உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அண்ணாவின் ஆறு கதைகள்


என்று கூறலாம். கண், புத்தகத்தின் மீது நடமாடிற்று—எழுத்தல்ல தெரிந்ததுதோட்டம் — கிணற்றடி — நெல் உலர்த்தும் இடம் — பஜனை மண்டபம் — ஓட்டல் — இப்படிப் பல இடங்கள் தெரிந்தன! அவ்வளவும் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள்! அவரையும் அறியாமல், அவருக்குச் சிரிப்பு வந்தது.

“ ஏண்டி, சனியனே! என் பேரை இழுத்துவிட்டு விட்டாயோ?”

“இழுத்துவிடவேணுமா? ஐயாவுக்குத் தெரியாதா?”

“அடி பாவி! என்னடி நடந்தது?”—“ விசாரணை.”

“என்ன கேட்டார்? — “விபசாரம் நடந்ததாமே, உண்மையா? என்று கேட்டார்,”

“அவ்வளவு பச்சையாகவா கேட்டார்?”—“பச்சையாக மட்டுமா ! சுருக்கமாக, சுரீல் என்று கன்னத்திலே அறைவதுபோலக் கேட்டார் — ‘விபசாரியா ?’ என்று.”

“ நீ.....?” — “ஆமாம், என்றேன்,”

“தைரியமாக?'”— ” தைரியமாக மட்டுமில்லை ! ஏன் அனாவசியமான கேள்வியைக் கேட்கவேண்டும்? வேறே வேலை இல்லையா என்று அதட்டுகிறது போலக் கேட்டேன்.”

“எவ்வளவு தைரியமடி உனக்கு!”

“எவ்வளவு பயங்காளியாக இருந்தேன்! ‘செ! பயப்படாதே! நான் இருக்கிறேன் பயப்படாதே தலையா போய் விடும்? யாருக்குத் தெரியப்போகுது? எங்க அண்ணன் தானே, பெரியதனக்காரரு, உனக்கு ஒரு தொல்லையும்