மெர்சல் (பாடல்கள்)
மெர்சல்(English: Zapped) 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான திரைப்பாடல்களில் முதலிடம் பிடித்த திரைப்பாடல்கள் ஆகும். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் இசையமைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இத்திரைப் பாடல்கள் அனைத்தும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இத்திரையிசைப்பாடல்கள் வெளியான முதல் பத்து நாட்களுக்குள் நூறு மில்லியன் முறை இசைக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் முறை அதிகப்படியாக நூறு மில்லியன் முறை இசைக்கப்பட்ட தமிழ்ப்பாடல்கள் என்னும் புதிய சாதனையை மெர்சல் திரைப்படத்தின் பாடல்கள் தொட்டது.
பின்னணி
[தொகு]மெர்சல் திரைப்படம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இயக்குநர் அட்லியும் இணைந்த முதல் திரைப்படமாகும். இது நடிகர் விஜயும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணையும் மூன்றாவது திரைப்படம்மாகும். இதற்கு முன் உதயா மற்றும் அழகிய தமிழ் மகன் ஆகிய இரு திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவை மட்டுமல்லாது இருவருக்கும் 2007 ஆம் வருடம் திரைத்துறையில் இருபத்தியைந்தாவது வருடமாகும். மெர்சல் திரைப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. அனைத்துப்படல்களையும் இசையமைத்தது ஏ.ஆர்.ரகுமான் ஆவார். அனைத்து தமிழ் பாடல்களுக்கும் பாடல் எழுதியவர் பாடலாசிரியர் விவேக். ஏ.ஆர்.ரகுமானும், விவேகும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும். இப்பாடல்களின் உரிமையை சோனி, இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.
பாடல்கள் வெளியீடு
[தொகு]மெர்சல் திரைப்படத்தின் பாடல்கள் ஆகத்து 20, 2017 அன்று வெளியிடப்பட்டது. பாடல் வெளியீட்டு நிகழ்வில் படத்தில் பங்காற்றிய பல நடிகர்களும், சிறப்பு விருந்தினாராக நடிகர் தனுசும் பங்கேற்றனர். ஏ.ஆர்.ரகுமானும் அவரது குழுவும் திரைப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக மேடையில் இசைத்து பாடினார்கள். இந்நிகழ்ச்சி சன்டிவி, முகநூல், கீச்சு மற்றும் யூடியூப் ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்டது. மெர்சல் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னரே ஒவ்வொரு பாடல்களாக இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. முதல் முதலாக ஆளப்போறான் தமிழன் பாடல் ஆகத்து 10, 2017 அன்று வெளியிடப்பட்டது. அதன் பின்னர் நீதானே, நீதானே என்னும் பாடல் ஆகத்து 17, 2017 அன்று வெளியிடப்பட்டது.
பாடல்கள்
[தொகு]மாச்சோ
[தொகு]மாச்சோ பாடலை எழுதியவர் கவிஞர் விவேக், பாடியவர்கள் சித் ஸ்ரீராம், சுவேதா மோகன். இப்பாடலின் நீளம் 4:35 நிமிடங்களாகும். இப்பாடலின் தெலுங்கு வடிவம் மாயோ, எழுதியவர் அனந்த் ஸ்ரீராம், பாடியவர்கள் சித் ஸ்ரீராம், சுவேதா மோகன். இப்பாடலின் நீளம் 4:39 நிமிடங்களாகும்.
மெர்சல் அரசன்
[தொகு]மெர்சல் அரசன் பாடலை எழுதியவர் கவிஞர் விவேக், பாடியவர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர், சரண்யா ஸ்ரீனிவாஸ், விஷ்வபிரசாத். இப்பாடலின் நீளம் 4:16 நிமிடங்களாகும். இப்பாடலின் தெலுங்கு வடிவம் வில்லு வில்லு, எழுதியவர் ஸ்ரீ மணி, பாடியவர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர், சரண்யா ஸ்ரீனிவாஸ், விஷ்வபிரசாத். இப்பாடலின் நீளம் 4:16 நிமிடங்களாகும்.
நீதானே நீதானே
[தொகு]நீதானே நீதானே பாடலை எழுதியவர் கவிஞர் விவேக், பாடியவர்கள் ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரேயா கோசல். இப்பாடலின் நீளம் 4:29 நிமிடங்களாகும். இப்பாடலின் தெலுங்கு வடிவம் நீவேலே நீவேலே, எழுதியவர் அனந்த் ஸ்ரீராம், பாடியவர்கள் ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரேயா கோசல். இப்பாடலின் நீளம் 4:28 நிமிடங்களாகும்.
ஆளப்போறான் தமிழன்
[தொகு]இப்பாடல் மெர்சல் திரைப்படத்தில் முதன் முதலில் வெளியிடப்பட்ட பாடல் ஆகும், அத்துடன் இப்பாடல் மிகப் பெரிய வெற்றியை ஈட்டிது. ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதியவர் கவிஞர் விவேக், பாடியவர்கள் கைலாஷ் கெர், சத்ய பிரகாஷ், தீபக், பூஜா வைதியநாத் ஆவர். இப்பாடலின் நீளம் 5:48 நிமிடங்களாகும். இப்பாடலின் தெலுங்கு வடிவம் பலிஞ்சரா பில்லோடா, எழுதியவர் சந்திர போஸ், பாடியவர்கள் கைலாஷ் கெர், சத்ய பிரகாஷ், தீபக், பூஜா வைதியநாத் ஆவர். இப்பாடலின் நீளம் 5:47 நிமிடங்களாகும்.
இசைக்கலைஞர்கள்
[தொகு]- புல்லாங்குழல் - நவீன் குமார்
- கித்தார்கள் - கெபா ஜெரேமியா
- நாதசுவரம் - திருமூர்த்தி
- சித்தார் - கிஷோர்
- இந்தியத் தாளங்கள் - டி ராஜா, குமார், லட்சுமி நாராயணன், ராஜூ, வேதா, நீல்கண்டன்
- தவில் - எம் வெங்கடேஷ் சுப்ரமணியன், கவிராஜ், எஸ் சுந்தர், புருஷொத்தமன்
- கொம்பு - அலெக்ஸ், காளி, சங்கர், விஜி