உள்ளடக்கத்துக்குச் செல்

தேவா (இசையமைப்பாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவா
பின்னணித் தகவல்கள்
பிறப்புநவம்பர் 20, 1950 (1950-11-20) (அகவை 74) [1]
தமிழ்நாடு,  இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர்

தேவா (Deva, பிறப்பு:20 நவம்பர் 1950) என்று அழைக்கப்படும் தேவநேசன் சொக்கலிங்கம், பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார். ஏறத்தாழ 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்கு பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். 400இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[2]

இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும். தேவா பல கானா பாடல்களை எழுதியும், அப்பாடல்களை தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர். இவர் தேனிசைத் தென்றல் என்று அழைக்கப்படுகிறார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

தேவா 1950 நவம்பர் 20 அன்று மா. சொ. சொக்கலிங்கம், மா. சொ. கிருஷ்ணவேணி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதில் கூட, தேவா இசையுலகில் ஈர்க்கப்பட்டார். சந்திரபோசுடன் இணைந்து, இவர் பல இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். ஜே. பி. கிருஷ்ணாவின் கீழ் பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய இவர், தன்ராஜுடன் தொடர்ந்து இலண்டனிலுள்ள டிரினிட்டி இசைக் கல்லூரியில் மேற்கத்திய இசையில் ஒரு படிப்பை முடித்துள்ளார். இவரது மகன் சிறீகாந்து தேவாவும் ஒரு இசையமைப்பாளராவார். அதே போல இவரது சகோதரர்களான சபேஷ்-முரளி இரட்டையர்களாக உருவாகியுள்ளனர். இவரது மருமகன் ஜெய் ஒரு நடிகராவார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

திரைப்படத்திற்கு வருவதற்கு முன்பு, தேவா தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் சிறிது காலம் பணியாற்றினார். வயலும் வாழ்வும் என்ற நிகழ்ச்சியின் பாடல்களுக்கு இசையமைத்தார்.[4] அந்நாட்களில், தேவாவின் சகோதரர்கள் இளையராஜாவுடனும் பிற இசையமைப்பாளர்களின் இசைக்குழுக்களில் இசைக் கருவிகளை வாசித்து வந்தனர். இவரது முதல் திரைப்படம் மனசுக்கேத்த மகராசா 1989 இல் வெளியிடப்பட்டது. பின்னர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டார். வைகாசி பொறந்தாச்சு வெளிவந்த பிறகு, இவரது பெயர் தமிழ்ச் சமூகம் முழுவதும் அறியப்பட்டது.

சிறந்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இவரை "தேனிசைத் தென்றல்" என்று அழைத்தார். இதுவரை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமயப் பக்தித் திரைப்படங்களின் பாடல்களுக்காகவும் இவர் பிரபலமானவர். ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை (1992), பாட்ஷா (1995) ஆகிய திரைப்படங்களில் இசையமைத்ததற்காக இவர் பரவலாக பாராட்டப்பட்டார்.

தேவா 1996 இல், 36 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். நடிகர் அஜித் விஜய் ஆகியோருக்கு இவரது இசை பெரும் பங்கு வகித்தன. ஆசை (1995) காதல் கோட்டை (1996) நேருக்கு நேர் (1997) நினைத்தேன் வந்தாய் (1998) பிரியமுடன் (1998) வாலி (1999) குஷி (2000) போன்ற வெற்றித் திரைப்படங்கள் இவர்களை அடுத்த தலைமுறையின் சிறந்த நடிகர்களாக தங்களை நிலைநிறுத்த உதவியது.[5]

2014 இல், அனிருத் இரவிச்சந்தரனின் மான் கராத்தே படத்தில் ஒரு கானா பாடலைப் பாட தேவாவைத் தேர்ந்தெடுத்தார்.[6]

விருதுகள்

[தொகு]

