உள்ளடக்கத்துக்குச் செல்

விரைவோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
200 மீட்டர் விரைவோட்டப்போட்டி
100-மீ விரைவோட்டப் போட்டியில் புறப்பட அணியமாய் இருக்கும் ஓட்டவீரர்கள்

விரைவோட்டம் (sprint) அல்லது சுருக்கோட்டம் (குறுவிரையோட்டம்) என்பது அனைத்துலகிலும் நடைபெறும் ஓர் ஓட்டப்பந்தயம். இவ்வோட்டப்போட்டி ஒலிம்பிக்கில் மிகப்பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு. இவ்வகை ஓட்டப்போட்டியில் ஏறத்தாழ 8-10 பேர் ஒரே நேரத்தில் புறப்பட்டு ஒரு குறிப்பிட்ட நீளம் கொண்ட தடகளத்தை கடக்க மிகவிரைந்து ஓடுவார்கள். யாரொருவர் முதலில் எல்லோரையும் முந்திக்கொண்டு தடகள எல்லையைக் கடக்கின்றார்கள் என்பதே போட்டி. இது தட கள விளையாட்டுக்களில் ஒன்று. பொதுவாக தடகளத்தின் நீளம் 60, 100, 200, 400 மீட்டர்களாக இருக்கும். மாரத்தான் போட்டிகள் போல் அல்லாமல் முழுத் தொலைவும் உயர்வேகத்தில் வீரர்கள் ஓட முற்படுவார்கள். பொதுவாக 60 மீ விரைவோட்டம் திறந்த வெளியில் நடைபெறுவதில்லை. அது உட்கூடத்திலேயே நடப்பது.[1][2][3]

பொதுவான தொலைவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரைவோட்டம்&oldid=4133331" இலிருந்து மீள்விக்கப்பட்டது