உள்ளடக்கத்துக்குச் செல்

2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துடுப்பாட்ட உலகக்கிண்ணம் 2011
ICC Cricket World Cup 2011
நிர்வாகி(கள்)பன்னாட்டுத்
துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத்
துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறை,
வெளியேற்றம்
நடத்துனர்(கள்) இந்தியா
 இலங்கை
 வங்காளதேசம்
வாகையாளர் இந்தியா (2வது தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்14 (104 அணிகளில் இருந்து)
மொத்த போட்டிகள்49
தொடர் நாயகன்இந்தியா யுவ்ராஜ் சிங்
அதிக ஓட்டங்கள்இலங்கை திலகரத்ன டில்சான்
அதிக வீழ்த்தல்கள்பாக்கித்தான் சாகித் அஃபிரிடி (21)
இந்தியா ஜாகிர் கான் (21)
அலுவல்முறை வலைத்தளம்2011 உலகக்கிண்ணம்
2007
2015

2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. உலகக்கிண்ணத்துக்கான ஆரம்ப நிகழ்வு டாக்கா நகரில் வங்கபந்து தேசிய அரங்கத்தில் 2011 பெப்ரவரி 17 ஆம் நாள் இடம்பெற்றது. முதலாவது போட்டி 2011 பெப்ரவரி 19 இல் டாக்கா நகரில் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் வங்காளதேச அணி இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. இறுதிப் போட்டி மும்பையில் வான்கேடே அரங்கத்தில் 2011 ஏப்ரல் 2 இல் நடைபெற்றது. இந்திய அணியும் இலங்கை அணியும் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகின. இந்திய அணி இலங்கையை 6 இலக்குகள் வித்தியாசத்தில் வென்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.[1]

உலகக்கிண்ணப் போட்டிகள் அனைத்தும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தகுதியில் ஒவ்வொன்றும் 50 பந்துப் பரிமாற்றங்களுடன் நடைபெற்றன. இப்போட்டியில் 10 தேர்வுத் துடுப்பாட்ட அணிகளும், தேர்வுத் தகுதி பெறாத 4 அணிகளுமாக மொத்தம் 14 நாடுகளைச் சார்ந்த அணிகள் பங்குபற்றிய 49 போட்டிகள் நடைபெற்றன. 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை குறைவாக பங்குபற்றின. மொத்தப் போட்டிகள் 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட இரண்டு குறைவானதாகும்.

இந்த உலகக்கிண்ணப் போட்டிகளை பாக்கித்தானும் உடனாக ஏற்று நடத்துவதாக இருந்தது. 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கைத் துடுப்பாட்ட அணியினர் சுடப்பட்ட நிகழ்வை அடுத்து பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை பாக்கித்தானின் நடத்தும் உரிமைகளை இரத்து செய்தது.[2] லாகூரில் திட்டமிடப்பட்ட அமைப்புக்குழுவின் தலைமையகமும் மும்பைக்கு மாற்றப்பட்டது.[3] பாக்கித்தான் 14 ஆட்டங்களை, ஓர் அரையிறுதி உட்பட, நடத்துவதாக இருந்தது.[4] அவற்றில் எட்டு இந்தியாவிற்கும் நான்கு இலங்கைக்கும் இரண்டு வங்காள தேசத்திற்கும் பிரித்துத் தரப்பட்டன..[5]

போட்டித்தொடர் வகை

[தொகு]

இந்தப் போட்டியில் 14 அணிகள் ஒவ்வொரு குழுவிலும் ஏழு அணிகள் வீதமாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.

  • காலிறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்: டாக்கா, அகமதாபாத், கொழும்பு
  • அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்: மொகாலி, கொழும்பு
  • இறுதிப் போட்டி நடைபெறும் இடம்: மும்பை

தகுதி

[தொகு]

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் கொள்கைக்கேற்ப முழு அங்கத்துவ நாடுகள் பத்தும், தென்னாபிரிக்காவில் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அயர்லாந்து, கனடா, நெதர்லாந்து மற்று கென்யாவும் இவ்வுலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றன.

தகுதி பெற்ற அணிகள்

[தொகு]

ஆபி.து.ச (3)
அ.து.ச (2)

ஆசி.து.அ (4)

ப.து.அ கிழக்காசியா - பசிபிக் (2)
ஐ.து.அ (3)

போட்டி நடத்தும் நாடுகள் தெரிவு

[தொகு]

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் கொள்கைக்கேற்ப இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுவது இது மூன்றாவது தடவையாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தானில் நடைபெறவிருந்த போட்டிகள், போட்டிகளை நடத்தும் மற்றைய நாடுகளுக்கு மாற்றப்பட்டன.

இடங்கள்

[தொகு]

மொத்தம் பதின்மூன்று இடங்கள் உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.

கொல்கத்தா கொழும்பு புது டில்லி கண்டி அகமதாபாத்
ஈடன் கார்டன்ஸ்
கொள்ளளவு: 82,000
(மேம்படுத்தப்படுகிறது)
ஆர். பிரேமதாச அரங்கம்
கொள்ளளவு: 35,000
பெரோசா கோட்லா
கொள்ளளவு: 48,000
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 35,000
(புதிய அரங்கம்)
சர்தார் பட்டேல் அரங்கம்
கொள்ளளவு: 50,000
சிட்டகொங் சென்னை டாக்கா
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம்
கொள்ளளவு: 20,000
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 46,000
(மேம்படுத்தப்படுகிறது)
ஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 35,000
மும்பை அம்பாந்தோட்டை மொகாலி நாக்பூர் பெங்களூரு
வான்கேடே அரங்கம்
திட்டமிட்டுள்ள கொள்ளளவு: 45,000
(மேம்படுத்தப்படுகிறது)
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 33,000
(புதிய அரங்கம்)
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம்
கொள்ளளவு: 35,000
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம்
கொள்ளளவு: 45,000
எம். சின்னசுவாமி அரங்கம்
கொள்ளளவு: 42,000
வங்காளதேச நிகழிடங்கள்

