உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் வில்சன் மார்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் வில்சன் மார்கன்
William Wilson Morgan
பிறப்பு(1906-01-03)சனவரி 3, 1906
இறப்புசூன் 21, 1994(1994-06-21) (அகவை 88)
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல், வானியற்பியல்
பணியிடங்கள்யெர்க்கேசு வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்சிகாகோ பல்கலைக்கழகம் (B.Sc.), (M.Sc.), (PhD)
அறியப்படுவதுபவுட்சு-மார்கன் வகைபாடு, cD பால்வெளி வகை, MK அமைப்பு
விருதுகள்புரூசு பதக்கம் (1958)
என்றி டிரேப்பர் பதக்கம் (1980)

வில்லியம் வில்சன் மார்கன் (William Wilson Morgan) (ஜனவரி 3, 1906 – ஜூன் 21, 1994) ஓர் அமெரிக்க வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார்.[1] இவரது முதன்மை ஆய்வுக் கருப்பொருள் விண்மீன், பால்வெளி வகைபாடு ஆகும். இவர் நம் பால்வழிப் பால்வெளியில் சுருள்கைகள் அமைதலை நிறுவவும் உதவியுள்ளார்.இந்த அறிவியல் தகுதிகளைத் தவிர சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் வானியல் இயக்குநராகவும் ஜார்ஜ் ஏல் அவர்களின் வானியற்பியல் இதழின் மேலாண்மை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

அறிவியல் பணிகள்

[தொகு]

இவர் பிலிப் சைல்ட்சு கீனான் அவர்களுடன் இணைந்து கதிர்நிரலால் விண்மீன்களை வகைபடுத்தும் [[உடுக்கண வகைபாடு#யெர்க்கேசு கதிர்நிரல் வகைபாடு|MK அமைப்பு முறையை உருவாக்கினார். இவர் பல பால்வெளிப் புறவடிவ வகைபாட்டு அமைப்புகளை உருவாக்கினார். ஹபிள் விரும்பிய எளிய, பண்[பியலான, கண்கோளவகை மதிப்பிடுகளுக்கு மாற்றாக, பால்வெளியின் புறநிலையான, அளக்கமுடிந்த இயல்புகளைப் பயன்படுத்தும் பால்வெளி அமைப்புகளை உருவாக்கினார். இவர் பால்வெளிக்கொத்துகளின் நடுவன் அமைந்த மீப்பொருண்மைப் பால்வெளிகளுக்கான இப்போது பரவலாகப் பயன்படுத்தும் cD வகைப்பாட்டை உருவாக்கினார். 1970 இல் இலவுரா பி. பவுட்சுவுடன் இணைந்து இன்றும் பயன்படுத்தும் பால்வெளிக்கொத்துகளுக்கான பவுட்சு-மார்கன் வகைபாட்டை உருவாக்கினார். இம்முறை cD பால்வெளிகள் தாம் செறிவான வகை ஒன்று பால்வெளிக்கொத்துகள் என இனங்கண்டது.

இவர் யெர்க்கேசு வான்காணகத்தில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார். மேலும் 1960 முதல் 1963 வரை அதன் இயக்குநராகவும் விளங்கினார்.[2] இவர் டொனால்டு ஆசுடெர்பிராக், சுட்டிவார்ட் சார்ப்ளெசு ஆகிய இருவரோடு இணைந்து, ஓ, பி வகை விண்மீன்களின் தொலைவுகளை அளந்து நம் பால்வழிப்பால்வெளியில் சுருள்கைகள் நிலவுதலை நிறுவினார்.

சில காலம் இவர் வானியற்பியல் இதழின் மேலாண்மை ஆசிரியராக விளங்கினார்.[2] இந்த வெளியீடு முதலில் ஜார்ஜ் எல்லேரி ஃஏல் அவர்களால் உலக அளவில் வானியற்பியலாளர்களின் கூட்டுறவை மேம்படுத்த தொடங்கியதாகும்.

கல்வி

[தொகு]

மார்கன் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்திலும் இலீ பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து கலி பயின்றாலும் இறுதி ஆண்டில் வெளியேறி விட்டுள்ளார். இவர் யெர்க்கேசு வான்காணகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகத் தன் பணியை தொடங்கியுள்ளார். அங்கெ மாணவருக்கு வகுப்புகளும் எடுத்துள்ளார். இந்த வான்காணகம் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த்தாகும். இவர் அப்பல்கலைக்கழகத்தில் 1927 இல் பட்டப் படிப்பை முடித்து அறிவியல் இளவல் பட்டம் பெற்றுள்ளார்[3] இதற்கு இவர் பயின்ற இரு பல்கலைக்கழக மதிப்புகளும் யெர்க்கேசு வான்காணக பாடங்களும் கருதப்பட்டன. இவர் சிகாகொ பல்கலைக்கழகத்தின் யெர்க்கேசு வான்ஆனகத்தில் இருந்தபோது தன் முதுவர் பட்டப் படிப்பையும் தொடர்ந்தார். இவர் முனைவர் பட்டத்தை 1931 திசம்பரில் பெற்றார்.[2]

பேராசிரியராக

[தொகு]

இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் முடித்ததும் அப்பல்கலைக்கழகத்திலேயே இணைந்து 1936 இல் உதவிப் பேராசிரியராகவும் 1947 இல் பேராசிரியராகவும் 1966 இல் தகைமைப் பேராசிரியராகவும் ஆனார்.[2]

இவர் சிகாகோ பல்கலைக்கழக வானியல் துறையின் தலைவராக 1960 முதல் 1966 வரை விளங்கினார்.[2]

தகைமைகள்

[தொகு]

விருதுகளும் தகைமைகளும்

இவரது பெயர் இடப்பட்டவை

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Donald Edward Osterbrock (December 1994). "Obituary: William W. Morgan". Physics Today 47 (12): 82–83. doi:10.1063/1.2808763. http://www.physicstoday.org/resource/1/phtoad/v47/i12/p82_s1?bypassSSO=1. பார்த்த நாள்: 2017-03-30. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Osterbrock, Donald. "William Wilson Morgan". The National Academies Press. பார்க்கப்பட்ட நாள் April 24, 2012.
  3. DeVorkin, David. "Oral History Transcript - Dr. William Wilson Morgan". The American Institute of Physics. Archived from the original on அக்டோபர் 12, 2012. பார்க்கப்பட்ட நாள் April 24, 2012.
  4. "Past Winners of the Catherine Wolfe Bruce Gold Medal". Astronomical Society of the Pacific. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
  5. "Grants, Prizes and Awards". American Astronomical Society. Archived from the original on 22 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Book of Members, 1780-2010: Chapter M" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 22 April 2011.
  7. "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]