உள்ளடக்கத்துக்குச் செல்

பொகோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொகோட்டா
Bogotá
பொகோட்டா Bogotá-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் பொகோட்டா Bogotá
சின்னம்
குறிக்கோளுரை: Bogotá, 2600 metros más cerca de las estrellas
Bogotá, 2600 மீட்டர்கள் விண்மீன்களுக்கு நெருக்கமாக
பொகோட்டாவைச் சுற்றிய பகுதிகள்
பொகோட்டாவைச் சுற்றிய பகுதிகள்
நாடுகொலம்பியா
பிரிவுபொகோட்டா, டி.சி.*
அடித்தளம்ஆகஸ்ட் 6, 1538
அரசு
 • மேயர்சாமுவேல் மொரேனோ ரோஜாஸ்,
பரப்பளவு
 • நகரம்1,587 km2 (613 sq mi)
 • நிலம்1,732 km2 (668.7 sq mi)
ஏற்றம்
2,640 m (8,660 ft)
மக்கள்தொகை
 (2007 மக்கள்தொகை மதிப்பீடு) [1]
 • நகரம்85,50,000நிலை 1
 • அடர்த்தி3,914.0/km2 (10,137.1/sq mi)
 • பெருநகர்
1,02,44,480
நேர வலயம்ஒசநே-5
மனித வளர்ச்சிக் குறியீடு (2006)0.830 – high
இணையதளம்
City Official Site
Mayor Official Site
Bogotá Tourism
*Bogotá is physically within and is the capital of Cundinamarca Department, but as the Capital District is treated as its own department.

பொகோட்டா (Bogotá) என்பது கொலொம்பியாவின் தலைநகரமும்[1], அந்நாட்டிலுள்ள அதிக மக்கள்தொகை கொண்ட நகரமுமாகும். பொகோட்டா டி. சி. என்னும் அதிகாரபூர்வமான பெயர் கொண்ட இந்நகரிம்ன் பழைய பெயர் சான்டா ஃபே டி பொகோட்டா. இதன் மக்கள்தொகை 7,033,914 (2007). பொகோட்டாவும் அதனைச் சூழவுள்ள, சியா, கோட்டா, சோவாச்சா, கஜிகா, லா கலேரா ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பெருநகரப் பகுதியும் 2007 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 8,244,980 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. சுக்ரே, குயிட்டோ ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மூன்றாவது அதிக உயரத்தில் அமைந்துள்ள முக்கியமான நகரமாகவும் இது விளங்குகிறது. கொலம்பியாவின் மையப்பகுதியில் இந்த நகரம் அமைந்துள்ளது. அண்டேஸ் மலைத்தொடரின் கிழக்கு கோர்டில்லெராவில் உள்ள அல்டிபிளானோ குண்டிபோயசென்ஸின் ஒரு பகுதியான பொகோட்டா பெரும் பசும்புல் தரை (savanna) என்னும் உயர் பீடபூமியில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]
நகரத்தைக் கண்டுபிடித்த தேடல் வெற்றி வீரர் Gonzalo Jiménez de Quesada

பொகோட்டா, தொடக்கத்தில் முயிஸ்காகளால் பக்காட்டா என அழைக்கப்பட்டது. ஸ்பானியர் இங்கே குடியேற்றங்களை அமைப்பதற்கு முன்னர் இதுவே முயிஸ்காக்களின் நாகரிகத்தின் மையமாக இருந்ததுடன், பெரிய மக்கள்தொகையையும் தாங்கக் கூடியதாக இருந்தது. முதலாவது ஐரோப்பியக் குடியேற்றம் 1538 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி கொன்சாலோ ஜிமெனஸ் டி குயெசாடா என்பவரால் நிறுவப்பட்டது. இவர் தனது பிறந்த இடமான சான்டா ஃபே என்பதையும் உள்ளூர்ப் பெயரான பக்காட்டா என்பதையும் இணைத்து சாண்டா ஃபே டி பக்காட்டா என்னும் பெயரை இக் குடியேற்றத்துக்கு இட்டார். இது புதிய கிரனாடா இராச்சியத்தின் தலைநகரான போது பக்காட்டா என்பது தற்போதைய பொகோட்டா ஆனது. இந்நகரம் விரைவிலேயே ஸ்பானிய குடியேற்றவாத வல்லரசினதும், தென்னமெரிக்க நாகரிகத்தினதும் முக்கிய மையங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்தது.

