உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்ணாந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் வாழும் நஞ்சற்ற ஊணுண்ணும் பாம்புகளில் வெண்ணாந்தை என்கிற மலைப்பாம்பும் ஒன்று. இது 4 முதல் 6 மீட்டர் வரை நீளமுடையதாய் இருக்கும். இவை பெரும்பான்மையாக சிறு பாலுட்டி இனங்கள் மேல் பாய்ந்து அதைச் சுற்றிக் கொண்டு தன் வலிய தசைகளுள்ள நீண்ட உடலால் இறுக்கி நெரித்து அதைக் கொல்லும். அதன் பின்பு அந்த இரையை அப்படியே விழுங்கும். மலைப்பாம்புகளின் சிறப்பான தன்மை, பின் கால்களின் சிறு எச்சங்கள் அவற்றில் இன்னும் காணப்படுவதாகும். கால்களற்ற பாம்புகள் கால்களுள்ள ஊர்வனவற்றிலிருந்து தோன்றியது என்பதை அடையாளங் காட்டுவதாக உள்ளன. மியான்மர் நாட்டிலுள்ள வலைத்தோல் மலைப்பாம்பு 9 மீட்டர் வரை நீளமுடையது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணாந்தை&oldid=3714427" இலிருந்து மீள்விக்கப்பட்டது