1990 இல், தனது முதல் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதைப் பெற்றார். 1992இல் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். 1995 இல், ஆசை படம் இவருக்கு மற்றொரு மாநில திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது. பாட்ஷா படத்திற்காக, தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார அகாதமி விருதைப் பெற்றார். கதை எழுதுவதிலிருந்து திரையிடுதல் வரை உலகிலேயே மிக வேகமாக முடிக்கப்பட்ட திரைப்படமான சிவப்பு மழை படத்திற்காக கின்னஸ் உலக சாதனை விருது பெற்றார். தினகரன், சினிமா எக்ஸ்பிரஸ், இசுகிரீன் போன்ற பிரபல பத்திரிகைகளின் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். கன்னடத் திரைப்படமான அம்ருத வர்சினி சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.[7][8]

இசையமைத்த திரைப்படங்களில் சில

[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1989 மனசுக்கேத்த மகராசா அறிமுகத் திரைப்படம்
1990 வைகாசி பொறந்தாச்சு வெற்றி : சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
மண்ணுக்கேத்த மைந்தன்
நம்ம ஊரு பூவாத்தா
1991 புது மனிதன்
வசந்தகால பறவை
நாடோடி காதல்
கங்கைக்கரை பாட்டு
மாங்கல்யம் தந்துனானே
1992 அம்மா வந்தாச்சு
அண்ணாமலை
இளவரசன்
ஊர் மரியாதை
மதுமதி
கவர்ண்மென்ட் மாப்பிள்ளை
பிரம்மச்சாரி
பொண்டாட்டி ராஜ்ஜியம்
சாமுண்டி
சூரியன்
தெற்கு தெரு மச்சான்
உனக்காக பிறந்தேன்
சோலையம்மா
பட்டத்து ராணி
1993 கட்டபொம்மன்
செந்தூரப் பாண்டி
ரோஜாவைக் கிள்ளாதே
மூன்றாவது கண்
வேடன்
1994 என் ஆசை மச்சான்
ரசிகன்
இந்து
நம்ம அண்ணாச்சி
ஜல்லிக்கட்டு காளை
பதவி பிரமாணம்
1995 ஆசை வெற்றி :சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
பரிந்துரை :சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது
பாட்ஷா பரிந்துரை : சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது
தேவா
சீதனம்
காந்தி பிறந்த மண்
நாடோடி மன்னன்
பொங்கலோ பொங்கல்
திருமூர்த்தி
மருமகன்
மாமன் மகள்
தாய்க்குலமே தாய்க்குலமே
புள்ளகுட்டிக்காரன்
1996 அவ்வை சண்முகி
கோகுலத்தில் சீதை
சேனாதிபதி
கோபாலா கோபாலா
காதல் கோட்டை பரிந்துரை : சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது
கல்லூரி வாசல்
தாயகம்
மாண்புமிகு மாணவன்
பாஞ்சாலங்குறிச்சி
கல்கி
வான்மதி
காலம் மாறிப்போச்சு
1997 ஆஹா
அபிமன்யு
அருணாச்சலம்
பாரதி கண்ணம்மா
சாதிசனம்
தடயம்
இனியவளே
தர்ம சக்கரம்
எட்டுப்பட்டி ராசா
வாய்மையே வெல்லும்
சிஷ்யா
காதல்பள்ளி
காலமெல்லாம் காதல் வாழ்க
காலமெல்லாம் காத்திருப்பேன்
கல்யாண வைபோகம்
மாப்பிள்ளை கவுண்டர்
நேருக்கு நேர் பரிந்துரை :சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது
நல்லமனசுக்காரன்
நேசம்
ஒன்ஸ்மோர்
பகைவன்
பத்தினி
பெரியதம்பி
பொற்காலம்
ரெட்டை ஜடை வயசு
பெரிய மனுசன்
தேடினேன் வந்தது
1998 என்னுயிர் நீதானே
இனியவளே
காதலே நிம்மதி
கண்ணெதிரே தோன்றினாள்
உரிமைப்போர்
சந்தோஷம்
நட்புக்காக
பொன்விழா
நினைத்தேன் வந்தாய்
பிரியமுடன்
குருபார்வை
சந்திப்போமா
சுந்தர பாண்டியன்
1999 ஆசையில் ஒரு கடிதம்
ஆனந்த பூங்காற்றே
சின்ன ராஜா
ஒருவன்
ஊட்டி
ஹலோ
கனவே கலையாதே
கண்ணோடு காண்பதெல்லாம்
நெஞ்சினிலே
அன்புள்ள காதலுக்கு
மின்சார கண்ணா
ரோஜா வனம்
உன்னை தேடி
உன்னருகில் நானிருந்தால்
வாலி பரிந்துரை :சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது
2000 அப்பு
வெற்றிக் கொடி கட்டு
ஏழையின் சிரிப்பில்
குஷி வெற்றி : சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
பரிந்துரை :சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது
முகவரி பரிந்துரை :சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது
வல்லரசு
சந்தித்த வேளை
உன்னைக் கண் தேடுதே
சீனு
தை பொறந்தாச்சு
மனுநீதி
2001 சாக்லெட்
சிட்டிசன்
எங்களுக்கும் காலம் வரும்
கண்ணுக்கு கண்ணாக
மாயன்
ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி
லவ்லி
வீட்டோட மாப்பிள்ளை
லவ் மேரேஜ்
லூட்டி
விரும்புகிறேன்
கடல் மீன்கள்
உலகை விலைபேசவா
2002 பகவதி
பஞ்சதந்திரம்
ரெட்
பம்மல் கே. சம்பந்தம்
சமஸ்தானம்
விவரமான ஆளு
மாறன்
2003 சொக்கத்தங்கம்
தம்
சூரி
காதல் கிறுக்கன்
ராமச்சந்திரா
இன்று
மிலிட்டரி
2004 தேவதையைக் கண்டேன்
அடிதடி
ஜோர்
ராமகிருஷ்ணா
கவிதை
எங்கள் அண்ணா
ஜெய்சூர்யா
கஜேந்திரா
மகாநடிகன்
2005 இங்கிலீஸ்காரன்
நண்பனின் காதலி
கிரிவலம்
செல்வம்
சூப்பர் டா
2007 திருமகன்
வியாபாரி
சொல்லி அடிப்பேன்
மணிகண்டா
அடாவடி
பசுபதி மே/பா ராசாக்காபாளையம்
சீனாதானா 001
2008 கோடைக்கானல்
2009 ஆறுமுகம்
மாட்டுத்தாவணி
2010 சிவப்பு மழை
பெண் சிங்கம்
குட்டி பிசாசு
பொள்ளாச்சி
2012 கொண்டான் கொடுத்தான்
2014 டம்மி டப்பாசு [9]