1810-11 காலப்பகுதியில் இதன் குடிமக்கள் ஸ்பானிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, தமது சொந்த அரசை அமைத்தனர். எனினும், உட்பிரிவுகளால் 1816 இல் ஸ்பானிய படையினரின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக ஆட்சியைக் கைப்பற்றினர். 1819 ஆம் ஆண்டில் சைமன் பொலிவார் இதனை மீண்டும் கைப்பற்றினார். தொடர்ந்து பொகோட்டா; இன்றைய பனாமா, கொலம்பியா, வெனிசுலா, ஈக்குவடோர் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டாட்சியான கிரான் கொலம்பியாவின் தலைநகரம் ஆனது.

1956 ஆம் ஆண்டில், இந்த மாநகரசபை ஏனைய அருகிலுள்ள மாநகரசபைகளுடன் இணைக்கப்பட்டுச் சிறப்புப் பகுதி (Special District) உருவாக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டம் பொகோட்டாவைத் தலைநகரமாக உறுதிப்படுத்தியதுடன் இதன் பெயர், சான்டா ஃபே டி பொகோட்டா என மாற்றப்பட்டது. அத்துடன் இது சிறப்புப் பகுதி என்பதில் இருந்து தலைநகரப் பகுதியாகவும் தரமுயர்த்தப்பட்டது.

ஆகஸ்ட் 2000 ஆவது ஆண்டில் இதன் பெயர் மீண்டும் மாற்றப்பட்டு எளிமையாக பொகோட்டா என அழைக்கப்பட்டது.

நூலகங்கள் மற்றும் காப்பகங்கள்

[தொகு]

2007 ஆம் ஆண்டில் பொகோட்டாவை யுனெஸ்கோவின் உலக புத்தக தலைநகராக அறிவித்த்தது.[2] பொகோட்டா இந்த அங்கீகாரத்தைப் பெற்ற முதல் லத்தீன் அமெரிக்க நகரமாகும், மேலும் மொன்ட்ரியலுக்குப் பின்னர் இப்பட்டத்தை பெற்ற அமெரிக்காவின் இரண்டாவது நகராக இது உள்ளது. பொகோட்டா உலக புத்தக தலைநகர் திட்டத்திற்கான பல குறிப்பிட்ட முன்முயற்சிகளை புத்தகத் துறையில் ஈடுபட்டுள்ள பொது மற்றும் தனியார் குழுவின் உறுதியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நகரத்தில் உள்ள இரண்டு மிகப்பெரிய பொது நூலகங்கள் கொலம்பியாவின் தேசிய நூலகம் (1777) மற்றும் பிப்லியோடெக்கா லூயிஸ் ஏஞ்சல் ஆராங்கோ (1958) ஆகியவை ஆகும்.

மக்கள் தொகை

[தொகு]

கொலம்பியாவின் மிகப்பெரிய நகரமான பொகோட்டா நகரின் எல்லைக்குள் (2005 மக்கள் தொகை கணக்கெடுப்பு) 6,778,691 மக்கள் வசிக்கின்றனர், சதுர கிலோமீட்டருக்கு சுமார் 4,310 மக்கள் மக்கள் அடர்த்தி கொண்டள்ளது பொகோட்டா. பொகோட்டா மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 15,810 பேர் மட்டுமே உள்ளனர். 47.5% மக்கள்தொகையில் ஆண்கள் மற்றும் 52.5% பெண்கள்.பொகோட்டாவில், நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே, தொழில்மயமாக்கல் மற்றும் சிக்கலான அரசியல் மற்றும் சமூக காரணங்களாலும் வறுமை மற்றும் வன்முறை ஆகியவற்றின் காரணமாகவும் நகரமயமாக்கம் துரிதப்படுத்தப்பட்டது, இது இருபதாம் மற்றும் இருபத்து முதல் நூற்றாண்டுகளில் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர வழிவகுத்தது. இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் சியுடட் பொலிவர், கென்னடி, உஸ்மீ மற்றும் போசா பிரிவுகளைச் சார்ந்த மக்கள்.

