக்கிரமசிங்க (தி. 1994)
பெற்றோர்
  • எசுமண்ட் விக்கிரமசிங்க
  • நளினி விக்கிரமசிங்க
வாழிடம்115 ஐந்தாம் ஒழுங்கை
முன்னாள் கல்லூரிஇலங்கைப் பல்கலைக்கழகம்,
இலங்கை சட்டக் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்அதிகாரபூர்வ இணையதளம்
ஏனைய பதவிகள்
  • 23 சூலை 1977 – 5 அக்டோபர் 1977: வெளிவிவகாரத் துணை அமைச்சர்
  • 5 அக்டோபர் 1977 – 14 பெப்ரவரி 1980: இளைஞர் விவகார, தொழிற்றுறை அமைச்சர்
  • 14 பெப்ரவரி 1980 – 2 சனவரி 1989: கல்வி அமைச்சர்
  • 2001 – இன்று: ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்

ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe, රනිල් වික්‍රමසිංහ, பிறப்பு: 24 மார்ச் 1949) இலங்கை அரசியல்வாதியும், 8-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவரும் ஆவார். அன்றைய கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து 2022 சூலை 21 இல் ரணில் விக்கிரமசிங்க அரசுத்தலைவரானார்.[1][2] இவர் இவர் 1994 முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும், 1993-1994, 2001-2004, 2015-2018, 2018-2019, 2022 காலப்பகுதிகளில் ஐந்து தடவைகள் பிரதமராகவும், 1994-2001, 2004-2015 காலப்பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.[3]

காமினி திசாநாயக்கா 1994 அரசுத்தலைவர் தேர்தல் பரப்புரைக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4] 1993 முதல் 1994 வரையும், பின்னர் 2001 முதல் 2004 வரையும் பிரதமராகப் பதவியில் இருந்தார். 2015 சனவரி 8 இல், விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கையின் 21-வது பிரதமராக நியமிக்கப்பட்டார்.[5] 1999-இல் சந்திரிகா பண்டாரநாயக்காவிடமும், 2005-இல் மகிந்த ராசபக்சவிடமும் அரசுத்தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

விக்கிரமசிங்கவின் அரசியல் கூட்டணியான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 113 என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடினும், இலங்கை சுதந்திரக் கட்சியின் 35 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்ததை அடுத்தும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார்.[6][7] 2018 அக்டோபர் 26 இல் விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனை விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி பதவி விலக மறுத்தார். இதனை அடுத்து, அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது. விக்கிரமசிங்கவைப் பதவி விலக்கியது அரசியலமைப்புக்கு முரணானது என மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, 2018 திசம்பர் 16 இல் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 2019 அரசுத் தலைவர் தேர்தலில் கோத்தாபய ராசபக்ச பெரும் வெற்றி அடைந்ததை அடுத்து, விக்கிரமசிங்க 2019 நவம்பர் 20 இல் பிரதமர் பதவியைத் துறந்தார்.[8] இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், இவரது கட்சியில் இருந்து எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[9] இருப்பினும், கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் இவர் 2021 சூன் 23 அன்று நாடாளுமன்றம் சென்றார்.[10]

2022 இல் நாட்டில் இடம்பெற்ற பெரும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ராசபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களின் விளவாக மகிந்த ராசபக்ச 2022 மே 9 இல் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 2022 மே 12 அன்று ரணில் விக்கிரமசிங்கவை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமித்தார்.[11][12] 2022 சூலை 9 அன்று சனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. கோட்டாபய ராசபக்ச தலைமறைவானார். அன்றிரவு கொள்ளுப்பிட்டியில் உள்ள விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.[13][14] 2022 சூலை 13 இல் கோட்டாபய ராசபக்ச நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து அவர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் அரசுத்தலைவராக நியமித்தார்.[15]

2022 சூலை 14 அன்று கோட்டாபய ராஜபக்ச தனது அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, பிரதமராகப் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க சூலை 15 இல் பதில் அரசுத்தலைவரானார்.[16][17] 2022 சூலை 20 இல், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று 8-வது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட டளஸ் அளகப்பெரும 82 வாக்குகள் பெற்றார்.[18][19][20] 2024 இல் நடந்த மறுதேர்தலில் ரணில் சுயேச்சையாகப் போட்டியிட்டார், எனினும் அவரால் வெற்றி பெற முடியவில்லை, 17.27% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[21][22]