நடுவர்கள்

[தொகு]

ப. து. அ. வின் நடுவர்களைத் தெரிவு செய்யும் குழு 18 நடுவர்களைப் போட்டிகளில் பணியாற்றத் தெரிவு செய்துள்ளது. இவர்களை விட மேலதிக நடுவராக இனாமுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆத்திரேலியா
நியூசிலாந்து
தென்னாபிரிக்கா
பாக்கிஸ்தான்

இந்தியா
இங்கிலாந்து
இலங்கை
மேற்கிந்தியத் தீவுகள்

பரிசுத்தொகை

[தொகு]

2011 உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி 3 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பரிசாகப் பெறும். இப்போட்டித் தொடருக்கான மொத்தப் பரிசுத்தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை ப. து. அ ஒதுக்கியுள்ளது.

குறியீடுகள்

[தொகு]

நற்பேறு சின்னம்

[தொகு]
2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கான இசுடம்பி எனப்படும் நற்பேறு சின்னம்

2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கான அலுவல்முறை நற்பேறுச் சின்னமாக இசுடம்பி[6] தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2 ஏப்ரல், 2010 அன்று இலங்கை, கொழும்பில் ஓர் விழாவில் இச்சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இளமையுடனும் உற்சாகத்துடனும் மன உறுதியுடனும் இருக்கும் ஓர் பத்து அகவையுள்ள ஆண் களிறாக உருவகப்படுத்தப்பட்டுள்ளான். இதற்கு பெயர் சூட்ட உலகளவில் துடுப்பாட்ட ஆர்வலர்களிடையே ஓர் போட்டி நடத்தப்பட்டது.[7] இதன் முடிவில் ஆகத்து 2, 2010 அன்று இசுடம்பி என்ற பெயர் அலுவல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[8]

அலுவல்முறை பாடல்

[தொகு]

2011 உலகக்கிண்ணத்திற்கான அலுவல்முறை பாடலாக மூவர்குழு சங்கர்-இசான்-லோய் இசையமைத்த தே கும்மா கே என்ற பாடல் தேர்வாகியுள்ளது. சங்கர் மகாதேவனும் திவ்யா குமாரும் மூன்று மொழிகளில், (இந்தி, வங்காளம் மற்றும் சிங்களம்) பாடியுள்ள இந்தப் பாடலை ஓக்விலியும் மாதரும் நிறுவனம் சந்தைப்படுத்துகிறது.[9] 17,பிப்ரவரி,2011 அன்று வங்காளதேசத்தில் நடக்கவிருக்கும் போட்டித் துவக்கவிழாவில் இந்தப் பாடல் அரங்கேற்றப்படும்.[10]

ஊடகங்கள்

[தொகு]

துடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான ஊடகங்களின் கவனம் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வந்துள்ளது. 2011 உலகக்கிண்ண அலைபரப்பு உரிமையை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ESPN Starsports நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. 2011 உலகக்கிண்ணம் 220க்கு அதிமான நாடுகளில் அலைபரப்பப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அணிகள்

[தொகு]

ஒவ்வொரு நாடும் தங்கள் இறுதி அணிகளைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் 30 பேர் கொண்ட முன்னணியைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து 15 பேரை வடிகட்டின. அனைத்து 14 அணிகளும் தங்கள் முன்னணி பட்டியலை 19 திசம்பர் 2010க்குள்ளும் இறுதி அணி ஆட்டக்காரர்களின் பெயர்களை 19 சனவரி 2011க்கு முன்பாகவும் அறிவிக்க வேண்டும்.[11]

இலங்கை திசம்பர் 13 அன்றே தங்கள் முன்னணியை அறிவித்து முதல் நாடாக விளங்கியது.[12]

அயர்லாந்து தங்கள் முன்னணியில் 22 பேரே கொண்டிருந்தது.[13]

போட்டிகள்

[தொகு]

நேரங்கள் அனைத்தும் இந்திய சீர் நேரம் (UTC+05:30), இலங்கை சீர் நேரம் (UTC+05:30), வங்காளதேச சீர் நேரம் (UTC+06:00) ஆகியவற்றில் தரப்பட்டுள்ளது.

சுற்று ஆட்டம்

[தொகு]

கீழேயுள்ள பட்டியலில்:[14]

  • வி = ஆடிய மொத்த ஆட்டங்கள்
  • வெ = வென்ற ஆட்டங்கள்
  • = வெற்றி தோல்வி இல்லை
  • தோ = தோற்ற ஆட்டங்கள்
  • முஇ = முடிவு அற்ற ஆட்டங்கள்
  • நிஓவி = நிகர ஓட்ட விகிதம்
  • புள்ளி = மொத்தப் புள்ளிகள்

ஒவ்வொரு பிரிவிலும் ஆகக்கூடிய புள்ளிகள் பெற்ற நான்கு அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாயின. (பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளன).

பிரிவு அட்டவணைகளில் வண்ணங்களுக்கான விளக்கம்
முதல் 4 அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.
வெளியேற்றப்பட்ட அணிகள்