அரசு

[தொகு]

பொகோட்டா கொலம்பியா குடியரசின் தலைநகரமாக விளங்குகிறது, மேலும் காங்கிரஸ், உயர் நீதிமன்றம் மற்றும் செயல் சார்ந்த நிர்வாகத்தின் மையம் மற்றும் ஜனாதிபதியின் (Casa de Nariño) குடியிருப்புக்கள் ஆகியன உள்ளன. இந்த கட்டிடங்களுடன், மேயரின் அலுவலகம் , லிவெனோ அரண்மனை (Palacio Liévano) ஆகியவையும் பொலிவேர் சதுக்கத்திலிருந்து (பிளாசா டி பொலிவர்) ஒரு சில மீட்டருக்குள் அமைந்துள்ளது. இந்த சதுக்கம் நகரின் வரலாற்று மையமான லா கண்டெலாரியாவில் அமைந்துள்ளது, இது ஸ்பானிஷ் காலனித்துவ மற்றும் ஸ்பானிஷ் பரோக் பாணியிலான கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டுள்ளது.பொகோட்டாவின் மேயர் மற்றும் நகர சபை - மக்கள் வாக்கெடுப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டவை - நகர நிர்வாகத்திற்கு பொறுப்பேற்கின்றன. 2015இல் என்ரிக்கு பெனாலோசா என்பவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; அவரது பதவி 2016 முதல் 2019 வரை இயங்கும். இந்த நகரம் 20 இடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அவை: உசாக்குயேன், சாப்பினெரோ, சான்டா ஃபே, சான் கிரிஸ்டொபால், உஸ்மே, டுன்ஜுலிடோ, போசா, கென்னடி, ஃபொன்டிபோன், எங்கடிவா, சூபா, பாரியோஸ் யூனிடோஸ் மற்றும் பல.

கட்டிடக்கலை

[தொகு]

பீ.டி பொகோட்டா, கட்டுமானத்தின் கீழ் உள்ள ஒரு கட்டிடம். இது நகரின் மிக உயரமான கட்டிடம் மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள இரண்டாவது மிக உயரமான கட்டிடமாகும்.பொகோடாவின் காலனித்துவ கட்டிடங்களின் நகர்ப்புற உருவகம் மற்றும் தத்துவவியல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதாவது கொலம்பியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. காலனித்துவ அமைப்பின் நிலைத்தன்மை இன்னும் குறிப்பாக லா கண்டெலரியா, பொகோட்டாவின் வரலாற்று மையத்தில் காணப்படுகிறது.

அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்கள்

[தொகு]

இந்த நகரத்தில் 58 அருங்காட்சியகங்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட கலைக்கூடங்கள் உள்ளன.கொலம்பிய தேசிய அருங்காட்சியகம் கையகப்படுத்தப்பட்ட பொருட்களை நான்கு சேகரிப்புகளாக பிரித்துள்ளது.அவை கலை, வரலாறு, தொல்லியல் மற்றும் இனவகை எனும் வகைகளில் அடங்கும். தங்கம் அருங்காட்சியகத்தின், 35,000 துண்டுகள் டும்பாகா தங்கம், 30,000 பொருட்களுடன் பீங்காய், கல் மற்றும் நெசவுகள் ஆகியவற்றோடு சேர்த்து உலகின் மிகப்பெரிய கொலம்பிய தங்கத்தின் தொகுப்பினை உருவாக்கியுள்ளது.

எல் டொரடோ சர்வதேச விமான நிலையம்

[தொகு]

எல் டொரடோ சர்வதேச விமான நிலையம், புராண எல் டொரடோவின் பெயரிலிடப்பட்டது. இந்த விமான நிலையம் லத்தீன் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய அளவிலான சரக்குகளைக் கொண்டுள்ளது. இது 2013 ஆம் ஆண்டில் 25,009,483 பயணிகளுடன் பயணிகள் எண்ணிக்கையில் லத்தின் அமெரிக்காவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் உலகின் 50 பரபரப்பான விமான நிலையங்களிலும் இடம்பிடித்தது. இவ்விமான நிலையம் இப்பொகோட்டா நகரத்தில் உள்ளது.[3]

விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள்

[தொகு]

