உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரை தெற்கு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மதுரை (தெற்கு) வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மதுரை (தெற்கு) வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகம் மதுரையில் உள்ளது. மேலூர் வருவாய் கோட்டத்தில் அமைந்த இந்த வட்டத்தின் கீழ் மூன்று உள்வட்டங்களும், 31 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2][3]இதன் வட்டாட்சியர் அலுவலகம், மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ளது.

மதுரை தெற்கு வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்

[தொகு]

அவனியாபுரம் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

[தொகு]
  1. அனுப்பானடி
  2. கல்லம்பல்
  3. அவனியாபுரம்
  4. பனையூர்
  5. சிந்தாமணி
  6. சாமநத்தம்
  7. செட்டிக்குளம்
  8. பெருமானேந்தல்
  9. கல்குளம்
  10. அயன்பாப்பாகுடி
  11. பாப்பனோடை

கீழ்மதுரை உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

[தொகு]
  1. வில்லாபுரம்
  2. பிராகுடி
  3. ஐராவதநல்லூர்
  4. விரகனூர்
  5. புளியங்குளம்
  6. சிலைமான்
  7. கீழ்மதுரை
  8. மீனாட்சிபுரம்
  9. கூடல்செங்குளம்

விராதனூர் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

[தொகு]
  1. குசவன்குண்டு
  2. குதிரைகுத்தி
  3. இராமன்குளம்
  4. நல்லூர்
  5. சோளங்குருணி
  6. குசவப்பட்டி
  7. விராதனூர்
  8. மூத்தான்குளம்
  9. எம். பனைக்குளம்
  10. எம். ஆலங்குளம்
  11. நெடுங்குளம்

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

மதுரை தெற்கு வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 13,91,980 ஆகும். அதில் ஆண்கள் 6,97,680; பெண்கள் 694,300 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 995 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம் 951 ஆகவுள்ளது. மாவட்ட சராசரி எழுத்தறிவு 89.14% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 141,119 ஆகவுள்ளனர். [4]

இவ்வட்டத்தின் மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,05,641 (7.6%) மற்றும் 5,307 (0.4%) ஆகவுள்ளனர். இம்மாவட்டத்தின் மக்கள்தொகையில் இந்துக்கள் 12,20,131 (87.65%), இசுலாமியர் 1,02,206 (7.34%), கிறித்தவர்கள் 64,252 (4.62%) ஆகவும் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]