தொடக்க வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

ரணில் 1949 மார்ச் 24 இல் எசுமண்ட் விக்கிரமசிங்க, நளினி விக்கிரமசிங்க (விஜேவர்தன) ஆகியோருக்கு கொழும்பில் பிறந்தார். வழக்கறிஞரான தந்தை,[23] ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவரது பாட்டனார்கள் சிரில் விக்கிரமசிங்க, டி. ஆர். விஜயவர்தனா ஆகியோர் ஆவர். ரணில் விக்கிரமசிங்க கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். இவருடன் கல்வி கற்றவர்களில் அனுரா பண்டாரநாயக்கா, தினேஷ் குணவர்தன குறிப்பிடத்தக்கவர்கள். பாடசாலைக் கல்வியை முடித்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்தில் பட்டம் பெற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1972 இல் வழக்கறிஞரானார்.[24] 2017 இல் பொருளாதாரம், கல்வி, மனித உரிமைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக விக்கிரமசிங்கவிற்கு ஆத்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் ரணிலுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கியது.[25]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

ரணில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து, 1970களின் நடுப்பகுதியில் களனி தொகுதிக்கான கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளரானார். பின்னர் பியகமை தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு, 1977 தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஜே. ஆர். ஜெயவர்தனாவின் புதிய அமைச்சரவையில் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான துணை அமைச்சராகவும், பின்னர் இளைஞர் விவகார, வேலைவாய்ப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இலங்கையின் வயதில் குறைந்த அமைச்சர் என்ற பெயரையும் இதன் மூலம் பெற்றுக் கொண்டார்.[26] 1989 பெப்ரவரியில் ரணசிங்க பிரேமதாசாவின் அமைச்சரவையில் தொழிற்றுரை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் ரணில் பியகமை சிறப்புப் பொருளாதார வலயத்தை உருவாக்கினார்.[27] 1990-இல்லறிவியல், தொழிநுட்பத்துக்கான அமைச்சுப் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. அரசுத்தலைவர் பிரேமதாசாவிற்குப் போட்டியாக கட்சியில் செயற்பட்ட லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்கா ஆகிய மூத்த அரசியல்வாதிகளிடம் இருந்து ரணிலுக்கும் போட்டி இருந்து வந்தது.[28]

1988-1990 காலப்பகுதியில், ஜேவிபியின் ஆயுதமேந்திய கிளர்ச்சியை அடக்குவதற்கான அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொழும்பிற்கு வெளியே பட்டலந்த குடியிருப்பு மற்றும் கைத்தொழில் வளாகத்தில் இருந்த சட்டவிரோத தடுப்பு முகாம் ஒன்றின் பின்னணியில் அப்போது அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இருந்துள்ளார் என்று மக்கள் கூட்டணி அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்டது.[29][30] சந்திரிகா குமாரதுங்கவின் மக்கள் கூட்டணி அரசாங்கம், பட்டலந்த முகாமின் நடவடிக்கைகளை விசாரிப்பதற்காக சிறப்பு சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தது. 1997 செப்டெம்பர் 3 அன்று விக்கிரமசிங்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார்.[31][32] ஆணைக்குழுவின் அறிக்கை 1998 ஏப்ரல் 12 அன்று வெளியிடப்பட்டது.[33] ஆணைக்குழுவின் அறிக்கைப்படி, "பட்டலந்தா வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடுகளில் சட்டவிரோத சித்திரவதை அறைகளைப் பராமரிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மூத்த காவல்துறை அதிகாரி நளின் டெல்கொடவுக்கும் மறைமுகப் பொறுப்பு" இருந்ததாகக் கூறப்பட்டது.[34][35] அத்துடன், "வீட்டு வளாகத்தில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் அங்கீகரிக்கப்படாத கூட்டங்களை நடத்தினார் நடத்தினார், அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்" என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இக்குற்றச்சாட்டுகளுக்கு குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.[29]

பிரதமராக பதவி ஏற்பு

[தொகு]

மகிந்த ராசபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரசிங்கேவை 12 மே 2022 அன்று இலங்கை பிரதமராக நியமித்தார்.[36]

அரசுத்தலைவர் (2022–2024)

[தொகு]

2024 அரசுத்தலைவர் தேர்தல்

[தொகு]

2024 அரசுத்தலைவர் தேர்தலில் விக்கிரமசிங்க போட்டியிடுவாரா என்று பல ஊகங்கள் இருந்தன. 2024 நடுப்பகுதியில், விக்கிரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என்று சூசகமாக அறிவித்திருந்தார். ஆகத்து 2024 இல் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப் போவதாக விக்கிரமசிங்க அறிவித்தார்.[21] ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை பொதுசன முன்னணியில் இருந்து பிரிந்துவந்த உறுப்பினர்களால் ரணிளின் வேட்பு மனு அங்கீகரிக்கப்பட்டது.[37] அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,[38] ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,[39] மகாஜன எக்சத் பெரமுன.[40] ஆகிய கட்சிகளும் இவரை ஆதரிப்பதாக அறிவித்தன. இது விக்கிரமசிங்கவின் அரசுத்தலைவர் பதவிக்கான மூன்றாவது முயற்சியாகும், அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடாத முதல் தடவையாகும்.

முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் விக்கிரமசிங்க 17.27% வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். வாக்கெடுப்பில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறாததால், தேர்தல்கள் இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு நகர்ந்தன, அங்கு இரண்டு முன்னணி வேட்பாளர்கள் மட்டுமே போட்டியில் இருந்தனர். நீக்கப்பட்ட வேட்பாளர்களின் இரண்டாவது, மூன்றாவது விருப்பத்தேர்வுகள் முதல் இரண்டு வேட்பாளர்களான அனுர குமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையே எண்ணப்பட்டன.[41][22] இரண்டாவது விருப்பத்தேர்வுகளின் எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், அனுர குமார திசாநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்று சனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.[42]

விக்கிரமசிங்க, தனது தோல்வியை ஏற்று, 2024 செப்டெம்பர் 23 அன்று அரசுத்தலைவர் செயலகத்தை விட்டு வெளியேறி, அவருக்குப் பின் அரசுத்தலைவராகப் பதவியேற்ற திசாநாயக்கவிற்கு அமைதியான முறையில் அதிகார மாற்றத்தை அனுமதித்தார்.[43]

குறிப்புகள்

[தொகு]
  1. தேசியக் கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் அமைச்சராக
  2. கொள்கைத் திட்டமிடல் அமைச்சராக

