உள்ளடக்கத்துக்குச் செல்

ஹனோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹ னோய்
ஹ னோய்
மாநகர சபை
(இடமிருந்து) மேல்: லோங் பியென் பாலம், நறுமணப் பகோடா, நடு: ஆமைக் கோபுரம், கீழ்: இலக்கியக் கோயில், ஹோ சி மின் நினைவிடம், ஹனோய் அரங்கு
(இடமிருந்து) மேல்: லோங் பியென் பாலம், நறுமணப் பகோடா, நடு: ஆமைக் கோபுரம், கீழ்: இலக்கியக் கோயில், ஹோ சி மின் நினைவிடம், ஹனோய் அரங்கு
வியட்நாமில் அமைவிடம்
வியட்நாமில் அமைவிடம்
நாடு வியட்நாம்
மத்திய நகர்ஹ னோய்
தாய் வியெட்டின் தலைநகராக உருவாக்கம்1010
வியட்நாமின் தலைநகர்செப்டெம்பர் 2, 1945
இடப்பெயர்ஹனோயர்
அரசு
 • கட்சிச் செயலாளர் (பி து தான் உய்)பாம் காங் கி
 • மக்கள் சபைத் தலைவர் (சு டிச் ஹோய் தொங் ஹான் தான்)ஙோ தி தோன் தான்
 • மக்கள் குழுத் தலைவர் (சு டிச் உய் பான் ஹான் தான்)ஙுயென் தே தாஒ
பரப்பளவு
 • மாநகர சபை3,344.7 km2 (1,291.4 sq mi)
 • நகர்ப்புறம்
186.22 km2 (71.90 sq mi)
மக்கள்தொகை
 (2009)
 • மாநகர சபை65,00,000
 • தரவரிசைவியட்நாமில் 2வது
 • அடர்த்தி1,900/km2 (5,000/sq mi)
நேர வலயம்ஒசநே+7 (ICT)
இணையதளம்hanoi.gov.vn

ஹனோய் (ஒலிப்பு) வியட்நாமின் தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமாகும். 2009 மதிப்பீட்டின்படி இதன் நகர்ப்புறச் சனத்தொகை 2.6 மில்லியனும்,[1] புறநகர்ச் சனத்தொகை 6.5 மில்லியனும் ஆகும்.[2] 1010இலிருந்து 1802வரை, வியட்நாமின் முக்கிய அரசியல் மையமாகவும் திகழ்ந்தது. ஙுயென் வம்ச (1802–1945) ஆட்சிக்காலத்தில் ஆட்சித் தலைநகர் ஹூ நகருக்கு மாற்றப்பட்டது. எனினும் 1902இலிருந்து 1954 வரை பிரெஞ்சு இந்தோசீனாவின் தலைநகராக ஹனோய் செயற்பட்டது. 1954இலிருந்து 1976வரை வட வியட்நாமின் தலைநகராகவும், 1976இல் வியட்நாம் போரில் வடவியட்நாமின் வெற்றியைத் தொடர்ந்து ஒன்றிணைந்த வியட்நாமின் தலைநகராகவும் செயற்பட்டது.

இந்நகரம் செவ்வாற்றின் வட கரையில் அமைந்துள்ளது. ஹனோய் நகர், ஹோ சி மின் நகருக்கு வடக்கே 1,760 km (1,090 mi) தொலைவிலும், ஹாய் ஃபோங் நகருக்கு மேற்கே 120 km (75 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.

ஒக்டோபர் 2010ல் இந்நகர் நிறுவப்பட்டதன் ஆயிரம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.[3] இந்நிகழ்வைச் சிறப்பிக்கும் விதத்தில் 4கிமீ நீளமுடைய ஹனோய் பீங்கான் புடைப்புச் சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

2019 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்நகரத்திலேயே நடத்தப்படவுள்ளன.

