உள்ளடக்கத்துக்குச் செல்

பையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பையூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,842
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635112

பையூர் (paiyur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

வரலாறு

[தொகு]

பெண்ணேஸ்வர மடம் பெண்ணேஸ்வரர் கோயிலில் உள்ள சிவன் கோயிலில் தென் திருச்சுற்றில் உள்ள தனிக்கல்லில் விஜயநகரப் பேரரசின் புக்கராயன் காலத்திய கல்வெட்டு உள்ளது. கி.பி 1410 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டில் பெண்ணேசுவரருக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிய செய்தி உள்ளது. அதில் பையூர் நாட்டுப் பிரிவு குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் அருகே உள்ள பாறையில் கி.பி. 1188 ஆண்டின் வீரராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. இதைக்கொண்டு பார்க்கும்போது இந்த ஊர்ப் பெயர் அக்காலத்தில் இருந்து மாறாமல் இருப்பது அறியவருகிறது. [2]

அமைவிடம்

[தொகு]

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊரானது காவேரிப்பட்டணத்திலிருந்து ஒரு கிலோமீlட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 272 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1507 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 5842 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2994, பெண்களின் எண்ணிக்கை 2848 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 65.3% என உள்ளது.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

ஊரில் உள்ள நிறுவனங்கள்

[தொகு]

ஊரில் உள்ள கோயில்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 112. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Kaveripattinam/Paiyur


"https://ta.wikipedia.org/w/index.php?title=பையூர்&oldid=3657498" இலிருந்து மீள்விக்கப்பட்டது