உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய் மல்லையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் மல்லையா
2008இல் விஜய் மல்லையா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1 ஜூலை 2010 – 2 மே 2016[1]
பதவியில்
10 ஏப்ரல் 2002 – 9 ஏப்ரல் 2008
தொகுதிகருநாடகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
விஜய் விட்டல் மல்லையா

18 திசம்பர் 1955 (1955-12-18) (அகவை 68)[2]
மங்களூர், கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிசுயேச்சை
துணைவர்(கள்)
சமீரா தியாப்ஜி
(தி. 1986; ம.மு. 1987)

ரேகா (தி. 1993)
பிள்ளைகள்3
பெற்றோர்விட்டல் மல்லையா (தந்தை)
வாழிடம்(s)இலண்டன், இங்கிலாந்து
வேலை
  • தொழிலதிபர்
  • அரசியல்வாதி
புனைப்பெயர்King of Good Times[3][4]

விஜய் விட்டல் மல்லையா (Vijay Vittal Mallya) (பிறப்பு 18 டிசம்பர் 1955) ஒரு இந்திய தொழிலதிபரும், முன்னாள் அரசியல்வாதியும், இந்தியாவிலிருந்து தப்பியோடியவரும் ஆவார். இந்தியாவில் நிதிக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இங்கிலாந்தில் இருந்து இவரைத் திரும்பவும் இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடியை கடனாக பெற்று ஏய்ப்பு செய்ததாக இவர் மீது அமலாக்க இயக்குனரகம் மற்றும் நடுவண் புலனாய்வுச் செயலகம் வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் இலண்டனுக்கு தப்பிச் சென்றதால் இவரை தேடப்படும் குற்றவாளியாக "உச்சநீதிமன்றம்" அறிவித்தது.[5][6]

மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிலதிபரின் மகனான மல்லையா, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்ற இந்தியாவின் மிகப்பெரிய மதுபான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். மேலும் மதுபானம், விமான உள்கட்டமைப்பு, அசையாச் சொத்து மற்றும் உரம் உள்ளிட்ட ஆர்வங்களைக் கொண்ட இந்திய கூட்டு நிறுவனமான யுனைடெட் புரூவரீஸ் குழுமத்தின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுகிறார். இவர் சனோபி, பேயர் நிறுவனம் உள்ளிட்ட இந்தியாவின் பல நிறுவனங்களின் தலைவராக இருந்துள்ளார். [7] மல்லையா, தற்போது செயல்படாத கிங்பிஷர் ஏர்லைன்ஸின் நிறுவனரும் முன்னாள் உரிமையாளராகவும், இலண்டன் செல்வதற்கு முன்பு போர்ஸ் இந்தியா பார்முலா ஒன் அணியின் முன்னாள் இணை உரிமையாளராகவும் இருந்தார். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கிரிக்கெட் அணியின் முன்னாள் உரிமையாளரும் ஆவார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள வந்தவாழ் நகரத்தைச் சேர்ந்தவரும் யுனைடெட் புரூவரீஸ் குழுமத்தின் தலைவராக இருந்தவருமான விட்டல் மல்லையா [2] என்பவருக்கும் லலிதா ராமையாவுக்கும் பிறந்தவர். விஜய் மல்லையா கொல்கத்தாவின் லா மார்டினியர் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர், 1976 இல் கொல்கத்தாவில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் [2] [8] இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார்.[2] கல்லூரியில் படிக்கும் போதே, மல்லையா தனது குடும்பத்தின் தொழில்களில் ஈடுபட்டார். பட்டம் பெற்ற பிறகு, இவர் அமெரிக்காவில் உள்ள ஹோச்ஸ்ட் ஏஜி என்ற இராசாயன நிறுவனத்தின் அமெரிக்கப் பகுதியில் பயிற்சி பெற்றார்.

1986 ஆம் ஆண்டு, ஏர் இந்தியாவின் விமானப் பணிப்பெண்ணான சமீரா சர்மா என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சித்தார்த் மல்லையா என்ற ஒரு மகன் 7 மே 1987 இல் பிறந்தார். விரைவில் மல்லையா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஜூன் 1993 இல், ரேகா என்பவரை இரண்டாவதாக மணந்தார். இவர்களுக்கு லியானா மற்றும் தான்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். [2] [9] ரேகா முன்பு இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர். மேலும் முந்தைய திருமணத்தின் மூலாம் இரு குழந்தைகள். ரேகாவின் மகள் லீலாவை மல்லையா தத்தெடுத்தார்.