பெயர்கள்

[தொகு]

ஹனோய் () நகரம் வரலாறு முழுவதும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சீனோ-வியட்நாமிய மூலத்தைக் கொண்டுள்ளன. வியட்நாம் சீன ஆதிக்கத்தின் கீழ் இருக்கையில் முதலில் லோங் பியென் எனவும், பின்னர் தொங் பின் , "சொங் சமாதானம்") மற்றும் லோங் தோ (, "டிராகன் வயிறு") எனவும் அழைக்கப்பட்டது. 866ல், இது ஒரு கோட்டையாக மாற்றப்பட்டு தாய் லா (, "பெரிய வலை") எனப் பெயரிடப்பட்டது.

வரலாறு

[தொகு]

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

[தொகு]

ஹனோய் நகரில் மனிதர்கள் கிமு 3000 ஆண்டளவிலேயே குடியேறியுள்ளனர். அறியப்பட்ட முதல் நிரந்தரக் குடியேற்றங்களுள் கிமு 200ல் அமைக்கப்பட்ட கோ லோ கோட்டை குறிப்பிடத்தக்கது.

1000 ஆண்டுகால சீன ஆட்சி

[தொகு]

கிமு 197ல், ஹான் ஆக்கிரமிப்பாளர்களால் ஔ லாக் நாடு இணைக்கப்பட்டது. இது 1000 ஆண்டுகால சீன ஆதிக்கத்துக்கு வித்திட்டது. 5ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீன ஆட்சியாளர்கள் பண்டைய ஹனோயின் நடுப்பகுதியில் தொங் பின் எனப்படும் புதிய மாவட்டமொன்றை உருவாக்கினர். பின்னர் இதனுடன் செவ்வாற்றின் தெற்கேயுள்ள ஙியா ஹோய் மற்றும் துய் நிங் (தற்போதைய து லியெம் மற்றும் ஹோய் டக் மாவட்டங்கள்) ஆகிய இரு மாவட்டங்களும், தற்போதைய ஹனோயின் உட்பகுதியிலுள்ள நகர்ப் பகுதியும் சேர்க்கப்பட்டு ஒரு மாகாணமாக்கப்பட்டது. 679ம் ஆண்டளவில், தாங் வம்சம் (சூ வம்சத்தின் பின்னர்) நாட்டின் பெயரை அன்னாம் (அமைதியான தெற்கு) என மாற்றியதோடு, நாட்டின் தலைநகராக தொங் பின்னையும் தெரிவு செய்தது. [4]

8ம் நூற்றாண்டின் பிற்பாதியில், மக்களின் கிளர்ச்சியை அடக்கும் வகையில், தாங் வம்ச ஆளுநரான துரோங் பா ஙி என்பவன், லா தாங்கை(லா கோட்டை,து லீயிலிருந்து இன்றைய பா திங் புறநகர்ப்பகுதியிலுள்ள கான் ஙுஆ வரை) உருவாக்கினான். 9ம் நூற்றாண்டின் முற்பாதியில், இது மேலும் மெருகூட்டப்பட்டு கிம் தாங் (கிம் கோட்டை) என அழைக்கப்பட்டது. 866ல், சீன ஆளுநரான காஓ பியென் ஆட்சியை நிறுவி இதனை தாய் லா கோட்டை (கான் ஙுஆவிலிருந்து பா தாஓ வரை) எனப் பெயர் மாற்றினான். இதுவே பண்டைய ஹனோயின் மிகப்பெரிய கோட்டையாகும்.[4]

தாங் லோங், தொங் தோ, தொங் கான், தொங் கின்

[தொகு]

1010ல், லி வம்சத்தின் முதல் ஆட்சியாளரான லி தாய் தோ தாய் வியட்டின் தலைநகரை தாய் லா கோட்டைக்கு மாற்றினான். செவ்வாற்றின் மேலாக டிராகன் ஒன்று பறந்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டு இவன் இவ்விடத்தை தாங் லோங் (, "மேலெழும் டிராகன்") எனப் பெயரிட்டான். இப் பெயர் தற்போதும் கவிதைகளில் குறிப்பிடப்படுகிறது.1397 வரை தாய் வியட்டின் தலைநகராக தாங் லோங் விளங்கியது. பின்னர் தலைநகர் தாங் ஹோவுக்கு மாற்றப்பட்டு தாய் தோ (西), அதாவது "மேற்குத் தலைநகர்" என அழைக்கப்பட்டது. தாங் லோங் பின்னர் தொங் தோ (), அதாவது "கிழக்குத் தலைநகர்" என அழைக்கப்பட்டது.

