மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப்
மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப் | |
---|---|
மேரி c. 1875 | |
பிறப்பு | Mary Ann Dacomb Bird 18 சூன் 1845, 1844 |
இறப்பு | 11 நவம்பர் 1930, 21 நவம்பர் 1930 (அகவை 85) |
படித்த இடங்கள் | |
பணி | பெண்பாலுறுப்பு மருத்துவர் |
மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப் (Mary Ann Dacomb Scharlieb) இங்கிலாந்தைச் சேர்ந்த முதல் பெண் மருத்துவர் ஆவார்.[1] பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகள் எதிலும் மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்படாத காலத்தில், முதன்முதலில் 1875-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். இவருக்கு முன்னர் அமெரிக்காவில் மட்டுமே மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஷார்லீபுக்குப் பிறகு மிசல் ஒயிட், பியேல், மிட்ஷெல் ஆகிய மூன்று ஆங்கிலோ-இந்தியப் பெண்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். சென்னையில் படித்த பிறகு இங்கிலாந்தில் உள்ள ராயல் லண்டன் மருத்துவப் பள்ளியில் படித்து, பிரிட்டன் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை ஷார்லீப் பெற்றார். இவர் சென்னையில் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவ மனையை நிறுவியவர் ஆவார்.[2]
மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப் அவரது சுயசரிதையை அவரே கைப்பட ரெமினிசென்ஸ் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்திலிருந்து
“என்னைப்பற்றி மற்றவர்கள் தெரிந்துக்கொள்வதற்காக இந்த கதையை எழுதவில்லை. எனக்குப் பிறகு மருத்துவத்துறைக்கு வரும் பெண்கள் அவர்கள் பணியை செம்மையாக செய்வதோடு கூடவே கடின உழைப்பும் அக்கறையும் இருந்தால் வாழ்க்கை முழுக்க வெற்றியும்,மகிழ்ச்சியும் கிடைக்கும். ஒரு பெண்ணால் குடும்பத்தையும், வீட்டு வேலைகளையும், மருத்துவப்பணியையும் ஒன்று போலக்கருதி வெற்றிகரமாக அதை செயல்படுத்தமுடியுமா என்ற கேள்விக்கான விடையைத்தான் நான் இந்த புத்தகம் வழியாக உங்களுக்கு சொல்லியுள்ளேன்’’
மேற்கோள்
[தொகு]- ↑ Law, Cheryl (2000). Women, A Modern Political Dictionary. I.B.Tauris. pp. 131–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86064-502-0.
- ↑ "பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர்". ஆதி வள்ளியப்பன். தி. இந்து: pp. 2. ஆகஸ்ட் 23, 2015.