ஏ பிரிவு

[தொகு]
அணி வி வெ தோ முஇ நிஓவி புள்ளிகள்
 பாக்கித்தான் 6 5 1 0 0 +0.758 10
 இலங்கை 6 4 1 0 1 +2.582 9
 ஆத்திரேலியா 6 4 1 0 1 +1.123 9
 நியூசிலாந்து 6 4 2 0 0 +1.135 8
 சிம்பாப்வே 6 2 4 0 0 +0.030 4
 கனடா 6 1 5 0 0 −1.987 2
 கென்யா 6 0 6 0 0 −3.042 0
20 பெப்ரவரி 2011
09:30
ஆட்ட விபரம்
கென்யா 
69 (23.5 பந்துப் பரிமாற்றங்கள்)
 நியூசிலாந்து
72/0 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
ராகெப் பட்டேல் 16* (23)
ஹமிஷ் பெனெட் 4/16 (5 பந்துப் பரிமாற்றங்கள்)
மார்ட்டின் கப்டில் 39* (32)
 நியூசிலாந்து 10 இலக்குகளால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ், ரொட் டக்கர்
ஆட்ட நாயகன்: ஹமிஷ் பெனெட்
20 பெப்ரவரி 2011
14:30 (ப/இ)
விக்கிசெய்தியில்
இலங்கை 
332/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 கனடா
122 (36.5 பந்துப் பரிமாற்றங்கள்)
மகெல ஜயவர்தன 100 (81)
ஜோன் டேவிசன் 2/56 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
ரிசுவான் சீமா 37 (35)
நுவன் குலசேகர 3/16 (6 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி பெற்று துடுப்பாட ஆரம்பித்தது.
21 பெப்ரவரி 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
262/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 சிம்பாப்வே
171 (46.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷேன் வாட்சன் 79 (92)
கிறிஸ் ம்போஃபு 2/58 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
கிரயெம் கிரேமர் 37 (51)
மிச்செல் ஜோன்சன் 4/19 (9.2 பந்துப் பரிமாற்றங்கள்)
  • ஆத்திரேலியா நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
23 பெப்ரவரி 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
317/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 கென்யா
112 (33.1 பந்துப் பரிமாற்றங்கள்)
உமர் அக்மல் 71 (52)
தொமஸ் ஒடோயோ 3/41 (7 பந்துப் பரிமாற்றங்கள்)
கொலின்ஸ் ஒபுயா 47 (58)
சாகித் அஃபிரிடி 5/16 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
  • பாக்கித்தான் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
25 பெப்ரவரி 2011
09:30
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
206 (45.1 பந்துப் பரிமாற்றங்கள்)
 ஆத்திரேலியா
207/3 (34.0 மந்துப் பரிமாற்றங்கள்)
நேத்தன் மெக்கலம் 52 (76)
மிச்செல் ஜோன்சன் 4/33 (9.1 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷேன் வாட்சன் (61)
ஹாமிஷ் பென்னட் 2/63 (7 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா களத்தடுப்பு எடுத்தது.
26 பெப்ரவரி 2011
14:30 (ப/இ)
விக்கிசெய்தியில்
பாக்கித்தான் 
277/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 இலங்கை
266/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
மிஸ்பா-உல்-ஹக் 83* (91)
ரங்கன ஹேரத் 2/46 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
சாமர சில்வா 57 (78)
சாகித் அஃபிரிடி 4/34 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
 பாக்கித்தான் 11 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), டரில் ஹார்ப்பர் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: சாகித் அஃபிரிடி (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடியது.
28 பெப்ரவரி, 2011
09:30 (ப/இ)
ஆட்டவிபரம்
சிம்பாப்வே 
298/9 ( 50 பந்துப் பரிமாற்றங்கள்)
 கனடா
123 ( 42.1 பந்துப் பரிமாற்றங்கள்)
டாடென்டா தையிபு 98 (99)
பாலாஜி ராவ் 4/57 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
சுபின் சுர்காரி 26 (48)
ரே பிரைஸ் 3/16 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
சிம்பாப்வே 175 ஓட்டங்களில் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்கித்தான்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆத்திரேலியா)
ஆட்ட நாயகன்: டாடென்டா தையிபு (சிம்பாப்வே)
  • நாணயச் சுழற்சியில் வென்ற சிம்பாப்வே துடுப்பாடத் தீர்மானித்தது.
1 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
146/1 (18.4 பந்துப் பரிமாற்றங்கள்)
 கென்யா
142 (43.4 பந்துப் பரிமாற்றங்கள்)
 இலங்கை 9 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: டோனி ஹில் (நியூ), சவீர் தாராபூர் (இந்)
ஆட்ட நாயகன்: லசித் மாலிங்க
  • நாணயசுழற்சியில் கென்யா வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
3 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
184 (43 பந்துப் பரிமாற்றங்கள்)
 கனடா
138 (42.5 பந்துப் பரிமாற்றங்கள்)
உமர் அக்மல் 48 (68)
அர்வீர் பைத்வான் 3/35 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜிம்மி ஹன்ஸ்ரா 43 (75)
சாகித் அஃபிரிடி 5/23 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
 பாக்கித்தான் 46 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் (ஆசி), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: சாகித் அஃபிரிடி (பாக்)
  • நாணயச் சுழற்சியில் பாக்கித்தான் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
4 மார்ச் 2011
09:30 (ப/இ)
ஆட்டவிபரம்
 சிம்பாப்வே
162 (46.2 பந்துப் பரிமாற்றங்கள்)
நியூசிலாந்து 
166/0 (33.3 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரென்டன் டைய்லர் 44 (57)
டிம் சௌத்தி 3/29 (9.2 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச் சுழற்சியில் சிம்பாப்வே வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
5 மார்ச் 2011
14:30 (ப/இ)
விக்கிசெய்தியில்
இலங்கை 
146/3 (32.5 பந்துப் பரிமாற்றங்கள்)
குமார் சங்கக்கார 73* (102)
