உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாள மாநிலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:30, 1 மார்ச்சு 2018 அன்றிருந்தவாரான திருத்தம் ("Nepal_Province_3.jpg" நீக்கம், அப்படிமத்தை Didym பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation; see Commons:Licensing -.)
நேபாள மாநிலங்கள்
வகைமாநிலம்
அமைவிடம்நேபாளம்
உருவாக்கப்பட்டது20 செப்டம்பர் 2015
எண்ணிக்கை7
அரசுஆளுநர்
முதலமைச்சர்
உட்பிரிவுகள் மாவட்டம்

நேபாள மாநிலங்கள் (Nepalese Federal States) புதிதாக வரையறுக்கப்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, கூட்டாட்சியை அடிப்படையாக் கொண்டு, நேபாளத்தின் 75 மாவட்டங்களைக் கொண்டு 20 செப்டம்பர் 2015 அன்று ஏழு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [1] [2]

நேபாள மாநில எண் 5-இல் இருந்த ஆறு வடக்கு மலை மாவட்டங்களை, மாநில எண் 4 மற்றும் மாநில எண் 6-இல் மாற்றி அமைக்கப்படுகிறது.[3]

இந்த ஏழு மாநிலங்களுக்குத் தற்போது தற்காலிகமாக ஒன்று முதல் ஏழு வரையான எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக அமைக்கப்படவிருக்கும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயரை மாநிலத்திற்கு சூட்டப்படும். அதுவரை மாநிலங்கள் எண்களால் மட்டும் அறியப்படும்.

75 நேபாள மாவட்டங்கள் இந்த ஏழு மாநிலங்களில் அடங்கியுள்ளது.

மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2017

முதன் முறையான நடைபெறும் இந்த ஏழு மாநிலங்களின் சட்டமன்றத்திற்கான தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.[4]

மாநிலம் எண் 1-இல் உள்ள மாவட்டங்கள்

மாநில எண் 1ல் உள்ள 14 மாவட்டங்களின் வரைபடம்

நேபாள மாநில எண் 1, 25,905 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 4,534,943 மக்கள் தொகையும் கொண்டது.[5]இம்மாநிலத்தில் உள்ள பதினான்கு மாவட்டங்களின் விவரம்:

1.. தாப்லேஜுங் மாவட்டம்
2. பாஞ்சதர் மாவட்டம்
3. இலாம் மாவட்டம்
4. சங்குவாசபா மாவட்டம்
5. தேஹ்ரதும் மாவட்டம்
6. தன்குட்டா மாவட்டம்
7. போஜ்பூர் மாவட்டம்
8. கோடாங் மாவட்டம்
9. சோலுகும்பு மாவட்டம்
10. ஒகல்டுங்கா மாவட்டம்
11. உதயபூர் மாவட்டம்
12. ஜாப்பா மாவட்டம்
13. மொரங் மாவட்டம்
14. சுன்சரி மாவட்டம்

மாநிலம் எண் 2-இல் உள்ள மாவட்டங்கள்

நேபாள மாநில எண் 2, 9,661 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 54,04,145 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. [6]இம்மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களின் விவரம்:

1. சப்தரி மாவட்டம்
2. சிராஹா மாவட்டம்
3. தனுஷா மாவட்டம்
4. மகோத்தரி மாவட்டம்
5. சர்லாஹி மாவட்டம்
6. ரவுதஹட் மாவட்டம்
7. பாரா மாவட்டம்
8. பர்சா மாவட்டம்

மாநிலம் எண் 3-இல் உள்ள மாவட்டங்கள்

நேபாள மாநில எண் 3, 20,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 55,29,452 மக்கள் தொகையும், பதின்மூன்று மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

