சிறில் மத்தியூ
சிறில் மத்தியூ Cyril Mathew | |
---|---|
கைத்தொழில், அறிவியல் விவகாரங்களுக்கான அமைச்சர் | |
பதவியில் சூலை 1977 – 1984 | |
முன்னையவர் | டிக்கிரி பண்டா சுபசிங்க |
பின்னவர் | ரணில் விக்கிரமசிங்க |
இலங்கை நாடாளுமன்றம் களனி | |
பதவியில் 1977–1989 | |
முன்னையவர் | ஆர். எஸ். பெரேரா |
பின்னவர் | எவருமில்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 செப்டம்பர் 1912 |
இறப்பு | 17 அக்டோபர் 1989 | (அகவை 77)
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
களுவாதுவாகே சிறில் மத்தியூ (Caluadewage Cyril Mathew, 30 செப்டம்பர் 1912 – 17 அக்டோபர் 1989) இலங்கை சிங்கள அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற[1] களனித் தொகுதி உறுப்பினரும்,[2] ஜே. ஆர். ஜெயவர்தனாவின் 1977 அமைச்சரவையில் அமைச்சரும் ஆவார்.
அரசியலில்
[தொகு]மத்தியூ ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக 1956 முதல் 1967 வரை பணியாற்றினார். பின்னர் அவர் அன்றைய கட்சித் தலைவரும் பிரதமருமாக இருந்த டட்லி சேனாநாயக்கவுடன் முரண்பட்டு பதவியில் இருந்து விலகினார்.[3]
இவர் சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுவீர் என்ற நூலை எழுதி சிங்களவர்களை தமது உரிமைகளைக் காக்க வரும் படி அறைகூவல் விடுத்தார்.
மத்தியூ ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 1977 நாடாளுமன்றத் தேர்தலில் களனித் தொகுதியில் போட்டியிட்டு 56.04% வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] இவர் இலங்கைத் தமிழர்களின் அரசியலில் கடும்போக்கைக் கடைப்பிடித்தார்.[5] 1977 இல் ஜே. ஆர். ஜெயவர்தனாவின் அமைச்சரவையில் இடம்பெற்றார்.[6] 1983 சூலை தமிழருக்கு-எதிரான வன்முறைகளுக்கு இவரும் ஒரு முக்கிய பொறுப்பாளியாக இருந்தவர் என இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.[7][8] 1984 இல் தமிழ் சிறுபான்மையினரின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஜெயவர்த்தன அழைத்த மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்ததன் பின்னர் இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, ஆளும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.[9] ஜயவர்தாவிற்குப் பின்வந்த அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசா இவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். 1989 அக்டோபர் 17 இல் இவர் மாரடைப்பால் காலமானார்.
இவரின் மகன் நந்தா மத்தியூ ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து,[10] பின்னர் பல அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தார்.[11] இவர் பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராசபக்ச ஆட்சிக் காலத்தில் ஊவா மாகாண ஆளுனராகப் பதவி வகித்தார்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hon. Mathew, Caluwadewage Cyril, M.P." இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 October 2017.
- ↑ Peebles, Patrick (22 October 2015). Historical Dictionary of Sri Lanka. Rowman & Littlefield. p. 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781442255852.
- ↑ Perera. "Cyril Mathew revolted against Dudley in 1960s and JR in 80s : Can a Divided Party Rule a Nation?". Daily Mirror. http://www.dailymirror.lk/opinion/Cyril-Mathew-revolted-against-Dudley-in-1960s-and-JR-in-80s-Can-a-Divided-Party-Rule-a-Nation/172-174534. பார்த்த நாள்: 7 May 2020.
- ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 16 October 2017.
- ↑ "The Peoples Alliance Government in Sri Lanka". Archived from the original on 2005-05-14. பார்க்கப்பட்ட நாள் 2020-06-01.
- ↑ Sri Lanka Year Book 1977 (PDF). Department of Census and Statistics, Sri Lanka. pp. 17–18.
- ↑ Hoole, Rajan (3 September 2013). "July 1983: Ranil Wickremasinghe Followed Cyril Mathew". Colombo Telegraph. https://www.colombotelegraph.com/index.php/july-1983-ranil-wickremasinghe-followed-cyril-mathew/. பார்த்த நாள்: 16 October 2017.
- ↑ வெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள், தினகரன், சூன் 30, 2018
- ↑ "Deaths". Washington Post (subscription required). 19 October 1989 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924184012/http://www.highbeam.com/doc/1P2-1218133.html.
- ↑ "Hon. Mathew, Caluadewagey Nanda, M.P." இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 October 2017.
- ↑ Volleyball needs revival, Prof. Vitharana