உள்ளடக்கத்துக்குச் செல்

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2011

← 2010
2012 →

மாநிலங்களவை-228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் மன்மோகன் சிங் அருண் ஜெட்லி
கட்சி இதேகா பாஜக

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2011 (2011 Rajya Sabha elections) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2011ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். கோவாவிலிருந்து 1 உறுப்பினரும், குஜராத்திலிருந்து 3 உறுப்பினர்களும் மேற்கு வங்கத்திலிருந்து 6 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கச் சூலை 22 அன்று தேர்தல் நடைபெற்றது.[1]

தேர்தல்கள்

[தொகு]

கோவா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]

2011ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வ. எண் மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி ஓய்வு பெறும் தேதி குறிப்பு
1 கோவா சாந்தாராம் நாயக் இதேகா 28 ஜூலை 2017 [2]
2 குஜராத் அகமது படேல் இதேகா 18 ஆகஸ்ட் 2017
ஸ்மிருதி இரானி பா.ஜ.க
திலீப் பாண்டியா
3 மேற்கு வங்காளம் சுகேந்து சேகர் ராய் ஏஐடிசி
டெரெக் ஓ பிரையன்
தேபப்ரதா பந்தோபாத்யாய்
ஸ்ரீஞ்சாய் போஸ்
சீதாராம் யெச்சூரி சிபிஐ(எம்)
பிரதீப் பட்டாச்சார்யா இதேகா

ஓய்வு பெற்ற உறுப்பினர்கள்

[தொகு]

மாநில - உறுப்பினர் - கட்சி

எண் மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
கோவா சாந்தாராம் நாயக் இதேகா
2 குசராத்து அகமது படேல் இதேகா
3 பிரவின் நாயக் குசராத்து பாஜக
4 சுரேந்திர மோதிலால் படேல் குசராத்து பாஜக
5 அபானி ராய் மேற்கு வங்காளம் புசோக
6 காலியாக உள்ளது (அர்ஜுன் குமார் சென்குப்தாவின் மரணம்) மேற்கு வங்காளம்
7 முகமது அமீன் மேற்கு வங்காளம் சிபிஎம்
8 பிருந்தா காரத் மேற்கு வங்காளம் சிபிஎம்
9 சீதாராம் யெச்சூரி மேற்கு வங்காளம் சிபிஎம்
10 ஸ்வபன் சாதன் போஸ் மேற்கு வங்காளம் அஇதிகா

இடைத்தேர்தல்

[தொகு]

கர்நாடகா,[3] மத்தியப் பிரதேசம்,[4] மகாராஷ்டிரா & தமிழ்நாடு[1] அசாம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து காலியாக உள்ள இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[5]

  • 05/12/2010 அன்று 02/04/2012 அன்று பதவிக்காலம் முடிவடைய இருந்த எம். ராஜசேகர மூர்த்தி இறந்ததால் கர்நாடகாவில் காலியான இடத்துக்கு 3 மார்ச் 2011 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.[3] பாஜக சார்பில் ஹேமமாலினி உறுப்பினரானார். [6]
  • 04/03/2011 அன்று 02/04/2012 அன்று பதவிக்காலம் முடிவடைய இருந்த உறுப்பினர் அர்ஜுன் சிங் மரணமடைந்ததால் மத்தியப் பிரதேசத்தில் காலியான இடத்துக்கு 12 மே 2011 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[4] பாஜக சார்பில் மேகராஜ் ஜெயின் உறுப்பினரானார்.
  • 06/05/2011 அன்று 02 ஏப்ரல் 2014 வரை பதவிக்காலமுடைய உறுப்பினர் பிருத்விராஜ் சவான் பதவி விலகியதாலும், சூலை 2016 வரை பதவிக்காலம் உடைய கே.பி. ராமலிங்கம் 20 மே 2011-ல் பதவி விலகியதால் தமிழகத்தில் இடைத்தேர்தல் 22 சூலை 2011 அன்று நடைபெற்றது. [1] மகாராட்டாவிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசின் உசைன் தல்வாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டிலிருந்து அதிமுகவின் இரபி பெர்னார்ட்[7] தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 02/04/2016 வரை பதவிக்காலம் உடைய உறுப்பினர் சில்வியசு கான்ட்பன் 10/10/2011 அன்று இறந்ததால், அசாமில் காலியாக உள்ள இடத்துக்கு 22 திசம்பர் 2011 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏப்ரல் 09, 2014 வரை பதவிக்காலம் உடைய எல்ஜேபியின் சபீர் அலி 15 நவம்பர் 2011-ல் பதவி விலகியதால் பீகாரில் இடைத்தேர்தல் நடைபெற்றது.[5] இந்தியத் தேசிய காங்கிரசின் பங்கஜ் போரா அசாம் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகாரில் இருந்து ஐக்கிய ஜனதா தள வேட்பாளராக சபீர் அலி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Biennial and Bye - Elections to the Council of States" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
  2. "Statewise Retirement". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 2016-06-12.
  3. 3.0 3.1 "Bye-Election to the Council of States from Karnataka" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
  4. 4.0 4.1 "Bye-Election to the Council of States from Madhya Pradesh" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 17 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
  5. 5.0 5.1 "Bye - Elections to the Council of States" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
  6. "Kannada writer vs Hema Malini in RS polls". http://www.news18.com/news/politics/kannada-writer-vs-hema-malini-in-rs-polls-361191.html. 
  7. "Rabi Bernard, AIADMK nominee for Rajya Sabha". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/rabi-bernard-aiadmk-nominee-for-rajya-sabha/article2144356.ece. 
  8. "Rajya Sabha accepts LJP MP Sabir Ali's resignation". பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.