சோன் டைட் 1/23 (5 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆட்டம் நிறுத்தப்பட்டது
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), டோனி ஹில் (நியூசி)
  • நாணயச் சுழற்சியில் இலங்கை வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மாலை 5:30 உள்ளூர் நேரத்திற்கு மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
7 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
கென்யா 
198 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 கனடா
199/5 (45.3 பந்துப் பரிமாற்றங்கள்)
தோமஸ் ஒடோயோ 51 (62)
ஹென்ரி ஓசின்டே 4/26 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
அமாபீர் ஹன்ஸ்ரா 70 (99)
நெகெமியா ஒகியம்போ 2/45 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
 கனடா 5 இலக்குகளில் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்), பில்லி டொக்ட்ரோவ் (மே.இ)
ஆட்ட நாயகன்: ஹென்ரி ஓசின்டே (கனடா)
  • நாணயச் சுழற்சியில் கென்யா வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
8 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
302/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 பாக்கித்தான்
192 (41.1 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஸ் டைலர் 131* (124)
உமர் குல் 3/32 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
அப்துல் ரசாக் 62 (74)
டிம் சௌத்தி 3/25 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயசுழற்சியில் நியூசிலாந்து வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
10 மார்ச் 2011
14:30 (ப/இ)
விக்கிசெய்தியில்
இலங்கை 
327/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 சிம்பாப்வே
188 (39 பந்துப் பரிமாற்றங்கள்)
திலகரத்ன டில்ஷான் 144 (131)
கிரிஸ்டோபர் மபோபூ 4/62 (7 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரென்டன் டைய்லர் 80 (72)
திலகரத்ன டில்ஷான் 4/4 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச்சுழற்சியில் சிம்பாப்வே வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
13 மார்ச் 2011
09:30 (ப/இ)
ஆட்டவிவரம்
நியூசிலாந்து 
358/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 கனடா
261/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரண்டன் மெக்கல்லம் 101 (109)
அர்வீர் பைத்வான் 3/84 (9.1 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆசீஷ் பாகாய் 84 (87)
ஜேகப் ஓரம் 3/47 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
 நியூசிலாந்து 97 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி), சவீர் தாராபூர் (இந்)
ஆட்ட நாயகன்: பிரண்டன் மெக்கல்லம் (நியூசி)
  • நாணயச்சுழற்சியில் கனடா வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
13 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
324/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 கென்யா
264/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
14 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
சிம்பாப்வே 
151/7 (39.4 பந்துப் பரிமாற்றங்கள்)
 பாக்கித்தான்
164/3 (34.1 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச்சுழற்சியில் சிம்பாப்வே வெற்றி பெற்று துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக, பாக்கித்தானின் வெற்றி இலக்கு 38 பந்துப் பரிமாற்றங்களுக்கு 162 ஆகக் கொடுக்கப்பட்டது.
16 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
கனடா 
211 (45.4 பந்துப் பரிமாற்றங்கள்)
 ஆத்திரேலியா
212/3 (34.5 பந்துப் பரிமாற்றங்கள்)
ஹிரால் பட்டேல் 54 (45)
பிறெட் லீ 4/46 (8.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷேன் வாட்சன் 94 (90)
ஜான் டேவிசன் 1/29 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
 ஆத்திரேலியா 7 இலக்குகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), அமீஷ் சாஹிபா (இந்)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வென்ற கனடா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
18 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
265/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 நியூசிலாந்து
153 (35 பந்துப் பரிமாற்றங்கள்)
குமார் சங்கக்கார 111 (128)
டிம் சௌத்தி 3/63 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஸ் டைலர் 33 (55)
முத்தையா முரளிதரன் 4/25 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது
19 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
176 (46.4 பந்துப் பரிமாற்றங்கள்)
 பாக்கித்தான்
178/6 (41 பந்துப் பரிமாற்றங்கள்)
பிராட் ஹாடின் 42 (80)
உமர் குல் 3/30 (7.4 பந்துப் பரிமாற்றங்கள்)
அசாத் சஃபீக் 46 (81)
பிறெட் லீ 4/28 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
 பாக்கித்தான் 4 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: மராயசு எராசுமசு (தெஆ), டோனி ஹில் (நியூ)
ஆட்ட நாயகன்: உமர் அக்மல் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது
20 மார்ச் 2011
09:30
ஆட்டவிபரம்
சிம்பாப்வே 
308/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 கென்யா
147 (36 பந்துப் பரிமாற்றங்கள்)
கிரைக் எர்வின் 66 (54)
எலிஜா ஒட்டினோ 2/61 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
நெகெமியா ஒடியம்போ 44* (67)
ரே பிரைஸ் 2/20 (7 பந்துப் பரிமாற்றங்கள்)
 சிம்பாப்வே 161 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: அசோக டீ சில்வா (இல)ம் குமார் தர்மசேன (இல)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது


