மார்கரெட் பார்பலேட்டு
மார்கரெட் பார்பலேட்டு Margaret Barbalet | |
---|---|
பிறப்பு | மார்கரெட்டு ஈவ்லின் ஆர்டி 1949 (அகவை 74–75) அடிலெயிட், தெற்கு ஆத்திரேலியா |
தொழில் | நாவலாசிரியர், வரலாற்றாளர் |
கல்வி நிலையம் | அடிலெயிட் பல்கலைக்கழகம் |
இணையதளம் | |
www |
மார்கரெட் ஈவ்லின் பார்பலேட்டு (Margaret Evelyn Barbalet; பிறப்பு: 1949) ஆத்திரேலிய நாவலாசிரியரும், வரலாற்றாளரும் ஆவார்.
சுயசரிதை
[தொகு]தெற்கு ஆத்திரேலியாவின் அடிலெய்டு நகரில் பிறந்த பார்பலேட்டு தாசுமேனியாவில் வளர்ந்தார். 1973 ஆம் ஆண்டு அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார் [1]
அடிலெய்டு குழந்தைகள் மருத்துவமனையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக அம்மருவத்துமனையின் வரலாற்றை எழுத இவர் பணிக்கப்பட்டார். இந்த புத்தகம் 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இயெஃப்ரி தட்டனால் [2] வெளியிடப்பட்டது. ஃபார் ஃப்ரம் எ லோ கட்டர் கேர்ள் என்பது இவரது இரண்டாவது புத்தகமாகும். அமைப்பில் நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைகள் பற்றி முன்னாள் மாநில மாணவர்களின் கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாவலை எழுதினார். [3]
பார்பலெட்டு பின்னர் புனைகதைக்குத் திரும்பினார். நாவல்கள் மற்றும் சிறுவர் புத்தகங்கள் சிறுகதைகளுடன் பிரசுரிக்கப்பட்டன. அவற்றில் மூன்று கான்பெரா நகரத்துக் கட்டுக் கதைகளாகும்: இக்கதைகள் 1988 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. [4]
படைப்புகள்
[தொகு]புனைகதை அல்லாதன
[தொகு]- அடிலெய்ட் குழந்தைகள் மருத்துவமனை 1876-1976: ஒரு வரலாறு, 1975
- லோ கட்டர் கேர்லிலிருந்து வெகு தொலைவில்: மாநில மாணவர்களின் மறக்கப்பட்ட உலகம், தெற்கு ஆத்திரேலியா, 1887-1940, 1983
நாவல்கள்
[தொகு]- பிளட் இன் தி ரெயின், 1986
- ஸ்டீல் பீச், 1988
- லேடி, பேபி, இயிப்சி, குயின், 1992
- தி பிரசன்சு ஆப் ஏஞ்சல்ல்சு, 2001
பட புத்தகங்கள்
[தொகு]- தி உல்ஃப், ஜேன் டேன்னரால் விளக்கப்பட்டது, 1991
- ரெக்கி: தெருவின் ராணி, ஆண்ட்ரூ மெக்லீனால் விளக்கப்பட்டது, 2003
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Margaret Barbalet". AustLit: Discover Australian Stories (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
- ↑ "Book Records Children's Hospital's Century of Social and Medical Progress". The Coromandel Times (South Australia) 30 (19): p. 2. 18 December 1975. http://nla.gov.au/nla.news-article261094116. பார்த்த நாள்: 29 August 2021.
- ↑ "The Harsh World of State Wards". The Canberra Times (Australian Capital Territory, Australia) 58 (17,527): p. 16. 24 September 1983. http://nla.gov.au/nla.news-article116408274. பார்த்த நாள்: 29 August 2021.
- ↑ "Canberra Tales: Stories". AustLit: Discover Australian Stories (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.