உள்ளடக்கத்துக்குச் செல்

மாவட்ட ஆட்சித் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் மாநில அரசுகளின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தலைமை அலுவலராக மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட ஆட்சியர் (District collector) செயல்படுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய அரசால் ஒவ்வொரு மாநில பணித்தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து, அந்தந்த மாநில அரசால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் கவனிப்பதற்காக இவருக்கு மாவட்ட நீதித்துறை நடுவர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க

[தொகு]

வருவாய்த்துறை இணையதளம்

[தொகு]