1. தோலகா மாவட்டம்
2. ராமேச்சாப் மாவட்டம்
3. சிந்துலி மாவட்டம்
4. காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்
5. சிந்துபால்சோக் மாவட்டம்
6. ரசுவா மாவட்டம்
7. நுவாகோட் மாவட்டம்
8. தாதிங் மாவட்டம்
9. சித்வன் மாவட்டம்
10. மக்வான்பூர் மாவட்டம்
11. பக்தபூர் மாவட்டம்
12. லலித்பூர் மாவட்டம்
13. காத்மாண்டு மாவட்டம்

மாநிலம் எண் 4-இல் உள்ள மாவட்டங்கள்

நேபாள மாநில எண் 4, 21,514 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 24,13,907 மக்கள் தொகையும், 10 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

1. கோர்க்கா மாவட்டம்
2. லம்ஜுங் மாவட்டம்
3. டடேல்துரா மாவட்டம்
4. காஸ்கி மாவட்டம்
5. மனாங் மாவட்டம்
6. முஸ்தாங் மாவட்டம்
7. பர்பத் மாவட்டம்
8. சியாங்ஜா மாவட்டம்
9. பாகலுங் மாவட்டம்
10. நவல்பராசி மாவட்டம் (கிழக்கு பர்தாகாட் சுஸ்தா)

மாநிலம் எண் 5-இல் உள்ள மாவட்டங்கள்

நேபாள மாநில எண் 5, 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 12 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

1. நவல்பராசி மாவட்டம் (மேற்கு பர்தாகாட் சுஸ்தா)
2. ரூபந்தேஹி மாவட்டம்
3. கபிலவஸ்து மாவட்டம்
4. பால்பா மாவட்டம்
5. அர்காகாஞ்சி மாவட்டம்
6. குல்மி மாவட்டம்
7. ருக்கும் மாவட்டம்
8. டோல்பா மாவட்டம்
9. பியுட்டான் மாவட்டம்
10. தாங் மாவட்டம்
11. பாங்கே மாவட்டம்
12. பர்தியா மாவட்டம்

மாநிலம் எண் 6-இல் உள்ள மாவட்டங்கள்

படிமம்:Nepal Province 6.jpg
நேபாள மாநில எண் 6ல் உள்ள 10 மாவட்டங்களின் வரைபடம்

நேபாள மாநில எண் 6, 27,984 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 11,68,515 மக்கள் தொகையும், பத்து மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

1. ருக்கும் மாவட்டம் (மேற்கு)
2. சல்யான் மாவட்டம்
3. டோல்பா மாவட்டம்
4. சூம்லா மாவட்டம்
5. முகு மாவட்டம்
6. ஹும்லா மாவட்டம்
7. காளிகோட் மாவட்டம்
8. ஜாஜர்கோட் மாவட்டம்
9. தைலேக் மாவட்டம்
10. சுர்கேத் மாவட்டம்

மாநிலம் எண் 7-இல் உள்ள மாவட்டங்கள்

படிமம்:Nepal Province 7.jpg
நேபாள மாநில எண் 7ல் உள்ள 9 மாவட்டங்களின் வரைபடம்

நேபாள மாநில எண் 7, 19,5939 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 25,52,517 மக்கள் தொகையும், ஒன்பது மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

1. பாசூரா மாவட்டம்
2. பஜாங் மாவட்டம்
3. டோட்டி மாவட்டம்
4. அச்சாம் மாவட்டம்
5. தார்ச்சுலா மாவட்டம்
6. பைத்தடி மாவட்டம்
7. டடேல்துரா மாவட்டம்
8. கஞ்சன்பூர் மாவட்டம்
9. கைலாலீ மாவட்டம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Nepal passes new Constitution, splits country into 7 federal provinces
  2. "Nepal Provinces". statoids.com. பார்க்கப்பட்ட நாள் 2016-03-21.
  3. http://indianexpress.com/article/india/india-news-india/nepal-pm-to-split-province-5-to-woo-agitating-madhes-parties-4391278/
  4. Nepal Elections 2017
  5. http://www.statoids.com/unp.html
  6. http://www.statoids.com/unp.html

வெளி இணைப்புகள்