உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளிப்பட்டு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பள்ளிப்பட்டு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர்மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 31 ஆக இருந்தது. ஆந்திரப்பிரதேச எல்லையை அண்டி அமைந்திருந்தது இத் தொகுதி. திருத்தணி, சோளிங்கூர், ராணிப்பேட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 ஏகாம்பர ரெட்டி காங்கிரசு 23480 33.62 கே. எம். பலராமன் அதிமுக 19194 27.49
1980 பி. எம். நரசிம்மன் அதிமுக 26377 35.03 ஏகாம்பர ரெட்டி காங்கிரசு 25967 34.48
1984 பி. எம். நரசிம்மன் அதிமுக 34935 39.96 எ. ஏகாம்பரம் சுயேச்சை 28724 32.85
1989 ஏகாம்பர ரெட்டி காங்கிரசு 30417 30.46 பி. எம். நரசிம்மன் அதிமுக (ஜெ) 26040 26.07
1991 ஏகாம்பர ரெட்டி காங்கிரசு 48516 50.24 எசு. அண்ணாமலை சுயேச்சை 17776 18.41
1996 இ. எசு. எசு. ராமன் தமாகா 79848 67.03 பி. தங்கவேல் காங்கிரசு 21356 17.93
2001 பி. எம். நரசிம்மன் அதிமுக 62289 49.42 எம். சக்கரவர்த்தி பாஜக 34049 27.02
2006 இ. எசு. எசு. ராமன் காங்கிரசு 58534 --- பி. எம். நரசிம்மன் திமுக 51219 ---
  • 1977ல் திமுகவின் கணேசன் 17252 (24.71%) & ஜனதாவின் அசுவதா 7195 (10.30%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980ல் சுயேச்சையான சுவாமிநாதன் 22964 (30.49%) வாக்குகள் பெற்றார்.
  • 1984ல் சுயேச்சையான பி. சின்னிகிருசுணன் 23770 (27.19%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் சாமிநாதன் 24985 (25.02%) & ஜனதா கட்சியின் லோகநாதன் 18424 (18.45%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் திமுகவின் லோகநாதன் 14845 (15.37%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் சுயேச்சை வினாயகம் 26081 (20.69%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் நேதாஜி 10957 வாக்குகள் பெற்றார்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.