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sri Lanka PM Wickremesinghe sworn in as acting president - govt official
  2. PTI / Updated: Jul 13, 2022, 14:06 IST. "Ranil Wickremesinghe sworn in as Sri Lanka's interim president". The Telegraph India. பார்க்கப்பட்ட நாள் 2022-07-15.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  3. "Ranil Wickremesinghe appointed Prime Minister". Trade Bridge Consultants இம் மூலத்தில் இருந்து 20 ஜூலை 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180720022950/http://tradebridgeconsultants.com/news/elections/ranil-wickremesinghe-appointed-prime-minister/. பார்த்த நாள்: 21 August 2015. 
  4. "Ranil Wickremesinghe – Gentlemen Politician of 4 decades, alias mature leader of the people". United National Party. Archived from the original on 20 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2015.
  5. "Sri Lanka election: shock as president Mahinda Rajapaksa concedes defeat". The Guardian. 9 January 2015. https://www.theguardian.com/world/2015/jan/09/sri-lanka-election-shock-as-president-mahinda-rajapaksa-concedes-defeat. பார்த்த நாள்: 21 August 2015. 
  6. Ramachandran, Sudha (13 August 2015). "Sri Lanka's Elections: Rajapaksa Tries a Comeback". The Diplomat. http://thediplomat.com/2015/08/sri-lankas-elections-rajapaksa-tries-a-comeback/. பார்த்த நாள்: 21 August 2015. 
  7. "Prime Minister Wickremesinghe Calls For Buddhist Approach: Nikkei". AsiaMirror cloned Nikkei. 20 August 2015 இம் மூலத்தில் இருந்து 20 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150820175453/http://www.asianmirror.lk/news/item/11041-prime-minister-wickremesinghe-calls-for-buddhist-approach-nikkei. பார்த்த நாள்: 21 August 2015. 
  8. Nathaniel, Amali Mallawaarachchi and Camelia. "Ranil resigns, Mahinda takes oaths as PM today". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
  9. Nathaniel, Amali Mallawaarachchi and Camelia. "Ranil resigns, Mahinda takes oaths as PM today". Daily News (in ஆங்கிலம்). Archived from the original on 21 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
  10. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எம்.பி.யானார், தினகரன், சூன் 23, 2021
  11. "RANIL SWORN IN AS PM". www.dailymirror.lk. பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.
  12. Ranil sworn in as PM, டெய்லி நியூசு, மே 13, 2022
  13. "PM says he is willing to resign – Latest News | Daily Mirror". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 9 July 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  14. Press, The Associated (9 July 2022). "Sri Lanka protesters set the prime minister's home on fire after he agrees to resign" (in en). NPR. https://www.npr.org/2022/07/09/1110663578/sri-lanka-protest-president-residence-economic-crisis. 
  15. https://timesofindia.indiatimes.com/world/south-asia/sri-lankan-pm-ranil-wickremesinghe-appointed-as-acting-president-speaker/articleshow/92848263.cms
  16. "Sri Lanka PM Wickremesinghe sworn in as acting president - govt official". Reuters. 15 July 2022. Archived from the original on 2 February 2023. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
  17. "Ranil Wickremesinghe sworn in as Sri Lanka's interim president". The Telegraph. 15 July 2022. Archived from the original on 21 March 2023. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
  18. Mao, Frances; Ethirajan, Anbarasan (20 July 2022). "Sri Lanka: Ranil Wickremesinghe elected president by MPs". BBC. Archived from the original on 27 August 2024. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
  19. "Sri Lankan parliament elects six-time PM Wickremesinghe as new president". France 24. 20 June 2024. Archived from the original on 14 May 2023. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
  20. Ellis-Petersen, Hannah (20 July 2022). "Ranil Wickremesinghe: wily fox who is Sri Lanka's new president". The Guardian. Archived from the original on 8 July 2024. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
  21. 21.0 21.1 "Ranil Wickremesinghe confirms presidential candidacy". www.adaderana.lk (in ஆங்கிலம்). Archived from the original on 18 September 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-08-21.
  22. 22.0 22.1 "Marxist-leaning Dissanayake declared winner of Sri Lanka's election". Archived from the original on 22 September 2024. பார்க்கப்பட்ட நாள் 22 September 2024.
  23. "Regi Siriwardena dies at 82". ancestry.com. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  24. "Lankalovers". lankalovers.com. Archived from the original on 18 February 2005. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  25. "Prime Minister Wickremesinghe awarded an honorary doctorate". www.adaderana.lk. Archived from the original on 14 February 2017. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.
  26. "Sri Lanka: Former Prime Ministers". priu.gov.lk. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  27. "Economic Policy Statement made by Prime Minister, Ranil Wickremesinghe in Parliament". www.news.lk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 May 2022.
  28. "Ranil Wickremesinghe: Sri Lanka's new prime minister faces uphill battle" (in en-GB). BBC News. 12 May 2022. https://www.bbc.com/news/world-asia-61429791. 
  29. 29.0 29.1 Subramanian, Nirupama (23 August 2000). "Batalanda's ghosts return to haunt Ranil". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140508223725/http://hindu.com/2000/08/23/stories/03230007.htm. 
  30. "Batalanda and Ranil – lot of explanations needed". Asian Tribune இம் மூலத்தில் இருந்து 2 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131002100848/http://www.asiantribune.com/news/2005/10/17/batalanda-and-ranil-%E2%80%93-lot-explanations-needed. 
  31. "The Sunday Times On The Web – News/Comment". sundaytimes.lk. Archived from the original on 29 January 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  32. "The Sunday Times News/Comment Section". Sundaytimes.lk. 20 August 2000. Archived from the original on 15 December 2011. பார்க்கப்பட்ட நாள் 20 September 2012.
  33. Report of the Commission of Inquiry Into the Establishment and Maintenance ... – Google Books. 2000. பார்க்கப்பட்ட நாள் 20 September 2012 – via கூகுள் புத்தகங்கள்.
  34. "The Sunday Times Legal Column". sundaytimes.lk. Archived from the original on 29 January 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  35. Subramanian, Nirupama (23 August 2000). "Batalanda's ghosts return to haunt Ranil". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140508223725/http://hindu.com/2000/08/23/stories/03230007.htm. 
  36. புதிய பிரதமர் ரணில் உறுதி
  37. "Prez Poll: SLPP faction backing Ranil poised to launch new party". www.adaderana.lk (in ஆங்கிலம்). Archived from the original on 14 August 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-08-21.
  38. "CWC to back President Ranil in presidential poll". www.adaderana.lk (in ஆங்கிலம்). Archived from the original on 18 September 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-08-21.
  39. "You are being redirected..." www.dailynews.lk. Archived from the original on 1 August 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-08-21.
  40. "Dinesh leaves Rajapaksas and supports Ranil". Newswire (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-01. Archived from the original on 19 September 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-08-21.
  41. "Marxist Dissanayake wins Sri Lanka's presidential election as voters reject old guard". The Atlanta Journal-Constitution. https://www.ajc.com/news/nation-world/sri-lankas-presidential-election-goes-into-2nd-round-of-vote-counting-for-1st-time-in-history/HZ5C2YGMIVBIRGGQ2ATRRCT3EM/. 
  42. "Anura Kumara Dissanayake elected President of Sri Lanka". www.adaderana.lk (in ஆங்கிலம்). Archived from the original on 23 September 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  43. Ranil Wickremesinghe bids an emotional farewell to Lanka presidency, ஹிந்துஸ்தான் டைம்ஸ், 22 செப்டெம்பர் 2024

வெளி இணைப்புகள்

[தொகு]