பொதுவாக ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டவராகக் கருதப்படும் மல்லையா, மிகுந்த பக்தியுள்ளவராகவும், ஒவ்வொரு ஆண்டும் 42 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்பவராகவும், வாழும் கலை அறக்கட்டளையின் சிரீ சிரீ இரவிசங்கரைப் பின்பற்றுபவர் எனவும் 2005 இல் தெரிவிக்கப்பட்டது.

விஜய் மல்லையா திருப்பதி வெங்கடாசலபதி, சபரிமலை ஐயப்பன் மற்றும் குக்கி சுப்பிரமணியசுவாமியின் தீவிர பக்தர். 2012ல் தனது 57வது பிறந்தநாளில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு 3 கிலோ தங்க செங்கற்களை காணிக்கையாக செலுத்தினார். 2012 இல், இவர் குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலிக்காக 8 மில்லியன் (US$1,00,000) தங்க முலாம் பூசப்பட்ட கதவுகளையும் வழங்கினார். தனக்குச் சொந்தமான கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பெரும் நிதி இழப்பு காரணமாக மூடப்பட வேண்டிய நேரத்திலும் இவை செய்யப்பட்டன.

தொழில்

[தொகு]
கிங்பிஷர் கட்டடத்தின் மேலுள்ள மாளிகை, இது மல்லையாவுக்கு சொந்தமான வெள்ளை மாளிகையின் நகல்

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்ற இந்தியாவின் மிகப்பெரிய மதுபான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். மேலும் மதுபானம், விமான உள்கட்டமைப்பு, அசையாச் சொத்து மற்றும் உரம் உள்ளிட்ட ஆர்வங்களைக் கொண்ட இந்திய கூட்டு நிறுவனமான யுனைடெட் புரூவரீஸ் குழுமத்தின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுகிறார். இவர் சனோபி, பேயர் உள்ளிட்ட இந்தியாவின் பல நிறுவனங்களின் தலைவராக இருந்துள்ளார்.

தொழிலதிபர் விட்டல் மல்லையாவின் மகனான இவர் 1983 ஆம் ஆண்டு தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து தனது 28 வயதில் யுனைடெட் புரூவரீஸ் குழுமத்தின் தலைவரானார். [10] அதன்பிறகு, குழுவானது 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்ட பல்தேசிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஆண்டு வருவாய் 15 ஆண்டுகளில் 64% அதிகரித்து. இவர் 1988 இல் பெர்ஜர் பெயிண்ட்ஸ், பெஸ்ட் மற்றும் கிராம்ப்டன் ஆகியவற்றை பல்வகைப்படுத்தி வாங்கினார்; 1990 இல் மங்களூர் கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள்; ஏசியன் ஏஜ் செய்தித்தாள் மற்றும் திரைப்பட இதழ்களின் வெளியீட்டாளர் மற்றும் 2001 இல் பாலிவுட் பத்திரிகையான சினி பிளிட்ஸ் [11] போன்ற நிறுவனங்களை வாங்கினார்

இவரது கிங்பிஷர் பியர் இந்தியாவில் 50%க்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. [12] இது மற்ற 52 நாடுகளில் கிடைக்கிறது. மேலும் சர்வதேச சந்தையில் இந்திய பியர்களில் முன்னணியில் உள்ளது. [13]

குழுமத்தின் முதன்மை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் 100 மில்லியன் பெட்டிகளை விற்பனை செய்யும் மைல்கல்லை எட்டியது. மல்லையாவின் தலைமையின் கீழ் உலகின் இரண்டாவது பெரிய மதுபான நிறுவனமாக மாறியது. [13] 2012 ஆம் ஆண்டில், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை உலகளாவிய மதுபான நிறுவனமான டியாஜியோவிடம் மல்லையா ஒப்படைத்தார். அதன் வணிகத்தில் சிறு பங்குகளை மட்டும் தக்க வைத்துக் கொண்டார். [14] பிப்ரவரி 2015 இல், யுனைடெட் ஸ்பிரிட்ஸின் தலைவர் பதவியில் இருந்து மல்லையா பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 75 மில்லியன் டாலர் தொகை இவருக்கு வரவேண்டியிருந்தது. ஆனால் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் அந்தப் பணத்தைத் தடுத்துவிட்டன. [15] [16]

கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ், 2005 இல் நிறுவப்பட்டது. இது மல்லையாவால் தொடங்கப்பட்ட ஒரு பெரிய வணிக முயற்சியாகும். இது இறுதியில் மூடப்பட்டது.[17] [18] அக்டோபர் 2013 நிலவரப்படி, அதன் ஊழியர்களுக்கு 15 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. விமான நிறுவனமாக செயல்படுவதற்கான உரிமத்தை இழந்துவிட்டது. மேலும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான வங்கிக் கடன்களை செலுத்த வேண்டியிருந்தது. [14] நவம்பர் 2015 க்குள், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை குறைந்தபட்சம் $1.35 பில்லியனாக வளர்ந்தது. மேலும் வரிகளகவும் பல சிறு கடனாளிகளுக்கும் செலுத்த வேண்டிய மற்ற கடன்களும் இருந்தன. [19] கிங்பிஷர் வீழ்ச்சியின் ஒரு பகுதியாக, பணமோசடி, முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் உட்பட, இந்திய சட்டத்தின் கீழ் மல்லையா "வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்" என்று குற்றம் சாட்டப்பட்டார் [19] [20]

மார்ச் 2016 இல், வங்கிகளின் கூட்டமைப்பு மல்லையாவின் நிறுவனங்கள் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவையில் உள்ள பணத்தால் வெளிநாடு செல்வதைத் தடுக்க இந்திய உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஆனால் ஊடக அறிக்கையின்படி, இவர் ஏற்கனவே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாக அறியப்பட்டது.[21] 13 மார்ச் 2016 அன்று ஐதராபாத்தில் உள்ள நீதிமன்றம் மல்லையாவைக் கைது செய்ய பிணையில் வெளிவர முடியாத உத்தரவரைப் பிறப்பித்தது. ஆனால் இவர் இங்கிலாந்தின் இலண்டனில் தங்கியிருப்பதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் இவரது வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் இவர் மீதான வழக்கை எதிர்த்துப் போராடினார். [22] [23] 18 ஏப்ரல் 2016 அன்று, மும்பையில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம் இவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது நடவடிக்கையை பிறப்பித்தது. 2002,பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்ற விசாரணை வழக்குகளுக்கு முன்பு ஏப்ரல் 15 அன்று அமலாக்க இயக்குனரகத்தின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் இது வெளியிடப்பட்டது. [24] இவர் வரி ஏய்ப்புக்காக 4,000 கோடி (US$500 மில்லியன்) பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.[25] [26]

அரசியல் வாழ்க்கை

[தொகு]
2010ல் மல்லையா

முன்னதாக அகில பாரத ஜனதா தளத்தின் உறுப்பினராக இருந்த மல்லையா 2003 இல் சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சியில் சேர்ந்தார். மேலும் 2010 வரை அதன் தேசிய செயல் தலைவராக இருந்தார் [27] [28] [29] தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் இருந்து முதலில் 2002 இல் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவுடனும், பின்னர் 2010 இல் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனதா தளம்) ஆதரவுடனும் இரண்டு முறை சுயேச்சை உறுப்பினராக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[30]

2 மே 2016 அன்று, மல்லையா தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். மாநிலங்களவை நெறிமுறைக் குழு இவர் இனி அவையில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்று அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இது நிகழ்ந்தது. [1] இந்த நேரத்தில் இவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். [31] [32]

சர்ச்சைகள்

[தொகு]

இவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை காரணமாக இவரது நிறுவனங்கள் 2012 ஆம் ஆண்டு முதல் நிதி முறைகேடுகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. மல்லையா தனது குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்க பிரிட்டனுக்கு செல்ல விரும்புவதாக கூறிவிட்டு 2016 மார்ச் 2 அன்று இந்தியாவை விட்டு வெளியேறினார். [31] 17 இந்திய வங்கிகளின் குழு தோராயமாக 90 பில்லியன் (US$1.1 பில்லியன்) வசூலிக்க முயற்சிக்கிறது. மல்லையா உலகெங்கிலும் உள்ள சுமார் 40 நிறுவனங்களில் 100% அல்லது பகுதி பங்குகளை பெற வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. வருமான வரித் துறை மற்றும் நடுவண் புலனாய்வுச் செயலகம் உட்பட பல அமைப்புகள்[31] பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை நடத்தி வருகின்றன. இவர் வாங்கிய கடனுக்கு அதிகமாக" [31] மல்லையா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க 17 வங்கிகளும் மார்ச் 2016 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு கூட்டு மனுவைச் சேர்த்தன. ஆனால் அவர் ஏற்கனவே வெளியேறிவிட்டதாக இந்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியது. இந்திய அமலாக்க இயக்குனரகம் இவர் மீது மார்ச் 2016 இல் சுமார் 9 பில்லியன் (US$110 மில்லியன்) வெளிநாட்டுக்கு அனுப்பியதாகக் கூறி பணமோசடி வழக்குப் பதிவு செய்தது. அது இவரது விமான நிறுவனத்திற்கு கடனாக வழங்கப்பட்டது. [31]