1408ல், சீனாவின் மிங் வம்சம் வியட்நாமைத் தாக்கிக் கைப்பற்றியதுடன், தொங் தோவின் பெயரை வியட்நாமிய மொழியில் தொங் கான் (சீனம்: , Dōngguān) அதாவது, "கிழக்கு வாயில்" எனப் பெயர் மாற்றம் செய்தது. 1428ல், லீ லோயின் தலைமையில் ஒன்றிணைந்த வியட்நாமியர் சீனர்களைத் தோற்கடித்தனர். லீ லோய் பின்னர் லீ வம்சத்தைத் தோற்றுவித்ததோடு, தொங் கானை தொங் கின் (, "கிழக்குத் தலைநகர்") அல்லது டொங்கின் எனப் பெயரிட்டான். தாய் சோன் வம்சத்தின் முடிவைத் தொடர்ந்து இது பாக் தான் (, "வடக்குக் கோட்டை") எனப் பெயரிடப்பட்டது.

ஙுயென் வம்ச ஆட்சி மற்றும் பிரெஞ்சு குடியேற்றக் காலம்

[தொகு]

1802ல், ஙுயென் வம்சம் நிறுவப்பட்டு தலைநகர் ஹூவுக்கு மாற்றப்படுகையில், பண்டைய பெயரான தாங் லோங் (, "மேலெழும் மற்றும் வளமுறும்") மீண்டும் பயன்படுத்தப்பட்டது. 1831ல், ஙுயெம் பேரரசரான மிங் மாங் இவ்விடத்தை ஹ னோய் ( "நதிகளுக்கிடையில்" அல்லது "நதியின் உட்புறம்") எனப் பெயரிட்டான். 1873ல் ஹனோய் பிரான்சினால் ஆக்கிரமிக்கப்பட்டு, பத்து வருடங்களின் பின் அவர்களிடமே கையளிக்கப்பட்டது. 1887ன் பின், இது ஹனோய் எனும் பெயரில் பிரெஞ்சு இந்தோசீனாவின் தலைநகரானது.

இரு போர்கள்

[தொகு]

1940ல் இந்நகர் சப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு 1945ல் விடுவிக்கப்பட்டது. பின்னர் ஹோ சி மின் சுதந்திர வியட்நாமை அறிவித்ததைத் தொடர்ந்து சிறிது காலம் வியட் மின் அரசாங்கத்தின் இருப்பிடமாக விளங்கியது. எவ்வாறாயினும் 1946ல் பிரான்சியர் இதனை மீளக் கைப்பற்றினர். பிரான்சியருக்கும் வியட் மின் படைகளுக்குமிடையிலான ஒன்பது வருட கால மோதலைத் தொடர்ந்து, 1954ல் சுதந்திர வட வியட்நாமின் தலைநகராக ஹனோய் அறிவிக்கப்பட்டது.

வியட்நாம் போரின்போது, பாலங்கள் மற்றும் புகையிரதப் பாதைகள் மீதான குண்டுவீச்சுக்களால் ஹனோயின் போக்குவரத்து வசதிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. எவ்வாறாயினும் இவையனைத்தும் உடனடியாகத் திருத்தப்பட்டன. போர் முடிவடைந்ததையடுத்து, சூலை 2, 1976ல் வட மற்றும் தென் வியட்நாம்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஹனோய் அதன் தலைநகரானது.

