தமிழ்நாட்டின் மாவட்டங்கள்
தமிழக மாவட்டங்கள் | |
---|---|
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | தமிழ்நாடு |
எண்ணிக்கை | 38 மாவட்டங்கள் |
மக்கள்தொகை | பெரம்பலூர் – 565,223 (குறைவு); சென்னை – 4,646,732 (அதிகம்) |
பரப்புகள் | 426 km2 (164 sq mi) சென்னை (சிறியது) – 6,266.64 km2 (2,419.56 sq mi) திண்டுக்கல் (பெரியது) |
அரசு | தமிழ்நாடு அரசு |
உட்பிரிவுகள் | தாலுகாக்கள், வருவாய் கிராமங்கள் |
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.
வரலாறு
1947 ஆகத்து மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது, சென்னை மாநிலம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக, தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு, தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.[1]
- 1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1985: மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து, புதிதாக சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
- 1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
- 1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
- 1993: தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
- 1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
- 1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1997: முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
- 2004: தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 2019: விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, சனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழ்நாட்டின் 33 வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது); மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும் (2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது); மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தென்காசி மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக திருப்பத்தூர் மாவட்டமும் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்டன.[2][3][4]
- 2020: நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் ஆனது மார்ச் 24, 2020 அன்று உருவாக்கப்பட்டது.[5][6]
மாவட்டங்கள் பட்டியல்
மண்டல வாரியாக
|
|
|
|
அட்டவணை
2011 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கட் தொகை 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 46,81,087 பேர் வசித்து வருகின்றனர். இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 26,903 ஆக இருக்கிறது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள மாவட்டம், நீலகிரி மாவட்டம் ஆகும் (ஒரு ச.கி.மீ.க்கு 288 பேர்). கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் முதன்மையாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் 92.14% பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். கல்வியறிவில் 64.71% பெற்று, தருமபுரி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது.[7] கீழே உள்ள அட்டவணையில், அனைத்து 38 மாவட்டங்களுக்கான புவியியல் மற்றும் மக்கட்தொகை அளவுருக்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.[8]
எண். | மாவட்டம் | குறியீடு | தலைநகரம் | நிறுவப்பட்டது | முந்தைய மாவட்டம் | பரப்பளவு (கி.மீ²) | மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) | தாலுகா/வட்டம்[9] | வரைபடம் | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
மக்கள் தொகை[10] | மக்கள் தொகை அடர்த்தி (/கி.மீ²) | |||||||||
1. | அரியலூர் | AR | அரியலூர் | 23 நவம்பர் 2007 | பெரம்பலூர் | 1949.31 | 7,54,894 | 390 | ||
2. | செங்கல்பட்டு | CGL | செங்கல்பட்டு | 29 நவம்பர் 2019 | காஞ்சிபுரம் | 2,944.96 | 2,556,244 | 868 | ||
3. | சென்னை | CH | சென்னை | 1 நவம்பர் 1956 | ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று | 426 | 4,646,732 | 26,076 | ||
4. | கோயம்புத்தூர் | CO | கோயம்புத்தூர் | 1 நவம்பர் 1956 | ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று | 4,723[11] | 3,458,045 | 732 | ||
5. | கடலூர் | CU | கடலூர் | 30 செப்டம்பர் 1993 | தென் ஆற்காடு | 3,678 | 2,605,914 | 709 | ||
6. | தருமபுரி | DH | தருமபுரி | 2 அக்டோபர் 1965 | சேலம் | 4,497.77 | 15,06,843 | 335 | ||
7. | திண்டுக்கல் | DI | திண்டுக்கல் | 15 செப்டம்பர் 1985 | மதுரை | 6,266.64 | 21,59,775 | 345 | ||
8. | ஈரோடு | ER | ஈரோடு | 31 ஆகத்து 1979 | கோயம்புத்தூர் | 5,722[12] | 22,51,744 | 394 | ||
9. | கள்ளக்குறிச்சி | KL | கள்ளக்குறிச்சி | 26 நவம்பர் 2019 | விழுப்புரம் | 3,520.37 | 13,70,281 | 389 | ||
10. | காஞ்சிபுரம் | KC | காஞ்சிபுரம் | 1 சூலை 1997 | செங்கல்பட்டு (சென்னை மாகாணம்) | 1,655.94 | 11,66,401 | 704 | ||
11. | கன்னியாகுமரி | KK | நாகர்கோவில் | 1 நவம்பர் 1956 | ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று | 1,672 | 18,70,374 | 1,119 | ||