24 ஏப்ரல் 2016 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சகம் மல்லையாவின் கடவுச் சீட்டை ரத்து செய்தது. [33] [34] [1] தற்போது அமலாக்க இயக்குனரகம் மல்லையாவுக்கு எதிராக சர்வதேச கது நடவடிக்கையை மேற்கொள்ள பன்னாட்டுக் காவலகத்திடம் கோரியுள்ளது.[35] [36] மேலும், ஐதராபாத்தின் ஜி. எம். ஆர் குழுமத்தின் விமானநிலைய நிறுவனத்திற்கு 5 மில்லியன் (US$63,000) மதிப்பிழந்த காசோலையை வழங்கி ஏமாற்றிய குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாத மல்லையாவுக்கு எதிராக தெலங்காணா உயர் நீதிமன்றம் 2016 மார்ச் 13 அன்று பிணையில் வெளிவர முடியாத ஆணையை பிறப்பித்தது. [37]

கசிந்த ஆவணங்கள்

[தொகு]

வெளிநாட்டு முதலீடு தொடர்பான ரகசிய ஆவணங்களான பனாமா ஆவணங்கள் மற்றும் பாரடைஸ் ஆவணங்களில் மல்லையாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. [38] [39]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Vijay Mallya resigns from Rajya Sabha". 2 May 2016. http://www.thehindu.com/news/national/vijay-mallya-resigns-from-rajya-sabha/article8547747.ece. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Vijay Mallya Rajya Sabha MP பரணிடப்பட்டது 13 மே 2012 at the வந்தவழி இயந்திரம் Mallyainparliament.in. (Retrieved 4 June 2014).
  3. Tsang, Amie; Kumar, Hari (18 April 2017). "Vijay Mallya, Once India's 'King of Good Times', Is Arrested in London". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 7 March 2018.
  4. Bengali, Shashank; Parth, M. N. (18 April 2017). "India's former 'King of Good Times' beer baron Vijay Mallya, is arrested in London". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் 7 March 2018.
  5. ".900 கோடி மோசடி.. மல்லையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை".
  6. "மல்லையாவை ஆஜர்படுத்தினால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி!".
  7. "10 Companies Vijay Mallya is a Director in". பார்க்கப்பட்ட நாள் 14 July 2017.
  8. Mathew, Fr. P.C., S.J., "Aims and Objectives பரணிடப்பட்டது 18 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்", St. Xavier's College, Kolkata (accessed May 2014).
  9. Parliamentary Profile. பரணிடப்பட்டது 1 மே 2014 at the வந்தவழி இயந்திரம். India.gov.in (18 December 1955). Retrieved on 17 July 2016.
  10. "How Vijay Mallya inherited an empire and proceeded to lose it". http://www.livemint.com/Companies/1YrLuntaxmNyeNoYFbUX1L/How-Vijay-Mallya-inherited-an-empire-and-then-proceeded-to-l.html. 
  11. "Diageo-USL deal puts to test Mallya's credentials". பார்க்கப்பட்ட நாள் 30 July 2014.
  12. "Accounting Policy, Bayer CropScience Ltd". பார்க்கப்பட்ட நாள் 2 June 2014. (section 4.1)
  13. 13.0 13.1 "Accounting Policy, Bayer CropScience Ltd". பார்க்கப்பட்ட நாள் 2 June 2014."Accounting Policy, Bayer CropScience Ltd". Live Mint. Archived from the original on 12 December 2013. Retrieved 2 June 2014. (section 4.1)
  14. 14.0 14.1 "India's Richest #84 Vijay Mallya", போர்ப்ஸ் (accessed May 2014).
  15. "Vijay Mallya: Once upon a time there was a king". http://indianexpress.com/article/india/india-news-india/sunday-story-once-upon-a-time-there-was-a-king-vijay-mallya/. 
  16. "Vijay Mallya's Severance Payment From Diageo Halted by Indian Tribunal". https://blogs.wsj.com/indiarealtime/2016/03/08/vijay-mallyas-severance-payment-from-diageo-halted-by-indian-tribunal/. 
  17. "Non-bailable arrest warrant issued against Vijay Mallya", தி இந்து, 12 October 2012.
  18. "Cheques bounce case: Warrant against Kingfisher, Vijay Mallya on GMR's complaint", சிஎன்என்-ஐபிஎன், 12 October 2012.
  19. 19.0 19.1 Narayan, Khushboo; Johnson, T A; Vikraman, Shaji (13 March 2016). "Vijay Mallya: Once upon a time there was a king". இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/article/india/india-news-india/sunday-story-once-upon-a-time-there-was-a-king-vijay-mallya/. Narayan, Khushboo; Johnson, T A; Vikraman, Shaji (13 March 2016). "Vijay Mallya: Once upon a time there was a king". The Indian Express. Retrieved 13 March 2016.
