புரோமித்தியம்(III) ஆக்சைடு
கனசதுரவடிவம்
| |
அறுகோண வடிவம்
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரோமித்தியம்(III) ஆக்சைடு
| |
வேறு பெயர்கள்
புரோமித்தியம் செசுகியூஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12036-25-8 | |
பண்புகள் | |
Pm2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 337.824 கி/மோல் |
உருகுநிலை | ~2320 °C[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புரோமித்தியம்(III) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நியோடிமியம்(III) ஆக்சைடு, சமாரியம்(III) ஆக்சைடு, நெப்டியூனியம்(III) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோமித்தியம்(III) ஆக்சைடு (Promethium(III) oxide) என்பது Pm2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பொதுவாகப் பரவலாகக் காணப்படும் புரோமித்தியம் சேர்மமாக, புரோமித்தியம்(III) ஆக்சைடு காணப்படுகிறது.
படிக அமைப்பு
[தொகு]புரோமித்தியம்(III) ஆக்சைடு முக்கியமான மூன்று படிகவமைப்புகளில் காணப்படுகிறது:[1]
வடிவம் | பியர்சன் குறியீடு | இடக்குழு | எண். | a,b,c (நா.மீ) | β(பாகை) | Z | அடர்த்தி (கி/செ.மீ3) |
---|---|---|---|---|---|---|---|
கனசதுரம் | cI80 | Ia3 | 206 | 1.099 | 16 | 6.85 | |
ஒற்றைச்சரிவு | mS30 | C2/m | 12 | 1.422; 0.365; 0.891 | 100.1 | 6 | 7.48 |
அறுகோண வடிவம் | hP5 | P3m1 | 164 | 0.3802; 0.3802; 0.5954 | 1 | 7.62 |
a,b,c (நானோ மீட்டர்| நா.மீ) என்பவை அணிக்கோவை அளபுருக்கள்,Z என்பது அணிக்கோவை தளத்தின் ஒரு அலகுக்கூட்டில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை, எக்சு கதிர் படிகவியல் தரவுகளில் இருந்து பெறப்பட்டது.
தாழ்வெப்பநிலை எளிய கனசதுரவடிவ அமைப்பானது 750 முதல் 800 பாகை வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது ஒற்றைச்சரிவு வடிவமைக்கு மாறுகிறது. ஆக்சைடை உருகவைத்தால் மட்டுமே இம்மாற்றம் மீட்சியடைகிறது. சுமார் 1740 பாகை வெப்பநிலைக்கு சூடாக்கினால் ஒற்றைசரிவு அமைப்பில் இருந்து அறுகோண கட்டுமான அமைப்புக்கு மாற்றவியலும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Chikalla, T. D.; McNeilly, C. E.; Roberts, F. P. (1972). "Polymorphic Modifications of Pm2O3". Journal of the American Ceramic Society 55 (8): 428. doi:10.1111/j.1151-2916.1972.tb11329.x.