திரையில் தோன்றியவை

[தொகு]
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1998 உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் அவராகவே
1999 சின்ன ராஜா அவராகவே
2004 அடி தடி "தகடு தகடு" பாடலில் சிறப்புத் தோற்றம்
2009 மோதி விளையாடு "மோதி விளையாடு" பாடலில் சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.filmibeat.com/celebs/deva/biography.html
  2. "Deva tamil music director". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  3. கல்யாணி பாண்டியன், ed. (20 நவம்பர் 2020). அஜித், விஜய் முதல் ரஜினி வரை: 90ஸ் கிட்ஸ்களின் நினைவில் நீங்கா தேவாவின் திரையிசை!. புதியதலைமுறை தொலைக்காட்சி.
  4. ஒளரங்கசீப் (21 January 1996). "சினிமா உலகம் பணத்தை மதிக்கிறது!" (PDF). கல்கி. pp. 6–8. பார்க்கப்பட்ட நாள் 18 May 2023.
  5. "How Tamil composer Deva rolled out the hits: 'A film song should immediately register with people'". 24 June 2018.
  6. "Deva sings for Anirudh !". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 April 2014. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/music/deva-sings-for-anirudh-/articleshow/33736059.cms. 
  7. "45th Annual Filmfare Best Kannada Music Director : Santosh : Free Dow…". archive.is. 5 February 2017. Archived from the original on 5 February 2017.
  8. "deva_won_filmfare__best_kannada_music_director : santosh : Free Downl…". archive.is. 5 February 2017. Archived from the original on 5 February 2017.
  9. http://www.filmibeat.com/celebs/deva/filmography.html