உள்ளடக்கத்துக்குச் செல்

மான் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மான் சிங்
ஆம்பரின் மன்னர்
மான் சிங் I
ராஜா மான் சிங்
பிறப்பு(1550-12-21)21 திசம்பர் 1550
ஆம்பர், இராஜஸ்தான்
இறப்பு6 சூலை 1614(1614-07-06) (அகவை 63)
எலிச்பூர், மகாராட்டிரம், இந்தியா
துணைவர்
  • சுசீலாவதி பாய் (1566-1662)
  • முன்வாரி பாய் (1556-1640)
  • பீபி முபாரக் (1564-1638)
குழந்தைகளின்
பெயர்கள்
  • ராஜா பாகு சிங் (1580-1621)
  • குன்வர் ஜெகத் சிங் (1586-1620)
  • குன்வர் துர்ஜன் சிங் (1575-1597)
  • குன்வர் இம்மத் சிங் (1590-1597)
  • போக்டா சிங் (1596-1610)
  • ராஜ் குவ்ரி மேனா பாய்சா (1591-1682)
  • மனோரமா பாய் (1614-1689)
தந்தைபகவான் தாஸ்
தாய்பகவதி பாய்
மதம்இந்து சமயம்

ராஜா மான் சிங் I (Man Singh I) (21 டிசம்பர் 1550 – 6 சூலை 1614) தற்கால இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஆம்பர் எனப்படும் ஜெய்ப்பூர் நாட்டு இராசபுத்திர குல மன்னராவர். முகலாயப் பேரரசர் அக்பரின் நம்பிக்கைக்குரிய தலைமைப் படைத்தலைவர் ஆவார்.[1][2] ராஜா மான் சிங்கின் மகள் மனோரமாவை, ஷாஜகானின் மூத்த மகனும், பட்டத்து இளவரசுரும், அவுரங்கசீப்பின் மூத்த தமையனுமான தாரா சிக்கோவிற்கு மணமுடிக்கப்பட்டது. இவரது பேரன் முதலாம் ஜெய் சிங், அவுரங்கசீப்பின் முக்கியப் படைத்தலைவர் ஆவார்.

பிறப்பு

[தொகு]
அரசவையில் அக்பருடன் ராஜா மான் சிங் மல்யுத்தம் புரிதல்[3]

இராஜா பகவன் தாஸ் மற்றும் இராணி பகவதி இணையருக்கு 21 டிசம்பர் 1550-இல் ராஜா மான் சிங் பிறந்தவர்.

முகலாயப் பேரரசின் படைத்தலைவராக

[தொகு]

இளமையில் 10 டிசம்பர் 1589 முதல் அக்பரின் படையில் 5000 படைவீரர்களுக்கு மன்சப்தாராக தலைமை வகித்தவர். [4] 26 ஆகஸ்டு 1605-இல் 7,000 குதிரைப் படைவீரர்களுக்கு தலைமை வகித்து மன்சப்தார் எனும் பதவியை வகித்தார்.[5]1576-இல் மகாரானா பிரதாப் சிங் படைகளுக்கும், அக்பரின் முகலாயப் படைகளுக்கும் நடைபெற்ற ஹால்திகட்டிப் போரில் ராஜ மான் சிங் முகலாயப் பேரரசின் படைத்தலைவராகச் செயல்பட்டவர்.[6]

1580-இல் அக்பரின் ஒன்று விட்ட சகோதரரும், காபூல் ஆளுநரும் ஆன மீர்சா ஹக்கீம் தன்னை தானே முகலாயப் பேரரசராக அறிவித்துக் கொண்டார். மீர்சா ஹக்கீமை பிகார் மற்றும் வங்காள ஆளுநர்கள் ஆதரித்தனர். பிகார் மற்றும் வங்காள ஆளுநர்களை சிறைபிடிக்க அக்பர் படைகளை அனுப்பி வைத்தார். பின்னர் மீர்சா ஹக்கிமை அடக்குவதற்கு அக்பர், ராஜ மான் சிங்குடன் காபூலுக்கு படைகளுடன் புறப்பட்டார். முகலாயப் படைகள் சிந்து ஆற்றை கடக்கும் நேரத்தில், மீர்சா ஹக்கீம் காபூலை விட்டு தலைமறைவானார். பின்னர் காபூலின் ஆளுநராக ராஜா மான் சிங் நியமிக்கப்பட்டார்.1588-இல் ராஜா மான் சிங் பிகாரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

17 மார்ச் 1594-இல் ராஜா மான் சிங் வங்காளம், பிகார், ஒடிசா பகுதிகளின் சுபேதாராக அக்பரால் நியமிக்கப்பட்டார்.[7] 1594-98, 1601–1605 மற்றும் 1605-1606 கால கட்டங்களில் மூன்று முறை சுபேதாராக இருந்தவர்.

ஜஹாங்கீருடன் பிணக்கு

[தொகு]

அக்பர் மரணப் படுக்கையில் இருந்த போது அவரது மூன்றாவது மகனான சலீம் என்ற ஜஹாங்கீருக்கும் நான்காம் மகனான குஸ்ருவுக்கும் இடையே அரியணையைக் கைப்பற்றுவது குறித்தான பிணக்கில், ராஜா மான் சிங் குஸ்ருவிற்கு ஆதரவு தெரிவித்தார்.

1605-இல் அக்பர் இறக்கையில் சலீமை (ஜஹாங்கீர்) தனது வாரிசாக அறிவித்தார். 10 நவம்பர் 1605-இல் வங்காள சுபேதாராக இருந்த ராஜா மான்சிங்கை நீக்கி குத்புதீன் கானை 2 செப்டம்பர் 1606-இல் வங்காள சுபேதாராக ஜஹாங்கீர் நியமித்தார்.[8]1611-இல் தக்காண சுல்தான்களின் முகலாயப் பேரரசுக்கு எதிரான கிளர்ச்சியை, இராஜா மான் சிங் தலைமையில் அனுப்பப்பட்ட முகலாயப் படைகள் ஒடுக்கியது.

மறைவு

[தொகு]

ஆம்பர் நாட்டு மன்னர் ராஜா மான் சிங் உடல் நலக் குறைவால் 6 சூலை 1614-இல் மறைந்தார்.

இதனையும் காண்க்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. 30. Ra´jah Ma´n Singh, son of Bhagwán Dás - Biography பரணிடப்பட்டது 2016-10-07 at the வந்தவழி இயந்திரம் அயினி அக்பரி, Vol. I.
  2. Raja Man Singh Biography India's who's who, www.mapsofindia.com.
  3. Unknown (circa 1600-03). "Akbar Fights with Raja Man Singh". A copy of the Akbarnama. Archived from the original on 2018-12-09. பார்க்கப்பட்ட நாள் 2017-02-09. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. Sarkar, Jadunath (1984, reprint 1994). A History of Jaipur, New Delhi: Orient Longman பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-0333-9, p.74
  5. Sarkar, Jadunath (1984, reprint 1994). A History of Jaipur, New Delhi: Orient Longman பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-0333-9, p.86
  6. Beveridge H. (tr.) (1939, Reprint 2000). The Akbarnama of Abu´l Fazl, Vol. III, Kolkata: The Asiatic Society, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7236-094-0, p.244
  7. Sarkar, Jadunath (1984). A History of Jaipur, c. 1503-1938, New Delhi: Orient Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-0333-9, p.81
  8. Sarkar, Jadunath (1984, reprint 1994). A History of Jaipur, New Delhi: Orient Longman பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-0333-9, pp.86-87

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்_சிங்&oldid=4058466" இலிருந்து மீள்விக்கப்பட்டது