உள்ளடக்கத்துக்குச் செல்

வித்யா வெங்கடேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யா வெங்கடேஷ்
பிறப்புஇந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சேலம்[1]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2002–2006

வித்யா வெங்கடேஷ் (Vidhya Venkatesh) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை, அவர் தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் தோன்றியுள்ளார். இவர் பஞ்சதந்திரம் (2002) திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் அறிமுகமான பிறகு , கன்னடத் திரைப்படங்களான சிகுரித கனசு (2003), நெனபிரலி (2005) ஆகியவற்றில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். கன்னடத் திரைப்படமான நெனபிரலியில் இவரது நடிப்புக்காக 53 வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

தொழில்

[தொகு]

வித்தியா வெங்கடேஷ் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் ஷெரட்டன் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்சில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்சில் வானூர்தி பணிப்பெண்ணாக இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது முதன்மையாக சிங்கப்பூர் - உருசியா இடையே பறந்தார்.[2] திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டவராக வித்யா இருந்தார். இந்நிலையில் கே. எஸ். ரவிக்குமாரை வாய்ப்புக்காக அணுகினார். அவர் கமல்ஹாசன் நடித்த பஞ்சதந்திரம் (2002) படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். அப்படத்தில் ஸ்ரீமனின் தெலுங்கு மனைவியாக நடித்தார். பின்னர் இவர் பல புதுமுகங்கள் நடித்த குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமான காலாட்படை (2003) படத்தில் தோன்றினார். அப்படத்தில் இவரது நடிப்பு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3][4] பின்னர் இவர் கன்னட படங்களில் கவனம் செலுத்தினார். கன்னடத் திரைப்படமான சிகுரித கனசு (2003) படத்தின் வழியாக கன்னடபடத்தில் அறிமுகமானார். நெனபிரலி (2005) திரைப்படத்தில் நடித்தற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். இதற்காக சிறந்த கன்னட நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார் .[5]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2002 பஞ்சதந்திரம் திருமதி. ரெட்டி தமிழ்
2003 கலாட்படை பிரியா தமிழ்
சிகுரிடா கனசு வரலட்சுமி கன்னடம்
2005 நெனபிரலி இந்துசிறீ கன்னடம் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம் [5]

குறிப்புகள்

[தொகு]
  1. Srinivasa, Srikanth (28 September 2003). "On a different plane". Deccan Herald. Archived from the original on 25 December 2004. பார்க்கப்பட்ட நாள் 23 September 2020.
  2. http://www.viggy.com/interview/vidhya_venkatesh_eng.asp
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
  4. https://web.archive.org/web/20021222072956/http://www.chennaionline.com/location/kpadai.asp
  5. 5.0 5.1 sify.com[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]