பி பிரிவு

[தொகு]
அணி வி வெ தோ முஇ நிஓவி புள்ளிகள்
 தென்னாப்பிரிக்கா 6 5 1 0 0 +2.026 10
 இந்தியா 6 4 1 1 0 +0.900 9
 இங்கிலாந்து 6 3 2 1 0 +0.072 7
 மேற்கிந்தியத் தீவுகள் 6 3 3 0 0 +1.066 6
 வங்காளதேசம் 6 3 3 0 0 –1.361 6
 அயர்லாந்து 6 2 4 0 0 –0.696 4
 நெதர்லாந்து 6 0 6 0 0 –2.045 0
19 பெப்ரவரி 2011
14:30 (ப/இ)
விக்கிசெய்தியில்
இந்தியா 
370/4 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 வங்காளதேசம்
283/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
வீரேந்தர் சேவாக் 175 (140)
சகீப் அல் அசன் 1/61 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
தமீம் இக்பால் 70 (86)
முனாஃப் பட்டேல் 4/48 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற வங்காளதேசம் இந்தியாவை முதலில் துடுப்பாட அழைத்தது.
22 பெப்ரவரி, 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
292/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 இங்கிலாந்து
296/4 (48.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயன் டென் டோச்சேட் 119 (110)
கிரயெம் சுவான் 2/35 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆண்ட்ரூ ஸ்ட்ரவுஸ் 88 (83)
ராயன் டென் டோச்சேட் 2/47 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
 இங்கிலாந்து 6 இலக்குகளால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆத்)
ஆட்ட நாயகன்: ராயன் டென் டோச்சேட் (நெதர்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற நெதர்லாந்து துடுப்பாடத் தீர்மானித்தது.
24 பெப்ரவரி, 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
 மேற்கிந்தியத் தீவுகள்
222 (47.3 பந்துப் பரிமாற்றங்கள்)
தென்னாப்பிரிக்கா 
223/3 (42.5 பந்துப் பரிமாற்றங்கள்)
டாரென் பிராவோ 73 (82)
இம்ரான் டாகிர் 4/41 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
ஏபி டெவில்லியர்சு 107 (105)
கிரோன் பொல்லார்ட் 1/37 (7.5 பந்துப் பரிமாற்றங்கள்)
தென்னாப்பிரிக்கா  7 இலக்குகளால் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: அமீஷ் சாஹிபா (இந்தியா), சைமன் டோபல் (ஆத்)
ஆட்ட நாயகன்: ஏபி டெவில்லியர்சு (தென்னாபிரிக்கா)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பு எடுத்தது.
25 பெப்ரவரி, 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
205 (49.2 பந்துப் பரிமாற்றங்கள்)
 அயர்லாந்து
178 (45 பந்துப் பரிமாற்றங்கள்)
தமீம் இக்பால் 44 (43)
அந்திரே போத்தா 3/32 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
நியால் ஓ’பிறையன் 38 (52)
சய்புல் இசுலாம் 4/21 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
 வங்காளதேசம் 27 ஓட்டங்களால் வெற்றி
ஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரொட் டக்கர் (ஆத்)
ஆட்ட நாயகன்: தமீம் இக்பால் (வங்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற வங்காளதேசம் துடுப்பாடத் தீர்மானித்தது.
27 பெப்ரவரி, 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
338 (49.5 பந்துப் பரிமாற்றங்கள்)
 இங்கிலாந்து
338/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
சச்சின் டெண்டுல்கர் 120 (115)
டிம் பிரெசுனன் 5/48 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
அன்ட்ரூ ஸ்ட்ராஸ் 158 (145)
சாகீர் கான் 3/64 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
'ஆட்டம் சமநிலை'
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூசிலாந்து), மராயஸ் எராஸ்மஸ் (தென்னாபிரிக்கா)
ஆட்ட நாயகன்: அன்ட்ரூ ஸ்ட்ராஸ் (இங்கிலாந்து)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா துடுப்பாடத் தீர்மானித்தது.
28 பெப்ரவரி, 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
 மேற்கிந்தியத் தீவுகள்
330/8 ( 50 பந்துப் பரிமாற்றங்கள்)
நெதர்லாந்து 
115 ( 31.3 பந்துப் பரிமாற்றங்கள்)
கிரிஸ் கெய்ல் 80 (110)
பீடர் சீலார் 3/45 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
டாம் கூப்பர் 55(72)
கேமர் ரோச் 6/27 (8.3 பந்துப் பரிமாற்றங்கள்)
மேற்கிந்தியத் தீவுகள் 215 ஓட்டங்களில் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: அமீஷ் சாஹிபா (இந்தியா), சைமன் டோபல் (ஆத்தி)
ஆட்ட நாயகன்: கேமர் ரோச் (மேற்கிந்தியத் தீவுகள்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற நெதர்லாந்து முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
2 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
327/8 ( 50 பந்துப் பரிமாற்றங்கள்)
 அயர்லாந்து
329/7 ( 49.1 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜொனாதன் ட்ரொட் 92 (92)
ஜான் மூனி 4/63 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
கெவின் ஓ'பிரியன் 113 (63)
கிரீம் ஸ்வான் 3/47 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
அயர்லாந்து மூன்று இலக்குகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), பில்லி பௌடன் (நீயூசி)
ஆட்ட நாயகன்: கெவின் ஓ'பிரியன் (அயர்லாந்து)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தேர்ந்தெடுத்தது.
3 மார்ச், 2011
09:30
தென்னாப்பிரிக்கா 
351/5 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 நெதர்லாந்து
120 (14.5 பந்துப் பரிமாற்றங்கள்)
ஏ பி டி வில்லியர்ஸ் 134 (98)
ரயான் டென் டோசேட் 3/72 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயசுழற்சியில் நெதர்லாந்து வென்று முதலில் களத்தடுப்பு எடுத்தது.
4 மார்ச், 2011
14:30 (ப/இ)
ஆட்டவிவரம்
வங்காளதேசம் 
58 (18.5 பந்துப் பரிமாற்றங்கள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
59/1 (12.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜுனைத் சித்திக் 25 (27)
சுலைமான் பென் 4/18 (5.5 பந்துப் பரிமாற்றங்கள்)
கிரிஸ் கெய்ல் 37* (36)
நயீம் இசுலாம் 1/14 (6 பந்து பரிமாற்றங்கள்)
 மேற்கிந்தியத் தீவுகள் 9 இலக்குகளில் வெற்றி
ஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆத்தி), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: கேமர் ரோச் (மேற்கிந்தியத்தீவுகள்)
  • நாணயசுழற்சியில் வங்காளதேசம் வென்று முதலில் துடுப்பாட தேர்ந்தெடுத்தது.
6 மார்ச், 2011
09:30
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
171 (45.4 பந்துப் பரிமாற்றங்கள்)
 தென்னாப்பிரிக்கா
165 (47.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ரவி போபாரா 60 (98)
இம்ரான் தாஹிர் 4/38 (8.4 பந்துப் பரிமாற்றங்கள்)
அசீம் ஆம்லா 42 (51)