  20. "What is Vijay Mallya accused of?". இந்தியன் எக்சுபிரசு. 11 March 2016. http://indianexpress.com/article/explained/what-is-vijay-mallya-accused-of/. 
  21. "13 banks move SC to stop Vijay Mallya but he has already left India". தி எகனாமிக் டைம்ஸ். http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/13-banks-move-sc-to-stop-vijay-mallya-but-hes-already-left-india/articleshow/51322519.cms. 
  22. "Hyderabad court issues non-bailable warrant against Vijay Mallya". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/india/Court-issues-non-bailable-warrant-against-Vijay-Mallya/articleshow/51382023.cms. 
  23. "Vijay Mallya still at UK country home, seeks expensive legal opinion". சிஎன்என்-ஐபிஎன். http://www.ibnlive.com/news/india/vijay-mallya-still-at-uk-country-home-seeks-expensive-legal-opinion-1215180.html. 
  24. "Mumbai court issues non-bailable warrant against Vijay Mallya in money laundering case". IANS. http://www.abplive.in/business/non-bailable-arrest-warrant-issued-against-mallya-324550. 
  25. "Vijay Mallya Allegedly Transferred Rs 4,000 Crore To Tax Havens by fooling everyone". Act Now News. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
  26. "Did Vijay Mallya's company transfer Rs 4,000 crores to a tax haven?". Business Standard India. http://www.business-standard.com/article/current-affairs/did-vijay-mallya-s-company-transfer-rs-4-000-crores-to-a-tax-haven-116031500045_1.html. 
  27. "Vijay Mallya joins Janata Party". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 15 March 2016.
  28. "Vijay Mallya removed as Working President of Janata Party". Business Standard India. http://www.business-standard.com/article/economy-policy/vijay-mallya-removed-as-working-president-of-janata-party-110060800197_1.html. 
  29. "Steering clear of the limelight by Aravind Gowda". India Today. பார்க்கப்பட்ட நாள் 15 March 2016.
  30. "Both BJP, Congress had backed Vijay Mallya's Rajya Sabha membership". India News, India.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2016.
  31. 31.0 31.1 31.2 31.3 31.4 "Vijay Mallya Left Country On March 2, Government Tells Supreme Court". http://profit.ndtv.com/news/budget/article-vijay-mallya-left-country-on-march-2-government-lawyer-tells-court-1285360. 
  32. "Vijay Mallya's Passport Revoked By Ministry Of External Affairs". 24 April 2016. பார்க்கப்பட்ட நாள் 14 July 2017.
  33. "SBI seeks Vijay Mallya's arrest in Kingfisher loan default case". http://www.financialexpress.com/industry/banking-finance/sbi-seeks-vijay-mallyas-arrest-in-kingfisher-loan-default-case/218885/. 
  34. "Vijay Mallya's Passport Revoked By Ministry Of External Affairs". பார்க்கப்பட்ட நாள் 14 July 2017.
  35. "ED seeks Interpol Red Corner notice against Vijay Mallya". http://indianexpress.com/article/business/companies/vijay-mallya-enforcement-directorate-interpol-red-corner-notice-2796621/. 
  36. "External Affairs Ministry awaits ED notice to officially extradite Mallya". http://www.thehindubusinessline.com/news/external-affairs-ministry-awaits-ed-notice-to-officially-extradite-mallya/article8586313.ece. 
  37. "Hyderabad court issues non-bailable warrant against Vijay Mallya". http://timesofindia.indiatimes.com/india/Court-issues-non-bailable-warrant-against-Vijay-Mallya/articleshow/51382023.cms. 
  38. Tandon, Suneera (7 November 2017). "The Indian superstars of tax haven leaks: Amitabh Bachchan and Vijay Mallya". Quartz India. https://qz.com/1121170/from-paradise-papers-to-the-panama-leaks-amitabh-bachchan-and-vijay-mallya-are-never-missing/. 
  39. Moudgal, Sandeep (8 April 2016). "Panama Papers: Vijay Mallya directly linked to firm in Virgin Islands". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/business/india-business/Panama-Papers-Vijay-Mallya-directly-linked-to-firm-in-Virgin-Islands/articleshow/51736218.cms. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_மல்லையா&oldid=4116823" இலிருந்து மீள்விக்கப்பட்டது