உள்ளடக்கத்துக்குச் செல்

யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார்
மைசூர் மகாராஜா (பட்டம்)
ஆட்சி2015 - தற்போது
முன்னிருந்தவர்ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்
மரபுஉடையார் மரபு
தந்தைஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் அரஸ்
தாய்திரிபுரசுந்தரி தேவி
பிறப்பு(1992-03-24)24 மார்ச்சு 1992
சமயம்இந்து
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் (கன்னடம்: ಯದುವೀರ ಕೃಷ್ಣದತ್ತ ಚಾಮರಾಜ ಒಡೆಯರ್, ஆங்கில மொழி: Yaduveer Krishnadatta Chamaraja Wadiyar, பிறப்பு: மார்ச் 24, 1992) அல்லது பன்னிரெண்டாம் சாமராச உடையார் என்று அழைக்கப்படுபவர், உடையார் மரபின் 27ஆவது மற்றும் தற்போதய மைசூர் மகாராஜா. இவருக்கு முன் மன்னராக இருந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் வாரிசு இல்லாமல் திசம்பர் 2013 ல் இறந்தார். இதனால் மறைந்த மன்னரின் சகோதரி மகள் காயத்ரி தேவியின் மகள் லீலாதேவி என்கிற திரிபுரசுந்தரியின் மகனான யதுவீர் பிப்ரவரி 23, 2015 அன்று மகாராணி பிரமோதா தேவியால் தத்தெடுக்கப்பட்டு, யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் என்று பெயர் சூட்டப்பட்டு, மைசூர் மகாராஜாவின் வாரிசாக ஆக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

யதுவீர் கோபால்ராஜ் அரஸ் என்ற இயற்பெயருடன் பெட்டதகோட்டே குடும்பத்தில் பிறந்த இவர், ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் அரஸ் (சனவரி 1, 1960) இளவரசி திரிபுரசுந்தரி தேவி (மார்ச் 11, 1966 ) ஆகியோரின் ஒரே மகனாவார்.[1]. இவருடைய தங்கையின் பெயர் ஜெயாத்மிகா லட்சுமி.

இவர் பத்தாம் வகுப்பு வரை பெங்களூரில் வித்யா நிகேதன் பள்ளியில் படித்தார், பிறகு 12 ஆம் வகுப்பை பெங்களூர் கனடிய சர்வதேசப் பள்ளியில் நிறைவுசெய்தார். பின்னர் ஐக்கிய அமெரிக்கா சென்று மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியல் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலைப்பட்டம் பெற்றார்.[2]

அரசர் பட்டம்

[தொகு]

மன்னரின் ராஜகுரு, குடும்பத்தார் போன்றோரின் ஆலோசனை பெற்ற பின் மகாராணி பிரமோதா தேவி பிப்ரவரி 12, 2015 இல் மைசூர் அம்பா விலாஸ் மாளிகையில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், உடையார் மரபின் புதிய மன்னரின் பெயரை அறிவித்தார். பெப்ரவரி 23, 2015 ஆம் நாள் தத்தெடுக்கப்பட்டு அவர் முறையாக மைசூர் மன்னரின் வாரிசாக்கப்பட்டார். யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் என்ற புதிய பெயரிடப்பட்டு மே 28, 2015 இல் மைசூர் மன்னராக முடிசூட்டப்பட்டார்.[3][4]

குடும்ப வாழ்க்கை

[தொகு]

முடிசூட்டப்பட்ட ஓராண்டுக்குப் பின், ஜூன் 27, 2016 ல் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த துங்கர்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் சிங் மற்றும் மஹேஷ்ரீ குமாரியின் மகளான திரிஷிகா குமாரியை யதுவீர் மணமுடித்தார்.[5] திசம்பர் 6, 2017 ல் பெங்களூரில் திரிஷிகா ஒரு ஆண் மகவை ஈன்றார். மகவுக்கு ஆத்யவீர் நரசிம்மராஜ உடையார் எனப்பெயரிடப்பட்டது.

மேற்கோள்

[தொகு]
  1. "The Royal Ark: Mysore". royalark.net. December 2013. பார்க்கப்பட்ட நாள் February 18, 2015.
  2. "Yaduveer Gopal Raj Urs Makes the Spring 2013 Dean's List at UMass Boston".
  3. "Yaduveer Gopal Raj Urs is heir of Mysuru royal family". thehindu.com. February 13, 2015. பார்க்கப்பட்ட நாள் February 18, 2015.
  4. "In Yaduveer, erstwhile Mysuru kingdom gets new king". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. May 28, 2015. பார்க்கப்பட்ட நாள் May 29, 2015.
  5. "The big royal wedding: When Mysuru went gaga". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 June 2016. http://timesofindia.indiatimes.com/city/mysuru/The-big-royal-wedding-When-Mysuru-went-gaga/articleshow/52951803.cms.