உள்ளடக்கத்துக்குச் செல்

வித்தோஜிராவ் ஓல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வித்தோஜி ராவ் ஓல்கர் (Vithoji Rao Holkar) (1776 - 1801 ஏப்ரல் 16) இவர் துக்கோஜி ராவ் ஓல்கரின் நான்காவது மகனாவார். மேலும் இவர் வித்தோபா என்றும் அழைக்கப்பட்டார்.[1][2]

வாழ்க்கை

[தொகு]

மராட்டியப் பேரரசின் சேவையில் ஓல்கர் குலத்தின் ஒரு பகுதியாக வித்தோஜி இருந்தார். இவரது மூத்த சகோதரர் மல்கர் ராவ் ஓல்கர் சிந்தியாக்களால் கொல்லப்பட்டதையடுத்து 1797 செப்டம்பர் அன்று பூனாவிலிருந்து கோலாப்பூருக்குத் தப்பிச் சென்றார்.

அதிக வளங்களைப் பெறுவதற்காக, யசுவந்த் ராவ் ஓல்கர் வடக்கு நோக்கி பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதேசமயம் வித்தோஜி தெற்கே கொள்ளை மற்றும் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இவர் பேஷ்வாவின் பிரதேசங்களை சூறையாடினார். வித்தோஜியைக் கைது செய்ய இரண்டாம் பாஜி ராவ் பாலாஜி குஞ்சீர் மற்றும் பாபு கோகலே ஆகியோரை அனுப்பினார். 1801 ஏப்ரலில், வித்தோஜி கைது செய்யப்பட்டு புனேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

1801 ஏப்ரல் 16 அன்று இரண்டாம் பேஷ்வா பாஜி ராவின் உத்தரவின் பேரில் யானையின் காலால் இடரவைத்து மரணதண்டனை நிறைவேற்றறப்பட்டது. இது இரண்டாம் பாஜி ராவ் மற்றும் யசுவந்த் ராவ் இடையே விரோதத்தை ஏற்படுத்தியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gazetteer 18.2. 1885, p. 281.
  2. Forrest 1885, p. xxxii.