உள்ளடக்கத்துக்குச் செல்

அஜய் சக்ரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டிட் அஜய் சக்ரவர்த்தி
கொல்கத்தாவில்அஜய் சக்ரவர்த்தி
பிறப்புஅஜய் சக்ரவர்த்தி
25 திசம்பர் 1952 (1952-12-25) (அகவை 71)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பணிபாடுதல்
பிள்ளைகள்கௌசிகி சக்ரவர்த்தி
இசை வாழ்க்கை
பிறப்பிடம்சியாம் நகர், மேற்கு வங்காளம், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
இசைத்துறையில்1977 முதல் தற்போது வரை

பண்டிட் அஜய் சக்ரவர்த்தி (Pandit Ajoy Chakrabarty) (பிறப்பு: திசம்பர் 25, 1952) இவர் ஓர் இந்திய இந்துஸ்தானி இசைப் பாடகராவார். [1] இவருக்கு 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. [2] [3] [4]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சக்ரவர்த்தி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்தார். பிரிவினையின் போது இவரது தந்தை வங்காளதேசத்தின் மைமன்சிங்கில் இருந்து இந்தியாவுக்குச் வந்து இரண்டு மகன்களையும் சியாம்நகரில் வளர்த்தார். இவரது தம்பி சஞ்சய் சக்ரவர்த்தியும் ஒரு பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார்.

குரு

[தொகு]

கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் இசையில் முதலிடம் பிடித்து முதுகலைப் பட்டத்தினை முடித்தார். பின்னர் 1977 இல் ஐ.டி.சி சங்கீத ஆராய்ச்சி அகாதமியில் சேர்ந்தார்.

இவரது தந்தைதான் இவரது முதல் குரு. பின்னர் பன்னலால் சமந்தா, கனைதாஸ் பைகாரி மற்றும் ஞான பிரகாஷ் கோஷ் ஆகியோரிடம் படித்தார். [5]

அதுமட்டுமின்றி, லதாபத் உசேன் கான், நிப்ருதிபுவா சர்நாயக், இராபாய் பரோடேகர் போன்ற ஆசிரியர்களிடமிருந்தும், கர்நாடக பாணிகளை எம். பாலமுரளிகிருஷ்ணாவிடமிருந்தும் இவர் கற்றுக்கொண்டா. இது இவரது இசை வெளிப்பாடு மற்றும் திறமைகளை வளமாக்கிக் கொண்டது . கயால் வகைகளில் இதுபோன்ற தூய்மையான இசையை இவர் தும்ரி, தப்பா, பஜனை, கீர்த்தனை, இந்திய நாட்டுப்புற இசை, திரைப்படம் / திரைப்படம் அல்லாத மற்றும் நவீன பாடல்கள் போன்ற இலகுவான வடிவங்களை பல்வேறு மொழிகளில் வழங்குகிறார்.

விருதுகள்

[தொகு]

பத்மசிறீ (2011), சங்கீத நாடக அகாதமி விருது (தில்லி, 1999-2000), குமார் கந்தர்வா தேசிய விருது (1993), சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது (பெங்காலி திரைப்படம் "சாந்தனீர்" 1990), தேசிய தான்சேன் சம்மான் விருதினை ( 2015) மத்திய பிரதேச முதல்வரிடமிருந்து பெற்றார். [6] இவர் தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய முதல்வர்களிடமிருந்தும் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இவருக்கு மகா சங்கீத சம்மான் விருதினையும் மாநிலத்தின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பங்கா பிபுஷன் ஆகியவற்றையும் வழங்கினார். 2015 ஆம் ஆண்டில் இவர் குரு ஞான பிரகாஷ் கோஷ் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார்.

ஜாஸ் இசையின் பிறப்பிடமான நியூ ஓர்லென்ஸ் நகரத்தின் அரங்கத்தில் ஜாஸ் இசைக்கலைஞர்களுடன் நிகழ்ச்சியை நிகழ்த்திய பின்னர், அந்த நகரத்தில் இவருக்கு கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டது.

தொழில்

[தொகு]

இந்தியாவின் சுதந்திரத்தின பொன்விழா கொண்டாட்டத்திற்காக பாக்கித்தான், சீனா மற்றும் பிபிசி ஆகியோரால் அழைக்கப்பட்ட முதல் இந்திய இசைப் பாடகர் ஆவார். கார்னகி அரங்கம், கென்னடி மையம், அமெரிக்காவின் நியூ ஓர்லென்ஸ் ஜாஸ் மண்டபம், ராயல் ஆல்பர்ட் அரங்கம், இங்கிலாந்தில் ராணி எலிசபெத் அரங்கம், பிரான்சில் உள்ள தியேட்டர் டி லா வில்லே போன்ற உலகெங்கிலும் உள்ள சில மதிப்புமிக்க இடங்களில் இவர் தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவரது குரு ஞான பிரகாஷ் கோஷின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சக்ரவர்த்தி சுருதினந்தன் என்ற இசைப் பள்ளியை நிறுவினார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

சக்ரவர்த்தி சந்தனா சக்ரவர்த்தி என்பவரை மணந்தார். இவர்களது மகள் கௌசிகி சக்ரவர்த்தியும் இந்துஸ்தானி இசையில் பிரபல பாடகியாக இருக்கிறார். இவர்களது மகன் அனஞ்சன் சக்ரவர்த்தி ஒரு ஒலிப் பொறியாளராக இருக்கிறார்..

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ahoy Ajoy!". 19 March 2005 இம் மூலத்தில் இருந்து 6 மே 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050506120503/http://www.hinduonnet.com/thehindu/mp/2005/03/19/stories/2005031901280300.htm. பார்த்த நாள்: 11 July 2011.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-05-06. பார்க்கப்பட்ட நாள் 2020-10-20.
  2. "Padma honours for Ajoy Chakraborty, Manilal Nag". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  3. "Arun Jaitley, Sushma Swaraj, George Fernandes given Padma Vibhushan posthumously. Here's full list of Padma award recipients". தி எகனாமிக் டைம்ஸ். 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  4. "MINISTRY OF HOME AFFAIRS" (PDF). padmaawards.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 January 2020.
  5. Sharma, Jyotirmaya (28 April 2006). "In honour of Bade Khansaheb". The Hindu இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104045003/http://www.hindu.com/fr/2006/04/28/stories/2006042801520300.htm. பார்த்த நாள்: 11 July 2011. 
  6. "Hindustani classical vocalist Pandit Ajoy Chakrabarty". SouLSteer. 2015-12-25. Archived from the original on 25 December 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-12-25.

வெளி இணைப்புகள்

[தொகு]