வீரபாண்டி ஆ. இராசேந்திரன்
வீரபாண்டி ஆ. இராஜேந்திரன் (Veerapandi A. Rajendran) என்கிற வீரபாண்டி ராஜா (பிறப்பு 02 அக்டோபர், 1962-இறப்பு 02 அக்டோபர் 2021) என்பவர் இந்திய அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
குடும்பம்
[தொகு]வீரபாண்டி ஆ. இராஜேந்திரன் திராவிட முன்னேற்றக் கழக, சேலம் மாவட்ட முன்னணி நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனாவார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் சேலம் மாவட்டம், வீரபாண்டியை அடுத்த பூலாவாரியைச் சார்ந்தவர்.[1] இவருக்குச் சாந்தி என்ற மனைவியும், மலர்விழி மற்றும் கிருத்திகா என இருமகள்களும் உள்ளனர்.[2]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]1982 முதல் திமுக உறுப்பினராகச் சேர்ந்த இவர், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.[3] மீண்டும் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இறப்பு
[தொகு]இராஜேந்திரன் மாரடைப்பு காரணமாக 2021 அக்டோபர் 02 அன்று தனது இல்லத்தில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajendran. A(DMK):Constituency- VEERAPANDI(SALEM) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
- ↑ "சேலம் வீரபாண்டி ஆ.ராஜா காலமானார்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
- ↑ "Veerapandi Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
- ↑ "திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்". Dailythanthi.com. 2021-10-02. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.