நவீன ஹனோய்

[தொகு]

ஆகத்து 1, 2008இலிருந்து, ஹா தாய் மாகாணம், வின் ஃபூக் மாகாணத்தின் மீ லின் மாவட்டம் மற்றும் ஹோ பின் மாகாணத்தின் லோங் சோன் மாவட்டத்தின் 4 கொம்யூன்கள் என்பன ஒன்றிணைக்கப்பட்டு ஹனோய் பெருநகர்ப் பகுதியாக்கப்படுவதாக மே 29, 2008 அன்று முடிவெடுக்கப்பட்டது.[5] இதன் மூலம் 29 உப பிரிவுகளுடன் ஹனோயின் மொத்தப் பரப்பளவு 334,470 ஹெக்டேயராக உயர்ந்ததோடு[6] மொத்த மக்கள்தொகை 6,232,940 ஆகவும் மாறியது.[6] இதன் மூலம் இதன் அளவு மூன்று மடங்கானது. 2020ம் ஆண்டளவில் பெருநகர்ப் பகுதியான ஹனோய் தலைநகரப் பகுதி (Vùng Thủ đô Hà Nội) ஹனோய் மற்றும் 6 அயல் மாகாணங்களை தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு 13,436 சதுர கிலோமீட்டர்கள் (5,188 sq mi) பரப்பளவையும் 15 மில்லியன் சனத்தொகையையும் கொண்டிருக்கும்.

ஹனோய் நகரம் அண்மைக்காலங்களில் கட்டட அதிகரிப்பைச் சந்தித்துள்ளது. புதிய மாநகரப் பகுதிகளில் உருவாகும் வானளாவிய கட்டடங்கள் ஹனோயின் காட்சியை பெருமளவில் மாற்றியுள்ளன. இசுகைசுகிராபர்சிற்றி இணையத்தளத்தின்படி, 2013ல், ஹனோயிலுள்ள இரு உயரமான கட்டடங்கள் ஹனோய் லான்ட்மாக் 72 டவர் (336மீ, வியட்நாமிலேயே உயரமானதும் மலேசியாவின் பெட்ரோனாசு இரட்டைக் கோபுரங்களுக்கு அடுத்ததாக தென்கிழக்காசியாவிலேயே உயரமானதுமாகும்) மற்றும் ஹனோய் லொட்டே மையம்(267மீ, வியட்நாமில் இரண்டாவது உயரமானது) என்பனவாகும்.

காலநிலை

[தொகு]
செய்மதியூடான ஹனோயின் தோற்றம்

ஹனோய் நகர் ஈரப்பதனான அயன அயல் மண்டலக் காலநிலையைக் (கோப்பென் Cwa) கொண்டுள்ளதோடு, அதிக படிவுவீழ்ச்சியையும் கொண்டுள்ளது. இந்நகரம் வட வியட்நாமின் வழமையான காலநிலையான, வெப்பமான ஈரப்பதனுள்ள கோடை காலத்தையும், குளிரான வரண்ட குளிர்காலத்தையும் அனுபவிக்கிறது. மேயிலிருந்து செப்டம்பர் வரையிலான காலம் வெப்பமான ஈரப்பதனுள்ள கோடை காலமாகும். வருட மழைவீழ்ச்சியான 1,680 மில்லிமீட்டர்கள் (66.1 அங்)ல் பெரும்பாலான அளவு இக்காலப்பகுதியில் கிடைக்கிறது. நவம்பரிலிருந்து மார்ச் வரையான காலப்பகுதி மென்மையான குளிர்காலமாகும். இதன் முற்பாதி வரட்சியாகவும், பிற்பாதி ஈரப்பதனுடனும் காணப்படும். எனினும், இளவேனிற்காலத்தில் (ஏப்ரல்) சிறிய மழைவீழ்ச்சி கிடைக்கிறது. இக்காலப்பகுதியில் குறிப்பாக ஹலோங் குடாவைச் சுற்றியுள்ள பகுதிகள் சிறிது குளிராகக் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இலையுதிர்காலப் பகுதியே (ஒக்டோபர்) மிகவும் சிறப்பான காலநிலைப் பகுதியாகும். குளிர்காலத்தில் இந்நகரம் வழமையாக மேக மூட்டத்துடனும், பனி மூட்டத்துடனும் காணப்படும். பெப்ரவரி மாதத்தின் சராசரி மாதாந்த சூரிய ஒளி நேரம் ஒரு நாளுக்கு 1.8 மணிநேரங்கள் மாத்திரமேயாகும்.