ஸ்டூவர்ட் பிரோட் 4/15 (6.4 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச்சுழற்சியில் இங்கிலாந்து வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
6 மார்ச், 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
அயர்லாந்து 
207 (47.5 பந்துப் பரிமாற்றங்கள்)
 இந்தியா
210/5 (46 பந்துப் பரிமாற்றங்கள்)
வில்லியம் போர்ட்டர்பீல்ட் 75 (104)
யுவ்ராஜ் சிங் 5/31 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
யுவ்ராஜ் சிங் 50 (75)
டிரென்ட் ஜான்ஸ்டன் 2/16 (5 பந்துப் பரிமாற்றங்கள்)
 இந்தியா 5 இலக்குகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: பில்லி பௌடன், ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: யுவ்ராஜ் சிங் (இந்)
  • நாணயச்சுழற்சியில் இந்தியா வென்று முதலில் களத்தடுப்பெடுத்தது.
9 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
189 (46.4 பந்துப் பரிமாற்றங்கள்)
 இந்தியா
191/5 (36.3 பந்துப் பரிமாற்றங்கள்)
பீட்டர் போரென் 38 (36)
ஜாகிர் கான் 3/20 (6.4 பந்துப் பரிமாற்றங்கள்)
யுவ்ராஜ் சிங் 51* (73)
பீட்டர் சீலார் 3/53 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச்சுழற்சியில் நெத்ர்லாந்து வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
11 மார்ச் 2011
09:30
ஆட்டவிபரம்
மேற்கிந்தியத் தீவுகள் 
275 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 அயர்லாந்து
231 (49 பந்துப் பரிமாற்றங்கள்)
டெவன் சிமித் 107 (133)
கெவின் ஓ'பிறையன் 4/71 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
எட் ஜோய்ஸ் 84 (106)
சுலைமான் பென் 4/53 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச்சுழற்சியில் அயர்லாந்து அணி வென்று முதலில் களத்தடுப்பாடியது.
11 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
225 (49.4 பந்துப் பரிமாற்றங்கள்)
 வங்காளதேசம்
227/8 (49 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜொனத்தன் ட்ரொட் 67 (99)
நயீம் இசுலாம் 2/29 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
இம்ருல் கயாஸ் 60 (100)
அஜ்மல் ஷசாத் 3/43 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச்சுழற்சியில் வங்காளதேசம் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
12 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
296 (48.4 பந்துப் பரிமாற்றங்கள்)
 தென்னாப்பிரிக்கா
300/7 (49.4 பந்துப் பரிமாற்றங்கள்)
சச்சின் டெண்டுல்கர் 111 (101)
டேல் ஸ்டெய்ன் 5/50 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜாக் காலிஸ் 69 (88)
ஹர்பஜன் சிங் 3/53 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச்சுழற்சியில் இந்தியா வென்று முடலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
14 மார்ச் 2011
09:30
ஆட்டவிபரம்
 நெதர்லாந்து
160 (46.2 பந்துப் பரிமாற்றங்கள்)
வங்காளதேசம் 
166/4 (41.2 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச்சுழற்சியில் நெதர்லாந்து வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
15 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
272/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 அயர்லாந்து
141 (33.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜே பி டுமினி 99 (103)
ஜான் மூனி 1/36 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
கேரி வில்சன் 31 (48)
ரொபின் பீட்டர்சன் 3/32 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
 தென்னாப்பிரிக்கா 131 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), பில்லி டொக்ட்ரோவ் (மேற்)
ஆட்ட நாயகன்: ஜே பி டுமினி (தென்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பு எடுத்தது.
  • இந்த வெற்றியை அடுத்து காலிறுதிக்கு பி பிரிவில் இருந்து முன்னேறும் முதலாவது அணியாக தென்னாப்பிரிக்கா தெரிவானது.
17 மார்ச் 2011
14:30 (ப/இ)
[2]
இங்கிலாந்து 
248/10 (48.4 பந்துப் பரிமாற்றங்கள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
225/10 (44.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜானதன் டிராட் 47 (38)
ஏட்ரியன் ரசல் 4/49 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
ஏட்ரியன் ரசல் 49 (46)
ஜேம்சு டிரெட்வெல் 4/48 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
 இங்கிலாந்து 18 ஓட்டங்களால் வெற்றி
எம்.ஏ.சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), புரூசு ஆக்சென்போர்டு (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜேம்சு டிரெட்வெல் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பு எடுத்தது.
18 மார்ச் 2011
09:30
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
306 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 அயர்லாந்து
307/4 (47.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ரயான் டென் டோசேட் 106 (108)
பால் ஸ்டிர்லிங் 2/51 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
பால் ஸ்டிர்லிங் 101 (72)
டாம் கூப்பர் 2/31 (7 பந்துப் பரிமாற்றங்கள்)
 அயர்லாந்து 6 இலக்குகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் (மேற்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: பால் ஸ்டிர்லிங் (அயர்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பு எடுத்தது.
19 மார்ச் 2011
09:30
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
284/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 வங்காளதேசம்
78 (28 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜாக் காலிஸ் 69 (76)
ருபெல் உசைன் 3/56 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
சகீப் அல் அசன் 30 (63)
ரொபின் பீட்டர்சன் 4/12 (7 பந்துப் பரிமாற்றங்கள்)
  • நாணயச்சுழற்சியில் தென்னாப்பிரிக்கா வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
20 மார்ச் 2011
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
268 (49.1 பந்துப் பரிமாற்றங்கள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
188 (43 பந்துப் பரிமாற்றங்கள்)
யுவ்ராஜ் சிங் 113 (123)
ரவி ராம்பால் 5/51 (10 பந்ஹுப் பரிமாற்றங்கள்)
டெவோன் ஸ்மித் 81 (97)
ஜாகிர் கான் 3/26 (6 பந்துப் பரிமாற்றங்கள்)
 இந்தியா 80 ஓட்டங்களால் வெற்றி
எம்.ஏ.சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), சைமன் டோபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: யுவ்ராஜ் சிங் (இந்த்)
  • நாணயச்சுழற்சியில் இந்தியா வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது

வெளியேறும் நிலை

[தொகு]
காலிறுதி அரையிறுதி இறுதிப்போட்டி
                   
23 மார்ச் - இந்தியா கொல்கத்தா        
  பாக்கித்தான்  113/0
30 மார்ச் - இந்தியா மொகாலி
  மேற்கிந்தியத் தீவுகள்  112  
  பாக்கித்தான்  231
24 மார்ச் - இந்தியா அகமதாபாத்
      இந்தியா  260/9  
  ஆத்திரேலியா  260/6
2 ஏப்ரல் - இந்தியா மும்பை
  இந்தியா  261/5  
  இந்தியா  277/4
25 மார்ச் - இந்தியா கொல்கத்தா    
    இலங்கை  274/6
  நியூசிலாந்து  221/8
29 மார்ச் - இலங்கை கொழும்பு
  தென்னாப்பிரிக்கா  172  
  நியூசிலாந்து  217
26 மார்ச் - இலங்கை கொழும்பு
      இலங்கை  220/5  
  இலங்கை  231/0
  இங்கிலாந்து  229/6  
 


காலிறுதி

[தொகு]
23 மார்ச் 2011
14:30 (ப/இ)
விக்கிசெய்தியில்
மேற்கிந்தியத் தீவுகள் 
112 (43.3 பந்துப் பரிமாற்றங்கள்)
 பாக்கித்தான்
113/0 (20.5 பந்துப் பரிமாற்றங்கள்)
சிவ்நாராயின் சந்தர்பால் 44* (106)
சாகித் அஃபிரிடி 4/30 (9.3 பந்துப் பரிமாற்றங்கள்)
 பாக்கித்தான் 10 இலக்குகளால் வெற்றி
ஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), ஸ்டீவ் டேவிஸ் (ஆசி)
ஆட்ட நாயகன்: மொகமது ஹஃபீஸ் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
24 மார்ச் 2011
14:30 (ப/இ)
விக்கிசெய்தியில்
 ஆத்திரேலியா
260/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 இந்தியா
261/5 (47.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ரிக்கி பாண்டிங் 104 (118)
யுவராஜ் சிங் 2/44 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
யுவராஜ் சிங் 57* (65)
டேவிட் ஹசி 1/19 (5 பந்துப் பரிமாற்றங்கள்)
 இந்தியா 5 இலக்குகளால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ் (தெஆ), இயன் கோல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: யுவராஜ் சிங் (இந்தியா)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
25 மார்ச் 2011
14:30 (ப/இ)
விக்கிசெய்தியில்
 நியூசிலாந்து
221/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
தென்னாப்பிரிக்கா 
172 (43.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜெசி ரைடர் 83 (121)
மோர்னி மோர்க்கல் 3/46 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜாக் காலிஸ் 47 (75)
ஜேகப் ஓரம் 4/39 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
 நியூசிலாந்து 49 ஓட்டங்களால் வெற்றி
ஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜேகப் ஓரம் (நியூசி)
  • நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • நியூசிலாந்து ஆறாம் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெறுகிறது.
26 மார்ச் 2011
14:30 (ப/இ)
விக்கிசெய்தியில்
இங்கிலாந்து 
229/6 (50 பந்துப் பர்மாற்றங்கள்)
 இலங்கை
231/0 (39.3 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜொனாதன் ட்ரொட் 86 (115)
முத்தையா முரளிதரன் 2/54 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
 இலங்கை 10 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் (மேற்), சைமன் டோபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான் (SL)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

அரையிறுதி

[தொகு]
29 மார்ச் 2011
14:30 (ப/இ)
விக்கிசெய்தியில்
நியூசிலாந்து 
217 (48.5 பந்துப் பரிமாற்றங்கள்)
 இலங்கை
220/5 (47.5 பந்துப் பரிமாற்றங்கள்)
ஸ்காட் ஸ்டைரிஸ் 57 (77)
அஜந்த மென்டிஸ் 3/35 (9.5 பந்துப் பரிமாற்றங்கள்)
திலகரத்ன டில்சான் 73 (93)
டிம் சௌத்தி 3/57 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
 இலங்கை ஐந்து இலக்குகளில் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஸ்டீவ் டேவிஸ் (ஆசி)
ஆட்ட நாயகன்: குமார் சங்கக்கார (இலங்கை)
  • நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட ஆரம்பித்தது.
30 மார்ச் 2011
14:30 (ப/இ)
விக்கிசெய்தியில்
இந்தியா 
260/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 பாக்கித்தான்
231 (49.5 பந்துப் பரிமாற்றங்கள்)
சச்சின் டெண்டுல்கர் 85 (115)
வகாப் ரியாஸ் 5/46 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
மிஸ்பா-உல்-ஹக் 56 (76)
ஆசீஷ் நேரா 2/33 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
 இந்தியா 29 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்),சைமன் டோபல் (ஆத்தி)
ஆட்ட நாயகன்: சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட ஆரம்பித்தது.

இறுதிப்போட்டி

[தொகு]
2 ஏப்ரல் 2011
14:30 (ப/இ)
விக்கிசெய்தியில்
இலங்கை 
274/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
 இந்தியா
277/4 (48.2 பந்துப் பரிமாற்றங்கள்)
மகெல ஜயவர்தன 103* (88)
யுவ்ராஜ் சிங் 2/49 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
கவுதம் கம்பீர் 97 (122)
லசித் மாலிங்க 2/42 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
 இந்தியா 6 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: சைமன் டோபல் (ஆசி), அலீம் தர் (பாக்)
ஆட்ட நாயகன்: எம்.எஸ். தோனி
  • நாணயச்சுழற்சியில் இலங்கை வென்று முதலில் துடுப்பாடியது.