12. | கரூர் | KR | கரூர் | 30 செப்டம்பர் 1995 | திருச்சிராப்பள்ளி | 2,895.57 | 10,64,493 | 357 | ||
13. | கிருட்டிணகிரி | KR | கிருட்டிணகிரி | 9 பிப்ரவரி 2004 | தருமபுரி | 5,143 | 18,79,809 | 366 | ||
14. | மதுரை | MDU | மதுரை | 1 நவம்பர் 1956 | ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று | 3,741.73 | 30,38,252 | 812 | ||
15. | மயிலாடுதுறை | – | மயிலாடுதுறை | 7 ஏப்ரல் 2020 | நாகப்பட்டினம் | 1,172 | 9,18,356 | 784 | ||
16. | நாகப்பட்டினம் | NG | நாகப்பட்டினம் | 18 அக்டோபர் 1991 | தஞ்சாவூர் | 1,397 | 6,97,069 | 498 | ||
17. | நாமக்கல் | NM | நாமக்கல் | 1 சனவரி 1997 | சேலம் | 3,363 | 17,26,601 | 513 | ||
18. | நீலகிரி | NI | உதகமண்டலம் | 1 நவம்பர் 1956 | ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று | 2,452.5 | 7,35,394 | 300 | ||
19. | பெரம்பலூர் | PE | பெரம்பலூர் | 30 செப்டம்பர் 1995 | திருச்சிராப்பள்ளி | 1,752 | 5,65,223 | 320 | ||
20. | புதுக்கோட்டை | PU | புதுக்கோட்டை | 14 சனவரி 1974 | தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி | 4,663 | 16,18,345 | 347 | ||
21. | இராமநாதபுரம் | RA | இராமநாதபுரம் | 1 நவம்பர் 1956 | ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று | 4,089.57 | 13,53,445 | 331 | ||
22. | இராணிப்பேட்டை | RN | இராணிப்பேட்டை | 28 நவம்பர் 2019 | வேலூர் | 2,234.32 | 12,10,277 | 542 | ||
23. | சேலம் | SA | சேலம் | 1 நவம்பர் 1956 | ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று | 5,205 | 34,82,056 | 669 | ||
24. | சிவகங்கை | SI | சிவகங்கை | 15 மார்ச் 1985 | மதுரை மற்றும் இராமநாதபுரம் | 4,086 | 13,39,101 | 328 | ||
25. | தென்காசி | TS | தென்காசி | 22 நவம்பர் 2019 | திருநெல்வேலி | 2916.13 | 14,07,627 | 483 | ||
26. | தஞ்சாவூர் | TJ | தஞ்சாவூர் | 1 நவம்பர் 1956 | ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று | 3,396.57 | 24,05,890 | 708 | ||
27. | தேனி | TH | தேனி | 25 சூலை 1996 | மதுரை | 3,066 | 12,45,899 | 406 | ||
28. | தூத்துக்குடி | TK | தூத்துக்குடி | 20 அக்டோபர் 1986 | திருநெல்வேலி | 4,621 | 17,50,176 | 379 | ||
29. | திருச்சிராப்பள்ளி | TC | திருச்சிராப்பள்ளி | 1 நவம்பர் 1956 | ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று | 4,407 | 27,22,290 | 618 | ||
30. | திருநெல்வேலி | TI | திருநெல்வேலி | 1 நவம்பர் 1956 | ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று | 3842.37 | 16,65,253 | 433 | ||
31. | திருப்பத்தூர் | TU | திருப்பத்தூர் | 28 நவம்பர் 2019 | வேலூர் | 1,797.92 | 11,11,812 | 618 | ||
32. | திருப்பூர் | TP | திருப்பூர் | 22 பிப்ரவரி 2009 | கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு | 5,186.34 | 24,79,052 | 478 | ||
33. | திருவள்ளூர் | TL | திருவள்ளூர் | 1 சூலை 1997 | செங்கல்பட்டு | 3424 | 37,28,104 | 1,089 | ||
34. | திருவண்ணாமலை | TV | திருவண்ணாமலை | 30 செப்டம்பர் 1989 | வட ஆற்காடு | 6,191 | 24,64,875 | 398 | ||
35. | திருவாரூர் | TR | திருவாரூர் | 18 அக்டோபர் 1991 | தஞ்சாவூர் | 2,161 | 12,64,277 | 585 | ||
36. | வேலூர் | VE | வேலூர் | 30 செப்டம்பர் 1989 | வட ஆற்காடு | 2030.11 | 16,14,242 | 795 | ||
37. | விழுப்புரம் | VL | விழுப்புரம் | 30 செப்டம்பர் 1993 | தென் ஆற்காடு மாவட்டம் | 3725.54 | 20,93,003 | 562 | ||
38. | விருதுநகர் | VR | விருதுநகர் | 15 மார்ச் 1985 | மதுரை மற்றும் இராமநாதபுரம் | 4,288 | 19,42,288 | 453 |
முந்தைய மாவட்டங்கள்
வரைபடம் | மாவட்டம் | ஆண்டுகள் | பின்னர் வந்த மாவட்டங்கள் |
---|---|---|---|
செங்கல்பட்டு | 1956–1997 | காஞ்சிபுரம், செங்கல்பட்டு(2019 முதல்) மற்றும் திருவள்ளூர் | |
வட ஆற்காடு | 1956–1989 | திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை(2019 முதல்) மற்றும் திருப்பத்தூர்(2019 முதல்) | |
தென் ஆற்காடு | 1956–1993 | கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி (2019 முதல்) |
மாவட்டம் பிரிப்பு கோரிக்கைகள்
அதிகரிக்கும் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டும் மற்றும் நிர்வாக வசதிகளுக்காகவும் புதிய மாவட்ட பிரிப்பு கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
- திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆரணி, போளூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யார், வெம்பாக்கம், சமுனாமரத்தூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என 2020 இல் அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.[13] ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.[14]
- திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.[15]
- கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைப் பிரித்து பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.[16]
- ஈரோடு மாவட்டத்தைப் பிரித்து கோபிச்செட்டிப்பாளையம் நகரைத் தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.[16]
- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களை உள்ளடக்கி புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை உள்ளது.[17] தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து பட்டுக்கோட்டை தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் கோரிக்கை வைத்துள்ளார்.[18]
- வடக்கு சென்னை மக்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னையை இரண்டாகப் பிரித்து, வடசென்னையை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வருகிறது.[19]
- திருவள்ளூர் மாவட்டத்தைப் பிரித்து, பொன்னேரியைத் தலைநகராகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[20]
- திருவாரூர் மாவட்டத்தைப் பிரித்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி மன்னார்குடி மாவட்டம் வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[21]
- திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைப் பிரித்து சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[22]
- தூத்துக்குடி மாவட்டத்தை பிரித்து கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[23]
- கடலூர் மாவட்டத்தை பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, முஷ்ணம் ஆகிய வருவாய் வட்டங்களுடன், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள சில வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக நெய்வேலி வட்டத்தையும் உருவாக்கி விருத்தாசலம்மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[சான்று தேவை]
- சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[சான்று தேவை]
இதனையும் காண்க
- தமிழக வருவாய் வட்டங்கள்
- தமிழக மாநகராட்சிகள்
- தமிழக நகராட்சிகள்
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழகப் பேரூராட்சிகள்
மேற்கோள்கள்
- ↑ தமிழக மாவட்டங்கள் பிரிந்த வரலாறு!
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- ↑ தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- ↑ செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்
- ↑ "தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு". இந்து தமிழ் (24 மார்ச், 2020)
- ↑ "கொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு!".ஒன்இந்தியா தமிழ் (24 மார்ச், 2020)
- ↑ "Census 2011". Government of India. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
- ↑ "Districts of Tamil Nadu". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014.
- ↑ "Government of Tamil Nadu – Taluks". Information Technology Department, Government of Tamil Nadu. National Informatics Centre. Archived from the original on 3 October 2019. பார்க்கப்பட்ட நாள் 19 April 2020.
- ↑ "A – 2: Decadal Variation Population Since 1901" (PDF). தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். Archived (PDF) from the original on 13 November 2014. பார்க்கப்பட்ட நாள் 30 November 2019.
- ↑ "Coimbatore District Statistical Handbook". Coimbatore District Administration. Archived from the original on 4 December 2015. பார்க்கப்பட்ட நாள் 21 November 2015.
- ↑ "Erode District – District At a Glance". National Informatics Centre. Archived from the original on 11 September 2019. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
- ↑ "Minister visits villages to receive grievance applications". The Hindu. 31 August 2019. https://www.thehindu.com/news/national/tamil-nadu/minister-visits-villages-to-receive-grievance-applications/article29303360.ece. பார்த்த நாள்: 1 April 2020.
- ↑ ஆரணி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் இபிஎஸ் அவர்கள் உறுதி
- ↑ பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்’முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
- ↑ 16.0 16.1 "Increase in demands for new districts in Tamil Nadu". The New Indian Express. 19 August 2019. Archived from the original on 13 September 2019. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
- ↑ "CM will announce Kumbakonam district soon: Minister". The Times of India (in ஆங்கிலம்). 29 November 2019. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
- ↑ பட்டுக்கோட்டை மாவட்டம் கோரிக்கை
- ↑ "Increase in demands for new districts in Tamil Nadu". The New Indian Express. Archived from the original on 25 September 2019. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
- ↑ பொன்னேரி தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
- ↑ "| மன்னார்குடி மாவட்டம் உருவாக்க கோரிக்கை". Archived from the original on 2020-07-14. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
- ↑ It is possible to establish a district
- ↑ "தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: கோவில்பட்டி புதிய மாவட்டம் அறிவிக்கப்படுமா?". இந்து தமிழ்(12 ஆகத்து 2021)