1989 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி, பொகோட்டாவிலிருந்து ஏவியான்சா விமானம் 203, காலீவில் உள்ள அல்ஃபோன்ஸோ பொனில்ல அரகோன் சர்வதேச விமான நிலையத்திற்கு பறந்தது, சோஷாவின் மீது பறக்கும் போது இவ்விமானத்தில் குண்டு வெடித்தது. அனைத்து 107 பயணிகள் மற்றும் விமானக்குழு மற்றும் தரையில் இருந்த மூன்று பேர் இறந்தனர். ஜனாதிபதி வேட்பாளர் சீசர் அகஸ்டோ காவிரியா ட்ருஜியோவை படுகொலை செய்யும் முயற்சியில் பப்லோ எஸ்கோபர் என்னும் நார்க்கோ திவிரவாதி விமானத்தில் குண்டுவீசியது தெரியவந்தது, ஆனால் விமானத்தில் இல்லாத சீசர் அகஸ்டோ காவிரியா ட்ருஜியோ, 1990 ல் கொலம்பியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

குவேமாரால் விமான நிலையம்

[தொகு]

கொலம்பியாவின் பொகோட்டாவின் வடக்கே உள்ள குவேமாரால் விமான நிலையம், கோட்டா மற்றும் சியா நகரங்களுக்கும் சேவை செய்கிறது. விமான நிலையம் முக்கியமாக பொது விமான போக்குவரத்தை கையாளுகிறது. இது தனியார் மற்றும் வணிக பைலட் பயிற்சி பள்ளிகளான ஏரோண்டஸ் மற்றும் ஏரோக்ளப் டி கொலம்பியாவின் பயிற்சி தளமாகும்.

சின்னங்கள்

[தொகு]

1810 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட காலனித்துவ அதிகாரிகளுக்கு எதிரான கிளர்ச்சி இயக்கத்துடன் இந்த கொடி உருவானது. இந்த சமயத்தில், கிளர்ச்சிக்காரர்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு பட்டையுடன் கையுரைகளை அணிந்தனர். அக்டோபர் 9, 1952 அன்று, இந்த நிகழ்வுகள் முடிந்து 142 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஆண்டு 555 ஆம் ஆணையை அதிகாரப்பூர்வமாக நாட்டுப்பற்று அணிவகுப்பு பொகோடாவின் கொடி என்று ஏற்றுக்கொண்டது.

போகோடாவின் கீதம் பீடரோ மதினா அவெண்டான்னோ எழுதியது; இசையமைப்பாளர் ராபர்டோ பினெடா டியூக் ஆவார். 1974 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி இந்த பாடல் அதிகாரப்பூர்வமாக பொகோடாவின் மேயர், ஆனிபல் பெர்னாண்டஸ் டி சோட்டோவால் அறிவிக்கப்பட்டது.

விளையாட்டு

[தொகு]

மாவட்ட பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிறுவனம் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் பொகோட்டா பூங்காக்களை பயன்படுத்த ஊக்குவிக்கிறது.கால்பந்து பொகோட்டாவின் அடையாளமாக அறிவிக்கப்பட்டு, நகரத்தில் பரவலாக விளையாடபடும் விளையாட்டாக உள்ளது. நகரில் மூன்று தொழில்முறை கிளப்கள் உள்ளன, சாண்டா ஃபே, மில்லியனர்கள், மற்றும் லா ஈகூய்டாட். நகரத்தின் பிரதான மைதானம் தி காம்பின் மைதானம் (எஸ்டடியோ நெமேசியோ கேமச்சோ எல் காம்பின்).இதன் உள்ளூர் அணிகள் சாண்டா ஃபே மற்றும் மில்லியனர்கள் ஆகும்.2001 ஆம் ஆண்டில் காம்பின் ஸ்டேடியத்தில் 2001 கோபா அமெரிக்கா இறுதி போட்டி, கொலம்பியா தேசிய கால்பந்து அணி மற்றும் மெக்ஸிகோ தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.கொலம்பிய தேசிய கால்பந்து அணி, இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அவர்கள் முதன்முதலாக கண்ட கோப்பையை(continental cup) வென்றனர்.பொகோட்டா 1938 ல் நடைபெற்ற முதல் பொலிவரியன் விளையாட்டுகளை(Bolivarian Games) வழங்கியது. 2004 ஆம் ஆண்டில் தேசிய விளையாட்டுகள் சாம்பியன்ஷிப்பை வென்றது. இது பொலிவரியன் பான் அமெரிக்கன் விளையாட்டுகளின்(Bolivarian Pan American Games) ஒரு துணை தளமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொகோட்டா&oldid=4119389" இலிருந்து மீள்விக்கப்பட்டது