வெப்பநிலை வீச்சுக்கள் 2.7 °C (36.9 °F) இலிருந்து 40.4 °C (105 °F) வரையாகக் காணப்படுகின்றன.[7]

தட்பவெப்ப நிலைத் தகவல், ஹனோய் (1898–1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 19.3
(66.7)
19.9
(67.8)
22.8
(73)
27.0
(80.6)
31.5
(88.7)
32.6
(90.7)
32.9
(91.2)
31.9
(89.4)
30.9
(87.6)
28.6
(83.5)
25.2
(77.4)
21.8
(71.2)
27.0
(80.6)
தினசரி சராசரி °C (°F) 16.5
(61.7)
17.5
(63.5)
20.5
(68.9)
24.2
(75.6)
27.9
(82.2)
29.2
(84.6)
29.5
(85.1)
28.8
(83.8)
27.8
(82)
25.3
(77.5)
21.9
(71.4)
18.6
(65.5)
23.98
(75.16)
தாழ் சராசரி °C (°F) 13.7
(56.7)
15.0
(59)
18.1
(64.6)
21.4
(70.5)
24.3
(75.7)
25.8
(78.4)
26.1
(79)
25.7
(78.3)
24.7
(76.5)
21.9
(71.4)
18.5
(65.3)
15.3
(59.5)
20.9
(69.6)
மழைப்பொழிவுmm (inches) 18.6
(0.732)
26.2
(1.031)
43.8
(1.724)
90.1
(3.547)
188.5
(7.421)
239.9
(9.445)
288.2
(11.346)
318.0
(12.52)
265.4
(10.449)
130.7
(5.146)
43.4
(1.709)
23.4
(0.921)
1,676.2
(65.992)
ஈரப்பதம் 78 82 83 83 77 78 79 82 79 75 74 75 78.8
சராசரி மழை நாட்கள் 8.4 11.3 15.0 13.3 14.2 14.7 15.7 16.7 13.7 9.0 6.5 6.0 144.5
சூரியஒளி நேரம் 68.2 45.2 43.4 81.0 164.3 156.0 182.9 164.3 162.0 164.3 126.0 108.5 1,466.1
Source #1: உலக காலநிலை அமைப்பு (UN),[8] BBC Weather (ஈரப்பதன்) [9]
Source #2: (சூரிய ஒளி நேரங்கள் மாத்திரம்)[10]

மக்கள்தொகையியல்

[தொகு]
2006 ஆசிய பசுபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டின்போது பாரம்பரிய உடையான ஆஓ தாய் அணிந்திருக்கும் ஹனோய் பெண்கள்

ஹனோயின் சனத்தொகை தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகிறது (ஆண்டுக்கு 3.5% அளவில்). ஹனோய் வடக்கு வியட்நாமின் பாரிய நகரப்பகுதியாகவும், நாட்டின் அரசியல் மையமாகவும் விளங்குவதே இதற்குக் காரணமாகும். இச் சனத்தொகை வளர்ச்சியானது நாட்டின் உட்கட்டமைப்பில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந் நகரில் மூன்று தலைமுறைகளுக்கும் அதிகமான காலம் வசித்து வருவோரின் எண்ணிக்கை நகரின் மொத்தச் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். நூறு ஆண்டுகளுக்கு முன் குடும்ப வர்த்தகங்கள் ஆரம்பிக்கப்பட்ட ஓல்ட் குவாட்டர் பகுதியிலும் கூட தற்போது காணப்படும் வணிக நிலையங்கள் வெளியிடங்களில் உள்ள வர்த்தகர்களுக்குச் சொந்தமாகவுள்ளன. இதன் உண்மையான உரிமையாளர்கள் பெரும்பாலும் தமது வணிக நிலையங்களை வாடகைக்கு கொடுத்துவிட்டு வேறிடங்களுக்குச் சென்றுவிட்டனர். மையத் திட்டமிடல் பொருளாதாரக் கொள்கைகளும் மாவட்டம் சார் வீட்டுப் பதிவு முறைமையில் ஏற்பட்ட தளர்வும் இம்மாற்றத்தை ஊக்குவித்துள்ளன. [சான்று தேவை]

