உள்ளடக்கத்துக்குச் செல்

பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பையூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு வேளாண் ஆராய்ச்சி மையமாகும். இந்த ஆராய்ச்சி நிலையமானது அப்போதைய தருமபுரி மாவட்டத்தில் (தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டம்) 1973 மே மாதம் நிறுவப்பட்டது. இந்நிலையம், பெங்களூரிலிருந்து 108 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 7 இல் பையூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. தருமபுரி மாவட்டத்திலிருந்து 29 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நோக்கம்

[தொகு]

தமிழ்நாட்டின் வடமேற்கு மண்டலத்தில் வளரும் நெற்பயிருக்கு ஆய்வு மையமாகவும், மானாவாரி மற்றும் பாசன பயிர் வளர்ப்பு முறைகளுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை வழங்குவது, மண்பரப்பில் உள்ள பிரச்சனைகளை மண் ஆராய்ச்சிவழியாக கண்டறிந்து அதன் பிரச்சினைகளை தீர்க்க ஆய்வு செய்தல், முக்கிய பயிர்களில் வரும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்கத்தினை ஆய்வு செய்தல், தகுந்த மேலாண்மை தொழில்நுட்பங்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டது. மேலும் சிறு தானியம் மற்றும் பயறு வகைகள் உற்பத்தித் தொழில்நுட்பத்தில் விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சியை அளிக்கும் மையமாகவும் விளங்குகிறது. மேலும் இந்த மையமானது ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்துக்காக சில கிராமங்களை தேர்வு செய்து, திட்டத்தை செயல்படுத்துகிறது. ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வெளியிட்டுப் பரப்பும் பணிகளிலும் ஈடுபடுகிறது. மேலும் முக்கிய பயிர்களுக்கு குறைந்த விலையில் பண்ணைக் கருவிகளை வடிவமைத்து உருவாக்குகிறது [1]

இந்த மையமானது 50 ஏக்கர் விளை நிலத்தைக் கொண்டுள்ளது. நெல், ராகி, சோளம், கம்பு போன்ற பயிர் வகைகள் தோட்டக்கலை பயிர்களான தக்காளி, மா ஆகியவற்றில் இங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறன. இங்கு புதிய 15 பயிர் ரகங்களும், புதிய கருவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்ட இரகங்கள்

மேற்கோள்கள்

[தொகு]