புள்ளிவிபரம்

[தொகு]

அதிக ஓட்டங்களை எடுத்தோர்
ஓடங்கள் வீரர் அணி ஆட்டங்கள்
500 திலகரத்ன டில்சான்  இலங்கை 9
482 சச்சின் டெண்டுல்கர்  இந்தியா 9
465 குமார் சங்கக்கார  இலங்கை 9
422 ஜொனாதன் ட்ரொட்  இங்கிலாந்து 7
395 உபுல் தரங்க  இலங்கை 9

அதிக இலக்குகளைக் கைப்பற்றியோர்
இலக்குகள் வீரர் அணி ஆட்டங்கள்
21 சாகித் அஃபிரிடி  பாக்கித்தான் 8
21 ஜாகிர் கான்  இந்தியா 9
18 டிம் சௌத்தி  நியூசிலாந்து 8
15 ரொபின் பீட்டர்சன்  தென்னாப்பிரிக்கா 7
15 முத்தையா முரளிதரன்  இலங்கை 8

நிகழ்வுகள்

[தொகு]
  • மார்ச் 8 ஆம் நாளன்று, இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான போட்டிக்கு நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக நாக்பூர், விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கத்தின் வெளியே குழுமி நின்ற துடுப்பாட்ட ரசிகர்களைக் கலைப்பதற்காக காவல் துறையினர் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டனர்[15].
  • மார்ச் 4 ஆம் நாளன்று, வங்காளதேச அணியை வெற்றி கொண்டு திரும்பிய மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் சென்ற வாகனம் மீது வங்காளதேச ரசிகர்கள் கல்லெறி நடத்தினர். வாகனத்தில் சென்றவர்கள் வங்காளதேச அணியெனத் தவறாக எண்ணியே கல்லெறி நடத்தப்பட்டதாக பின்னர் நடந்த விசாரணைகளில் இருந்து தெரியவந்தது[16].
  • மும்பையில் இடம்பெறவிருக்கும் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பாக்கித்தான் அணி விளையாடத் தகுதி பெறுமானால் அப்போட்டியை நடக்க விடாமல் தாம் தடுக்கப்போவதாக வலதுசாரி இந்து தேசிய அரசியல் கட்சியான சிவ சேனா அச்சுறுத்தியுள்ளது[17].
  • இசுலாமாபாத்தில் பன்னாட்டுக் காவலக அதிகாரி ரொனால்ட் நோபல் மார்ச் 24ஆம் நாளன்று பாக்கித்தான், இலங்கை, மாலத்தீவு காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் உலகக்கிண்ண போட்டிகளை சீர்குலைக்கும் எண்ணத்துடன் செயல்பட்ட "தீவிரவாதி ஒருவனை அடையாளம் கண்டு, இருக்குமிடத்தைத் தேடி, கைது செய்துள்ளதாகக்" கூறினார்.[18]
  • உலகக்கிண்ண இறுதிப்போட்டி ஆட்டத்தின்போதான பணவரவுகளுக்கு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவைக்கு சேவை வரி விலக்காக ரூ.45 கோடி அளிப்பது குறித்து இந்திய ஆய அமைச்சர்களவையில் கருத்து வேறுபாடு உண்டானது [19][20].
  • கால்பந்து உலகக்கோப்பை ஆட்டங்களின்போது தென் அமெரிக்க வடிவழகிகள் அறிவித்ததைப் போன்று இந்தியாவின் வடிவழகி பூனம் பாண்டே "இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.[21]
  • ஒருநாள் போட்டி ஒன்றில் முதல் தடவையாக நாணயச் சுழற்சி இரண்டு முறை இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் முதல் தடவை இலங்கை அணித்தலைவர் சங்கக்கார வென்றார். ஆனால் அவர் கூறியது பார்வையாளர்களின் பலத்த சத்தத்தினால் தனக்குக் கேட்கவில்லை எனப் போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் குறிப்பிட மீண்டும் நாணயச் சுழற்சியில் ஈடுபடுமாறு அழைத்தார். இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார இரண்டாவது தடவையும் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தார்.[22].

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றது எப்படி?
  2. "No World Cup matches in Pakistan". BBC. 2009-04-18. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/other_international/pakistan/8004684.stm. பார்த்த நாள்: 2009-04-17. 
  3. "World Cup shifts base from Lahore to Mumbai". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-04-17.
  4. "Pakistan counts cost of Cup shift". BBC. 2009-04-18. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/other_international/pakistan/8004684.stm. பார்த்த நாள்: 2009-04-18. 
  5. "Pakistan nears solution to World Cup dispute". AFP. Archived from the original on 2010-05-09. பார்க்கப்பட்ட நாள் 2009-07-31.
  6. 2011 World Cup mascot to be called 'Stumpy' NDTV Cricket. Retrieved on 2 Aug, 2010.
  7. First Look: Mascot for 2011 Cricket World Cup by Rediff Sport. Retrieved on 2 April 2010.
  8. ICC to name ICC Cricket World Cup 2011 mascot on 2 August பரணிடப்பட்டது 2012-04-06 at the வந்தவழி இயந்திரம். ICC. Retrieved on 2 Aug, 2010.
  9. Shankar-Ehsaan-Loy score a hit with World Cup song பரணிடப்பட்டது 2011-01-06 at the வந்தவழி இயந்திரம் Hindustan Times. Retrieved on 9 January 2011.
  10. "De ghuma ke... Countdown to World Cup begins today". Indian Express. Retrieved on 9 January 2011.
  11. http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2011/content/story/491936.html
  12. http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2011/content/story/492768.html
  13. http://www.espncricinfo.com/ireland/content/story/493608.html
  14. Official 2011 World cup website பரணிடப்பட்டது 2010-01-07 at the வந்தவழி இயந்திரம். POINTS TABLE of World Cup. ICC. Retrieved on 26 June 2010
  15. "Cricket fans get cane beating in Nagpur". Archived from the original on 2011-03-11. பார்க்கப்பட்ட நாள் 2011-03-20.
  16. West Indies team bus stoned in Dhaka
  17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-19. பார்க்கப்பட்ட நாள் 2011-03-25.
  18. Interpol Foils World Cup Terror Plot
  19. Cong,NCP tussle in Cabinet over Rs45 crore tax break to ICC
  20. "Tax-exemption-Pawar-shouldnt-have-attended-cabinet-meet-says-BJP". Archived from the original on 2011-04-06. பார்க்கப்பட்ட நாள் 2011-04-02.
  21. "3-days-go-poonam-pandey-strip". Archived from the original on 2011-04-04. பார்க்கப்பட்ட நாள் 2011-04-02.
  22. [1]