உள்ளடக்கத்துக்குச் செல்

திருநகர்

ஆள்கூறுகள்: 9°53′19″N 78°02′58″E / 9.8887°N 78.0495°E / 9.8887; 78.0495
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநகர்
Thirunagar
திருநகர் Thirunagar is located in தமிழ் நாடு
திருநகர் Thirunagar
திருநகர்
Thirunagar
திருநகர், மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 9°53′19″N 78°02′58″E / 9.8887°N 78.0495°E / 9.8887; 78.0495
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
199 m (653 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்16,598
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625006
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
வாகனப் பதிவுTN 58 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி, நிலையூர், சம்பக்குளம், பசுமலை, விளாச்சேரி, தனக்கன்குளம், தோப்பூர்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்மா. சௌ. சங்கீதா,
இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிவிருதுநகர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிதிருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்மாணிக்கம் தாகூர்
சட்டமன்ற உறுப்பினர்வி. வி. ராஜன் செல்லப்பா
இணையதளம்https://madurai.nic.in

திருநகர் (ஆங்கில மொழி: Thirunagar) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் 4-வது மண்டலத்தில் அமைந்த 98-வது வார்டு பகுதியாகும்.[1] இது முன்னர் திருநகர் பேரூராட்சி பகுதியாக இருந்தது. மதுரை மாநகராட்சியை விரிவாக்கும் போது, திருநகர், திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி போன்ற பேரூராட்சிகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 199 மீட்டர் உயரத்தில், 9°53′19″N 78°02′58″E / 9.8887°N 78.0495°E / 9.8887; 78.0495 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருநகர் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,598 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 8,252 ஆண்கள், 8,346 பெண்கள் ஆவார்கள். திருநகரில் 1,000 ஆண்களுக்கு 1,011 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட அதிகம். திருநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 95.47% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 97.73%, பெண்களின் கல்வியறிவு 93.25% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. திருநகர் மக்கள் தொகையில் 1,398 (8.42%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 934 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு குறைவானதாக உள்ளது.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 92.06% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 4.52%, இஸ்லாமியர்கள் 3.10% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். திருநகர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 2.57%, பழங்குடியினர் 0.08% ஆக உள்ளனர். திருநகரில் 4,418 வீடுகள் உள்ளன.[2]

குறிப்புகள்

[தொகு]

திருநகர் மதுரையில் இருந்து 8.3 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 6.5 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநகரின் பரப்பு சதுர வடிவைக் கொண்டுள்ளது. அந்த சதுர வடிவப் பரப்பை, எட்டு பேருந்து நிறுத்தங்கள் சேர்க்கின்றன. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து 14.6 கி.மீ. தொலைவில் உள்ளது.

திரையரங்குகள்

[தொகு]

திருநகரில் இரண்டு திரையரங்குகள் உள்ளன. ஒன்று தேவி கலைவாணி அரங்கு; மற்றொன்று மணி இம்பாலா பல அடுக்குத் திரையரங்கு. தேவி கலைவாணி திரையரங்கு திருநகர் இரண்டாம் நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மணி இம்பாலா பல அடுக்குத் திரையரங்கு திருநகருக்கு அடுத்து உள்ள ஹார்விப்பட்டி என்னும் இடத்தில் உள்ளது. இத்திரையரங்கு தமிழகத்திலயே முதன் முதலில் "க்யுப்" {பார்க்க(http://www.qubecinema.com/)} என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்தத் தொழில்நுட்பம் தமிழகத்தில் உள்ள பல திரை அரங்குகளில் உள்ளது. முதலில் இந்த அரங்கு "மணி தியேட்டர்" என்னும் பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது. பின் மே 1, 2002 ம் வருடத்தில் "தியேட்டர் மணி இம்பாலா" {பார்க்க(http://www.impalacinemas.com/ பரணிடப்பட்டது 2009-07-12 at the வந்தவழி இயந்திரம் or http://www.impalamultiplex.com/ பரணிடப்பட்டது 2009-08-28 at the வந்தவழி இயந்திரம்) என்னும் பெயரால் தொடங்கப்பட்டது. பின்னர் இந்தத் திரையரங்கை மூன்று அரங்குகளாக உயர்த்தும் பணி நிறைவடைந்து 10.7.2009 அன்று ஆரம்பிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இந்தப் பெருமையைப் பெறும் முதல் திரையரங்கு இது தான். இந்த மூன்று திரையரங்குகளில் இரண்டு முற்றிலும் குளிரூட்டப்பட்டவை.

தானியங்கி மையங்கள்

[தொகு]

திருநகரில் பல வங்கிகளின் தானியங்கி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. திருநகரில் உள்ள வங்கிகளின் தானியங்கி மையங்களின் பெயர்கள் வருமாறு:

  1. கனரா வங்கி, திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தத்தில் உள்ளது .
  2. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, திருநகர் முதல் பேருந்து நிறுத்தத்தில் உள்ளது.
  3. இந்தியன் வங்கி, அண்ணா பூங்கா அருகில் உள்ளது.
  4. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தத்தில் உள்ளது .
  5. எச்.டி.எஃப்.சி. வங்கி, திருநகர் முதல் பேருந்து நிறுத்தத்தில் உள்ளது .
  6. எஸ்.பி.ஐ. வங்கி, திருநகர் முதல் பேருந்து நிறுத்தத்தில் உள்ளது .

வங்கிகள்

[தொகு]

திருநகரில் 7 வங்கிகளின் கிளைகளும், பணம் எடுக்கும் இயந்திரங்களும் உள்ளன. திருநகரில் உள்ள வங்கிகளின் பெயர்கள் மற்றும் ஏடிஎம்கள் பின்வருமாறு:

  1. கனரா வங்கி, திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தத்தில் உள்ளது .
  2. பேங்க் ஆஃப் இந்தியா, திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தத்தில் உள்ளது.
  3. இந்தியன் வங்கி, அண்ணா பூங்கா அருகில் உள்ளது.
  4. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, காவல் நிலையம் அருகில்.
  5. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, திருநகர் முதல் பேருந்து நிறுத்தத்தில் உள்ளது.
  6. கரூர் வைஸ்யா வங்கி, திருநகர் முதல் பேருந்து நிறுத்தம் அருகில்.
  7. சிட்டி யுனியன் வங்கி, திருநகர் முதல் பேருந்து நிறுத்தம் அருகில்.

கல்வி நிலையங்கள்

[தொகு]
  • சீதாலெட்சுமி பெண்கள் மேனிலைப் பள்ளி, திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம்
  • பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையம், திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம்

இதர அலுவலகங்கள்

[தொகு]

அருகமைந்த குடியிருப்பு காலனிகள்

[தொகு]
  • மகாலெட்சுமி கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் குடியிருப்பு
  • சீனிவாசா கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் குடியிருப்பு
  • பர்மா காலனி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மதுரை மாநகராட்சி மண்டலம் 4-இல் திருநகர் 98-வது வார்டு". Archived from the original on 2019-02-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-07.
  2. Thirunagar Population Census 2011பார்த்த நாள்: டிசம்பர் 21, 2015

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநகர்&oldid=3778765" இலிருந்து மீள்விக்கப்பட்டது