அதிகரித்த தேவையைச் சமாளிக்குமுகமாக ஹனோயின் தொலைபேசி இலக்கங்கள் 8 இலக்கங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன (அக்டோபர் 2008). பாவனையாளர்களின் தொலைபேசி இலக்கங்கள் குழப்பமான விதத்தில் மாற்றங்களுக்குள்ளாகியுள்ளன. ஆயினும், வியட்நாமில் பயன்படுத்தப்படும் கையடக்கத்தொலைபேசிகளும் பாவனையாளர் அடையாளத் தொகுதிகளும் ஹனோயின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.

சுற்றுலாத்துறை

[தொகு]

ட்ரிப்அட்வைசரால் வெளியிடப்படும் சுற்றுலாச் சுட்டியின்படி 2012ம் ஆண்டு யூன் 1 இலிருந்து யூலை 31 வரையான காலப்பகுதியில் நான்கு நட்சத்திர விடுதியொன்றில் இருவர் ஓரிரவைக் கழிப்பதற்கு மிகக் குறைந்த செலவுள்ள நகரம் ஹனோய் ஆகும். இச்செலவில் மதுபானம், உணவு மற்றும் வாடகை வாகனம் என்பவற்றுக்கான செலவுகள் அடங்கும். இதற்கான செலவு 141.12 அமெ. டொலர்களாகும். இது செலவு கூடிய நகரமான லண்டன் நகருக்கான செலவான 518.01 அமெ. டொலர்களின் 27 சதவீதமாகும்.[11]

2014ல், ட்ரிப்அட்வைசரின் உலகின் சிறந்த இடங்கள் பட்டியலில் 8ம் இடத்தைப் பிடித்தது (பயணிகள் கருத்துக்கணிப்பின்படி).

மேற்கோள்கள்

[தொகு]
  1. General Statítcs Office ò Vietnam
  2. "Vietnam's Population Soars". balita.ph. Archived from the original on 2013-07-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-03.
  3. LE-QUYEN LE (18). "Commemorating 1,000 Years of the Founding of Hanoi". Vietnam Talking Points. Vietnam Talking Points. பார்க்கப்பட்ட நாள் 4 November 2012. {{cite web}}: Check date values in: |date= and |year= / |date= mismatch (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  4. 4.0 4.1 "Historical stages of Thang Long- Hanoi – 1000 Years Thang Long (VietNamPlus)". En.hanoi.vietnamplus.vn. Archived from the original on 2013-11-04. பார்க்கப்பட்ட நாள் 2013-11-24.
  5. "Country files (GNS)". National Geospatial-Intelligence Agency. Archived from the original on 2012-08-23. பார்க்கப்பட்ட நாள் 2007-04-06.
  6. 6.0 6.1 "Hơn 90% đại biểu Quốc hội tán thành mở rộng Hà Nội". Dantri. பார்க்கப்பட்ட நாள் 2008-05-29.
  7. "Extreme Temperatures Around the World". பார்க்கப்பட்ட நாள் 2010-12-01.
  8. "World Weather Information Service – Hanoi". Hydro-Meteorological Service of Vietnam. பார்க்கப்பட்ட நாள் 2012-08-11.
  9. "BBC Weather – Hanoi". BBC News (BBC). http://news.bbc.co.uk/weather/forecast/1355. பார்த்த நாள்: 2011-07-28. 
  10. "Solar Energy and Solar Photovoltaics in Vietnam". Archived from the original on 3 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 May 2013.
  11. "Cheapest hotels are here, in Bangkok". பார்க்கப்பட்ட நாள் 14 June 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹனோய்&oldid=3578381" இலிருந்து மீள்விக்கப்பட்டது