உள்ளடக்கத்துக்குச் செல்

நாகர்கர்னூல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகர்கர்னூல்

నాగర్ కర్నూల్ (தெலுங்கு)
ناگرکرنول (உருது)
நல்லமலை மலைகள்
Map
நாகர்கர்னூல் மாவட்டம்

தெலங்காணாவில் அமைவிடம்
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்படிமம்:Flag of the Government of Telangana.svg தெலங்காணா
நிறுவப்பட்டது11 அக்டோபர் 2016; 8 ஆண்டுகள் முன்னர் (2016-10-11)
தலைமையகம்நாகர்கர்னூல்
மண்டலங்கள்20
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்பி உதய் குமார் இ.ஆ.ப.
 • மக்களவைத் தொகுதிகள்1 (நாகர்‌கர்னூல்)
 • பேரவை தொகுதிகள்4 (நாகர்‌கர்னூல், அச்சம்பேட்டை, கல்வாகுர்த்தி, கொல்லப்பூர்)
பரப்பளவு
 • மொத்தம்6,545.00 km2 (2,527.04 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,93,308
 • அடர்த்தி140/km2 (350/sq mi)
மக்கள் தொகையியல்
 • படிப்பறிவு54.38
 • பாலின விகிதம்968:1000
நேர வலயம்ஒசநே+05:30 (இ.சீ.நே.)
வாகனப் பதிவுTS–31[1]
இணையதளம்nagarkurnool.telangana.gov.in
நாகர்கர்னூல் மாவட்டத்த்ன் மூன்று வருவாய் கோட்டங்கள்

நாகர்கர்னூல் மாவட்டம் (Nagarkurnool district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3] மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு நாகர்கர்னூல் மாவட்டம், அக்டோபர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் நாகர்கர்னூல் ஆகும்.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

6545 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட நாகர்கர்னூல் மாவட்டத்தின் வடக்கில் ரங்காரெட்டி மாவட்டம், கிழக்கில் நல்கொண்டா மாவட்டம், மேற்கிலும், தென்மேற்கில் வனபர்த்தி மாவட்டம், வடமேற்கில் மகபூப்நகர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

6545 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட[4] நாகர்கர்னூல் மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 8,93,308 ஆக உள்ளது.[4]

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டை, நாகர்கர்னூல் மற்றும் கல்வகுர்த்தி என மூன்று வருவாய் கோட்டங்களையும், 20 மண்டல்களையும் கொண்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் 349 வருவாய் கிராமங்களும், 301 கிராமப் பஞ்சாயத்துகளும், 16 மண்டல மக்கள் மன்றங்களும், நான்கு நகராட்சிகளும் கொண்டுள்ளது.[5]

புதிதாக நிறுவப்பட்ட நாகர்கர்னூல் மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக இ. சிறீதர் நியமிக்கப்பட்டுள்ளார். [6]

மண்டல்கள்

[தொகு]

நாகர்கர்னூல் மாவட்டத்தின் 20 மண்டல்களின் விவரம் :

# மண்டலங்கள்
1 நாகர்கர்னூல்
2 தடூர்
3 பெண்டலவெள்ளி
4 கோலாப்பூர்
5 கொடையிர்
6 கல்வகுர்த்தி
7 ஊர்கொண்டா
8 சரக்கொண்டா
9 வாங்கூர்
10 வேல்தந்தா
11 அச்சம்பேட்டை
12 உப்புனூந்தலா
13 அம்ரபாத்
14 பிஜினபள்ளி
15 தெல்காபள்ளி
16 திம்மாஜிபேட்டை
17 பெத்தகொத்தப்ள்ளி
18 பல்மூர்
19 பதரா
20 லிங்கல்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. 
  2. "Nagarkurnool district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
  3. "New districts map". newdistrictsformation.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  5. "GO 243 Reorganization of Nagarkurnool District Final Notification". Archived from the original on 2017-06-01. பார்க்கப்பட்ட நாள் 2017-02-28.
  6. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 

வெளி இணைப்புகள்

[தொகு]